நெல்லைச்சொக்கர்- www.nellaichokkar.blogspot.in/2012_07_01_archive.html
சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.
கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஐயடிகள் காடவர் கோன், திருமங்கையாழ்வார், கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகியோர், மயிலாப்பூரை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்கரையில் மயிலாப்பூர்
இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார்.
அதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது. இன்றைய சாந்தோம் பகுதியில், இக்கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு.
புதிய கோவிலில் கல்வெட்டுகள்
கடந்த 1672க்கு முன்பாக, இப்போதைய இடத்தில் இன்றைய கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களின் கற்கள் புதிய கோவில் மற்றும் சர்ச் கட்டப் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றும் பழைய கபாலீசுவரக் கோவில் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சுவாமி, அம்மன், சிங்காரவேலர் கருவறை சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது.
கற்பகாம்பாள் கோவில் பிரகாரச் சுற்றுச்சுவரின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில், 20க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் தாறுமாறாக அடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், கபாலீசுவரர் கருவறையின் மேற்குச் சுவரின் உள் மற்றும் வெளிப்பக்கமும், கருவறை வாயில் நிலை இடதுபுறக் கல்லிலும், மேற்கு கோபுரத்தின் தரையிலும் சில கல்வெட்டுகள் உள்ளன.
துறைமுக நகர்
இவை தவிர, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை விருபாட்சீசுவரர் கோவில், பொன்னேரிக்கு அருகில் உள்ள காட்டூரில் கிடைத்த கல்வெட்டு ஆகியவற்றில், மயிலாப்பூர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், சில கல்வெட்டுகளில் கடல் வணிகம் செய்யும் நானாதேசிகள் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகர்களை பற்றியும் குறிப்பு உள்ளது. இதில் இருந்து தொன்மையாகவே, மயிலாப்பூர் துறைமுக நகராக இருந்தது தெரிய வருகிறது.
பூம்பாவையின் பெயர்
திருப்பூம்பாவை என, சிவநேச செட்டியாரின் மகளும், சம்பந்தரால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவருமான பூம்பாவையின் பெயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்துப் படிக்கட்டு ஒன்றில் உள்ள கல்வெட்டிலும், பரங்கி மலை தூய அப்போஸ்தல மாடத்தின் உணவருந்தும் அறையின் பக்கத்திலுள்ள மாடிப்படியில் உள்ள ஒரு கல்வெட்டிலும், விருபாட்சீசுவர் கோவில் கருவறையின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டிலும் குறிக்கப்பட்டு, மயிலையில் உள்ள அவரது சன்னிதியில் பூஜைகள் நடத்துவதற்கு செலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சில் கிடைத்த இன்னொரு தமிழ் கல்வெட்டு. இதுவும் இறையிலியைக் குறிக்கிறது. ஆனால், சிதைந்த நிலையில் காணப்பட்டது.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி கல்வெட்டு, சர்ச்சின் மேற்குப் பகுதியில் கிடந்தது / கிடைததது.
இத்தகவல்கள் அனைத்தும் சென்னை மாநகர் கல்வெட்டுகள் தொகுப்பிலும், மத்திய அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகள் தொகுப்பிலும் உள்ளன.
இதில் குறிப்பிடத்தக்கது, எந்த கல்வெட்டும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது தான். பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. எனினும், இக்கல்வெட்டுகள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது.
படிக்கட்டுகளில் கல்வெட்டுகள்
ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர், தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.
கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஐயடிகள் காடவர் கோன், திருமங்கையாழ்வார், கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகியோர், மயிலாப்பூரை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்கரையில் மயிலாப்பூர்
இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார்.
அதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது. இன்றைய சாந்தோம் பகுதியில், இக்கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு.
மேலேயுள்ளது, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமசோழனின் கல்வெட்டாகும். இரவில் நடராஜருக்கு விளக்கெரிக்க வரியிலா நிலமான்னியம் கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இது சர்ச்சின் வராண்டாவில் கிடந்தது. பிறகு தொல்துறைத்துறையினர் கண்டுபிடிதார்களாம். உண்மையில் ஹூஸ்டன் இதனைப் பார்த்து பிற்காகத்தில் தமக்கு சாதகமாக இருக்குமே என்று பக்கங்களை சிதைத்து விட்டான். அப்பொழுதே “மெயிலில்” இந்த ஆளுடைய “அத்தாட்சிகளை அழிப்புத்தன்மையினை” எடுத்துக் காட்டி எழுதப்பட்டது. அத்ற்கும் இந்த ஆள் காட்டமாக பதில் சொல்லியுள்ளான்.
புதிய கோவிலில் கல்வெட்டுகள்
கடந்த 1672க்கு முன்பாக, இப்போதைய இடத்தில் இன்றைய கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களின் கற்கள் புதிய கோவில் மற்றும் சர்ச் கட்டப் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றும் பழைய கபாலீசுவரக் கோவில் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சுவாமி, அம்மன், சிங்காரவேலர் கருவறை சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது.
கற்பகாம்பாள் கோவில் பிரகாரச் சுற்றுச்சுவரின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில், 20க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் தாறுமாறாக அடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், கபாலீசுவரர் கருவறையின் மேற்குச் சுவரின் உள் மற்றும் வெளிப்பக்கமும், கருவறை வாயில் நிலை இடதுபுறக் கல்லிலும், மேற்கு கோபுரத்தின் தரையிலும் சில கல்வெட்டுகள் உள்ளன.
துறைமுக நகர்
இவை தவிர, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை விருபாட்சீசுவரர் கோவில், பொன்னேரிக்கு அருகில் உள்ள காட்டூரில் கிடைத்த கல்வெட்டு ஆகியவற்றில், மயிலாப்பூர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், சில கல்வெட்டுகளில் கடல் வணிகம் செய்யும் நானாதேசிகள் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகர்களை பற்றியும் குறிப்பு உள்ளது. இதில் இருந்து தொன்மையாகவே, மயிலாப்பூர் துறைமுக நகராக இருந்தது தெரிய வருகிறது.
பூம்பாவையின் பெயர்
திருப்பூம்பாவை என, சிவநேச செட்டியாரின் மகளும், சம்பந்தரால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவருமான பூம்பாவையின் பெயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்துப் படிக்கட்டு ஒன்றில் உள்ள கல்வெட்டிலும், பரங்கி மலை தூய அப்போஸ்தல மாடத்தின் உணவருந்தும் அறையின் பக்கத்திலுள்ள மாடிப்படியில் உள்ள ஒரு கல்வெட்டிலும், விருபாட்சீசுவர் கோவில் கருவறையின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டிலும் குறிக்கப்பட்டு, மயிலையில் உள்ள அவரது சன்னிதியில் பூஜைகள் நடத்துவதற்கு செலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சில் கிடைத்த இன்னொரு தமிழ் கல்வெட்டு. இதுவும் இறையிலியைக் குறிக்கிறது. ஆனால், சிதைந்த நிலையில் காணப்பட்டது.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி கல்வெட்டு, சர்ச்சின் மேற்குப் பகுதியில் கிடந்தது / கிடைததது.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு, சாந்தோம் செமினரியின் பிரதானக் கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலதுபுறத்தில் காணப்பட்ட கல்வெட்டு. இப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள் ()அதாவது இருந்தது, பிறகு காணவில்லை. இதிலிருந்து, பழைய கபாலீசுவரக் கோவில் ஒரு பெரிய வளகத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மிலேச்சர்கள் / போர்ச்சுகீசியர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டு இடித்து, உடைக்க ஆரம்பித்த போது, கிடைத்தப் பகுதிகளை, குறிப்பாக விக்கிரங்களை எடுத்து வந்து கோவிலைக் கட்டிக் கொண்டனர்.
(படங்களும் அவற்றின் அடிக்குறிப்புகளும் http://thomasmyth.wordpress.com/2012/04/06/original-kapaleswarar-temple-inscriptions-found-disappeared-mutilated/ என்ற இணையதளத்தில் இருந்து இங்கு சேர்க்கப்பட்டன)
இதில் குறிப்பிடத்தக்கது, எந்த கல்வெட்டும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது தான். பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. எனினும், இக்கல்வெட்டுகள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது.
படிக்கட்டுகளில் கல்வெட்டுகள்
ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர், தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் மதுவிடுதி!
ReplyDeleteஅக்டோபர் 23,2013
http://temple.dinamalar.com/news_detail.php?id=23506
அ+
Temple images
இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில், 60 ஆண்டுகளாக, நடத்தப்படும், கிளப்பில் மதுவிடுதி செயல்படுகிறது. அறநிலைய துறை சட்டத்திற்கு விரோதமாக, மதுவிடுதியை அனுமதித்தது எப்படி என, பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மயிலாப்பூரில் உள்ள, கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, லஸ் கார்னரில், காமதேனு திரை அரங்குக்கு எதிரே, பல ஏக்கர் பரப்புள்ள நிலம் உள்ளது. அதில், 1903 முதல், மயிலாப்பூர் கிளப் செயல்படுகிறது. சென்னையில் உள்ள, பெரும் பணக்காரர்கள் அதில், உறுப்பினர்களாக உள்ளனர். அங்கு, விளையாட்டு திடலும், பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன. அதேபோல், கிளப்பின் உறுப்பினர்களுக்கு மட்டும் செயல்படும், மதுவிடுதியும் உள்ளது. கிளப் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, மது விடுதியும் செயல்பட்டு வருகிறது. மயிலாப்பூர் கிளப்பிற்கு, கோவில் நிலத்தை வாடகைக்கு விடும் போது கூட, கிளப்பில், சூதாட்டம், மது, இறைச்சி போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த உத்தரவு, இது வரை பின்பற்றப்படவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கூட, கோவில்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபங்கள், இடங்களில், நாத்திகவாதிகள் நடத்தும் நிகழ்ச்சிகள், மது, இறைச்சி பயன்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என, உத்தரவு பிறப்பித்த அறநிலைய துறை, கடந்த, 60 ஆண்டுகளாக, கோவில் நிலத்தில், மதுவிடுதி செயல்பட்டு வருவதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது ஏன் என, பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து, விளக்கம் கேட்க முயன்ற போது, அறநிலைய துறை அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.
- நமது நிருபர் -
செப்டம்பர் 11,2012
ReplyDeleteசென்னை : சென்னை, மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 180 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 "கிரவுண்ட் இடத்தை மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவி லுக்குச் சொந்தமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவை குத்தகை அடிப்படையில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பல சொத்துக்கள், தனியாரின் பிடியில் சிக்கியுள்ளன.
மீட்பு: இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவில் நிர்வாகம், கோவில் சொத்துக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், கடந்த மூன்று மாதங்களில் மீட்கப்பட்டுள்ளன.இந்த வகையில், தனியார் பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ள, 30 "கிரவுண்ட் இடத்தையும் மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது:மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், 76 "கிரவுண்ட் சொத்து, கோவிலுக்குச் சொந்தமாக உள்ளது. இது, அங்குள்ள தனியார் பள்ளியின் விளையாட்டுத் திடலாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, குறைந்த தொகை, குத்தகை கட்டணமாக மாதந்தோறும் கொடுக்கப்படுகிறது. இதில், 30 "கிரவுண்ட் நிலத்தை, பள்ளியின், இணைப்பு பள்ளிக்கு குத்தகைக்கு வழங்க, முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், குத்தகை இடம் வழங்கப்படவில்லை.மொத்தம் உள்ள, 76 "கிரவுண்ட் இடத்தில், 46 "கிரவுண்ட் இடம், கோர்ட் விசாரணையில் உள்ளது. மீதம் உள்ள, 30 "கிரவுண்ட் இடத்தை கோவிலுக்கு ஒப்படைக்க, தனியார் பள்ளி நிர்வாகம் சம்மதித்தது. ஆனால், இதுவரை ஒப்படைக்கவில்லை. தொடர்ந்து, தனியார் பள்ளி வசத்திலேயே இடம் உள்ளது. இந்த இடத்தை மீட்டு, கோவில் சொத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அந்த பக்தர் கூறினார்.
உறுதிமொழி: இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: மொத்தம் உள்ள, 76 "கிரவுண்ட் இடத்தில், 30 "கிரவுண்ட் இடத்தை கோவிலுக்கு ஒப்படைப்பதாக பள்ளி நிர்வாகம், 1996ம் ஆண்டு, கடிதம் அளித்தது. 2005ம் ஆண்டு, ஒப்படைப்பு உறுதி செய்யப்பட்டது. குத்தகை நீட்டிப்பு செய்யப்படாத நிலையில், மீதம் உள்ள, 46 "கிரவுண்ட் இடத்திற்கு நஷ்ட ஈடாக, மாதம், 1,250 ரூபாயை பள்ளி செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, குறிப்பிட்ட இடத்திற்கு மாதம், ஐந்து லட்சம் ரூபாய் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு ஒப்படைப்பதாகக் கூறப்பட்ட, 30 "கிரவுண்ட் இடத்தைக் கையகப்படுத்த, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரூ.456 கோடி: இது குறித்த சட்ட நிபுணர்களின் கருத்துரு கேட்டபோது, "கோவில் இடத்தை, கோவில் நிர்வாகம் எடுத்து, மதில் சுவர் கட்டுவதில் சட்ட ரீதியான தடை ஏதும் இல்லை என்று கருத்து கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 76 "கிரவுண்ட் இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 456 கோடி ரூபாய். கோவிலுக்கு ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலத்தின் மதிப்பு, 180 கோடி ரூபாய்.இவ்வாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நடந்தது என்ன? : கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 76 "கிரவுண்ட் இடம், தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது; குத்தகை, 1976ம் ஆண்டோடு முடிந்துவிட்டது; இருப்பினும், கோவில் இடத்தை, பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 1994ம் ஆண்டில், குறிப்பிட்ட தனியார் பள்ளியின், இணைப்பு பள்ளியில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.அப்போது, தங்களின் இணைப்பு பள்ளிக்கு விளையாட்டுத் திடல் இல்லை என்றும், அதற்கான இடத்தைக் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, "கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம், விளையாட்டுத் திடலுக்காக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.இதையடுத்து, 1995ம் ஆண்டு, தனியார் பள்ளியின் அனுபவத்தில் இருந்த, 76 "கிரவுண்ட் இடத்தில் இருந்து, 30 "கிரவுண்ட் இடத்தை, இணைப்பு பள்ளிக்கு, குத்தகை அடிப்படையில் ஒதுக்கி, இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது.
ReplyDeleteமேல்முறையீடு : ஆனால், குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வழி இல்லை என்ற காரணத்தால், இணைப்பு பள்ளி நிர்வாகம், 30 "கிரவுண்ட் நிலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைஅடுத்து, "இடத்தைப் பெற்றுக் கொள்ள இணைப்பு பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை என, அறநிலையத் துறை பதிவேட்டில், பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், தனியார் பள்ளியின் பொறுப்பில் மீதம் உள்ள, 46 "கிரவுண்ட் இடத்தையும் திரும்ப எடுக்க, கோவில் நிர்வாகம் முயற்சி எடுத்தது. இது குறித்த வழக்கில், கோவில் நிர்வாகத்திற்கு பாதமாக தீர்ப்பு வந்த நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
http://temple.dinamalar.com/news_detail.php?id=13258
இந்து அறநிலைய துறையின் நிர்வாகம் நாறுகிறது.
ReplyDeleteலஸ் சர்ச் சாலையில் ஒரு மாடியில் செல்லதுரை என்பவர் கிரிஸ்துவ பிரார்த்தனை இடமாக பயன்படுத்திகிறார். அறநிலைய துறை அதிகாரி பரஞ்ஜோதி என்பவர் விசாரணையை எல்லாம் முடித்து விட்டு இடத்தை கையகபடுத்தும் ஆணையை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஊழல். மொத்தமும் ஊழல் மயமாகி விட்டது. ஜெ.மோகன்ராஜ்.
ReplyDelete