Tuesday, November 13, 2018

கிறிஸ்துவ பிரிவு வெறி. செத்த கிறிஸ்துவர் 10 நாள் பின்பு அடக்கம்

1400 ஆர்தடாக்ஸ் பிரிவு சர்ச்சுகளை  ஜாகோபைட் வைத்து பராமரிப்பது சட்ட விரோதம் காலி செய்ய வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற ஆணை. அதைக் கேரளாவின் CPM மார்க்சிஸ்டுகள் நிறைவேற்றாமல் உள்ளது.

அடக்கம் செய்வதில் சிக்கல் ! ஒரு வாரமாக அல்லல்படும் முதியவரின் உடல்

கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான  ஜாகோபைட்டை பின்பற்றியவர்  மாவேலிகரா பகுதியில் வசித்து வந்த வர்கீஸ் மேத்யூ. இவர் கடந்த நவம்பர் 
3-ம் தேதி முதுமை காரணமாக இயற்கை எய்தினார்.

ஆனால் இறந்த ஓரு வாரம் ஆன நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யவில்லை. அதற்கு காரணம் மலங்காரா ஆர்த்டாக்ஸ் சர்ச்சுக்கும் ஜாகோபைட் சர்ச்சுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஆகும்.
வர்கீஸின் உறவினர்களின் சிலர் இறுதி சடங்கை மலங்காரா ஆர்தடாக்ஸ் சர்ச்சில் செய்யவேண்டுமென்றும் சிலர் ஜாக்கோபைட் சர்ச்சில் செய்யவேண்டுமென்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஆனால் இறுதி சடங்கை செய்வதற்காக ஜாக்கோபைட்டைச் சேர்ந்தவர் ஆர்தடாக்ஸ் சர்ச்சுக்குள் வருவதை அனுமதிக்க மாட்டோம் என ஆர்தடாக்ஸ் சர்ச்சை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இவர்களின் தகராறு காரணமாக வர்கீசின் உடல் அடக்கம் செய்யப்படாமல் அலக்கழிக்கப்படுகிறது.
ஆர்தடாக்ஸ் சர்ச்சை கண்டித்து வர்கீஸின் உறவினர்களும் ஆதரவாளர்களும் போரட்டம் தொடரவே பிரச்சனை பெரும் விவகாரமாக உருவெடுத்தது. இதனை தொடர்ந்து ஆலப்புழா மாவட்ட ஆட்சியார் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை.

இரண்டு சர்ச்சுகளுக்கும் இடையேயான இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2017-ம் ஆண்டு நீதிமன்றம் இந்த பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் ஒரு தீர்ப்பை வழங்கியது.

அதாவது ஆர்த்டெக்ஸ் சர்ச்சுக்கே அணைத்து விதமான உரிமைகளும் இருப்பதாக  தீர்ப்பை வழங்கியது.

இது குறித்து இறந்த வர்கீஸின் பேரன் ஜார்ஜ் ஜான் கூறுகையில், "தாத்தாவின் உடலை ஆர்த்டெக்கஸ் சர்ச்சுக்குள் அடக்கம் செய்ய விரும்புகிறோம். அதான் தாத்தாவின் விருப்பமும் கூட. ஆனால் ஆர்த்தாடக்கஸ் சர்ச்சை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்" என்றார். 

ஆனால் ஆர்த்தாடக்கஸ் சர்ச்சை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னரும் ஜாக்கோப்பைட்டைச் சேர்ந்தவர்களின் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஜாகோப்பைட்டைச் சேர்ந்த பாதிரியார்கள் இறுதி சடங்கை செய்ய அனுமதிக்க மாட்டோம், கரணம் ஜாக்கோப்பைட்டைச் சேர்ந்த சிலர் பிரச்சனை  செய்வதற்காகவே வருகின்றனர் என்று தெரிவித்தனார்.
இந்த பிரச்னையால் இறந்த முதியவரின் உடல் அடக்கம் செய்ய கடந்த ஒரு வாரமாக இழுபறி நீடித்து வருகிறது. 
கிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார் 



No comments:

Post a Comment