Saturday, October 12, 2024

மெக்காலே கொண்டு வந்த கல்வி முறை .

 வேட்டையன் படத்தில் மெக்காலேதான் சமநீதி கொண்டு வந்தார் என்று ஒரு வசனம் வருகிறதாக அறிகிறேன். இது உண்மையாக இருக்குமானால், தமிழ்நாட்டு அரையாணாக்களின் மூடத்தனத்திற்கு ஈடே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Macaulay held Western culture in high esteem, and was dismissive of Indian culture, which he perceived as stagnant and something which had fallen well behind mainstream European scientific and philosophical thought. He once claimed that: A single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia. Essentially, Macaulay saw his undertaking as a "civilising mission": We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population.[4] "Macaulayism" and modern India See also: Business process outsourcing to India Since the second half of the 20th century, Nationalists in India have criticised Macaulay his views on Hinduism and Indian culture at large, which they claim skewed his educational policies. Speaking at a national seminar on "Decolonising English Education" in 2001, professor Kapil Kapoor of Jawaharlal Nehru University highlighted that mainstream English-language education in India today has tended to "marginalise inherited learning" and uproot academics from traditional 'Indian modes of thought', inducing in them "a spirit of self-denigration (ISO: hīnabhāvanā )."[6] Many Indian nationalists have criticised Macaulayism, claiming that it uprooted Indian traditions in sectors such as finance and replaced them with a foreign system which was wholly unsuited to India. In addition, they claim that Macaulayism caused foreign systems of thought to become prioritised over Indian systems of thought, particularly Hindu systems of thought.

மெக்காலே கொண்டு வந்த கல்வி முறை சாதாரண மக்களுக்கு நன்மை செய்தது என்பது உண்மை. ஆனால் அதற்கும் சமநீதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.


சமநீதி வந்தது மக்களுக்கு ஓட்டுரிமை கிடைத்த பின்னர். அதைக் கொண்டு வந்தது நம் விடுதலைப்போரை முன்னின்று நடத்திய காங்கிரஸ் இயக்கத்தினர்
பெரியார் மக்களாட்சியே தேவையில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவர் என்பதை நான் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். மெக்காலேயும் அதைத்தான் சொல்கிறார்.
சார்ட்டிஸ்ம் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் தொழிலாளர்கள் இயக்கம் ஒன்று நடந்தது. அவர்கள் அரசிற்கு ஆறு முக்கியமான கோரிக்கைகளை வைத்தார்கள். அவற்றில் ஒன்று ஓட்டுரிமை. இதை வலுவாக எதிர்த்து மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்டில் பேசினார்.
இது அவர் சொன்னது: The essence of the Charter is universal suffrage. If you withhold that, it matters not very much what else you grant. If you grant that, it matters not at all what else you withhold. If you grant that, the country is lost.
அதாவது ஓட்டுரிமை கொடுத்தால் நாடே அழிந்து விடும் என்கிறார! அதே பேச்சில் இன்னொன்றும் சொல்கிறார்:
No more than a humane collector in India has to those poor peasants who in a season of scarcity crowd round the granaries and beg with tears and piteous gestures that the doors may be opened and the rice distributed. I would not give the draught of water, because I know that it would be poison. I would not give up the keys of granary, because I know that, by doing so, I should turn a scarcity into a famine. And in the same way, I would not yield to the importunity of multitudes who, exasperated by suffering and blinded by ignorance, demand with wild vehemence the liberty to destroy themselves.
அதாவது இந்திய விவசாயிகள் பசியில் உணவு சேகரித்து வைக்கப்படும் இடத்திற்கு வந்து கண்ணீரோடு புலம்பினாலும் தண்ணீர் கூடக் கொடுக்க மாட்டேன் என்று மிகத் தெளிவாகச் சொல்கிறார். அப்படிக் கொடுத்தால் பற்றாக்குறை பஞ்சம் ஆகி விடுமாம்.
இவரைச் சமநீதி செம்மல் என்று சொல்ல தமிழகத்தின் அரையணாக்களால் மட்டுமே முடியும். இவர்கள் அறிவோடு எந்தத் தொடர்பும் இல்லாத தடித்தனத்தின் அடையாளங்கள்.

மெக்காலே கல்வி முறை
"நமது கட்டுப்பாட்டில் உள்ள நிதியை எப்படி வேண்டுமானாலும் செலவளிக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. அதைப் பயனுள்ள கல்வியைப் போதிப்பதற்கே செலவளிக்க வேண்டும். சமஸ்கிருதம், அரபியை விட ஆங்கிலம் கற்றுக் கொள்வதே மிகவும் சிறந்தது. இந்தியர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்..... நம்மிடம் உள்ள வசதிகளைக் கொண்டு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கல்வி போதிக்க நம்மால் இயலாது. அதனால் நாம் ஒரு சிறு வகுப்பினரை உருவாக்க வேண்டும். அவர்கள் நம் அரசாங்கத்திற்கும் நம் ஆட்சிக்குக் கீழ் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர்களாக இருப்பார்கள். இந்த வகுப்பினர் இந்திய ரத்தமும் நிறமும் உடையவர்கள்; அதே சமயம் ஆங்கிலேய சிந்தனை, பண்பாடு, அறிவாற்றல் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்ட அறிவியலைக் கொண்டு தங்கள் உள்ளூர் மொழிகளை நாகரீகப் படுத்துவார்கள். தாங்கள் கற்ற அறிவை பிற மக்களுக்கு முன் எடுத்து வைப்பார்கள்"
ஆங்கிலேய ஆட்சிக்கு விசுவாசமாக உழைக்கக் கூடிய, ஆங்கிலம் பேசக்கூடிய குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப் பட்ட மெக்காலே-வின் கல்வித்திட்டம்தான் இன்றும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களால் எழுதப் பட்ட, புனைந்துரைகளும் திரிப்புகளும் நிரம்பிய 'இந்திய வரலாறு' தான் இன்றும் இந்திய மாணவர்களுக்கு போதிக்கப் படுகிறது.
Macaulay's argued that Sanskrit and Arabic were wholly inadequate for students studying history, science and technology. Referring to the orientalists, he observed, "I have never found one amongst them who could deny that a single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia". He argued, "We have to educate a people who cannot at present be educated by means of their mother-tongue. We must teach them some foreign language." The solution was to teach English.
In his Minute on Indian Education of February 1835, he asserted, "It is, I believe, no exaggeration to say that all the historical information which has been collected from all the books written in the Sanskrit language is less valuable than what may be found in the most paltry abridgement used at preparatory schools in England".
Macaulay gave assurances that his policies would help to dehinduize the Hindus, so that Christians as well as religious sceptics could hope for the Hindus to join their own ranks: "His letter to his evangelist father is proof that he was wrecking the education system as a means of advancing proselytization: 'No Hindoo, who has received an English education, ever remains sincerely attached to his religion. Some continue to profess it as matter of policy; but many profess themselves pure Deists, and some embrace Christianity. It is my firm belief that, if our plans of education are followed up, there will not be a single idolater among the respectable classes in Bengal thirty years hence. And this will be effected without any efforts to proselytise; without the smallest interference with religious liberty; merely by the natural operation of knowledge and reflection. I heartily rejoice in the prospect.'"

எல்.எப்.ரஷ்ப்ரூப்ஸ் என்ற வெள்ளையர் தன் 'இந்தியா' என்கிற புத்தகத்தில் தெளிவாக அதை விளக்குகிறார்.
//'மெகாலே'உள்ளிட்ட பல பிரமுகர்கள்,மேனாட்டு மனோபாவங்களில் இந்தியவர் பழகுவதால் ஜனசமூக ஆட்சிக்குரிய ஆலோசனைச் சபைகளை நிறுவவேண்டும் என்று கேட்பார்கள் என்றே எதிர்பார்த்தனர்.


கல்வித்திட்டத்தின் உட்கருத்து என்ன? கற்றறியவல்ல சாதியினர் ஆங்கிலக்கல்வி பயின்றபின்,அவர்கள் பெற்ற மேனாட்டுக் கல்வியின் நன்மையெல்லாம் மெல்ல மெல்ல பொதுமக்களின் வாழ்க்கையிலே பொசியுமாதலால்,நாளடைவில் அனைவரும் மேனாட்டு மனோபாவங்களை உடையவர்களாகி நாளடைவில் கிருஸ்த்தவர்களாகி விடுவார்கள் என்பதே.//
தீர்க்கமாக இந்த கல்வித்திட்டத்தின் நோக்கமே இந்தியர்களும்,இந்தியத்தன்மையும் காட்டுமிராண்டித்தனமானது எனவே, அவர்கள் இயேசுவை ஏற்க வைக்க,இது ஒரு உபாயம் என்றே,மெக்காலே உள்ளிட்ட பலர் எண்ணியதாக சொல்கிறார் ரஷ்ரூப்ஸ்.இதற்கும் மேலே அவர் தெளிவாக சில விஷயத்தை விவரிக்கிறார்.
//இப்படி நினைத்தவர்களுக்கு சில விஷயம் புரியவே இல்லை.கல்வி அறிவுடைய ஜாதிகள் முற்காலத்தில் பாரசீகம் கற்றது போல இந்நாளில் ஆங்கிலம் கற்கிறார்கள்.ஆதலால் இவர்களது இந்தியத்தன்மை மாறிவிடவில்லை.தங்களா ஆள்கிற அந்நியரிடம் நட்போ,விஸ்வாசமோ வரவில்லை.வேலைக்கு லாயக்கான கல்வி என்று மட்டுமே நினைக்கிறார்கள்.கடைசியில்,தங்களை ஆளுவோருக்கு ஆள உரிமையில்லை என்று வாதாடுவதற்கு மட்டுமே இக்கல்வி பயன்பட்டது//
ஆக ஆங்கில வழிக்கல்வி மூலமாக என்ன நடக்கும் என்று மெக்காலே உள்ளிட்ட பலர் நினைத்தார்களோ? அது அன்று நடக்கவில்லை என விளக்குகிறார் ரஷ்ரூப்ஸ்.
அடுத்தது,இந்த கல்வி முறையால் தலைப்பாகம் பெருத்தும்,கீழ்பாகம் சிறுத்ததும் போல பெரிய இடைவெளி வந்துவிட்டது என்று சொல்கிறார்.குறிப்பாக,இந்தியாவில் காணப்பட்ட கிராமப்புற கல்வி நிலையங்கள் முற்றாக ஒழிந்தன.அது மிகப்பெரிய சமநிலைக்குலைவை ஏற்படுத்திவிட்டது என்றும் சொல்கிறார்.
//மேனாட்டு வழிகளிலே சென்று இந்தியா முன்னேற்றம் அடையும் என்று நினைத்தே பிரிட்டிஷார் இந்தியாவிற்கு மேனாட்டு கல்வியை அளித்தார்கள்.ஆனால் அவர்கள் கோரிய பயனை இந்தியா அடையவில்லை.இனியும் அடையாது என்றே தோன்றுகிறது.மேனாட்டு கல்வி அறிவாளி சமூகம் ஒன்றை உருவாக்கியது.இவர்கள் நாடெங்கும் பரவி இந்தியா ஆங்கிலமயமாவதை தடுக்கிறார்கள்.அது இந்தியமயமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்//
இதன் வழி அவர் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன்.இந்தியர்களுக்கு மேனாட்டு கல்வியை கொடுத்தாலும் அவர்களுக்கு நம் மீதோ,ஆட்சியின் மீதோ விஸ்வாசமில்லை.நம்மிடம் கற்ற கல்வியை வைத்து கிருஸ்த்தவராக மாறாமல்,ஆங்கிலேயேனை போல் நடக்காமல் இந்தியத்தன்மையை மேலும் வளர்க்கிறார்கள் என்று வருந்துகிறார்.
முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.மொஹலாயனோ,ஆங்கிலேயனோ யாராக இருந்தாலும் இந்தியர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ய வந்தவர்கள்.தங்களது ஆட்சிக்கு சாதமாக செய்த விஷயங்களில் பல நன்மைகள் மக்களுக்கு நடந்திருக்கும்.அதை விட பல தீமைகளும் நடந்திருக்கும் ஆனால் இதற்காக அவர்கள் மேல் நம் கண்ணாடிகளை மாற்றி மாற்றி போட்டுப் பார்க்க எதுவும் இல்லை.அவர்கள் அந்நியர்கள் தங்கள் சதியால்,வலிமையால் நம்மை ஆண்டு நடத்தியவர்கள்..அவ்வளவுதான்.
ரயில் தண்டவாளம் போட்டால் இந்திய அரசு இன்று செய்வது போல மக்கள் சேவைக்காகவா?
அன்று ஆங்கிலேய அரசு போட்டது? அதன் தன் செளகரியத்துக்கு அமைத்துக் கொண்டது.இந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களை,கொன்றொழித்த மக்களை எண்ணிப் பார்த்தால் இவையெல்லாம் ஒரு பொருட்டா?
மற்றபடி எதன் மேலும் நாம் வெறுப்பு கொள்ளத் தேவையில்லை.வரலாற்றை திருத்தி எழுத முடியாது.ஆனால் நாய் போல வாலாட்டிக் கொண்டே இரு என்று இன்றும் வெள்ளைய ஆட்சிக்கு வால் பிடிப்பவர்களை பார்த்தால் எரிச்சலாக வருகிறது.உண்மையில் மெக்காலே யார் உருவாக வேண்டும் என்று நினைத்தாரோ அவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.பலரை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது உண்மை.

மெக்காலேயைத் தூக்கிப் பிடிக்கும் அறிவிலிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அவர் இங்கு வந்தது ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாக. இந்தியாவில் என்ன செய்தால் அது ஏகாதிபத்தியத்திற்கு ஆதாயமாக இருக்குமோ அதைத்தான் அவர் பரிந்துரைத்தார். அவர் பரிந்துரைத்த கல்விமுறையும் அந்த அடிப்படையில்தான் பரிந்துரைக்கப்பட்டது. சட்டம் சீராக்கப்பட்டது, ரயில் போக்குவரத்து கொண்டு வரப்பட்டது, பல்கலைக் கழகங்கள் பிறந்தது இவை அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் தேவையின் அடிப்படையில்தான் உருவாகின - சுரண்டலை திறமையுடன் செய்வதற்காக. இவற்றினால் இந்திய மக்களுக்கு நன்மைகளும் ஏற்பட்டன. இவற்றினால் உருவாகிய முரண்களின் காரணமாகத்தான் நமக்கு விடுதலையும் கிடைத்தது.
ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஏகாதிபத்தியச் சுரண்டல். எந்த சமரசமும் செய்து கொள்ளாத சுரண்டல்.
அதனால்தான் சுதந்திரத்திற்கு முன்னால் இந்தியாவில் கல்விக் கூடங்கள் அதிகம் உருவாகவில்லை. எவ்வளவு தேவை என்று ஏகாதிபத்தியம் கருதியதோ அவ்வளவே கல்வி தரப்பட்டது. அதனால்தான் சுதந்திரம் அடைந்த போது எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 12 சதவீதம் மட்டும் இருந்தார்கள். பெண்களில் 8 -9%. இங்கிலாந்தில் 1900 ஆண்டிலேயே சுமார் 97 சதவீதம் - ஆண்களும் பெண்களும் ஏறத்தாழ இணையாகக் - கல்வி அறிவு பெற்றிருந்தார்கள். 1891லேயே அடிப்படைக் கல்வி அங்கு ஏறத்தாழ இலவசமாகி விட்டது. அரசு கல்விக்காக நிதி ஒதுக்கத் துவங்கி விட்டது.
இது இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் நடந்திருந்தால் 1947ல் இந்த நிலைமை இருந்திருக்காது.
கல்வி இந்தியாவில் ஏழை மக்களிடம் உண்மையாகச் சேர்ந்தடைந்தது 1947க்குப் பின்னர்தான். அதற்குக் காரணம் மக்களாட்சி முறை. இது முதலாளித்துவ ஜனநாயகம் என்றாலும் மக்களின் சில அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் முதலாளித்துவ அரசிற்கும் ஏற்படுகிறது. அதுவும் அழுத்தம் தாங்க முடியாமல்தான் செயல்படுகிறது.
எனவே மெக்காலேயின் காரணமாகத்தான் இந்தியாவில் ஏழை மக்களுக்கு கல்விக் கிடைத்தது என்பது அடிப்படையில் அறிவிலிகளின் பிதற்றல். இதை பெரியாரிய நாஜிக் கோமாளிகள் செய்து கொண்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் பெரியார் ஏகாதிபத்தியத்தின் ஊதுகுழலாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர். அதன் தரகராக இருப்பதில் எந்தத் தயக்கமும் காட்டாதாவர். அன்றையக் கம்யூனிஸ்டுகள் இந்த உண்மைகளைச் சொல்வதற்கு எந்தத் தயக்கமும் காட்டியதில்லை. இன்றையக் கம்யூனிஸ்டுகளே தரகர்களாக மாறி விட்டதால் பெரியாரைத் தூக்கிப் பிடிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

No comments:

Post a Comment