Friday, September 4, 2015

கொடுங்கல்லூர் பொஆ.800வரை கடலடியில் இருந்தது -இந்தியத் தொல்பொருள் துறை ஆய்வுகள்

கொடுங்கல்லூர் அகழ்வாய்வுகள் -இந்தியத் தொல்பொருள் துறை.
 இந்தியத் தொல்பொருள் துறையின் மார்ட்டிமர் வீலரின் சீடர்  திரு. அனுஜான் அச்சன் கேரளாவின் கொடுங்கல்லுரில் முதலில் 1946ல்ஆய்வு செய்தார். கொடுங்கல்லுரின் தொன்மை 14ம் நூற்றாண்டிற்கு முன்பு செல்லவில்லை என்றார்.
11ம் நூற்றாண்டின் ஒரு கேரள செப்பேட்டில் கொடுங்கல்லூர்- முயுரிக்கொடு என குறிப்பிட்டுள்ளதானதால் சங்ககாலத் துறைமுகம் முசிறியாக இருக்க வேண்டும் என ஒரு கதை பரவல் இருக்க நீண்ட முழுமையான ஆய்வு தேவை என மீண்டும், பின்பு திரு.கே.வி..ராமன், N.G.உன்னிதன் மற்றும் திரு. சௌந்தரராஜன் தலைமையில்   கொடுங்கல்லூர், சேரமான் பறம்பு, திருவஞ்சிக்களம் , கருப்பதனா, மதிலகம், கீழட்டலி & திருக்குலசேகரபுரம் என கொடுங்கல்லூர் மற்றும் சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்தியத் தொல்பொருள் துறை சார்பாக நீண்ட ஆய்வுகள் நடந்தன. அதன் முடிவுகள்.   
 கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்பட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது….
கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம். 

கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. 

கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..   
திருவஞ்சிக்களம் இங்கே நடந்த அகழ்வாய்வு கலவையான(Mixed) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை 10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.   
 
திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை

ழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் 

 தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை  AUTHOR: பேராசிரியர் டாக்டர் கே.வி.இராமன் தொல்லியல் ஆய்வுகள்)
http://www.udumalai.com/tholiyal-aivukal.htm

  

கொடுங்கல்லூர் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்தது என்பதை கிறிஸ்துவ சர்ச்சும் உறுதிப் படுத்தியுள்ளது.  History of Christianity in India, Vol. I, by Fr. A. Mathias Mundadan, Professor of Church History and Theology at the Dharmaram Pontifical Institute, Bangalore, in says 
//Opinion seems to be Unanimously in supporting the Hypothesis that the whole or Greater part of the western section of the Kerala coast was once under waters and that the formation of the Land was due to some process of nature either gradual or Sudden.// Page-12 

கேரள கொடுங்கல்லூர்  சர்ச் மலங்காரா சர்ச் எனப்படும். மால், அயன் நிலத்தை மீட்ட இடம் என்பதே இதன் பொருள்.
கோடி லிங்க புரம் என்ற பெயர் திரிந்து தான்  கொடுங்கல்லூர்.

11ம் நூற்றாண்டு கேரள செப்பேட்டில் மூலம் கிடையாது, அதன் படியை 19ம் நூற்றாண்டில் எடுக்கையில், மகோதையக் காடு, என்பதை பாதிரி.க்ளாடியூஸ் புக்கனன் மாற்றி வடிக்கச் செய்தார் எனக் கேரள வரலாற்று குழுமம் பாராட்டிய நூலின் ஆசிரியர் பி.வி.மேத்தியூ தன் நூல் ஆக்டா இந்திகாவில் தெளிவாய் கூறுகிறார்.
In this Book- "Acta India" Page No.261 &  262-  Mr.P.V.Matthew says that Dr.Buchanan-  asked the engravers to engrave “Muyrikodu” when his original had only Mahothaikod in Baskara Ravi Varman plate . and kodungallore in stead of “Koduthom” in Eravi Kotran plate 

கொடுங்கல்லூர் பொதுக் காலம் 900 வரை தண்ணிர்ரில் மூழிகிய பகுதி. முசிறி இல்லை. 




No comments:

Post a Comment