Wednesday, February 21, 2018

தொல்காப்பியத்தின் காலம்

தமிழ்மொழியின்  இலக்கண நூல் தொல்காப்பியம்  ஒரு முக்கியமான நூல். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்றிற்கும் தமிழின் எழுத்துக்கள், சொல், பொருள் என மூணிறிற்கும் இலக்கணம் கூறுகிறது. இதன் காலம் என்ன?





உணர்வு ரீதியில் அதை காலத்தால் மிகவும் பின் தள்ளி கொள்வது பலர் வழக்கமாய் உள்ளது.  அதாவது பொமு 700 (பொதுக் காலத்திற்கு முன்) என சொல்லுவாரும், அல்ல பொமு 300 எனச் சொல்லுவார் மிக அதிகம்.
                                                
தரவுகள் இதை சற்றும் நிருபிக்காதமையால் தமிழ் மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை ஏற்பதில்லை. 
                                           
இலக்கியங்கள் எழுந்த பின் தான் உலகில் உள்ள அத்தனை மொழிகளிற்கும் இலக்கணம் செய்யப் பட்டுள்ளது.  உதாரணமாக ஆங்கில மொழி இந்தியா வந்து ஒரு சில நுற்றாண்டு பின் 18ம் நூற்றாண்டு இறுதியில் தான் ஆங்கிலத்திற்கான தனிவித இலக்கண நூல்களும், அகராதிகளும் உண்டாயின.
                                   

சங்க இலக்கிய வழக்கில் இல்லாதவற்றையும் பிற்கால தொல்காப்பியம் கூறுகிறது. 

பேராசிரியர் லண்டன் சுவாமிநாதன் மொழியியல்ரீதியாக தொல்காப்பியம் பொகா 5 அல்லது அதற்கு பின்பு தான் எனும் கட்டுரை இங்கே .  

தொல்காப்பியர் காலம் தவறு--

5 கட்டுரைகளாய் உள்ளதை அப்படியே சேர்த்து இங்கே
தமிழில் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து  18 என மொத்தம் 30 எழுத்துக்கள், இவை இரண்டும் கலக்க உயிர்மெய், கல்வெட்டுகளில் 30 எழுத்திற்கும் தனி உருக்கள் அமைய வேண்டும், மேலும் மெய் எழுத்து என்பது புள்ளி வைத்தல் என்பதையும் கூறுவதால் நம்மிடம் உள்ள கல்வேடுகளோடு பொறுத்த வேண்டும். 

மதுரைக் காமராஜர் கல்லூரி மொழியியல் பேராசிரியர் காமாட்சி கட்டுரை, பொ.கா. 4ம் நூற்றாண்டிற்கு முன் செல்ல முடியாது என்கிறது. 

தமிழ் கல்வெட்டுகளை படித்து மிகவும் போற்றப்படும் அறிஞர்களான ஐராவதம் மகாதேவன், கே.வி.இராமன், நாகசாமி, நடன காசிநாதன் எனப் பலரும் பிராமி வரிவடிவம் வடமொழியான பிராகிருத மொழி உருக்களை தான் தமிழ் பெற்று, தமிழிற்கு தனி எழுத்தான "ற" "ழ" போன்ற எழுத்து உரு  சேத்து வளர்ச்சியுற்றது. தொல்காப்பியம் வட்டெழுத்து தாண்டு 7ம் நூற்றாண்டினை ஒட்டியது என இன்று கருத்து ஒற்றுமை வந்து கொண்டு உள்ளது. 


No comments:

Post a Comment