Friday, November 2, 2018

ஏழாம் நூற்றாண்டு முருகனின் பண்டையக் காலச் சிலை


முருகனின் பண்டையக் காலச் சிலை  (ஏழாம் நூற்றாண்டு)
படம் நன்றி: French Institute, Pondicherry-(Discovery of an early sculpture of Murukan)

கீழ்பெரும்பாக்கம விழுப்புரம் மாவட்டம்.

பண்டைய காலத்தை சேர்ந்ததும் பலவிதமான கலை அம்சங்களையும், பண்டையக் கால தமிழ் எழுத்துக்களையும் கொண்ட அபூர்வமான சிலை சமீபத்தில் கிடைத்துள்ளது. (இந்த சிலை முன்னரே பாண்டிச்சேரியை சேர்ந்த பிரெஞ்சு இன்ஸ்டிடூட்டினால் புகைப் படம் எடுக்கப்பட்டு உள்ளது என்றும், இந்தக் கட்டுரை பிரசுரமாகும் வரை அதை அவர்கள் பிரசூரிக்கவில்லை என்றும் தெரிகின்றது)

பண்டைய காலத்தை சேர்ந்ததும் பலவிதமான கலை அம்சங்களையும், பண்டையக் கால தமிழ் எழுத்துக்களையும் கொண்ட அபூர்வமான சிலை சமீபத்தில் கிடைத்துள்ளது. (இந்த சிலை முன்னரே பாண்டிச்சேரியை சேர்ந்த பிரெஞ்சு இன்ஸ்டிடூட்டினால் புகைப் படம் எடுக்கப்பட்டு உள்ளது என்றும், இந்தக் கட்டுரை பிரசுரமாகும் வரை அதை அவர்கள் பிரசூரிக்கவில்லை என்றும் தெரிகின்றது)

சங்க காலம் (முருகனைப் பற்றி பல குறிப்புக்களைக் கொண்டுள்ள சங்ககால இலக்கியங்களை படிக்க சாமி 1990 ரைப் பார்க்கவும்) தொட்டு தமிழர்களால் வணங்கப்பட்டவர் முருகன் என்றாலும், அவரைப் பற்றி பண்டையக் கால தமிழ் மொழியில் செதுக்கப்பட்டு உள்ள கல்வெட்டு செய்திகள் நிறையக் கிடைக்கவில்லை. (முருகனைப் பற்றிய குறிப்புக்கள் முதன் முதலில் திருத்தணியில் 900 AD காலத்தை சேர்ந்த பல்லவ அபராஜித்தவர்மனின் கல்வெட்டுக்களின் மூலமே தெரியவந்தன - நாகஸ்சாமி - 1979 ) ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கூட முருகனின் சிலைகள் அபூர்வமாகவே செதுக்கப்பட்டு இருந்துள்ளன. அவருடைய சிற்பங்கள் சோமாஸ்கந்தன் சிலைகளுடனும், பல்லவர் காலத்தைய கல்வெட்டுக்களிலும், அவர்கள் நிறுவிய ஆலயங்களிலும்தான் கிடைத்தன. ( இதற்கு முன்னர் எட்டாம் நூற்றாண்டில் நின்ற நிலையில் உள்ள முருகனின் சிலைகள் இரண்டு கிடைத்துள்ளன. அவற்றில் ஒன்று எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த சிலை நேஷனல் மியூசியத்தில் உள்ளது -'L'Hernault 1978: 111. p. 621. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டாவது சிலை பல்லவ அபராஜித்தவர்மனின் காலத்தில் திருத்தணியில் மூலவார இருந்த சிலை என்று நம்பப்படுகிறது. ஆனால் அது தற்போது ஆலய மண்டபத்தின் முகப்பில் காணப்படுகிறது. - நாகஸ்சாமி 1979, ஆனால் இதை சோழர்கள் காலத்து முற்பகுதியை சேர்ந்தது என்கிறார் L' Hernault, p.111, ph. 63)

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சிலை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து இரண்டு கல் தொலைவில் உள்ள கீழ்பெரும்பாக்கம் ஐயப்பன் ஆலயத்துக்கு அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் கிடந்தது. இந்த இடம் சென்னையில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதனுடன் ஜியேஷிதா மற்றும் ஒரு சிவலிங்கமும் கிடைத்ததைக் காணும்போது அங்கு பழமையான சிவன் ஆலயம் இருந்திருக்க வேண்டும் எனவும், இந்த முருகனின் சிலையும் (இதில் உள்ள படம் கொடுத்து உதவியதற்கு நன்றி: Mme. L' Hernault, பிரெஞ்சு இன்ஸ்டிடூட், பாண்டிச்சேரி) அந்த ஆலயத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஒரு செங்குத்தான பாறையில் மேல்பகுதி அறை சந்திர வட்டம் போல அமைந்து இருக்க, அந்த பாறைக்குள் உள்ள சிற்பம் சிறிதளவு புடைத்துக் கொண்டு உள்ள சிற்பமாக வடிவமைக்கபட்டு உள்ளது. அதன் நான்கு பக்கங்களும் சிலையை ஒரு எல்லைக்கு உள்ளை வைத்துக் கொண்டு உள்ளது போல எழும்பி உள்ளன. இந்த சிலை செதுக்கப்பட்டு உள்ள 20 சென்டி மீட்டர் தடிமனான பாறை 108 சென்டிமீட்டர் உயரமும் 62 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. அதில் காணப்படும் சிலையின் மெருகு இன்னமும் குறையாமல் உள்ளது.

இந்த பாறை சிற்பத்தில் உள்ள சுப்பிரமணியரை அவருடைய வலது காலை மடித்து வைத்துக் கொண்டு இருந்தவாறும், இடது காலை கீழே நீட்டி ஒரு தாமரை மலர் மீது வைத்துக் கொண்டு உள்ளது போலவும் அமைத்து உள்ளார்கள். (இப்படி அமர்ந்த நிலையில் உள்ளது திருவூரியூரில் உள்ள ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த இன்னொரு பண்டை காலத்து சிலை - L' Hernault, 1978 112, p. 64).

சாதாரணமாக சுப்பிரமணியப் பெருமான் அமர்ந்து கொண்டு உள்ள தோற்றம் தரும் சிலைகளைக் காண்பது அபூர்வமே. அதுவும் தாமரை மலர் மீது அவர் அமர்ந்து உள்ள சிலைகளைப் பார்ப்பது இன்னும் அபூர்வம் (இப்படி தாமரை மலர் மீது அமர்ந்த நிலையில் உள்ளது விழுப்புரம் தாலுக்காவில் திருவாமடூரில் உள்ள பல்லவர் காலத்தின் பிற்பகுதியை சேர்ந்த இன்னொரு பண்டை காலத்து சிலை - L' Hernault 1978, 140, p. 120). ஆகவே இந்த சிலையும் மிகவும் பழமையான காலத்தை சேர்ந்ததாக இருந்து இருக்க வேண்டும்.

இந்த சிலையில் காணப்படும் முருகரின் கிரீடம் 'கரண்ட மகுடம்' எனப்படும் கூர் உருளையைப் போல அமைந்து இருக்க, பீடமோ அடுக்கடுக்கான மலர்களைக் கொண்ட அதாவது 'கன்னல்' எனப்படும் பூமாலையை பீடம் போல சுற்றி வைத்து உள்ளது போல காணப்படுகின்றது. இப்படிப்பட்ட தொடர்ந்து உள்ள மலர்களின் அமைப்பு படைவீரர்களைக் குறிக்கும். இந்த சிலையின் தோள்கள் மீது 'சன்னவீரா' எனப்படும் கயிறு போன்ற ஒன்றும் காணப்படுகின்றது. ஆகவே இவற்றைப் பார்க்கும்போது இந்த சிலை பல்லவர் காலத்தை சேர்ந்தது என்பது மட்டும் அல்லாமல், முருகன் ஒரு மாவீரர், சூரர் (அடுக, இறைவ நின் கன்னி - ஒ ..மன்னா, எதிரிகளின் நகரம் எரிந்து அழியும் புகையினால் உன்னுடைய பூமாலைகள் நிறம் மாறட்டும் - Puram 6:21-22) என்பதையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

அவர் காதுகளில் பெரிய 'மகர குண்டலம்' போன்ற காதணிகள் தொங்க, கழுத்து சங்கிலியான 'கண்டிகை' எனும் சங்கிலி கழுத்தில் இருக்க, 'கடகா' எனப்படும் கை காப்பு (வளையல் போல) கைகளில் காணப்பட, கால்களில் காப்பும், இடுப்பில் முன் பகுதியில் முடிச்சு போடப்பட்டு உள்ள ஒட்டியாணம் போன்றவையும் காணப்படுகின்றன. அவர் உடுத்தி உள்ள வேஷ்டி கூட நிஜமானதோ என்று பிரமிக்கும் வகையில் அங்காங்கே மடிப்புக்களுடன் அழகான தோற்றத்தில் உள்ளது.

இந்த சிலையில் காணப்படும் முருகனுக்கு நான்கு கைகள் உள்ளன. அவர் தூக்கி வைத்துக் கொண்டுள்ள வலது கையில் சிறிய அளவிலான ஆனால் அதி சக்தி வாய்ந்த தேவேந்திரன் அவருக்குக் கொடுத்த ஆயுதமான 'வஜ்ரா' எனப்படுவது இருக்க, தூக்கி வைத்துக் கொண்டுள்ள இடது கையில் ஜெப மாலை உள்ளது. கீழே நீட்டி வைத்துள்ள வலது கையில் தாமரை மொட்டு இருக்க , கீழே நீண்டுள்ள இடது கை அவர் தொடை மீது உள்ளது. முருகனின் கைகளில் காணப்படும் தாமரை மொட்டும், ஜெப மாலையும் ஞானத்தை கொடுத்த பிரும்மனை பிரதிபலிக்கின்றது. சாதாரணமாக ஜெப மாலை வலது கையில்தான் காணப்படும் என்றாலும் சிலவற்றில் தற்போது உள்ள சிலையைப் போலவும் அமைந்து இருக்கும் (L'Hernault 1978 p. 132-134, 141, 142). அது போல ஜெப மாலையும், தாமரை மொட்டும் சில சிற்பங்களில் இருப்பதைக் குறித்து தமிழ் இலக்கியங்களில் நிறையவே கூறப்பட்டு உள்ளது (இந்த மாதிரியான பொருட்களை கைகளில் வைத்து உள்ள காட்சியைக் குறித்து தணிகைப் புராணம், அகத்தியன் அருள் பெறும் படலம் போன்றவற்றில் முருகப் பெருமானின் பதினாறு வித கோலங்களில் கூறப்பட்டு உள்ளன).

இந்த சிலையின் முக்கியமான அம்சம் என்ன என்றால் முருகனின் பிரதானமான வாகனமான மயில், சேவல் மற்றும் கொடி போன்ற எதுவுமே இதில் காணப்படவில்லை. (இவற்றைக் குறித்து மேலும் செய்திகளை காண கீழுள்ளவர் எழுதி உள்ள குறிப்புக்களைப் பார்க்கவும்: Zvelebil 1981 and 1991). ஆகவே இது மிகப் பழைமையான காலத்தை சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெகு காலம் கழித்தே முருகன் சிலைகளில் சேவல் கொடியும், மயில் வாகனமும் அமைக்கப்பட்டு உள்ளது என்பது தெரிகின்றது.

இந்த சிலையில் காணப்படும் இன்னொரு மிக முக்கியமான அம்சம், சிலையின் தோள் பகுதிக்கு மேலே மற்றும் தொடைப் பகுதியில் உள்ள இடுக்கு போன்றப் பகுதிகளில் மெல்லியதான தமிழ் எழுத்துக்கள் செதுக்கப்பட்டு உள்ளன. ஜைன காலத்தைய சிற்பங்களில் மட்டுமே இப்படிப்பட்ட எழுத்துக்கள் காணப்படும், ஆனால் இது போன்று உள்ள பிராமணிய தெய்வ சிற்பங்கள் அபூர்வமானவை. (சமீபத்தில் இந்த கட்டுரை ஆசிரியர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிக்காடு கிராமத்தை சேர்ந்த உளுந்தூர் பேட்டை தாலுக்காவில் கிடைத்த ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த கோரவ்வல் சிற்பம் ஒன்றில் 'நந்திபுரமன்' என்ற வார்த்தை செதுக்கப்பட்டு இருந்ததைப் பார்க்க நேரிட்டது).

இதில் உள்ள எழுத்துக்கள் நான்கு வரிகளாக அமைந்து உள்ளன. இரண்டு வரிகள் வலது தோள்பட்டையின் அடிப்பகுதியிலும், மற்ற இரண்டும் இடது தோள்பட்டையின் கீழும் காணப்படுகின்றன. முதல் வரியில் இரண்டு வரிகள் சற்று சிதைந்து உள்ளன. ஆனால் மற்றவற்றைப் படிக்க முடிந்தது. அதில் உள்ள தமிழ் எழுத்துக்கள் பல்லவ காலத்தை சேர்ந்த தமிழ் மொழியில் செதுக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதில் சில வார்த்தைகள் 'வட்டிவெட்டு' எனும் வார்த்தைகள் கலந்தவைகளாக உள்ளன. அதனால்தான் அந்த சிற்பம் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாக (இதில் காணப்படும் எழுத்துக்கள் நரசிம்மவர்மன் I ஆம் காலத்தை சேர்ந்த திருக்கழிக்குன்றத்தில் காணப்படும் எழுத்துக்களை ஒத்து உள்ளன - Mahalingam 1988: no. 42) இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. அதில் காணப்படும் எழுத்துக்கள் இவை:

இடது

வரி 1: - செதுக்கப்பட்டு உள்ள எழுத்துக்கள் நா - - கே கோ (na - - k ko)

வரி 2: - செதுக்கப்பட்டு உள்ள எழுத்துக்கள் ர் - - ரி கோ டி (r ri ko t)

வலது

வரி 3: - செதுக்கப்பட்டு உள்ள எழுத்துக்கள் டி வீ (t vi)

வரி 4: - செதுக்கப்பட்டு உள்ள எழுத்துக்கள் டி டா டூ (t ta tu)

na . . . k-korri kotti (tu) vittatu : இந்த சிலையை கோர்ரி என்பவர் செதுக்கி உள்ளார்

கோர்ரி: 'கோர்ரி' என்ற வார்த்தை பாதி சிதைந்து இருந்தாலும் கோர்ரி என்பது யுத்தக் கடவுளான துர்கையின் பெயரைக் குறிப்பது என்பதினால் இதை செதுக்கி உள்ள கோர்ரி ஒரு பெண்ணாகவே இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. மேலும் இந்தப் பெயரை தம்முடையப் பெயராக பரவலாக பல தமிழ் பெண்கள் வைத்துக் கொண்டு இருந்துள்ளார்கள். (கோர்ரி 'தேவி ' (காளி . 89:8) செதுக்கப்பட்ட எழுத்துக்களில் சில : குடியன் -கோர்ரி, சடையன் -கோர்ரி: இவை காணிக்கைக் கொடுத்த பெண்களின் சில பெயர்கள் -SII. V. nos. 342 & 324 early Pāndya, c. 9th cent. AD) 



கோட்டிவிடட்டு: இதன் சரியான வார்த்தை 'கோட்டுவிடட்டு' என்று இருந்திருக்க வேண்டும். காரணம் 'கோட்டுவிடட்டு' என்பதின் அர்த்தம் 'இதை செதுக்கியவர்'' என்பது. 'கோட்டு' என்றால் சுத்தியல் அல்லது உளி என்று பொருள். ''படிமம் கோட்டுவிட்டான்'' என்றால் சிலையை செத்துக்கியவர் என்று பொருள் (8 ஆம் நூற்றாண்டு பல்லவர் காலத்து எழுத்துக்கள்) (Ref : Mahalingam 1988 no. 85).

இப்படியாகக் கிடைத்துள்ள இந்த அபூர்வமான சிலையைப் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்தக் கட்டுரையை வெளியிட்டவர் திரு C . வீரராகவன் 

அவர் விலாசம் 

The author:
C. Veera Ragavan
66, Muthuvel Layout
Villupuram - 605 602 India

No comments:

Post a Comment