Friday, October 18, 2024

சங்க இலக்கியத்தில் வைதீக சிந்தனைகள் - பேராசிரியர் வி, சிவசாமி

  -  தொடபத்திவே சங்க இலக்கியம், வைதிக: சிந்தனைகள் என்பன பற்றிச் சுருக்கமாக ' நோக்குவோம். தமிழிலுள்ள காலத்தால் முந்திய இலக்கிய நூல்களை: உள்ளடக்கியதாகச் சங்க இலக்கியம் இலங்குகின்றது. இதிலே. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆய எட்டுத்தொகை நூல்களும், இருமுரு காற்றுப் படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி. நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் எனும் தொகை நூல்களும் அடங்குவன இந்நூல்களிலுள்ள பாடல்கள். இயற்றப்பட்ட காலம் வேறு, அவை தொகுக்கப்பட்ட காலப்வேறு. இந்நூல்கள் பெரும்பாலும் அகம், புறம் எனும் உலகியல். விடயங்கள் பற்றியவை. திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் சமயச்சார்பானவை. மேலும் இவ்விரு நூல்களும் கலித் தொகையும் மொழிநடை, கூறும் பொருள் முதலியவற்றின் அடிப்படையிலே சங்ககாலத்திற்குச் சற்றுப் பிற்பட்டவை எனத் தமிழிலக்கிய ஆய்வாளர்களில் ஒருசாரார் கருதுவர்.' எட்டுத் தொகை நூல்களிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள், அவை தொகுக்கப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டவை எனக் கருதப். படுவதால், இவையும் காலத்தால் பிந்தியவை எனக் கருதப்படும். இது போலத் தமிழிலுள்ள காலத்தால் முந்திய இலக்கண நூலான தொல்காப்பியம் சங்ககாலத்திற்குப் பிந்தியதென ஒருசாரார் 

கொள்ளினும் அதன் பெரும்பகுதி சங்க காலத்திற்குரியதெனவும், அதற்கு முற்பட்டதெனவும் கொள்ளப்படுகின்றது. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை கருதியது போல இஃது ஒரு தொடர்ச்சியான இலக்கண மரபைக் கொண்டிருப்பதால் முற்பட்ட, பிற்பட்ட காலக் கருத்துக்கள் இதிலே காணப்படுவதில் வியப்பில்லை.* இக்கட்டுரையிலே முற்குறிப்பிட்ட மூன்று இலக்கிய நூல்கள், கடவுள் வாழ்த்துப் பாடல்கள் தவிர்ந்த ஏனையவற்றிலே புலப்படும் வைதிக சிந்தனைகள் பற்றியே நன்கு கவனிக்கப்படும். தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்கள். புதிய கருத்துக்கள் பற்றிக். கூறுவதற்குப் பிற்குறிப்பிட்டவை சுருக்கமாகக் கருத்திற் கொள்ளப்படும்.  சங்க நூல்களில் காலம் பற்றிக் கருத்து வேறுபாடுகளிருப்பினும் அவற்றுட் காலத்தால் முற்பட்டவை கிபி. முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என: ஆய்வாளர்களில் ஒருசாரார் கருதுவர். அவ்வாறு கொள்ளினும் இந்நூல்கள் தோன்றுதற்கான சூழ்நிலை உருவாகச் சில நூற்றாண்டுகள் சென்றிருக்கும். எனவே இவை கி.மு. 300 தொடக்கம் கி.பி 300 வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவை. எனப் பொதுவாகக் கொள்ளலாம்.* இக்காலவரையின் கீழ் எல்லை குறித்துக் கருத்து வேறுபாடு பொதுவாக இல்லை. ஏற்கனவே குறிப்பிட்ட பிற்பட்ட நூல்கள். மூன்றும் இக்கால முடிவில் அல்லது சற்றுப் பின்னர் எழுந்தன எனலாம்.  'வதம்' எனும் பதத்திலிருந்தே 'வைதிக' எனும் பதம் வந்துள்ளது. எனவே 'வைதிக' எனில் வடமொழியிலுள்ள காலத்தால் முந்திய நூல்களும், இந்துக்களின். புனித நூல்களுமான 'வேதங்கள் கூறும்' அல்லது 'வேதங்களுக்குரிய' எனப்பொருள்படும். வேத இலக்கியம் சம்ஹிதை (மந்திரங்களின் தொகுப்பு). பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷதங்கள், சூத்திரங்கள் எனும் பகுதிகளைக் கொண்டதாகும். இவை பல்வேறு காலப்பகுதிகளில் இயற்றப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டலையாகும். இவை பொதுவாக கி.மு.2000 - கி.மு400 வரையுள்ள. காலப்பகுதியைச் சேர்ந்தவை எனக் கொள்ளலாம். சங்க நூல்கள் போலவே. வேதங்களும் தொகை நூலாகும். ஆனால் வேதங்கள் சமயச் சார்பானவை: காலத்தாலும் முற்பட்டவை.  வேத இலக்கியப்பகுதிகளிலே மந்திரங்களிலும், பிராமணங்களிலும். வேள்விகளே பெரும்பாலும் வலியுறுத்தப்படுகின்றன. ஆரண்யகங்கள், உபநிவுதங்களிலே பொதுவாக ஞானமார்க்கமே வலியுறுத்தப்படுகின்றது.. சிலவற்றிலே பக்தி பற்றியும் கூறப்படுகின்றது. உபநிஷதங்களின் பின் தோன்றிய சூத்திரங்களிலே சிஸூத, வியாகரணம், நிருக்தம், சந்தஸ், கல்பம் (வேள்வி), ஜோதிஷமாகிய ஆறு அங்கங்கள் பற்றியும், வேதாந்தம் பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஏறக்குறைய இந்நூல்கள் எழுந்த காலப் பகுதியிலே வைதிக சமய சமூக மரபுகளைத். தொகுத்துக் கூறும் சிரெளத, தர்ம, கிருஹ்ய, சுல்பகூத்திரங்களும் நன்கு குறிப்பிடற்பாலன.  

சங்க நூல்களில், ஏற்கனவே குறிப்பிட்ட இரண்டினையும்விட ஏனையவை உலகியல் சார்பானவை. அவை குறிப்பாக 'அகம்' (குறிப்பாகக் காதல் பற்றிய உள்ளுணர்வுகள்), புறம் (குறிப்பாகப் போர் பற்றிய கருத்துக்கள், செயற்பாடுகள்). பற்றியவை.  வைதிகப் பண்பாடு ஆரியப் பண்பாடு எனவும் கூறப்படும். ஆரிய எனும் பதம். பொதுவாகக் குறிப்பிட்ட மொழியையன்றி இனத்தினைக் குறிப்பதாகக் கொள்ளப்படுவதில்லை. ஆரியமொழி - குறிப்பாக வடமொழி சார்பான பண்பாட்டினையுடையவர்கள் ஆரியர் எனப்படுவர்.  வைதிக சிந்தனைகள் தமிழகத்திற்கு வடக்கே, குறிப்பாக வட இந்தியாவில். “உருவாகிப் படிப்படியாகத் தென்னிந்தியாவிலே ஆகத் தெற்கேயுள்ள தமிழகத்திலே. சங்க காலத்திற்கு முன்பும், சமகாலத்திலும் ஒளவாவது பரவி, பின்னர் கூடுதலாகப் பரவியுள்ளன. வைதிக சிந்தனைகளுடன் தமிழகத்திற்கு வந்தவர்களிலே சிறப்பாக அந்தணர்கள் குறிப்பிடற்பாலர். அவர்களில் ஒரு சாரார் ரிஷிகள். இவர்களை விட ஷத்திரியர் (அரச வகுப்பினர், போர் வீரர்) வணிகர், சூத்திரர் முதலியோரும் இங்கு. வந்திருப்பர் என வரலாற்றறிஞர் கலாநிதி. கே.கே, பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.* மேலும் இவர்கள் அலை அலையாகப் பல நூற்றாண்டுகளில் வந்திருப்பர் எனவும், இவ்வாறு வந்தவர்களின் தொடர்பினால் இங்கு வாழ்ந்தவர்களில் ஒருசாரர் வைதிக பண்பாட்டினைப் பின்பற்றினர் எனவும் இவ் வரலாற்றாசிரியர் கட்டிக்காட்டியுள்ளார்.. மேலும் வெளியே இருந்து வந்தவர்களுக்கும், இங்கு ஏற்கனவே வாழ்ந்தோர் களுக்குமிடையே பொதுவாகக் குறிப்பிட்ட மட்டங்களிலே பரஸ்பரம் புரிந்துணர்வும், நல்லுறவும், ஒன்றிணைவும் ஏற்பட்டன எனலாம்.  அந்தணர்கள் குறிப்பாக வேதங்களை நன்கு கற்றிருந்தனர். ஒழுக்கமுள்ள முன்மாதிரியான வாழ்க்கை நடத்தி வந்தனர். வடமொழி அறிவுடன் தமிழிலும் பெரும். பெரும்புலமையும், பாண்டித்தியமும், பெற்றிருந்தனர். பல தலைமுறைகளாகத் தமிழகத்திலே வாழ்ந்தமையாலும், அவர்கள் இயல்பாகவே தமிழிலே புலமை: கொண்டவர்களாகத் தமிழ் மக்களுடன் நன்கு உறவாடி வந்தனர். அவர்களிற். கணிசமான தொகையினர் மிகச் சிறந்த புலவர்களாக விளங்கினர். தம்முடைய மதிநுட்பம், பல திறப்பட்ட அறிவுத்திறன், சொற்றிறன் முதலியனவற்றால் ஆளும் வர்க்கத்தினரையும், பிறரையும் கவர்ந்தனர். பெரிய செல்வாக்குப் பெற்றிருந்தனர், குறிப்பாகச் சமூகத்தின் உயர்நிலையில் உள்ளோருக்கு நன்னெறி புகட்டு வோராகவும், ஆலோசகர்களாகவும் திகழ்ந்தனர். இது பற்றிப் பின்னர் கட்டிக்காட்டப்படும்.  சங்க இலக்கிய நூல்களிலே 'புறம்' பற்றிய பாடல்களிலே பட்டுமன்றி 'அகம்' பற்றிய பாடல்களிலும் வைதிக சிந்தனைகள் அங்குமிங்கும் விரவி வந்துள்ளமை குறிப்பிடற்பாலது. ஒப்பீட்டு ரீதியிலே புறம் பற்றிய பாடல்களிலேதான் இவை கூடுதலாக வந்துள்ளமை கவனித்தற்பாலது. 

சங்க நூல்களில் வேதம் 7 மறை சங்க நூல்களிலே வேதம் எனும் வடமொழிப் பதத்திலும் பார்க்க மறை எனும் தமிழ்ப் பதமே கூடுதலாக வந்துள்ளது. இவற்றைவிட முதுநூல், கேள்வி, கற்பு முதலிய பதங்களும் வந்துள்ளன. காலத்தால் முந்திய நூலாகவும், முது. முதல்வனான இறைவனைப் பற்றிய நூலாக விளங்குவதாலும் வேதம் முதுநூல். (புறம் 166) எனவும், எழுதப்படாமல் செவிவழியாகப் பேணப்பட்டு வந்தமையால் கேள்வி (கேள்வி மலிந்த வேள்வி புறம் 897) எனவும், எழுதாக் கற்பு (குதொ.80) எனவும் அழைக்கப்படுகின்றது. கேள்வி என்பது வட மொழியிலே வேதத்தைக் குறிக்கும் சுருதி எனும் வடமொழிப் பதத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும். அடைமொழிகளுடன் வேதம் 7 மறை வேதமும் அதனைக் குறிக்கும் பிறபதங்களும் தனித்தனியாக மட்டுமன்றி, அடைமொழிகளுடனும். அவை சிறப்பிக்கும் இறைவனுடனும், அவற்றை ஒழுங்காக இதும் அந்தணரோடும் சேர்த்தும் கூறப்பட்டுள்ளன. வேதங்கள் கூறும் நெறி பற்றியும் சில பாடல்களிலே குறிப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டுகளாக 'நான்மறை' புறம் 362), 'நான்மறை முதுநூல்' (அகம் 81), சிறந்த நான்மறை' (புறம் 6), 'மறைநவில் அந்தணர்” (புறம் 15), 'நற்பனுவல் நால் வேத்' (புறம் 15), 'அறம்புரி அருமறை நவின்ற நாவின் திறம் பொருள் கொள்கை அந்தணர்" (ஐகு.றூ. 282), 'நால்வேதநெறி திரிமினும்' (புறம் 224) போன்றவை குறிப்பிடற்பாலன. வேதங்கள் கூறும் சமய நெறி நான்கு வேதங்களிலும் கூறப்படும் சமய, ஒழுக்கநெறி குறிப்பிடற்பாலது.. வேதங்கள் சிறப்பித்துக் கூறும் இறைவனைப் போலவே இதுவும் நிலையானது. என்றுமுள்ளது. சேரமான் பெருஞ்சோற்றுதியஞ்சேரலிரும்பொறையின் பல்வேறு அரும்பெரும் சாதனைகளைப் புகழ்ந்து வழக்கமாகத் தத்தம் இயல்பு மாறாத, பால், பகல், நால்வேதநெறி ஆகியன மாறினும், அரசன் என்றும் ஒரேமாதிரி 'விளங்கவேண்டுமென முரஞ்சியூர் முடிநாகனார் அவனை வாழ்த்துகின்றார் (புறம். 8) பால் என்றும் இனிமையின்றிப் புளியாது. பகல் இருளாகாது. நான்கு வேதங்கள். உறும் நெறியும் பிறழாது. அப்படி ஏற்பட்டாலும் வேறுபாடில்லாத சூழ்ச்சியையுடைய அமைச்சராகிய சுற்றமோடு விளங்கும் அரசன் எனப் புலவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு அமைச்சர் உயர்வு நவிற்சியாகப் புகழப்படினும் மேற்குறிப்பிட்டவை இயல்பாக இலையான தன்மையுடையன என்பது புலப்படும். வேதங்கள் கூறும் சமய நெறியே. சனாதனதர்மம் என்றுமுள்ள தர்பம் எனச் சிறப்பித்துக் கூறப்படும். ஆறு அங்கங்கள் வேத இலக்கியத்தின் இறுதிப் பகுதியிலுள்ள ஆறு அங்கங்கள் ஏற்கனவே. குறிப்பிட்டவாறு சூத்திரவடவிலமைந்துள்ளன. வேதங்களை நன்கு கற்பதற்கும், விளங்கிக் கொள்ளுவதற்கும் இவற்றினை ஒருவர் பயின்றிருத்தல் அவசியமாகும். 

சங்க நூல்களிலே சிவனுடன் அல்லது வேதங்களுடன் அல்லது அந்தணருடன் இவை கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக.  நன்றாய்த் நிணிபர்ச்சடை  முதமுசல்வன் வாய்போன.  தொள்றுவளிந்த எரிரண்டன்  ஆறுணர்ந்த கொருமுதுநால றம் 5) என வரும் பாடலின் பகுதியினைக் குறிப்பிடலாம். அந்தணம்  சங்க நூல்களிலே வைதிகப் பண்பாட்டின் சிறந்த அறிஞர்கள், தூதர்கள். மாகதர்கள் போலவே அந்தணர் பொதுவாகச் சித்திரிக்கப் பட்டுள்ளனர். இந்நூல்களில் இவர்கள் பொதுவாகப் பிராமணர் என அன்றி அந்தணர், பார்ப்பார், இருபிறப்பாளர் போன்ற தமிழ்ப் பதங்களால் அழைக்கப்படுகின்றனர். பார்ப்பார். எனும் பதம் பார்ப்பவர் அதாவது உண்மையை - பரம்பொருளைப் பார்ப்பவர் எனப்: பொருள்படும். வேத மந்திரங்களை இயற்றிய கவிஞர் ரிஷிகள் என அழைக்கப்படுவர். ரிவி எனும் பதமும் ஆங்கிலத்திலுள்ள 'சியர்' (8௦61) எனும் பதமும் பார்ப்பார் என்ற. கருத்தினையுடையவை. அந்தணர் எனில் சிறந்த தண்ணளியுடையர் என்று. பொருள்படும். அந்தத்தை உணர்வார் அந்தணர் எனவும் விளக்கப்படுகின்றது. வேதாந்தத்தையே பொருள் கொண்டு எக்காலமும் பார்ப்பவர் என மதுரைக்காஞ்சிக்கான நச்சினார்க்கினியர் உரையிலே கூறப்படுகின்றது.  தர்மசூத்திரங்கள், தர்மசாத்திரங்களிலே கூறப்பட்டவாறு*, அந்தணர்க்குரிய ஆறு தொழில்கள் பற்றிய குறிப்புகள் சங்க நூல்கள் சிலவற்றிலே வந்துள்ளன. இவை பற்றி.  ஈதவேற்றலென்றாறு புரிந்தொழுகும் எனப் பதிற்றுப்பத்து (24.6-8) கூறுகின்றது. புறநானூற்றுப் பாடல் ஒன்றிலே (397), அறுதொழில் அந்தணர்' எனச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.  ஏற்கனவே குறிப்பிட்டவாறு அந்தணர்கள் தம்முடைய அறிவாற்றல், புரிந்துணர்வுக்கொள்கை முதலியனவற்றால் சமகாலத் தமிழகத்தில் ஆட்சி புரிந்த சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் குல மன்னர்களிடத்து மட்டுமன்றிப் பாரி, ஆய், காரி, அதியமான் முதலிய சிற்றரசர் / குறுநிலத் தலைவர்களிடத்திலும் பெருமதிப்பும், பெருஞ்சிறப்பும், கெளரவமும் பெற்றனர். இவ் அந்தணர்களிலே சுபிலர், பரணர், நக்கீரர் போன்றோர் தலை சிறந்த தமிழ்ப் புலவர்களாக அரச சபை:

களை அணி செய்தனர். அந்தணர் புரோகிதர்களாக அமைச்சர்களாக, ஆலோசகர் களாக விளங்கினர். அவர்களுடைய ஆலோசனைக்கேற்ப மன்னர்கள் வைதிக வேள்விகளைச் செய்து தத்தம் ஆதிக்கச்சிறப்பினை ஏனைய அரசர்களுக்கும், பிறருக்கும் வெளிப்படுத்தினர். மன்னர்களின் வீரதீரச் செயல்கள், கொடைச்சிறப்பு, " மாட்சிமை, வமிசப்பெருமை முதலியன வற்றைப் புசுழ்ந்து பாடிப் புலவர்கள். பலதிறப்பட்ட பரிசில்கள், நிலங்கள் உட்படப் பல பெற்றனர். “நல்ல அரசகுலத்திற் பிறந்து ஆட்சிப் பீடத்தில் வீற்றிருந்தவர்களை நோக்கும்போது, அவர்களிலே புலவர்களாலே பாடப்பட்டுப் புகழ் பெற்றவர் ஒருசிலரே. பலர் தாமரையிலை போலப். பயன்படாது மாய்ந்துள்ளனர். புலவர்களால் பாடப்படும் புகழுடையோர் பாகனில்லா விமானத்தின் மூலம் விண்ணுலகு செல்லுவார்”. என்ற கருத்துப்பட உரையும் பாட்டும் உடையோர் சிலரே. மரையிலை போல மாய்ந்திசினோர்பலரே. புலவர்படும் புகழுடையோ விகம்பிள். வலவனேல வானவூர்தி எய்துப” என வந்துள்ள புறநானூற்றுப் பாடற்பகுதி (27) குறிப்பிடற்பாலது. புலவர்களால். புகழப்படுதல் அரசர் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சிறப்பு அன்று. இதனால் பெருமதிப்பு மட்டுமன்றி எளிதில் விண்ணுலகும் கிட்டும். மேலும் அந்தணர் இருபிறப்பாளர், (புறம் 257 வடமொழி துவிஜர்), மறைகாப்பாளர் (பெயாஃப 298 - 301) எனவும், சிலவிடங்களிலே நான்மறை முனிவர் (புறம்6) எனவும் அழைக்கப்பட்டனர். அவர்களின் சீரான ஒழுக்கம், கல்வி, கேள்வி, குறிப்பாக வைதிக நூலறிவு தொடர்பான அடைமொழிகளும் சிலபாடல்களில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டுகளாக, அறம்புரி, அருமறை நவின்ற நாவின். ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் (புறம் 26) திறம்புரி: கொள்கை அந்தணர் (ஐ.கு.நூ.282),ஓதலந்தணர் (ம.கா. 656), நான்மறை. அந்தணர் (புறம் அருமறைநாவின் அந்தணர்) (சி.பா.204), கேள்விழுற்றிய அந்தணர் (புறம் 397) போன்றவை குறிப்பிடற்பாலன, அந்தணர், மன்னருக்கிடையிலான மிக நெருங்கிய சுமூகமான பரஸ்பர: நல்லுறவுகள் பற்றிப் பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற டுஞ்செழியன் பற்றி மாங்குடி மருதனார் எனும் புலவர். ஆடுகளம் வேட்ட அடுபோச் செழிய ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முக்ய குற்றமாக: மன்னா ஏவல்செய்ய மன்னிபவேள்வி' ற்றிய வாய்வாள் வேந்தே றம் 26). வண்டை

எனக் கூறியிருப்பது போன்றவற்றால் புலப்படும். அரசர்கள் அந்தணர்களைத் தம். நெருங்கிய சுற்றமாகக் கொண்டிருந்தனர் என்பது தெளிவு. அந்தணர் மேலாண்மை  வைதிக சமய சமூக பரபிலே அந்தணர் மேலாண்மை பெற்றிருந்தனர். அரசரிலும் பார்க்க அந்தணர் மேலானவர்கள் என்ற கருத்து வேதங்களிலும், தர்மசாத்திரங்களிலும் காணப்படுகின்றது.” 'அரசு அந்தணர்க்குரியதே' என்ற கருத்தும் உள்ளது. பிரபல அந்தணப் புலவர்களில் ஒருவரான கபிலர் மலையமான். திருமுடிக்காரியை விளித்து “நின்னாடே, அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே” (புறம் 122) எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்து வைதிக சிந்தனைகளை ஒட்டியதாகும். மன்னர் இறைவனுக்கும், அந்தணருக்குமே பணிவர் என்ற சருத்துப்படக் காரிகிழார். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நோக்கி  வணியியரத்தை நின்குடையே முனிவர்  முக்கட் செல்வர் நகர்வலஞ்செயுற்கே  இளறைஞ்சுகபெருமறிள் சென்னி சிறந்த   நான்மறைமுனிவரெந்து கை எதிரே (பம் 41 எனக் கூறியிருப்பதிலே நன் குபுலப்படும். மேலும் கபிலர் செல்வக் கடுங்கோ வழியாதனை விளித்து “பார்ப்பனருக்கல்லது பணியறிகிலையே” (பதிற்று. ப. 68 - 1) எனக் கூறியிருப்பதிலே அந்தணரின் மேலாண்மை புலப்படுகின்றது. இவர்களுக்கு அரசர்களின் பேராதாவும் நன்கு நிலவிற்று. கொடை வழங்குதல்  வைதிக மரபிலே குறிப்பாக வேள்விகளைச் செய்து முடித்தபின் புரோஹிதருக்கு நீரூற்றிக் கொடை வழங்குதல் வழக்கமாகும். இது பற்றிப் புறநானூறு (361)  சய்பபவவவவவறினியல  கேள்வி முற்றிய வேள்வியுந்தணாக்  கருங்கல நீரோடு சிதறிப் பெருந்தகைத்  தாயினன்று பலரக்கீந்து'' எனக் கூறுகின்றது. அகப்பாடல்கள் சிலவற்றில் அந்தணர் அந்தணர்களில் ஒருசாரார் கமண்டலம், முத்தண்டு தரித்துக்கொண்டு ஊர் ஊராகப்: பண்பாட்டுத் தூதர்கள் போலவும் சென்றனர். மக்களிடையிலே நல்லுறவு கொண்டு. உபதேசம், உதலி செய்து அவர்களின் நன்மதிப்பினையும், நம்பிக்கைமினையும். பெற்றிருந்தனர். சங்கநூல்களிலுள்ள அகப்பாடல்கள் சிலவற்றிலே தலைவன்,

தலைவி பற்றிய செய்திகளை ஏனையோருக்கு அறிவிப்பதில் சிலர் பங்களிப்புச் செய்தனர். ஐங்குறுநூற்றிலுள்ள பாடல் ஒன்றிலே (384) தலைவனுடன் உடன் போகிய தலைவி தான் செல்லும் வழியில் சந்தித்த அந்தணரிடம் தான் தலைவனுடன் சென்றுலி்டதாகச் சுற்றத்தாருக்குக் 

கூறும்படி அவருக்குக் கூறும் பாங்கில்.
செப்புல முன்னிய அசை நடை அந்தணர்
தம்மொன் நரந்தனெள் மொழிவலெம்மூர்
மாய்தயுத்தெடுத்த வாய்நலங் கவின
ஆரிடையிறந்தனளென்மிள்
நேரிறை முன்கைபென்னாயகத்தோரிக்கே     என வந்துள்ளது. குறுந்தொகையிலே “முளி தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்” எனத் தொடங்கும் பாடல் (167), அது கூறும் பொருளமைதியின்படி ஓர் அந்தணத் தலைவன், தலைலி பற்றியதாகும் என உரையாகிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். 

ஆரிய அரசனுக்குத் தமிழறிவுறுத்தல் 

ஆரிய அரசனான பிரகதத்தனுக்குத் தமிழின் சிறப்பினை எடுத்துக் கூறு. முகமாக அந்தணப் புலவாரகிய கபிலர் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டினை இயற்றினார் என அறியப்படுகின்றது. ஏற்கனவே தமிழகத்துக்கு வந்து. பலகாலம் வாழ்ந்த அந்தணர் குலத்தில் தோன்றிய கபிலர் புதிதாக வந்த ஆரிய அரசனுக்குத் தமிழின் சிறப்பினை எடுத்துக்கூறி அவனை அதில் ஈடுபடச்: செய்தார் எனலாம். தமிழினை நன்கு கற்று ஆர்வ மேலீட்டால் ஆரிய அரசர்களில் ஒருவரான யாழ்ப்பிரமதத்தன் பாடிய அகப்பாடல் ஒன்று குறுந்தொகையில் (184) இடம்பெற்றுள்ளது. 

ஆரியர் செய்த வேறு சில தொழில்கள் 

ஆரியர்களில் ஒருசாரார் யானைகளைப் பயிற்றுவிப்பதில் ஈடுபட்டனர் 
என்பது.
தாரும் தாளையும் பற்றி ஆரியர்
ஆபயிள்றுதராஉம் பெருங்களிறுபோல'”

எனவரும் அசுநானூற்றுப்பாடல் (276) மூலம் அறியப்படும். யானைகளைப் பயிற்று விப்பதற்குப் பயிற்றுவிப்போர் வடமொழியினைப் பயன்படுத்தினர் (மு.பா. 85-36). 

அவர்களில் ஒருசாரார் மேலும் பிற தொழில்களிலுமீடுபட்டனர். வேளாப்பார்ப்பார். அல்லது ஊர்ப்பார்ப்பார் சங்குகளை வெட்டி ஊதியம் பெற்று வாழ்ந்தனர் (அகம். 28). மேலும் சிலர் திறமையான சிறுகருவித் தொழிலாளர்களாக நேர்த்தியான. ஆபரணங்கள் செய்தனர் என அறியப்படுகின்றது (பதிற்று, ப. 7410-14).

இனைக்களம்  ஆரியக் கூத்தர்கள் கூத்துக்கள் ஆடினர். மூங்கிலிற் கட்டிய கயிற்றின்மீது நின்று ஆரியக்கூத்தர்கள் ஆடுவர். அப்போது பறை கொட்டப்படும். (குதொ:) 

அந்தணர் வதிவிடங்கள். 

அந்தணர் குறிப்பிட்ட தெருக்கள், கிராமங்களிலும் வசித்தனர். குறுந்தொகையிலே. (277) குறிப்பிட்ட தெருவில் இருந்த அந்தணர் வீடு பற்றிய குறிப்புகள் சில உள்ளன. எவ்லிதக் குறையுமில்லாத தெருவிலுள்ள அந்த வீட்டில் நாய் இல்லை; அகன்ற. வாசலுண்டு. அங்கு செந்நெற் சோற்றுருண்டையும், நெய்யும் கிடைக்கும். அங்கு பிச்சையாக வழங்கப்படும் உணவை நன்கு உண்டு, குளிர்காலமாகையால் வெப்பமான நீரை அது சேகரிக்கப்பட்டுள்ள செம்பிலே பெறலாம்.  

அந்தணர் வாழும் ஊர் பற்றிய ஒரு வருணனை பெரும்பாணாற்றுப் படையிலே (296-001)  “வழுங்கள்றியாத்த சிறதாட் பத்தர்  

பைஞ்சேறு மெழுகிய படிவதன்னகர்
மனையுறை கோழியொடி கமலி துன்னாது'
வளைவாய்க் கிள்ளை பறைவிளி பயிற்று:
மறைகாப்பாளர் உறைபதி”                          என வந்துள்ளது. அங்குள்ள அந்தணர் வாழும் ஊரிலுள்ள வீடுகளின் முற்பகுதி. யிலுள்ள பந்தரின் சிறிய கால்களிலே கன்றுகள் கட்டப்பட்டுள்ளன. அங்குள்ள வீடுகள் சாணியால் மெழுகப் பட்டுள்ளன. அவர்கள் வழிபடும் தெய்வங்களின். உருவங்கள் உள்ளன. அவ்லீடுகளிலே கோழிகளோ, நாய்களோ இல்லை. வளைந்த வாயையுடைய கிளிகளுக்கு வேதத்தின் ஒசையைக் கற்பிப்பவர்களும், வேதங்களைப் பாதுகாப்பவர்களுமாகிய அந்தணர் வாழும் ஊர் இவ்வாறு காணப்படும்.  

ஒய்மாநாட்டு நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்  
பாடிய சிறுபாணாற்றுப்படையிலே (187-188) வரும்.
“அந்தணரருகா வருங்கட விபனக
ரந்கண் கிடங்கினவனாமூர்”

எனும் பகுதியிலே ஆமூர் எனும் முக்கிமான அந்தணக் குடியிருப்புப் பற்றிய குறிப்பு உள்ளது. இது காலத்தால் முந்திய ஒரு பிரமதேயம் (அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட நிலப்பகுதி) எனவும் கருதப் படுகின்றது. 

வேள்வி  

வைதிக சமயத்திலே வேள்வி முக்கியமான ஓரிடத்தை வகித்து வந்துள்ளது. வேதங்களிற் கூறப்பட்டவாறு இவை பல்வேறு நோக்கங்களுக்குக்காகத் தெய்வத்தை / தெய்வங்களை நோக்கிச் செய்யப்படும். சங்கநூல்களிலே யாகம். என்ற வடசொல்லிற்குப் பதிலாக வேள்வி எனும் தமிழ்ப்பதமே பொதுவாக வந்துள்ளது. வேள்ளி பற்றிய விபரங்கள் சில நூல்களில் அங்குமிங்கும். வந்துள்ளன. வேள்வி செய்பவர்கள் அந்தணர்களே. செய்விப்பவர்கள் பொதுவாக மன்னர்களே. சிலவேளைகளிலே அந்தணரும் வேறு சிலரும் வேள்வி செய்லித்தனர். வேள்வி பற்றிய குறிப்புகளிலே வேள்வித்தி குறிப்பாக முத்தீ, ஆகுதி. / ஆவுதி (ஆஹுதி - அவி, நெய், சமித் போன்றவை தீயிலே தெய்வத்திற்கு வழங்கப்படும்), அவி (ஹலிஸ் - வேள்வித்தியிலிடப்படும் சமைக்கப்பட்ட நிவேதனம்), யூபம் (வேள்வித்தூண்), கொடைகள் முதலியன வந்துள்ளன.  

ஏற்கனவே குறிப்பிட்டவாறு, மன்னர்கள் தத்தம் ஆதிக்க மேலாண்மையைப் புலப்படுத்தும் வகையிலே பல புரோஹிதர் மூலம் வேள்விகளைச் செய்வித்தனர். பொதுவாக வேள்வி செய்யும் அந்தணர்கள் புரோஹிதர் என்றே அழைக்கப்படுவர். ஆனால் இந்நூல்களில் இப்பதம் இடம்பெறவில்லை. இறந்தபின் சுவர்க்கம் அல்லது தேவருலகம் செல்ல விரும்புவோர்களில் ஒருசாராரும் வேள்வி செய்வித்தனர். வேறு ஒருசாரார் முத்திப்பேறிணை அடையும் வண்ணமும் வேள்வி செய்வித்தனர். பிறிதொரு சாரார்  மகப் பேற்றிற்காகவும் வேள்வி செய்வித்தனர். வேள்வி பற்றிய குறிப்புகளுக்கு எடுத்துக்காட்டுகளாக, அறுதொழில் அந்தணர் அறம் புரீந்தெடுந்த

திமொடு விளங்கும் நாடன் [றம் 397)
“அறுதலை தவ்விப்பெருங்கண் மாப்பிணை:
அந்தி அந்தண் அருங்கடனிறக்கும்
முத்தி விளக்கிற்துஞ்சும் "றம் 6.
அமராப்பணியும் ஆவுதியகுத்தியும் "(புறம் 8).
“மன்னரேவல் செய்ய மன்னிய
வேள்வி முழுத்த வாய்வாள் வேந்தே "றம் 25.    கியுகுவில் பஸ்பம்
எருமைநுகர்ச்சி நப நெடுந்தாள்.
வேதவேன்வி முடித்ததும் றம் 22.
“கெடாத்தியில் அகம் 220)
ங்கரைந்து கலங்கிய நாவிற் பறங்கி
உரைசால் வேள்வி முத்த கேள்வி.
அந்தணரருங்கல மேற்ப நீர்ப்பட்
நருஞ் சேறாநய மணல் மலி முற்றத்தும்
கனிறு முனைஇய "(பதிந்து 84 3-௫)

ரு கெழுமரபின்கடவுட் பேணியர்
கொண்ட தீயின் சுடரெழுதோறும்.
விரும்புமெப்பரந்த வெரும் பெயர் ஆவுதி
வருநர் வரையார் வாரவேண்ற'' (பதிற்றுய. 21 5-7)  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தாம் சிறப்பாகச் செய்து முடித்த யாகங்களின் தொகை, சிறப்பு முதலியவற்றை. எடுத்துக்காட்டு முகமாக மன்னர் சிலர் அவற்றைத் தத்தம் விருதுப் பெயர்களுடன் சேர்த்துக்கூறிப் பெருமைப்பட்டனர். எடுத்துக்காட்டாகப் பாண்டியன் “பல்யாக சாலை” முதுகுடுமி பெருவழுதியைக் குறிப்பிடலாம். நெட்டிமையார் எனும் புலவர். இவ்வரசனாலே போரிலே தோற்கடிக்கப்பட்டு. இகழ்ச்சியடைந்த மன்னர் தொகையோ, இவன் செய்த யாகங்களிலே நாட்டப்பட்ட தூண்கள் தொகையோ அதிகமானது? எனச் சுவைபடக் கூறியுள்ளார் (புறம் 15). மேலும் இவன் செய்த யாகங்கள் பற்றி மதுரைக் காஞ்சியிலும் குறிப்பு உள்ளது. இவ்வரசன் யாகங்கள். செய்த இடம் அந்தணர்களுக்கு வழங்கப்பட்டு “வேள்விக்குடி” எனப் பெயரிடப் பட்டது. இவ்வாறு வழங்கப்பட்டிருந்த நிலத்திலே வாழ்ந்த அந்தணர்கள் இவனாட்சிக். காலத்திற்குச் சற்றுப் பின்னர் தமிழகத்திலேற்பட்ட களப்பிரர் ஆட்சியின்போது அதிலிருந்து வெளியேற்றப்பட்டனர் எனவும், பின்னர் கி.பி.எட்டாம் நூற்றாண்டில். ஆட்சி செய்த நெடுஞ்சடையன் எனும் பாண்டிய மன்னன் காலத்திலே மேற் குறிப்பிட்டவர்களின் வழியில் வந்தோர் தம்மிடமுள்ள ஆவணங்களைச் சமர்ப்பித்து அவ்வரசனின் முன்னோன் வழங்கிய வேள்விக்குடிக் கிராமத்தைத் திரும்பவும். பெற்றனர் எனவும் இவ்வரசனின் வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன.* பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி வேள்விகள் செய்வித்தமையை நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன.”  

சோழன் இராசசூயம் (ராஜஸ) வேட்ட பெருநற்கிள்ளியின் பெயருடன் அவன்: செய்வித்த இராசசூயம் எனும் வேள்வியின் பெயர் விருதுப் பெயராக வந்துள்ளது. இஃது இவன் வேள்வியிற் கொண்டிருந்த பெருவிருப்பத்தைக் காட்டுகின்றது. எனலாம்.  

கெளணியன் விண்ண ந்தாயன் என்பவன் சோழநாட்டுப் பூஞ்சோற்றூர்ப் பார்ப்பான். அவன் முன்னோர் மொழிவல்லுநராகச் சொல்வன்மையிற் புகழ்பெற்றி ருந்தனர்; * வேள்விகளைச் செய்தனர். விண்ணன் தாயன் ஒருகால் சிறந்தவொரு வேள்வி வாயிலாகப் பெருவிருந்தினை ஏற்படுத்தினான். அதற்கு ஆவூர்கிழார் எனும் அந்தணரல்லாத புலவரும் சென்றிருந்தார். அப்புலவர் ஒரு பாடலிலே (புறம் 166) இவனுடைய முன்னோரின் சிறப்புகளையும், தாம் நேரிற்கண்ட வேள்வி பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவர் பார்த்த வேள்வியிலே இவனுடைய 

மனைவியரும் இவனோடு சேர்ந்து பலவேள்விகளிற் பங்குபற்றினர். “எண்ணும் நாணும் வகையில் அங்கு எண்ணிறந்த வேள்விகள் நடத்தப்பட்டன. நீரும் வெட்கமடையும் வகையிலே. அவைகளிலே நெய் சொரியப்பட்டது. பூமியும் 
நாணும் வகையில் அவன் புகழ் எங்கும் பரவிற்று” எனும் பொருள்பட,

ர் தாண நெய் வழங்கியும்
எண்ணாணய் பல வேட்டும்
மண்ணாணப் புகழ்பப்பிும்

எனப் புலவர் கூறியிருப்பது குறிப்பிடற்பாலது. பாலைக் கெளதமனார் எனும் அந்தணப் புலவர், “சுவர்க்கத்தை விரும்புவோர் வேள்வி செய்ய வேண்டும்” எனுர் வேதவாக்கிற்கேற்ப வேள்வி செய்து சுவர்க்க உலகத்தை அடைய விரும்பினார். எனவே அவர் சேரமன்னான இமயவரம்பனின் தம்பி: செல்கெழு குட்டுவனைப் புகழ்ந்து பதிற்றுப்பதிலுள்ள மூன்றாவது பத்தினைப் பாடினார். இதற்காகத் தாம். பெற்ற பரிசிலைக்கொண்டு தானும் மனைவியும் சுவர்க்கம் செல்ல வேண்டுமென, அந்தணர்களிலே பெரியோரை வேண்டி ஒன்பது பெருவேள்வி செய்வித்து முடிந்தபின், பத்தாவது பெருவேள்வி நடக்கும்போது குறிப்பிட்ட பார்ப்பானையும் மனைவியையும் அவர்கள் கண்டிலர். அவ்விருவரும் சுவர்க்கம் சென்று விட்டனர் எனக் கருதப்பட்டது. 

பூம்புகார் வணிகர் யாகம் செய்தமை பற்றியும், அந்தணர் புகழ் பரப்பியமை: 
பற்றியும் பட்டினப்பாலை (200 202)

மர் ந ன அள | ழ் மத் ட் ன்
தான்மறையொர் புகழ் பரப்பியும்  எனக் கூறுகின்றது.

பெருஞ்சேரலிரும்பொறை வேள்வி செய்வித்து, அதன் பயனாகக் கருவிலே திருவுடைய நல்ல வாரிசான மகனைப் பெற்றான் எனப் பதிற்றுப்பத்துக் கூறுகின்றது.

இவ்வாறு பலதிறப்பட் நோக்கங்களையும், பலன்களையும் கருத்திற்கொண்டு வேள்விகள் நடத்தப்பட்டன. இவ்வேள்விகள் குறிப்பிட்ட பயனளிப்பன என்பது:

வேரைநிலையின்றி இரவலர்க்கியும்.
வளலாய் அம்பின் கோடைப்பொருநன்.
பண்ணி தைஇய பயன்கெழு வேள்வியின்.
விழுமிது நிகழ்வதாயினும் "(அகம் 23.          என்பதால் புலப்படும்.

சங்ககால மன்னர்களைப் போலவே ஏறக்குறைய சமகால, சற்று முற்பட்ட, பிற்பட்டகால இந்தியாவின் பிற இடங்களில் ஆட்சி புரிந்த மன்னர்களில் ஒருசாரார் வேள்விகள் செய்வித்தனர் என்பது ஒப்பீட்டு ரீதியில் நோக்கற்பாலது. எடுத்துக்காட்டுகளாக ஆந்திராவில் ஆட்சி புரிந்த இக்ஷ்வாகு வம்ச மன்னர்கள். தக்கணத்திலாட்சி புரிந்த சாதவாகனர், வாகாடகர், வட இந்தியாவிலாட்சி புரிந்த. சுங்கர், யெளதேயர், நாக, குப்த மன்னர்கள் முதலியோர் குறிப்பிடற்பாலர்.. சாதவாகன அரசர்களிலொருவனின் பெயர் யஜ்ஞுறீ சாதகர்ணி, “யஜ்ஞ்'” எனில் வேள்வி எனப் பொருள்படும். 

சங்க நூல்களில் வைதிக சமயத் தெய்வங்கள்.  

சங்க நூல்களிலே ஏற்கனவே தமிழகத்திலே நிலவி வந்துள்ள சமய வழிபாட்டு மரபுகளுடன், வடக்கேயிரூந்து பரவிய வைதிக சமய மரபுகளும் தனித்தனியாகவும், ஒன்று சேர்ந்தும் நிலவியமையும் அவதானிக்கலாம். சில அமிசங்களில் இருமரபு களும் படிப்படியாக ஒண்றிணைவதையும் காணலாம். தெய்வங்களைப் பற்றிய குறிப்புகளில் அவர்களைப் பற்றி சில தொன்மங்களும் (19ப்ட) இடம் பெற்றுள்ளன. தெய்வங்களின் வீர தீரச் செயல்கள் திருவருட் சிறப்புப் போன்றவையும் சில பாடல்களிலிடம் பெற்றுள்ளன.  

பிற்கால இந்துசமயத்திலே மிகப் பிரபல்யமாக விளங்கி வந்துள்ள சிவபிரான், திருமால் ஆகியோர் பற்றிய கருத்துக்களில் இவர்கள் பற்றி வேதங்கள் கூறும் கருத்துக்களும் வேதங்களுக்குப் புறம்பான கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன. 

 தொல்காப்பியம் கூறும் திணைத் தெய்வங்களிலே முருகன்; திருமால் (விஷ்ணு), வருணன், இந்திரன் ஆகியோர் முறையே குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய நிலங்களுக்குரிய தெய்வங்களாவர்.” கொற்றவை பாலை நிலத்தெய்வம். இவர்களில் முருகனும் கொற்றவையும் தவிர்ந்த ஏனையோர் வேதங்களிலே போற்றப்பட்டுள்ள தெய்வங்கள். ஆனால் சிவபிரான் குறிப்பிட்ட நிலத்திற்குரிய தெய்வமாகக் கூறப்பட்டிலர். ்

 சிவபிரான்:  '

வேதஇலக்கியத்திலே தொடக்க கட்டங்குளிலே சிவன் ருத்திரன் என்றே. அழைக்கப்பட்டார். பிற்காலத்திலே சிவனைப் பற்றிக் கூறப்படும் கருத்துக்களிலே முக்கண்ணன் (த்ரயம்பக), செம்மேனியர் (பப்ரு), வைத்தியர் (பிஷக்) போன்றவை இருக்குவேதத்திலுள்ள ருத்திரன் பற்றிய பாடல்களில் (2.33) வந்துவிட்டன. ஓரிடத்தில் (இ. வே. 10.92.9) அவர் சிவ (நன்மை செய்பவர், மங்கலமானவர்) என: அழைக்கப்படுகின்றார். காலப்போக்கிலே யஜுர் வேதத்திலுள்ள சதருத்திரீயத்திலும் * சுவேதாஸ்வதரோபநிஷத்திலும் £ ருத்ர - சிவ பற்றிய விரிவான கருத்துக்கள் தெளிவாக வந்துள்ளன. சங்க நூல்களிலே சிவன் என்ற பெயர் வராவிடினும், சிவபிரானுக்குரிய சில சிறப்பியல்புகளைக் கொண்ட தெய்வம் பற்றிக்  தங்க இலக்கியமும் சனறும் கூறப்படுகின்றது. ஏனைய கடவுளரிலும் பார்க்கச் சிவபெருமானே வேதங்களுடன். மிகவும் ஒன்றிணைந்த கடவுளாக விளங்குகின்றார்.

 இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய பாண்டியன் நன்மாறன் பற்றி நக்கீரனார் பாடிய செய்யுளிலே (புறம் 56) சமகாலத்திலே வழிபடப்பட்ட நான்கு முக்கியமான தெய்வங்கள் பற்றிய குறிப்புகளுடன் அவர்களின் சில சிறந்த இயல்புகள் அரசனுக்கு உள்ளனவாக ஒப்பிடப்பட்டுள்ளன. இக் கடவுளர்களிலே எருதினை. வாகனமாகவும், கொடியாகவும் உடையவரும் தீப்போன்ற செஞ்சடையினை உடையவரும், மழுப்படையை உடையவரும், ஆலகால விஷத்தை உண்டதால் நீல நிறத்திருக் கழுத்தை உடையவருமாகிய சிவபிரான் முதலிலே கூறப்படுகின்றார்.. தொடர்ந்து, கடலிலே வளரும் சங்கு போன்ற வெண்ணிறத்தையுடையவரும், கொலையை விரும்பும் சுலப்பையையும், பனைக்கொடியையும் உடையவராகிய பலராமன் குறிப்பிடப்படுகின்றார். பின்னர், கழுவப்பட்ட தூய நீல மணிபோன்ற நிறத்திருமேனியையுடையவகும், வானுறவோங்கிய கருடக்கொடியையுமுடைய திருமாலும், இறுதியாக மயிற்கொடியையும், மாறாத வெற்றியையும், மயில் 'வாகனத்தையுமுடைய முருகப்பெருமானும் கூறப்பட்டுள்ளார். மேலும் இந்நால்வரும். உலகத்தைக் காத்தற்கும், முடிவுகாலத்தைச் செய்வதற்குமான வலிமையையும், தோல்வியற்ற நல்ல புகழினையும் உடையவர்கள். பிறிதோரிடத்தில் சிவபிரானும் திருமாலும் இரு பெருங்கடவுளர் என வருணிக்கப்படுகின்றனர். இது பற்றி உவமைகள் பற்றிய பகுதியிலே கூறப்படும். மேற்குறிப்பிட்ட நான்கு கடவுளர்களில். முருகன் தவிர்ந்த ஏனையோர் பற்றிய கருத்துக்களிலே வைதிக சபயக் கருத்துக்களே பெரும்பாலும் காணப்படுகின்றன. 

சிவபிரானைப் பற்றிய சில முக்கியமான கருத்துக்கள் வேறு சில பாடல்களிலும். வந்துள்ளன. அவர் பெரிதும் ஆராயப்பட்ட நீண்ட திருச்சடையினை உடையவர்; ஆதிமுதல்வர்; நான்மறைகளும் அவரின் திருநாவில் என்றும் உள்ளன. அறம் ஒன்றையே மேலிய நான்கு பகுதிகளையுடையதாய் ஆறு அங்கங்களாலும் உணரப்பட்ட ஒப்பற்ற பழைய 
நூல் வேதமாகும், என்ற கருத்துப்பட

ஆன்றாய்ந்த நீனரிமிர்சடை
முதமுதல்வன்வாய் பொகா
கொள்றுபுரீந்த விண்ட். வொரு த

என ஆவூர் மூலங்கிழார் (புறம் 166) சிறப்பிததுப் பாடியுள்ளார். பிறிதொரு பாடலிலே “சிவபிரான் பால் போன்ற பிறையுடன் விளங்கும் நெற்றியுடைய திருமுடியினை: யுடையவர்; நீலமணி போன்ற திருக்கழுத்தையுடைய 
ஒப்பற்றவர்'” எனும் பொருள்பட

ல்புரை மிறைநுதற் பொலிந்த சென்னி.
நீலமணி பீஉற்றொருவன் ” (பரம் 91   . என ஒளவையார் பாடியுள்ளார்.

சிவபிரான் மூன்று திருக்கண்களையுடையவராக “ழுக்கட்செல்வர்” (புறம் 6) என அழைத்கப்படுகிறார். அகநானுற்றுப் பாடல் ஒன்றிலே (187) சிவபிரானுக்கு நான்கு வேதங்களாகிய மிகப்பழைய நூலுடனான நெருங்கிய தொடர்பும், 
முக்கண்களும்

ானல் நாறும் நலம் கெழுநல்னிசை
நான்பறையுதரூல் முக்கட் செல்வர்  எனக் கூறப்பட்டுள்ளன.

சிவபிரான் கல்லால மரத்தின் கீழிருந்து சனகர் முதலிய நான்கு. முனிவர்களுக்குத் தக்ஷிணாமூர்த்தியாக ஞானோபதேசம் செய்துள்ளார். இதனால். அவர் “ஆலமர் செல்வன்” என அழைக்கப்படுகின்றார் (சி.பா.ப.95) உயர்ந்த மலையை (மேருவினை)ப் பெரிய வில்லாகவும், (வாசுகியெனும்) பாம்பினை: நாணாகவும் கொண்டு ஒப்பில்லாத அம்பினை (எய்து) (மூன்றுமதில்களுடன் கூடிய) முப்புரங்களிலிருந்த அசுரர்களை அழித்தவராகிய சிவபிரான் பெரிய வல்லமையையுடைய தேவர்களுக்கு வெற்றியளித்தவர்; கரிய (கருநீலமுள்ள) திருமிடற்றினையுடையவர்; அழகிய திருமுடிப்பக்கத் தணிந்த பிறையுடன் கூடிய நெற்றியிலே ஒப்பற்ற திருக்கண்ணுடன் விளங்குகிறார். இக்கருத்தினை உள்ளடக்கிய செய்யுட்பகுதி புறநானூற்றிலே (55) 

“ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞாண்கொளிதி
ஒருகணை கொண்டு மூலெயிலுபற்றிப்
பெருவிறலபரரக்கு வென்றி தந்த
அர்த ன ந் ன வ ன                             என வந்துள்ளது.

இவ்வாறு சிவபிரானைப் பற்றிய சில கருத்துக்கள் ஏற்கனவே குறிப்பிட்டவாறு இருக்குவேதம், யஜுர்வேதம், சுவேதாஸ்ரோபநிஷத் ஆகியனவற்றில் வந்துவிட்டன...

சங்க கால நாணயங்களில் சிவபிரானின்: படைக்கலங்கன்' 

அண்மைக்காலத்திலே கிடைத்துள்ள சில நாணயங்கள் சங்க நூல்கள் சிவபிரானைப் பற்றிக் கூறியுள்ள சில கருத்துக்களை உறுதிப்படுத்திப் புதிய ஒளி.பாய்ச்சியுள்ளதாகக் கலாநிதி, இரா. நாகசுவாமி குறிப்பிட்டுள்ளார்.” பாண்டியரின். நாணயங்கள் சிலவற்றிலே அஷ்டமங்கலச் சின்னங்கள் உள்ளன. இவை சமயச் சார்பானவை, இவற்றைவிட நிற்கின்ற யானை பொறிக்கப்பட்டுள்ள காசுகள். சிலவற்றிலே அதற்குமுன் திரிசூலம் உள்ளது. அதன் தண்டத்திலே பெரிய மழுவாள் உள்ளது. இடையில் ஒரு கொடி உள்ளது. திரிசூலமும், மழுவாளும் சிவபிரானின்: படைக்கலங்கள். இது போன்ற திரிசூலம் மேலும் சில பாண்டியர் காசுகளிலும் காணப்படுகின்றது. 

பிற்பட்டநூல்கவிற் சிவபிரான்

 ஏற்கனவே குறிப்பட்டவற்றுடன் சற்றுப் பிற்பட்ட காலச் சங்கநூல்களிலே. சிவபிரானைப் பற்றிக் கூடுதலான கருத்துக்களும் சில தொன்மங்களும். காணப்படுகின்றன. கலித்தொகை கடவுள் வாழ்த்துப் பாடலில் அவரின் பாண்டரங்கம், கொடுகொட்டி, காபாலிகம் ஆகிய திருநடனங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. திருமுருகாற்றுப்படையிலே சிவபிரான் திருக்குமரனாகவும், கொற்றவையின் திருக்குமரனசுவும் முருகன் கூறப்படுகின்றார். தமிழ்நாட்டிலே தொன்றுதொட்டு நிலவிய முருக வழிபாட்டுடன் வடக்கேயிருந்து பரவிய சுப்பிரமணியர் ('கார்த்திகேயர் பற்றிய கருத்துக்களும் இந்நூலிலே ஒன்றிணைந்து காணப்படுகின்றன, 

திருமால் *

 திருமால், மால், மாலோன் எனவும் அழைக்கப்படுகிறார். வேதங்கள் கூறும். விஷ்ணுவே தமிழில் மேற்குறிப்பிட்டவாறு அழைக்கப்படுகிறார். சங்கநூல்களிலே திருமால் பற்றிக் கூறப்படும் சில கருத்துக்கள் - விஷ்ணு மூன்று அடிகளால் உலகினை அளந்தமை, அகன்ற அடி எடுத்துவைத்தல், வானத்திலே பரந்து. விளங்குதல் போன்றவை இருக்கு வேதத்தில் உள்ள சில பாடல்களிலே (1164) வந்துள்ளன. ஏற்கனவே குறிப்பிட்ட புறநானூறு 56 ஆவது செய்யுளில் இவரின் நீலத்திருமேனி, கருடக்கொடி ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. 

இவர் ஆதிசேடனாகிய பாம்பினைப் படுக்கையாகக் கொண்டவர் என்பது, “பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்'” எனப்: பெரும்பாணாற்றுப்படையிலே (373) கூறப்பட்டுள்ளது. முல்லைப்பாட்டிலே (1-6) திருமால். சக்கரத்துடன், வலம்புரிச் சங்கினைத் தாங்கும் பெரிய திருக்கரங்களையுடையவர் எனவும், தம்முடைய மார்பிலே திருமகளை வைத்திருப்பவர் எனவும், மாவலிவார்த்தநீர் தன் கையிலே சென்றதாக உயர்ந்து விளங்குபவர் எனவும் வர்ணிக்கப்படுகின்றார். மேலும். உலகத்தைத் திருவடகளிலணைத்துக் கொண்டு நிமிர்ந்த திருமால் எனவும் ஒருசாரார் கூறுவர். திருமாலின் மகனே பிரமா என்பது தொன்மத்துடன்,

'இனறவருவினெடயோன் கொப்பூழ்
இரன்ழுக வொருவற் பரந்த பல்வித.
தாமரைப் பொருட்டு”              என பெரும்பாணாற்றுப்படையிலே (402-404) கூறப்படுகின்றது. திருமால் ஆலமிலையிலே துயின்றவர். எனவே “ஆலமர். கடவுள்” எனவும் அவர் கூறப்: படுகின்றார் (புறம் 198) ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டவாறு இச்சொற்றொடர் சிவபிரானையும் குறிக்கும். மேலும் பெரும்பாணாற்றுப்படையிலே (29-91) பெரிய நிலத்தையளந்தவனும், திருமகளை மார்பிலே வைத்திருப்பனும், கடல் போன்ற (நீல) நிறத்தையுடையவனுமாகத் திருமால் கூறப்படுகிறார். அவுணரை வென்றவரும். பொன்னாலான மாலையை உடையவரும், கர நிறமுடையவருமான திருமாலின் பிறந்த ஒணநன்னாளிலே மேற்கொள்ளப்பட்ட விழா பற்றி மதுனைக் காஞ்சி (590- 591) கூறுகின்றது. மேலும் இதே நூலிலே “நிலந்தரு திருவின் நெடியோன் போல” (763) எனவரும் பகுதியும் குறிப்பிடற்பாலது. 

சங்ககாலக் காசுகளில் திருமாலின் சக்கரம்  

சங்ககாலக் காசுகள் சிலவற்றிலே சிவபிரானின் படைக்கலங்களாகிய திரிசூலம், மழு காணப்படுவது போல, திருமாலின் படைக்கலமாகிய சக்கரமும். இல காசுகளிலே காணப்படுவதால் அவை சங்கநூல்கள் (நேமியோன்) கூறுவதை உறுதிப்படுத்துவதாக இரா. நாகசாவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.” 

இற்பட்ட சங்க நூல்களிலே திருமால்.  

முற்பட்ட நூல்களிலே குறிப்பிட்டவற்றுடன் மேலதிகமான கருத்துக்களும். தொன்மங்களும் இவற்றில் குறிப்பாகப் பரிபாடலில் இடம்பெற்றுள்ளன. திருமாலின், வராக, நரசிம்ம முதலிய சில அவதாரங்கள் இவற்றிலே கூறப்பட்டுள்ளன. அவர் அன்னப்பறவை வடிவில் தம்முடைய இறகுகளால் பெருவெள்ளத்தினை வற்றச்செய்தார். பாற்கடல் கடையப்பட்டபோது. தேவர்களுக்கு உதலி செய்தார். முருகன் இவருடைய மருகன். 

திருமகள்

  இவர் திருமாலின் சக்தி. அவரின் திருமார்பிலே இவர் விற்றிருப்பது பற்றி. ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. திருமகள் வேதத்திலே ஜீசூக்தத்திலே போற்றப்படுகிறாள். திருமகள் நிலைபெற்ற பெரிய ஆக்கத்தையுடைய உறந்தை மதில் பற்றிப் பட்டினப்பாலை (291) குறிப்பிடுகின்றது. இங்கு திருமால் போல இவரும் காவல் தெய்வம் போல விளங்குகின்றார்.

பலராமன்:

  பலராமன் திருமாலின் ஓர் அவதாரம். கிருஷ்ணனின் (தமிழிலே கண்ணனின்), மூத்த சகோதரன். இவரைப்பற்றி ஏற்கனவே புறநானூறு 56ம் பாடலில் கூறப்பட்டுள்ளமை குறித்து சட்டிக்காட்டப்பட்டுள்ளது. வேறொரு பாடலில் வரும். கிருஷ்ணனும் இரு பெரும் தெய்வங்களாகக் கூறப்பட்டுள்ளனர்.

பிரமா ! 

படைத்தற் கடவுளான பிரமா திருமாலின் மகன், அவருடைய கொப்பூழிலிலுள்ள ! தாமரையில் தோன்றியுள்ளார் என்பது ஏற்கனவே பெரும்பாணாற்றுப்படையிலே. வந்துள்ளமை குறிப்பிடப்பட்டு. இவர் படைத்தற்கடவுள். உலக இயல்பிலே இன்பமும் ! துன்பமும் ஒரே நேரத்தில் ஏற்படுகின்றன. "இவ்வுலகம் இனியதன்று. ஒரு வீட்டிலே | மரணப்பறை முழங்க, வேறொரு மனையிலே மணப்பறை முழங்குகின்றது. ! காதலரோடு கூடிய மகளிர் பூவணியை அணிகின்றனர். காதலரைப் பிரிந்த மகளிர் * துன்பத்தால் கண்ணீர் சொரிகின்றனர். இவ்வாறு அமையும் வண்ணம் உலகினைப் * படைத்தவன் (நான்முகன்) பண்பில்லாதவன் என்ற பொருள்படப் புறநானூற்றிலுள்ள / 94ம் பாடல் அமைந்துள்ளது. எனவே “இவ்வுலகின் தன்மையறிந்தோர் இன்பத்தைத் தரும் நல்ல செயல்களை அறிந்து செய்து கொள்க'' எனக் கூறப்பட்டுள்ளது. 

இந்திரன். க 

இந்திரன் தேவர்களின் உலகிற்கு அரசன். இருக்குவேதத்திலே மிகப் ! பிரபல்யமான கடவுள். பிந்திய வேதகாலத்தில் அவரின் முக்கியத்துவம் குறைந்து 5 தேவலோக மன்னானக் கருதப்பட்டுள்ளான். சங்கநூல்களில் இத்தகைய நிலையிலே. தான் வருணிக்கப்படுகிறார். இவர் தமிழ் மரபிலே ஏற்கனவே குறிப்பிட்டவாறு. மருதநிலத்தெய்வம். போர்க்களத்திலே நன்கு போர் செய்து புற முதுகு காட்டாது . இறந்தவர்கள் இந்திரனுடைய வீரசொர்க்கம் சென்று இன்பங்களை அனுபவிப்பர் " எனப் புறநானூறு 287இலே கூறப்பட்டுள்ளது. வச்சிரம் இவரின் படைக்கலம். * எனவே இவனை வச்சிரத்தடக்கைநெடியோன் எனப் புறநானூறு (241) கூறும். " இந்திரவிழா பற்றி ஐங்குறுநூறு (62) குறிப்பிடுகின்றது. 

வருணன்: 

இருக்குவேதத்திலுள்ள முக்கியமான தெய்வங்களிலொருவரான வருணன்: பிந்திய வேதகாலத்திலே நீருக்குரிய தெய்வமாக விளங்கினார். தொல்காப்பியம் கூறும் திணைத் தெய்வங்களில் இவர் கடலோடு தொடர்புள்ள நிலத்தெய்வபாவார். 7, ஆனால் சங்கநூல்களில் இவரைப் பற்றிய தெளிவான குறிப்புகள் இல்லை. ் 

கூற்றுவன் 7 யமண்: 

ல் யமன் வேதஇலக்கியம் கூறும் ஒரு குறிப்பிடத்தக்க தெய்வம். யமன்: கூற்றுவன் எனத் தமிழில் அழைக்கப்படுகிறான், இவர் உயிர்களைப் பிணித்துச் செல்வதால் “உயிருண்ணும் கூற்று” எனக் கூறப்படுகின்றார், (புறம் 4) “அறனில் கூற்று” எனப் புறநானூற்றிலுள்ள பிறிதொருபாடல் (225) 0 குறிப்பிடுகின்றது. கூற்றுவன் பற்றி மேலும் சில பாடல்களிலே குறிப்புகள் உள்ளன. ந் 

சூரியன்: 

வேதங்களிலே போற்றப்படும் முக்கியமான தெய்வங்களில் சூரியனும். ஒருவராவர். மழைத்தெய்வமான பர்ஜன்ய பற்றி இருக்குலேதத்திலே சில பாடல்கள் உள்ளன. சங்க இலக்கியத்திலே சூரியன், சந்திரன், மழை பற்றிய சில குறிப்புகள் உள்ளன. சில பாடல்களிலே குரியன், சந்திரன் போன்று அரசன் நீண்டகாலம் வாழ வேண்டுமென வாழ்த்தப்படுகின்றான் (புறம் 6, 56). சிலபாடல்களிலே இம்மூவரின் முக்கியமான அமிசங்களான வெந்திறலாண்மையும், குளிர்ந்த பெரிய மென்மையும், வண்மையும் குறிப்பிட்ட அரசனிடத்து உள்ளனவாகக் கூறப்படுகின்றன (புறம் 55). 

காமன், ரதி  

காதற் கடவுளாகிய காமன் (மன்மதன்), அவனுடைய மனைவியான ரதி என்போர் பற்றிய குறிப்பகள் பரிபாடல் போன்ற பிந்திய நூல்களில் வந்துள்ளன. 

அருந்ததி  

கற்பிற் சிறந்தவளாகிய அருந்ததி பற்றிய குறிப்புகளிலே "வடமின்புரையும் மட மொழி” எனப் புறநானூற்றிலே (122) வந்துள்ளமையைச் சுட்டிக்காட்டலாம்... 

இமயமலை, மேரு
இமயமலை, (புறம் 2) மேரு (புறம் 55) முதலியன பற்றிச் சில பாடல்களிலே. குறிப்புகள் வந்துள்ளன. சமூகவியற் கருத்துக்கள்.

வாழ்க்கை இலட்சியங்கள்
வைதிக சமயத்துடன் ஒன்றிணைந்த சமூகம், வாழ்க்கை இலட்சியங்கள், ஒழுக்கநெறி, நல்வினை, தீவினை, மறுபிறப்பு போன்றவை பற்றிய சில கருத்துக்கள். சுருக்கமாகச் சுட்டிக்காட்டப்படும்.

வைதிக சமூகத்திலே வர்ணாச்சிரமதர்மம் ஒரு முக்கியமான அபிசமாகும்.. சங்க நூல்களிலே காலத்தால் முந்திய நூல்களிலே இது பற்றிய கருத்துகள் மிக அரிதாகும். தொல்காப்பியத்திலும் குறிப்பாக சங்க நூல்களிலே காலத்தால் பிற்பட்ட சிலவற்றிலும்தான் இது பற்றிய கருத்துக்கள் தென்படுகின்றன. எனினும். புறநானூற்றுப்பாடலொன்றிலே (83) “வேற்றுமை தெரிந்த நாற்பாவிலுள்ளும்” கற்றவனே மேலானவன் எனக் கூறப்படுகின்றது. இங்கு நால்வகை வருணப்பாகு பாடு உள்ளதாகவும் சிலர் கருதுகின்றனர். அதேவேளையில் புறநானூற்றிலுள்ள. பிறிதொரு பாடலிலே (335) துடியன், பாணன், பறையன், கடம்பன் எனும் நால்வகைக் குடிகளும் கூறப்பட்டுள்ளன. எனினும் ஏற்கனவே குறிப்பிட்டவாறு அந்தணர், அரசர் ஆகியோரின் மேலாதிக்கம் சங்கநூல்களில் தெளிவாகக் காணப்படுகின்றது.  

தென்னாசிய சமய, சமூக மரபிலே தர்மம் இப்பிராந்தியத்தில் உருவாகி வளர்ச்சியடைந்த இந்து, பெளத்த, சமண, ஆஜீலிக சமயங்களிலிதனை நன்கு அவதானிக்கலாம். இது பற்றிய விளக்க விபரங்களிலே கருத்து வேறுபாடுகளி லிருந்தாலும் பொதுவான அடிப்படைக் கருத்துள்ளமை குறிப்பிடற்பாலது. வேத 

இலக்கியத்தின் பல பகுதிகளிலும் தர்மம் பற்றிய கருத்துக்கள் வலியுறுத்தப். பட்டுள்ளன. “எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் அடிப்படையாகவே”' தர்மம். கூறப்படுகின்றது. “பூமி தர்மத்தினாலே தாங்கப்படுகின்றது”' என அதர்வவேதம். கூறுகின்றது. (12117) உலகனைத்தையும் தாங்கி நிற்பதாக மட்டுமன்றி, அனைவரும் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான ஒழுக்கநெறியாகவும், அனைத்துக்கும் முதன்மையாக விளங்குவதாகவும் தர்மம் போற்றப்பட்டு வந்துள்ளது.  

சங்க நூல்களிலே தர்மம் அல்லது தருமம் என்ற வடசொல்லன்றி அறம் என்ற பதமே பெரும்பாலும் வந்துள்ளமை குறிப்பிடற்பாலது. இதுவும் பொருளும், இன்பழும், வாழ்க்கையின் மூன்று மிக முக்கியமான இலட்சியங்களாகப் போற்றப்பட்டுள்ளன. இவை பற்றிச் சிறிதளவு உவமைகள் எனும் சிறுதலைப்பிலே. பின்னர் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தாயினும், மேலும் சிலவற்றை குறிப்பிடலாப், இம் மூன்று இலட்சியங்களிலும் அறத்திற்கே / தருமத்திற்கே முதலிடம் அளிக்கப். பட்டுள்ளமை கவனித்தற்பாலது. இவ்வுலக வாழ்விற்கு அறம் மட்டுமன்றிப். பொருளும் இன்பமும் அவசியமாகும். இவை மூன்றும் தனித்தனியாக அன்றி. கூட்டாகவே கவனிக்க வேண்டியவை. எனினும் இம் மூன்றும் ஒரு பெரிய இலட்சியத்தின் மூன்று முக்கிய அமிசங்கள் போலக் கருதப்பட்டன எனவும் கொள்ளலாம். இவற்றை கவனிக்கும்போது 
உலக வாழ்க்கை யாதார்த்தமாகவே. நோக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு,

அரசர்கள் இம்மூன்றையும் பின்பற்றிக் குடிகளுக்கும், நாட்டுக்கும். முன்மாதிரியாக விளங்கு வேண்டியவராயினர். சோழன் நலங்கிள்ளியை முதுகண்ணன் சாத்தனார் எனும் புலவர் விளித்துப்பாடும்போது.

“அறனும் பொருளு மின்புமும் மூன்றும்
ஆற்றும் பெரும நின் செல்வம்
என அரசனின் செல்வம் இம் மூன்றையும் பின்பற்றுவற்குப் பயன்பட வேண்டுமெனப் புகழ்ந்து பாடுகின்றார். (புறம் 28).

அரசில் அறமே மேலோங்கவேண்டும் எனப் பாடல்களிலே தெளிவாகக்: கூறப்பட்டுள்ளது எடுத்துக்காட்டுகளாக

“அறம் துஞ்சும் செங்கோல் '' (புறம் 55/.
“அறம் துஞ்சுறைந்தை "(பற் 9).
அறநெறி முதற்றே அரசின்கொற்றம்' (மறம் 55/ போன்றவற்றைக் குறிப்பிடலாம். அறம் என்பது அறநூல்களை அல்லது. தர்மசாஸ்திர நூல்களைக் குறிக்கும் பதமாகவும் வந்துள்ளது எடுத்துக்காட்டுகளாக,

“அறம்பாதற்றே ஆயிழை கணவ” (றம் 6)
“அறத்தாறு நுவலும் பூட்கை” தம் 6) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

 இப்பிறவியில் ஒருவர் தாம் செய்த நல்வினை, தீவினைக்கேற்ப இறந்தபின். குறிப்பிட்ட நற்கதி, தீயகதியினை அடைவர். என்பது பற்றிய கருத்துக்களும் சங்க நூல்களில் வந்துள்ளன. நல்வினை செய்தோர் தேவருலகம் செல்லுவர் என்பது,  

உயரந்தோருலகத்துப் பெயரந்ததனால் '' ரம் 773/.   எனும் பாடற்குறிப்பால் அறியப்படும். 

நல்வினை செய்வோர் இறந்தபின் சுவர்க்கம் / விண்ணுலகம் செல்வர். தீவினை: செய்வோர் நாகத் துன்பத்தை அனுபவிப்பர். அருள், அன்பு இல்லாதவர் பாவம் செய்தவராக நீங்காத நாகத்தை அடைவர். அப்பெயர்ப்பட்டவர்களுடன் சேராது அரசன் தான் காக்கும் தேசத்தினைத் தன் குழந்தைகளைப்போல பாதுகாக்க 

வேண்டும் என சோ அரசன் ஒருவனுக்குப் புலவர் ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளமை: 

 “அருளும் அன்பும் நீங்கி நீங்கா.
யங் கொள்பவரோ பொன்றாது காவல்”
குழவி கொள்பவரின் ஓம்பு மதி'” (றம் 5).
என்பதால் புலப்படும். நல்வினை செய்வோர் (இறந்தபின்) தெய்வ உலகத்திற்கு (விண்ணுலகிற்கு)ச் செல்வர் என்பது முற்குறிப்பிட்டதுடன் (புறம் 174)

வேறந்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல்.
கலர் ் ் சா காழுங்கா
வலைப்புணை பிறிதில்லை” பயறும் 3577.  எனவருவதாலும் புலப்படும்.

நல்வினை தீவினை ஊழின்பாற்படும் எனப் புறநானூறு (191) கூறுகின்றது. ஆதிக்கமோ, செல்வமோ ஒருவனுக்கு உண்மையான துணையன்று, அறம் ஒன்றே சிறந்த துணையென்பது உயிர் போகும் போது வீட்டுலகைப் பெற விழுத்துணை என்பது

, “வித்தும்  அறவினையன்றே விழுத்துணையத்துணை:  புணைகைவிட்டோர்க்கரிதே துணையமத்  கொக்குமிர் வெளவுங்காலை:  இக்கரைநின்றிவர்ந்தக் கரை கொளவே "(புறம் 357) எனக் கூறப்பட்டுள்ளது. இல்லறம் துறவறம் ஆகிய இரண்டிலும் தலமே சிறந்த தெனவும் (புறம் 356) சிலபாடல்களிலே கூறப்பட்டிருப்பினும் பொதுவாக அறத்தின். பாற்பட்ட இவ்வுலக வாழ்க்கையே நன்கு போற்றப்பட்டதெனலாம். இக்கருத்து இவ்விருவகை இலக்கிய நூல்களுக்கும் பொதுவானதாகவும் காணப்படுகின்றது. உவமைகலில் சமய சமூகச் சிந்தனைகள்  வைதிக சமய, சமூகச்சிந்தனைகள் எந்த அளவிற்குச் சங்க நூல்களிலிடம் பெற்றுள்ளன என்பதற்கு இந்நூல்களிற் காணப்படும் இவை தொடர்பான உவமைகளும் உரைகற்களாகக் கொள்ளத்தக்கவை. எடுத்துக்காட்டுகளாக ஒருசிலவற்றினைச் சுட்டிக்காட்டலாம். அந்திமாலை வேளையிலே செவ்வானமும் நீலக்கடலும் அழகாக ஒன்றிணைந்து விளங்கும் அழகிய காட்சி, செந்நிறமுள்ள சிவபிரானும், நீலநிறமுள்ள திருமாலுமாகிய இரண்டு பெரிய தெய்வங்களும் ஒன்று சேர்ந்து விளங்குவது போல (சங்கரநாராமணத்திருவுருவம் போல), காட்சியளிக்கின்றதாம். இக்கருத்துப்பட அக நானூறு (360)  “செருவருக டுந்திறல் இருபெரு் தெய்வத்து:  உர உடன் இயைந்த தோற்றம் போல:  அந்தி வானமொடு கடல் துணி கொளாயுது” ஈனச் சிறப்பித்துக் கூறுகின்றது. தலைவன் வரைதல் வேண்டிவரவுள்ள குதிரையின் குடுமி (ம் ஊர்ப்) பார்ப்பானின் சிறு மகனுடைய சிறிய குடுமி போன்றதாகும் எனத் தோழி கூறும் பாங்கில் ஐங்குறுநூற்றிலே (202)  “அன்னாய்வாழி வேண்டன்னை தம்குள்  பார்ப்பனக் குறமகப் போலத்தாமும்  குடுமித்தலைய மன்ற நெடுமலை நாடனூர்ந்தமாவே எனக் கூறப்பட்டுள்ளது.  மக்கள் பின்பற்ற வேண்டிய இலட்சியங்களாக வேத இலக்கியத்தில், ஏற்கனவே. குறிப்பிட்டவாறு அறம், பொருள், இன்பம் (கர்மம், அர்த்தம், காமம்) எனும் மூன்றும். வலியுறுத்தப்பட்டு வந்தன. காலம் செல்ல வீடு (மோட்சம்) நாலாவதாகச் சேர்க்கப் பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மூன்றும் திரிவர்க்கம் என வடமொழியிலும், 

முப்பால்  எனத் தமிழிலும் கூறப்படும் இம்மூன்றும் இன்றியமையாதவை; ஒன்றோடொன்று. நெருங்கிய தொடர்புள்ளவை. எனினும் இவற்றுள்ளே அறமே / தருமமே தலையாயது. அறத்தின் வழிநின்று செல்வத்தினைப் பெற்று இன்பத்தைத் துய்க்க வேண்டும். சங்ககாலத் தமிழகத்தில் இவ் இலட்சியங்கள் குறிப்பாக சமூகத்தின் மேல். மட்டங்களிலாவது பின்பற்றப்பட்டன எனலாம். இம்மூன்றும் சில பாடல்களில் உவமையாக வந்துள்ளமை கவனித்தற்பாலது. தமிழகத்தில் ஆட்சி புரிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களிற் சோழ அரசனான நலங்கிள்ளியின் தலைமையிலே அவனுடைய வெண்கொற்றக்குடைக்குப் பின்னாலே (சமகால) சேர, பாண்டிய மன்னர்களின் குடைகள் விளங்குவது சிறப்பான அறத்தின் வழியே பொருளும், இன்பழும் கலை நிறைந்த திங்கள் தோன்றும் காட்சி போலாகும் என்ற கருத்துப்பட கோவூர்கிழார்.  ப்பது மித் வொருளுமின்பும்  அறத்துவுழிப்படூம் தோற்றம்போல:  இதகுடை பிள் படவோங்கியவொரு குடை  உருகெழுமதியிள் வந்து சேண்விளங்க என (புறம் 34ப் பாடியுள்ளார்.  வைதிக வேள்விகளிலே ஆஹவனீயம், கார்ஹபத்யம், தாக்ஷிணாத்யம் எனும்: முத்தீக்களும் குறிப்பிடத்தக்கவை. இவை பற்றிச் சிரெளதசூத்திரங்கள் கூறுவன: சங்கப்பாடலொன்றிலே இம்முத்தீக்களும் மூவேந்தருக்கு ஒப்பிடப்படுகின்றன.. மூவேந்தரிடையே ஒற்றுமை நிலவியமை மிக அரிதாகும். ஆனால் வழக்கத்திற்கு, மாறாக சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர். தந்த உக்கிரப்பெருவழுதியும், சோழன் இராச சூயம் வேட்டபெருநற்கிள்ளியும் ஒரு காலத்தே ஒரிடத்திலே ஒருங்கு கூடியிருந்தனர். அவ்வரிய காட்சியினைக் கண்ணுற்ற ஒளவையார் பிக மகிழ்ச்சியுற்று அவர்களுக்கு நன்கு உபதேசித்தார். புலடக்கமுள்ள அந்தணர்கள் எடுக்கும் முத்தியைப்போல் அவர்கள் அழகாக: வீற்றிருக்கின்றனர் எனவும் வெண்கொற்றக் 

குடைகளையும் கொடிகளையும் உயர்த்திய தேர்களையுமுடையவர்கள் எனப் பாராட்டி, அவர்களை நீடுழி வாழ வாழ்த்தினார். அவர்களை முத்தீக்கு.

ஆன்று புரிந்த டங்கிற விருபிறப்பாளர்
மூத்திப்புரையக் காண்டக விருந்த
கொற்றவெண்குடைக்கொடத்தேர் வேந்திர...' (புறம் 367)  என ஒப்பிட்டிருப்பது குறிப்பிடற்பாலது..

பொய்கைகளிலுள்ள பூக்கள் மலர்ந்து நறுமணம் வீசுகின்றன. அப்பூக்களிலே தாதையுண்ணும் தும்பிகள் பாடுகின்றன. (ரீங்காரம் செய்கின்றன) இக்காட்சி வேதத்தை முற்ற ஒதுதலையுடைய அந்தணர் வேதத்தில் தெய்வங்களைத் இுதித்தவற்றை சொல்லுவதுடன் (ஓதலுடன்) ஒப்பிடப் படுகின்றது. மேற்குறிப்பிட்ட ஒரு சாதாரண இயற்கை நிகழ்வு நன்கு கற்ற அந்தணர் வேதம் ஓதலுடன். துண்டும் போது முரன்றாங்கு ஒதலந்தணார் வேதம்பாட (மகா: 68௪-254]. என ஒப்பிடப்பட்டுள்ளது. திருமால் திருவெஃகா எனுமிடத்திலே அனந்த சயனராகக் காட்சியளித்தல் “நீண்ட பூங்கொத்துக்களையுடைய காந்தளையுடைய அழகிய பக்கமலையிலே யானை: கிடந்தால் போன்று விளங்குகின்றது!” என்ற கருத்துபட பபப நீடுகுலைக் கரந்தளர்சிலம்பிர் களிறு பந்தாங்குப் பாம்பணைப் பள்ளியமர்ந்தோனாங்கண் எனப் பெரும்பாணாற்றுப்படை (371-378) கூறும். ஆரியக்கூத்தர் கழையிற் கட்டிய கயிற்றின்மீது நின்று ஆடுவர். அப்போது பறை கொட்டப்படும். இப்பறையின் ஒலி, பாலை நிலத்திலுள்ள வாகை மரத்திலுள்ள. வெண்ணிற நெற்றுக்கள் மேல்காற்றின் தாக்குதலால் வெடிந்தலால் ஏற்படும் ஒலிக்கு பபபபனரியர் ந த ்கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் நொலிக்கும். த ண்ம் ற என ஒப்பிடப்படுகின்றது. (கு.தொ.7). இகப்பாடலொன்றிலே, ஆரியர் தொடர்பான ஒரு வரலாற்று நிகழ்வு உவமையாக வருகின்றது. வல்லம் என்னுமிடத்திலே சோழராற் தோற்கடிக்கப்பட்ட ஆரியப்படை போல “என்கையிலுள்ள வளையல்கள் உடைக' என நயப்புப் பரத்தை இற்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது குறிப்பிடற்பாலது அதாவது, மாரி அம்பின் மழைத்தோற் சோழர்

வில்லிண்டுச் குறும்பின் வல்லத்துப் புறமினை:  ஆரியர் படையின் உடைக என்:  தேர் இறை முன்கை விளங்கிய வளையே (அகம் 238) என்பதாகும்.  சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியும் ஆகிய இருவரையும் பால்போலும். நிறத்தையும் பனைக் கொடியையுமுடையவராகிய பலராமனும், நீலத்திருமேனியையும். சக்கரத்தையுமுடையவராகிய திருமாலுமாகிய இரு பெருந்தெய்வங்கள். ஒருங்கிகுந்தாற் போல ஒருங்கே விளங்குவதிலும் பார்க்க வேறு இனியது ஏதுமுண்டா என காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் கூறுகிறார். (புறம் 68). குறிப்பிட்ட தெய்வங்கள் இருவரும் சகோதரர். இது போல சோழ, பாண்டிய மன்னரும் தமிழ்வேந்தர்களில் இருவர்; சகோதர பாவனையில் கருதப்படத்தக்கவர்.  “தலைவன் பெண்கள் காண மாலையையும் ஆடையையும் பிடித்துக்கொண்டு. வருவானாக, ஆரியர் பழக்கிலவைத்துள்ள பெண்யானை தான் பழகிக் கொணர்ந்து தரும் ஆண்யானை போல, தோள் கட்டுத்தறியாக. அதன் கண் கூந்தலாற் கட்டி, அவன் மார்பிளைத் தான் சிறை செய்வதாகச் சூளுரையாகத் தலைமகட்குப் பாங்காமினார் கேட்பப்பரத்தை கூறியதாக அகநானூற்றில் ஒருபாடல் (278) உள்ளது. இங்கு ஆரியர்யானை பிடித்தல் அகப்பொருள் தொடர்பான உவமையாக வந்துள்ளது.  அசுநாஜூற்றிலுள்ள பிறிதொரு பாடலிலே (220) வேள்வி, பரசுராமர் அரசர் பலரை வென்றமை பற்றிய தொன்மம், அகப்பொருள் ஆகியன ஒன்றிணைத்துக் கூறப்பட்டுள்ளன. இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை ஈதிர்ப்பட்டுத் தோழி. கூறுவதாசு இச்செய்யுள் அமைந்துள்ளது. “என்றும் நீங்காத வேள்வித் தீயினையுடைய அழகு வாய்ந்த செல்லூரிலே மதம் கொண்ட யானைகளைப் போர் முனையில் அழிய, அரசகுலங்களை அழித்தவரும், மழுவாயுதத்தையுடையவருமான பாகராமர் முன்னர் அரிதிலே செய்து முடித்த வேள்வியின் கண் கயிற்றை அரையிற் சுற்றிய காணத்தக்க அழகுடையதும் அரிய காவலையுடையதுமான நீண்ட வேள்வித் தூண்போல, யாவரும் காணமுடியாத மாண்புற்ற அழகினையுடைய (எம்) தலைவியின்: மார்பினை நினைக்கும்தோறும் நடுங்கும் நெஞ்சினையுடையாகிப் புறத்திலே நெடிது. நின்று வருந்தியுள்ளவனாகத் தலைவன் அவளுடன் சேர்ந்துள்ளான். அவளுடைய பாதுகாப்புப் பற்றிக் கூறுவாய்” என தோழி கூறும் பாங்கு குறிப்பிடற்பாலது.  பிறிதொரு பாடலிலே (அகம் 58) வடக்கேயுள்ள யமுனையாற்றங்கரையிலே நீராடிய ஆயர் மகளிரின் ஆடைகளைக் கண்ணன் விளையாட்டாக எடுத்துக் கொண்டு குருந்த மரத்திலேறியிருந்தார். அப்போது கண்ணனின் மூத்த சகோதரனான பலராமன் அங்குவர, அம்மகளிர் தம்மை மறைப்பதற்கு வேறு வழி

இராமாயணத்தில் இல்லாத ஒரு நிகழ்ச்சி உவமையாக அசுநானூற்றில் (70) வந்துள்ளது. அதாவது, வெற்றிவேலுடைய பாண்டியரின் மிக்க பழைமை வாய்ந்த திருவணைக்கரையின் அருகிலே முழங்கும் இயல்பினதான பெரிய கடலின். ஒலிக்கின்ற துறைமுற்றத்தில் வெல்லும் போரில் வல்லவனான இராமன் (தன். துணைவருடன்) அரிய மறையினை ஆய்தற் பொருட்டாக பறவைகளின். இலியில்லாமற் செய்த பலவிழுதுகளைக் கொண்ட ஆலமரம் போல (தலைமகன்: தலைவி திருமணத்தின் முன்) ஆரவாரமுடைய (அவர்களின்) ஊர் ஒலி (திருமணத்தின்) பின் அடங்கப்பெற்றதென்ற கருத்துப்பட அப்பாடல், ள்வேற் கவரப் தொண்முதுல் புமூங்கிடும் பெளவர் இரங்கும் முன்றுறை: வெல்போர் இராமன் அருமறைக்கவித்த. பல்வீர் ஆலம் போல: ன த்தன்தில் அழுங்கள் வத் ஈன அமைந்துள்ளது. தெய்வங்கள் இயற்கையம்சங்களுக்கும், அரசர்கள் தெய்வங்களுக்கும். இப்பிடப்படுகின்றனர். எடுத்துக்காட்டுகளாக கருமையான பெரியமலை, கருநிறமுள்ள மாயவனுக்கும், அதிலிருந்து பாயும் வெண்ணிறமான அருவி பலராமனுக்கும். அ தணண

“பாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்:  வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி” என நற்றிணைப் பாடல் ஒன்றிலே (32) ஒப்பிடப்படுகின்றன. அரசர்களைத் தெய்வங்களுக்கு ஒப்பிடுவது பற்றிப் புறநானூறு 56ஆம் பாடலிலே குறிப்பிடப்பட்டிருப்பது ஏற்கனவே கூறப்படுள்ளது. பால் போன்ற பிறை திருநெற்றியிலே விளங்கும் திருமுடியையும், நீலமணி போன்ற கரிய திருமிடற்றினையுடையராகச் சிவபிரான் விளங்குனின்றார். இவரைப்போல அதியமான் நெடுமான் அஞ்சி நீடுழி வாழ வேண்டுமென ஒளவையார் புகழ்ந்துள்ளார். இங்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய கொடிய நஞ்சையுண்டும் நிலை பெற்றிருப்பவராக சிவபிரான் விளங்குவது போல அரசனும் சாகாமலிருப்பானாக என ஒளவையார் வாழ்த்தியுள்ளார். இக்கருத்துள்ள பாடல்.  “பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி  நீலமணிமிடற்றொருவன் போன  மன்னுக பெரும நீயே” என அமைந்துள்ளது. மேலும் இங்கு சிவபிரானின் திருமுடியிலே விளங்கும் பிறை யின் நிறம் வெண்ணிறமுள்ள பாலுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. மரணத்தைத் தடுக்க வல்ல நெல்லிக்கனியை அரசன் தான் உண்ணாது ஒளவையாருக்கு அளித்தான். இத்தகைய அருங்கொடையை வியந்தே ஒளவையார் இவ்வாறு புகழ்ந்துள்ளார்.  வடசொற்கள் (பொதுசிறப்பு) : சங்கநூல்களிலே வடசொற்கள் மிகக் குறைவாகவே உள்ளன. எனினும் வைதிக கருத்தக்களைப் புலப்படுத்தும் பொதுச் சொற்கள், சிறப்புப் பெயர்ச் சொற்களும் குறிப்பிடற்பாலன. இச்சொற்கள், தற்சமம் (வடமொழியிலுள்ளவாறு தமிழிலும் வரும்), தத்பவம் (அதனின்று பிறந்தது - அதாவது வடசொற்கள் தமிழ் மரபிற்கேற்ப மாற்றமடைந்து வரும்), தமிழ்ச் சொற்களாகவும் வந்துள்ளன. தத்சமமான சொற்களுக்கு எடுத்துக் காட்டுகளாக நீலமணி, யூப (யப - வேள்வித்தூண்), மா (மாதிருமகள்) போன்றவற்றைக் குறிப்பிடலாம். தத்பவமான சொற்களுக்கு எடுத்துக் காட்டுகளாக, தருமம் (தர்மம்), ஆவுதி (ஆஹுதி), அவி (ஹவிஸ்), உலகம் (லோக), போகம் (போக), இமயம் (ஹிமாலய), சமித்து (ஸமித்), ஆரம் (ஹார), சகட (சகடம்), இராமன் (ராம), சிகரம் (சிகர) போன்றவை குறிப்பிடற்பாலன. தூய தமிழ்ச் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளாக, அந்தணர் (பிராமணர்) மறை (வேதம்), அறம் (தர்மம்), வேள்வி (யாகம்), பார்ப்பனர் (பிராமணர் / ரிஷிகள்) போன்றவற்றைக் குறிப்பிடலாம். ட்ட இ ட டட

வைதிகசமயத் தொடர்புள்ள சிறப்புப் பெயர்கள், ரிவிகளின் கோத்திரப். பெயர்கள் புலவர்களின் சிறப்புப்பெயர்கள் ஆகியனவும் குறிபபிடற்பாலன. எடுத்துக்காட்டுகளாக, கெளணியன், விண்ணந்தாயன், ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன், உருத்திரன், பிரமனார், வான்மீகியார், பாரதம்பாடிய பெருந்தேவனார், பிரமசாரி - ஆத்திரையன், பூதனார், பெருங்கெளசிகன், பூதந்தேவன், காசிபன், கோசன், மேதாவியார் போன்றவை கவனித்தற்பாலன. இவற்றுள் கெளணியன் (கெளண்டின்ய), ஆத்திரேயன் (ஆத்திரேய), கெளசிகன் (கெளசிக) போன்றவை வேதகால ரிஷிகளின் கோத்திரப் பெயர்வழி வந்தவை. பரசுராமர் பற்றிய குறிப்புகளும் குறிப்பிடற்பாலன. இருங்கோவேள் எனும் வேளிர் குலத்தரசன் வடநாட்டைச் சேர்ந்த முனிவரின் ஒமகுண்டத்திலே தோன்றியவன்மரபில் வந்தவன் எனக் கூறப்படுகிறது (புறம் 201, இவ்வாறு வைதிக சிந்தனை தொடர்பான கருத்துக்கள் பல்வேறு வழிகளிலே சங்கநூல்களிலே வந்துள்ளன. ஏற்கனவே குறிப்பிட்ட மூன்று நூல்களிலும் தொல்காப்பியத்திலும் மேலும் கூடுதலான கருத்துக்கள் வந்துள்ளன. விரிவஞ்சி அவை பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் கூறப்படவில்லை. தொகுத்து நோக்கும்போது வைதிக சிந்தனைகள் பலவாறு சங்ககாலத்திலே பரவி வந்தமையினை அவதானிக்கலாம். இவை கூடுதலாகச் சமூகத்தின் உயர் மட்டங்களிலேதான் நிலவி வந்தனவாயினும், கீழ்மட்டங்களிலும் ஓரளவாவது பரவியதற்கு இக்கட்டுரையிற் சுட்டிக்காட்டப்பட்ட உவமைகளும் தக்க சான்றுகளாகும். சங்க நூல்களிலே முருக வழிபாடு நன்கு நிலவியமை பற்றிக் கருத்து வேறுபாடில்லை. அத்துடன் குறிப்பாகச் சிவவழிபாடும் திருமால் வழிபாடும் நன்கு நிலவின என்பதும் குறிப்பிடற்பாலது. சமயச்சார்பற்ற பெரும்பாலான சங்க நூல்களில் வந்துள்ள சான்றுகள் இக்கருத்தினை வலியுறுத்தும். மேலும் கொற்றவை, பல்ராமன் வழிபாடும் வேறு சிலவும் நிலவின. எவ்வாறாயினும் வேத இலக்கியம் போலச் சங்க இலக்கியமும் பெருமளவு சமூகத்தின் உயர்மட்டங்களில். வாழ்ந்த மக்களின் நாகரிகத்தையே புலப்படுத்துவன என்பதும் ஈண்டு குறிப்பிடற்பாலது. மேலும் இக்கட்டுரையிற் சுட்டிக்காட்டப்பட்ட சில கருத்துக்கள். வேத இலக்கியம், சங்க இலக்கியம் ஆகியவற்றிற்குப் பொதுவான கருத்துக்கள். எனக் கொள்ளவும் இடமுண்டு

No comments:

Post a Comment