ஈழத்துத் தமிழ் இலக்கியம் நீர்வை மயூரகிரி சர்மா இலங்கைதீபாவளிஇலங்கைத் தமிழர்சோதிடம்தீபாவளிப் பண்டிகைதீபாவளியின் தொன்மைதீபாவளித் திருநாள்
அன்பில் செப்பேடு
ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழன், தன் அமைச்சர் அனிருத்த பிரம்மராயருக்கு நில தானம் அளித்த அன்பில் செப்பேட்டில் நரகாசுரனை அழித்த மகாவிஷ்ணுவின் வலிமை கொண்டவன் என்று அன்பில் செப்பேடு புகழப்பட்டான். தொன்மை
பொ.ஆ 1310ஆம் ஆண்டு போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை என்ற ஈழத்து சோதிட இலக்கிய நூல், “உரிய நற்பிதிர்கள் இன்பமுறு தீபாவலியாம் எண்ணெய் – மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே” என்று கூறுகிறது. ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) சதுர்த்தசி என்ற குறிப்பும் உண்டு.. இந்த நூலின் காலகட்டத்தில் வடஇலங்கை – குறிப்பாக யாழ்ப்பாணம் பாண்டியப் பேரரசின் தளபதியாக கருதப்பட்ட ஆரியச்சக்கரவர்த்திகளால் ஆளப்பட்டு வந்தது… ஆக, ஆயிரம் ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக தமிழர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடி வருகின்றனர்…
பொ.யு 1310ஆம் ஆண்டு இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை என்ற ஈழத்து சோதிட இலக்கிய நூல், “உரிய நற்பிதிர்கள் இன்பமுறு தீபாவலியாம் எண்ணெய் – மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே” என்று கூறுகிறது. ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) சதுர்த்தசி என்ற குறிப்பும் உண்டு.. இந்த நூலின் காலகட்டத்தில் வடஇலங்கை – குறிப்பாக யாழ்ப்பாணம் பாண்டியப் பேரரசின் தளபதியாக கருதப்பட்ட ஆரியச்சக்கரவர்த்திகளால் ஆளப்பட்டு வந்தது… ஆக, ஆயிரம் ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக தமிழர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடி வருகின்றனர்…
பட்டாசுகள் தீபாவளியின் தொன்மை வாணவேடிக்கைதீபாவளிப் பட்டாசுகள்நீத்தார் வழிபாடுபித்ருக்கள்தீபாவளிப் பண்டிகை மகாலயம் தீபாவளிஉல்கா தானம்deepavaliவெடிகள்தீப வழிபாடுதீபங்கள்முன்னோர்கள்விளக்குகள்
தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் எப்போது வந்தன? இது ஒன்றும் புதிய பழக்கமல்ல. தீபாவளி பண்டிகையின் மிக புராதனமான அம்சம் இது. மகாளய பட்சத்தில் பூவுலகிற்கு வந்த முன்னோர்கள் திரும்பிச் செல்லும் காலம் தீபாவளி. அவர்கள் தங்கள் லோகத்திற்குத் திரும்பச் செல்லும் வழியினை ஒளிமயமாக்கத்தான் உயர்ந்த கம்பங்களில் தீப்பந்தங்கள் பண்டைய காலத்தில் ஏற்றப்பட்டன. ஆகாயத்தில் வாணவேடிக்கைகளும் கூட இதற்காகத்தான் தீபாவளி சந்தர்பத்தில் ஏற்படுத்தப்பட்டன. பண்டைய நூல்களில் இதற்கு “உல்கா தானம்” என்று பெயர்.. விஜயநகர சாம்ராஜ்யத்திலும் (பொ.யு. 1336 முதல்) , மொகலாயர்களின் காலகட்டத்திலும், மராட்டிய பேஷ்வாக்கள் ஆட்சியிலும் கூட மகாநவமியினை தொடர்ந்து வாணவேடிக்கைகள் விசேஷமாக செய்யப்பட்டன. ஒரிய அரசனான ப்ரதாப ருத்ரனின் (பொ.யு. 1497-1539) ஆட்சியில் வாணவேடிக்கைகள் நடந்தது பற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளத்திலும் காஷ்மீரத்திலும் கூட வாணவேடிக்கைகள் இருந்தது பற்றி குறிப்புகள் கிடைத்துள்ளன. விசேஷமாக கேரளத்தில் நீலகண்டன் என்பவரால் “வெடிக்கம்ப விதி” என்று பட்டாசுகள் தயாரிப்பு பற்றி ஒரு நூலே எழுதப்பட்டுள்ளது
திருவாரூர் மாவட்டத்திலுள்ள சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோவிலிலுள்ள செப்பேடு, அங்கு தீபாவளியன்று பொன்வைத்தநாதருக்கு நடத்தப்பட்ட சிறப்பு அபிஷேகம் பற்றிக் குறிப்பிடுகிறது.
சித்தாய்மூரைச் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள மக்கள் தங்களது அன்றாடக் கூலியிலிருந்து ஒரு பகுதித் தொகையைக் “கூலிப்பிச்சையாக” இறைவனுடைய அபிஷேகத்திற்கு அளித்ததாகச் செப்பேட்டுத் தகவல்.
காலம், பொயு 16 ஆம் நூற்றாண்டு.
No comments:
Post a Comment