Sunday, September 4, 2022

தமிழர் மரபில் -வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்-என்பதை காட்டும் நடுகற்கள்

தமிழர் மரபில் -வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்-என்பதை காட்டும் நடுகற்கள்
திருவள்ளுவர் காட்டும் மெய்யியல் மரபில் - மனிதன் பிறப்பு என்பது தூங்குவது போல, மீண்டும் அதே ஆத்மா மீண்டும் பிறப்பது என்பது தூங்கி எழுவது போலே எனத் தெளிவாக உறைப்பார். 
உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை.
நிலையான இந்த உயிர் இந்த பூவுலக வாழ்வில் புண்ணியம் (நல்ல அறச் செயல்கள்) செய்தால் தேவர்கள் வாழும் சொர்கம் செல்வர், பாவங்கள் (அறத்திற்கு மாறான செய்தல்) விடியாத இருள் கொண்ட‌ நரகத்தில் தள்ளி விடும் என்கிறார்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.              குறள் 121: அடக்கமுடைமை.
மேலுள்ள குறளில் தன் பிறப்பு நிலையில் அடக்கத்தோடு இருந்தால் தேவர்கள் உலகிலும், அடங்காமை  விடியாத இருள் கொண்ட‌ நரகத்தில் தள்ளி விடும் என்கிறார்.

மனித வாழ்வின் லட்சியம் என்பது மீண்டும் பிறந்து இறந்து பிறந்து என நிலை. 
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.   குறள் 362: அவாவறுத்தல்
பிறவிப் பெருங்கடலில் சிக்காமல் இறைவனோடு கலத்தல்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து.
திருவள்ளுவர் இல்வாழ்க்கை அதிகாரத்தில் குறள்-50 கூறுவதும் அறவழியில் அனைவரும் போற்றும் வழியில் வாழ்ந்தால் தேவர்கள் வாழும் வானுலகில் வைக்கப் படுவாய் (அமரரும் உய்க்கும் என்பது போலே) என்பதே.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.  குறள் 50:இல்வாழ்க்கை.
உலகத்தில் அறநூல்கள் காட்டும் நெறியில் நின்று புகழோடு வாழ்கின்றவன், தேவர்கள் வாழும் வானுலகத்தில் வைக்கப் படுவான்

இந்தக் குறளை வைத்து தமிழர்கள் முன்னோரை வழிபட்டனர், அதற்கு உதாரணம் நடுகல் என அன்னிய காலனி ஆதிக்க மதமாற்று கும்பலும் அதன் அடிமை நவீன தமிழ் புலவர்களும் தமிழ் மரபை ஏற்காத மடமையில் கூறுவது 



 வீரன் சண்டையின்போது இறந்து படுகிறான். அவன் மனைவி அவனோடு உடன்கட்டை ஏறுதல் முறையில் உயிர் நீக்கின்றாள். அவளையும் வீரனையும் சுவர்க்கம் என்னும் மேலுலகத்துக்குத் தேவமகளிர் அழைத்துச்செல்கின்றனர். சிவலோகம் சென்ற வீரன் சிவலிங்கத்தை வழிபடுகிறான்.
நாம் மேலே காணும் நடுகற்கள் கூறுவது - நாட்டு நன்மைக்காக பலியானவரைப் போற்ற நடுகல் வைப்பர், ஆனால் அவர் இறைவன் உலகம் அடைந்தார் என வணங்குதல், இது முன்னோர் வழிபாடு இல்லை.

No comments:

Post a Comment