Saturday, October 4, 2025

பழனி முருகன் காமிகாகம அடிப்படை சிலை

  பழனி முருகன் ஆகம அடிப்படையில் அமைந்த திருமேனி அல்ல , அது சித்தர் வழிபாடு ' என அனுதினமும் கூவும் ' அன்பர்கள் ' கவனத்திற்கு :


// ஜ்ஞானத ஸ்கந்தர்
காமிகாகமத்தின் அறுபத்துநான்காம் படலம் முருகக் கடவுளின் ப்ரதிஷ்டையைப் பற்றியது. இந்தப் படலத்தில் தனியாலயமாக அமைக்க முருகப்பெருமானின் ஐவகை வடிவங்கள் கூறப்பெற்றிருக்கின்றன.
சிற்றூர், மலை, புரம், நகரம், பெருங்கோவில் ஆகியவற்றில் அமைக்க ஐந்து வடிவங்கள். இவற்றில் இரண்டாம் வடிவம் மலையின் மீதும் காட்டிலும் அமைக்கத் தக்கது. இதன் இலக்கணம்
द्विहस्तो यज्ञसूत्राढ्यः सशिखः सस्त्रिमेखलः।
कौपीन-दण्डधृक्-सव्यपाणिः कट्याश्रितोऽपरः॥
स्थाप्योयं ज्ञानदः स्कन्दः पर्वतेषु वनादिषु।
இரண்டு கரங்களும் பூணுலும் திகழ குடுமியும் மூன்று மேகலையும் உடுத்தி கோவணம் தரித்து வலக்கையில் தண்டமேந்தி இடக்கையை இடையில் வைத்து அமையும் ஸ்கந்தர் ஜ்ஞானத்தைக் கொடுப்பவர். இவரை மலைகளிலும் காடுகளிலும் அமைக்கலாம்.
இந்த இலக்கணப்படி பழனி முருகன் அமைந்திருக்க காணலாம். //
நன்றி : முகநூல் பதிவு : பேராசிரியர் முனைவர் G சங்கரநாராயணன்

ேராசிரியர் முனைவர் சங்கரநாராயணன் அவர்களின் பதிவிலிருந்து...... குமரக்கடவுளின் மாத்ருகைகள் [ வளர்ப்புத் தாய்மார் - கார்த்திகைப் பெண்கள்] காமிகாகமத்தின் அறுபத்து நான்காவது படலம் குமரக்கடவுளின் ப்ரதிஷ்டையை விளக்கி இறுதியில் அவர் மாத்ருகைகளின் பெயர்களைத் தருகிறது. शकुनी रेवती चैव पूतना मण्डपूतना। वस्त्रमण्डी ततः प्रोक्ता निशान्ता मेषदेवता। शकारीति परिज्ञेयाः सुब्रह्मण्यस्य सुव्रताः॥ சகுனீ, ரேவதீ, பூதனா, மண்டபூதனா, வஸ்த்ரமண்டீ, நிசாந்தா, மேஷதேவதா, சகாரீ ஆகியோரை ஸ்தாபிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த மாத்ருகைகள் முருகப்பெருமானை வளர்த்த தாய்மார்களாக மஹாபாரதத்தில் குறிப்பிடபெறுபவர்கள். படத்தில் முருகப்பெருமானோடு ரேவதீ குஷாணர் காலம், மதுரா அருங்காட்சியகம், இணையச்சுடுகை





No comments:

Post a Comment