இந்திய கல்வெட்டு வரலாற்றில் முதல் கவிநயம் பெற்ற கல்வெட்டு சகவேந்தனான ருத்ரதாமனின் கிர்நார் கல்வெட்டு. முதன்முதலாக சக வர்ஷத்தைத் குறிப்பிடும் இந்தக் கல்வெட்டு பொது 150-ஐச் சேர்ந்தது. நனி சிறந்த கவிச்சுவை மிளிரும் வடமொழி கல்வெட்டான இது உரைநடைக் காப்பியமாகவே அமைந்துள்ளது.
Sankara Narayanan G
இதற்கு முந்தைய வடமொழி, பாகதம் மற்றும் தமிழ் கல்வெட்டுகள் கொச்சை சொற்களைக் கொண்டவை. இலக்கிய நயம் பெறாதவை. இந்தக் கல்வெட்டு தோன்றிய காலத்தில் இலக்கிய நயம் பொதிந்த கல்வெட்டு வேறெம்மொழியிலும் பாரதத்தில் கிடைக்கவில்லை.
இதன்பிறகு நான்காம் நூற்றாண்டில் ஸமுத்ரகுப்தனின் இலாஹாபாத் ப்ரசஸ்தி, ஆறாம் நூற்றாண்டில் யசோவர்மனின் மந்தஸௌர ப்ரசஸ்தி ஏழாம் நூற்றாண்டில் இரண்டாம் புலகேசியின் ஐஹொளே கல்வெட்டு ஆகியவை. செவ்வியல் மொழியில் சிந்தையைக் குளிர்விக்கும் வண்ணம் சிறந்த நடையைக் கொண்டவை. காப்பியங்களுக்கு ஈடான செய்யுளும் உரைநடை யும் வாய்ந்தவை. இத்தகைய பிற்காலத்திலும் கூட இவற்றுக்கிணையான மொழி நயம் பயந்த கல்வெட்டுகள் வேறெம்மொழியிலும் செதுக்கப் பெறவில்லை.
No comments:
Post a Comment