சிலப்பதிகாரமும் பஞ்ச தந்த்ரமும்
சிலப்பதிகாரத்தில் ஒரு கீ்ரிக்கதை ஒன்று வருகிறது. ஒரு பார்ப்பனி குழந்தை இறந்தது கண்டு தன் கணவன் வளர்த்த கீரியின் வாயில் குருதியும் கண்டு கீரியைக் கொன்றாள். பிறகு பாம்பொன்று இறந்து கிடப்பதைக் கண்டு உண்மையறிந்தாள். கணவனிடம் முறையிட்ட போது அவன் ஒரு வடமொழிச் செய்யுளைக் கூறினான் என்று வருகிறது.
“பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு
இந்த வடமொழி வாசகம் யாதென்ற கேள்விக்கு அரும்பத உரையாசிரியர் கூறும் வடமொழிச் செய்யுள்
அபரீக்ஷ்ய ந கர்த்தவ்யம், கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம்
பஸ்சாத் பவதி ஸந்தாபம் ப்ராஹ்மணீ நகுலம் யதா
என்பதாகும். இந்தச் செய்யுள் வடமொழி நூலான பஞ்சதந்த்ரத்தில் காணப்பெறுவதாகும். இதைக் கொண்டே வையாபுரிப்பிள்ளையும் இரா.நாகசாமி அவர்களும் சிலம்பு பஞ்சதந்த்ரத்திற்கு பிற்காலத்தியது என்று கூறினர்.
இதை மறுப்பவர்கள், இதை இடைச்செருகல் என்றும் பஞ்சதந்த்ரத்தில் இந்தச் செய்யுளே இல்லையென்றும் பலவாறாகக் காரணம் கூறுகின்றனர்.
ஆனால் அரும்பதவுரையாசிரியரைக் காட்டிலும் தேர்ந்த கூற்றாக இடைச்செறுகல் கூற்று இல்லை. மேலும் இந்தச் செய்யுள் பஞ்சதந்த்ரத்தில் இருப்பது உறுதியான ஒன்று. ஆகவே சிலம்பின் காலம் நான்கிலிருந்து ஐந்தாக வகுப்பது சரியாகலாம் என்று கருதுகிறேன்...
No comments:
Post a Comment