Tuesday, September 8, 2020

திருமுக்கூடல் நான்மறை கல்வி & ஆதுரச் சாலை வீரராஜேந்திர சோழன் கல்வெட்டு

 திருமுக்கூடல், செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பாதையின் வலப்புறத்தே அமைந்துள்ள சிற்றூர். பறவைகளின் கீச்சொலியும் காற்றடித்தால் படபடக்கும் கிளையொலியும் தவிர வேறு துணையில்லாத ஒதுக்குப்புறத்தில் வெங்கடேசப் பெருமாள். இந்தியத் தொல்லியல் துறையினர் எப்போதும் பூட்டி வைத்திருக்கும் இந்த நினைவுச்சின்னம், தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் பயிலும் கல்லூரியொன்றையும் அந்த மாணவர்களும் கோயில் அலுவலர்களும் நோய்வாய்ப்பட்டால் உடன் கவனித்து மருத்துவம் செய்ய மருத்துவமனையொன்றையும் கொண்டு, மக்கள் குழுமும் மகேசன் தலமாய் மகிழ்ந்திருந்தது.
 
https://www.youtube.com/watch?v=vxz22EK6fcA
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சிபுரம், பழைய சீவரம் அருகே இருக்கும் திருமுக்கூடலில் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது, இந்த கோவிலில் 15 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை 1000 ஆண்டுகளுக்கு முன்பே
  




ரிக், யஜுர், வியாகரணம், ரூபாவதாரம், சிவாகமம், வைகானசம் மற்றும் மகா பாஞ்சராத்ரம் என வேதங்களையும் இலக்கணங்களையும் தர்க்க சாத்திரங்களையும் ஆகமங்களையும் முறையாகப் பயிற்றுவிக்கும ஆசிரியர்கள் இந்த மண்ணில்தான் நடமாடினர்.
 
கற்பூரங்களாய் பற்றி, கற்றதும் கேட்டதும் நெஞ்சிலேற்கும் முதல் நிலை மாணவர்களாய் இங்குப் புதிய தலைமுறைகள் உருவாக்கப்பட்டன. இலட்சம் இலட்சமாய் அள்ளிக் கொடுத்துப் பயிலும் இற்றை நாளைப் போல் இல்லாமல், அரசும் கோயிலும் அரவணைத்த படிப்பு.
 
படித்தவருக்கும் படிப்பு சொல்லிக் கொடுத்தவருக்கும் நெல்லும் பொருளும் வழங்கப்பட்டன. இன்றைய உதவித் தொகைகளைப் போல் அல்லாது இவை தொடர்ந்தும் தொல்லையின்றியும் யாருக்கும் எதுவும் தராமலும் பரிந்துரைகள் இல்லாமலும் ஏழைகளை நோக்கியும் தகுதியுள்ளாரைக் கருதியுமே வழங்கப்பட்டன.
 
கல்வி சொல்லித்தர ஞானநாத மண்டபமும் மாணவர் உணவருந்தச் சாலையொன்றும் திருக்கோயில் வளாகத்திலேயே இருந்தன. சனிதோறும் எண்ணை தேய்த்துக் குளிக்க வாய்ப்பாக, அது நல்ல வழக்கமென்று அந்நாளில் கருதப்பட்டதால், ஆண்டு முழுவதும் ஐம்பத்தோரு சனிக்கிழமைகளிலும் இலவசமாக இவர்களுக்கு எண்ணெய் தரப்பட்டது. படுத்துறங்கப் பாயும் வழங்கப்பட்டது.
 
இக்கல்லூரி மாணவர்க்கோ, இங்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்க்கோ அல்லது பணியாளர்க்கோ உடல் நலம் குன்றினால் கவனித்து நோய் நீக்கக் கோயில் வளாகத்திலேயே வீரசோழன் மருத்துவமனை செயற்பட்டது. பொதுமருத்துவர் ஒருவரும் அறுவை மருத்துவர் ஒருவரும் நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பப் பணியாற்றினர். மூலிகைகள் பறித்து வரவும் மருந்துகளைக் காய்ச்சவும் விறகு கொண்டு வரவும் பணியாட்கள் இருந்தனர். நோயாளிகளை கவனித்துக் கொள்ளப் பெண் செவிலியர் இருவர் இருந்தனர்.
 
நோயாளிகளுக்கு ஒரு நாளைக்குத் தலைக்கு (ஒருவருக்கு) ஒரு நாழி உணவு அளிக்கப்பட்டது. அவர்கள் அருந்த வாய்ப்பாக நீர் பிடித்து வைக்கப்பட்டது. இரவு நேரங்களில் தொல்லைகள் தவிர்க்க விளக்கெரிக்கப்பட்டது. இவை எல்லாவற்றையும்விட வியப்பைத் தருவது மிகத் தேவையான மருந்துகளைத் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருந்ததும் அந்தக் கையிருப்பு குறையாமல், அவ்வப்போது குறைவதை நிறைவு செய்யப் பொருள் ஒதுக்கீட்டை முன்கூட்டியே திட்டமிட்டு அவர்கள் ஒதுக்கியிருந்ததும் தான்! இந்த நாள் இலவச மருத்துவமனைகளில் எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத இந்த வசதிகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கோயில் மருத்துவமனை வழங்கி வந்தது.
 
கல்வி தந்து, பக்திக்கு வடிகாலாய் நின்று, உள்நோயும் புறநோயும் நீக்கிய இந்தக் கோயில் எந்தச் சமுதாயத்திற்காகத் தன்னைத் தந்ததோ அந்தச் சமுதாயத்தாலேயே இன்று முழுவதுமாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் இந்த வரலாறு கூறும் கல்வெட்டுத் தொடர்கள்கூட இன்றைக்குச் சுண்ணாம்புப் பூச்சுகளுக்குள் சிதைந்து கொண்டிருக்கின்ற

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=359
https://www.vikatan.com/spiritual/temples/138929-sri-appan-venkatesa-perumal-temple-thirumukkudal

No comments:

Post a Comment