உகாண்டா ஆசியர்களை வெளியேற்றல்
உகாண்டா ஆசியர்களை வெளியேற்றல் (Expulsion of Asians from Uganda) 4 ஆகஸ்டு, 1972 அன்று உகாண்டாவின் இராணுவ சர்வாதிகார அதிபர் இடி அமீன், உகாண்டாவில் வாழும் ஆசிய நாட்டவர்களை 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார்.[1] வெளியேற்றத்தின் போது இருந்த 80,000 தெற்காசிய நாட்டவர்களில் பெரும்பான்மையினர் குசராத்தி வம்சாவளியினராக இருந்தனர்.[2][3] 1972ல் உகாண்டாவில் தங்கியிருந்த 23,000 ஆசிய மக்களின் குடியுரிமை விண்ணப்பத்தை உடனடியாக உகாண்டா அரசு ஏற்றது.[4][5] உகாண்டா மக்கள் இந்திய வணிகர்களுக்கு எதிரான வெறுப்பு உணர்ச்சியில் இருந்ததால், உகாண்டா அதிபர் இடிஅமீன் ஆசியர்களை உகாண்டாவை விட்டு வெளியேற்றும் முடிவிற்கு வந்தார்.
https://www.youtube.com/watch?v=ptLyXsV02ck
வெளியேற்றப்பட்டவர்களில் 27,000 ஆசியர்கள் ஐக்கிய இராச்சியம் மற்றும் அதன் காலனி நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களாக இருந்ததால், ஐக்கிய இராச்சியற்கு குடியேறினர். 6,000 ஆசிய அகதிகள் கனடாவிற்கும், 4,500 அகதிகள் இந்தியாவிற்கும், 2,500 அகதிகள் அருகில் உள்ள கென்யாவிற்கும் புகழிடம் அடைந்தனர். 20,000 உகாண்டா அகதிகள் குறித்தான விவரம் கிடைக்கவில்லை. ஆசியர்களின் நிறுவனங்கள், பண்ணை வீடுகள், கால்நடைப்பண்ணைகள் மற்றும் தோட்டங்கள், வீடுகள் உகாண்டா மக்களுக்கு பகிர்ந்தளிக்கபப்ட்டது.
பின்னணி
பிரித்தானியா, உகாண்டாவை 1894 முதல் 1962 வரை காலனியாதிக்க நாடாக ஆட்சி செய்த போது, தெற்காசிய மக்கள், குறிப்பாக குஜராத்தி மக்கள் உகாண்டாவில் தொழில் மற்றும் வணிகம் செய்யச் சென்றனர்.1890களில் பிரித்தானிய இந்தியாவிலிருந்து 32,000 கூலித்தொழிலாளர்கள், உகாண்டாவில் இருப்புப் பாதை அமைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.இருப்புப் பாதை பணி முடிந்த பின் 6,724 கூலித்தொழிலாளர்கள் தவிர பிறர் இந்தியாவிற்கு நாடு திரும்பினர்.
உகாண்டாவின் 1% ஆசிய மக்கள், உள்ளூர் உகாண்டா மக்களை விட சிறிது வசதி படைத்தவர்களாக வாழ்ந்தனர். உகாண்டா தேசிய வருமானத்தில் ஆசியர்களின் பங்கு ஐந்தில் ஒன்றாக இருந்தது. உகாண்டாவின் பெரும்பாலான வணிகர்கள் குஜராத்தி மக்களாக இருந்தனர். இதனால் உள்ளூர் மக்கள் ஆசிய நாட்டவர்கள் மீது வெறுப்புணர்வுடன் இருந்தனர்.
1969-70களில் உகாண்டாவில் வாழ்ந்த 30,000 கென்ய மக்கள் உகாண்டாவை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இடி அமீன்
குஜராத்திகள் உகாண்டா திரும்புதல்
இடி அமீன் ஆட்சிக்குப் பிறகு, 1980ல் உகாண்டா ஆட்சியாளர்களின் அழைப்பின் பேரில் ஆயிரக்கணக்கான குஜராத்தி மக்கள் மீண்டும் வணிகம் மற்றும் தொழில் தொடங்க உகாண்டா திரும்பினர்.[3] உகாண்டாவின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத்தி மக்கள் முக்கியப் பங்களிக்கின்றனர்
No comments:
Post a Comment