Sunday, December 9, 2018

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி

திருக்குறள் வாழ்வியல் அறக் களஞ்சியம். திருக்குறள் பாரத தத்துவ ஞான மரபின் ஒரு முக்கிய நூல். கல்வி - அறிவை வளர்ப்பதே வாழ்க்கைக்கு பிரதானம், ஆனால் கற்பது எதற்கு  

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.               குறள் 2:கடவுள் வாழ்த்து
கல்வி  கற்பதன் பயன் அறிவு பெறுதல். அப்படியானால் நம் அறிவுக்கெல்லாம் எட்டாத  பரம்பொருள் இருப்பதை உணர்ந்து  தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால் அவர் கல்வியினால் ஆகிய பயன் என்ன?  
மணக்குடவர் உரை: மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறுயாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் (நான்மணிக்கடிகை 28) என்றாருமுளர்.
மெய் அறிவு எதற்கு?  
வள்ளுவர் அறிவினை கல்வியின் மூலம் அடுத்த நிலைக்கு அதாவது மெய் அறிவு பெற இறைவனை நாடுவது ஏன் எனத் தெளிவாய் கூறுகிறார்.


கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி             (மெய்யுணர்தல் குறள்-356) 

கற்க வேண்டியவற்றைக் கற்று, இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர்; மீண்டும் இவ்வுலகில் பிறப்பிற்கு வாராத வழியை அடைவர். 

மணக்குடவர் உரை: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வியறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.



பாரத ஞான மரபில் இறைவனை  பல்வேறு பெயர்களில் போற்றுவதே நெறி ஆகும், இவற்றில் குணத்தால் ஆன பெயர்கள், தொன்மங்களில் செய்த வரலாற்று பெயர்கள் என உண்டு. சஹஸ்ரநாமம் எனும் 1000 பெயர் பாடுதலின் தன்மையும் இதுவே.
வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் குணப் பெயர்களாய் பயன்- படுத்தினாலும் மிகத் தெளிவாய் உலகைப் படைத்த  இறைவனைப் பற்றினால் மட்டுமே பிறவிப் பெருங்கடலை கடக்க இயலும் என்கிறார். வள்ளுவர் உலகைப் படைத்த இறைவனை  எழுத்துக்கள் அகரத்தில் தொடங்குவது போலே, உலகம் (பக்தி நூல்களான பெரிய புராணமும், கம்ப இராமாயணம் போலே)  இறைவனில் தொடங்க்கிறது என்றார்.
1.ஆதி பகவன் 2.வாலறிவன் 3. மலர்மிசை ஏகினான் 4.வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் 5. இறைவன் 6,பொறிவாயில் ஐந்தவித்தான்

7. தனக்குவமை இல்லாதவன் 8.  அறஆழி அந்தணன்"

குறளின் கடவுள் வாழ்த்து  உல்லகைப் படைத்த  இறைவனை வாழ்த்துவது.
உலகைப்  படைத்த கடவுளை ஏற்காத சமண - பௌத்த மதங்கள் குறளின் பொருளை திரிப்பது பயன் இல்லை.
தனக்குவமை இல்லாதவன் என்கையில் அவர் மனிதராய் பிறந்த  புத்தரையோ, மஹாவீரரையோ; தீர்த்தங்கர்களையோ கூறவில்லை என்பதும் தெளிவு.

கிறிஸ்துவ பைபிள் தொன்மக் கதைகள் ஒரு அரசியல் ஆதாயம் தேட புனைந்த நூல், விவிலிய அடிப்படை, கானான் மண்ணிற்கு அன்னியர்கள் வந்தேறிகளான எபிரேயர்கள் மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து ஆக்கிரமிக்க இஸ்ரேலிற்கான தெய்வம் யாவே கர்த்தர அரசியல் உரிமை எனத் தேர்ந்தெடுத்தார் எனக் கதை
 இஸ்ரேலில் எவ்வித இறை வெளிப்பாடோ, தீர்க்கர் மூலம் பேசுதலோ நிகழவில்லை என்கிறட்து இஸ்ரேலின் தொல்லியல் இயக்குனர் நூல் "The  Bible Unearthed".  பைபிள் முழுவதும் பொய் நெறி
இஸ்ரேலிற்கான தெய்வம் தான் விருப்பமாய் அரசியல் உரிமைக்கு தேர்ந்தெடுத்து மண்ணின் மைந்தர் இனஅழிப்பு, இனப் படுகொலை, கன்னிப்பெண் கற்பழிப்பு, அதில் கர்த்தருக்கும் பங்கு,இவை வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் என்பதற்கும் முழு மாற்று.


கடவுள்  வாழ்த்தில் இறை எனும் சொல்லை பயன் படுத்தியவர் மன்னரையும் இறை எனவும் அழைப்பார். 

ஆதி பகவன் – 1
யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083
பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை
பிரம்மா – உலகு இயற்றியான் 1062
இந்திரன் – 25
கண்ணன் – தாமரைக்கண்ணான் 1103
லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920,
மூதேவி – மாமுகடி 617, 936
பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258
பிரம்மாவைக் கூட — (உலகு இயற்றியான் 1062
பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் (580)  சிவபெருமான்
வகுத்தான்’ என்று பிரம்மாவை

திருவள்ளுவர் நம் வாழ்வினை இறைவனை நோக்கி வாழ்ந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறக்கும் பிறவி கடலினில் இருந்து மீளக் கொடுத்ததே திருக்குறள் எனும் ஒரு அறக் களஞ்சியம்.
குறள் 36:  அறன் வலியுறுத்தல்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறக்குங் காலத்தில், உயிருக்கு அழியாத துணையாக இருக்கும்.



 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார்   (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:6)

நாமக்கல் இராமலிங்கம் உரை: பஞ்சேந்திரிய ஆசைகள் அற்ற பகவானை உணர்வதற்கு நாம் பஞ்சேந்திரிய ஆசைகளைக் குறைத்து அதற்கிணங்க உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது இனிதே வாழலாம்.

மனமாசின்றி வாழும் வாழ்க்கை சிறப்புடையது. அதுவே அறங்களில் முழுமை. மனித வாழ்க்கை நெறி என்கிறார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

No comments:

Post a Comment