Wednesday, November 14, 2018

கிறிஸ்துவ மதவெறி உண்டாக்கிய கட்டுக்கதை -பார்ப்பனீயம்

பார்ப்பனீயம் [Brahmanism] வார்த்தை தோற்றுவித்ததற்கான நோக்கம் என்ன
பார்ப்பனீயம் [Brahmanism] - பெரியாரியர்களிலிருந்து கம்யூனிஸ்டுகள் அம்பேத்கரியர்கள்வரை பயன்படுத்தும் வார்த்தை.



இந்த வார்த்தையினை முதன்முதலில் தோற்றுவித்தவர் யார்? அந்த வார்த்தைக்கான பொருள் என்ன ? அப்படி ஒரு வார்த்தை தோற்றுவித்ததற்கான நோக்கம் என்ன ?
இதற்கு நாம் செல்ல வேண்டியது இன்றிலிருந்து கிட்டத்தட்ட 131 ஆண்டுகள் முன்பு . ஆங்கிலேயர் தங்களின் ஆதிக்கத்தை வேரூன்றிய காலம். அப்பொழுது Oxford பல்கலைக்கழகத்தில் May 5 1886 மோனியர வில்லியம்ஸ் "Monier Williams" எனபவர் ஒரு விரிவுரை செய்கிறார். அந்த விரிவுரை "Holy Bible and Sacred Books of the East " என்றநூலில் அவரே பதிவும் செய்கிறார் [தரவுகள் புகைப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன]. அந்த விரிவுரையின் சுருக்கம் -
"கடந்த 25 ஆண்டுகளாக பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் இந்திய பூர்வகுடி மக்களை கிறிஸ்துவத்துக்கு மதம்மாற்றம் செய்வதற்கான "Boden Chair of SanskritChair of Sanskrit" யின் முனைவராக இருப்பதில் நான் பெரும்மகிழ்ச்சி கொள்கிறேன். Colonel Boden தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்துமே சமஸ்க்ரிதம் படிக்க தானம் செய்திருக்கிறார். அவருடைய நோக்கம் நாம் சமஸ்க்ரிதம் படித்தால் , நமது கிறிஸ்துவமதத்தை சமஸ்க்ரிதத்தில் மொழிபெயர்த்து மக்களிடம் எடுத்துசென்றவிடமுடியும் . அவர் நினைத்ததை நானும் என் முழு ஈடுபாடுடன் செய்துகொண்டிருக்கிறேன்".
நாம் ஏன் யாரோ "Monier Williams" சொன்னதையெல்லாம் மதிக்கவேண்டும்? ஏனென்றால் இன்றளவும் அவர் எழுதிய "English-Sanskrit Dictionary " தான் மேற்கத்தியர்கள் நம் வேதங்களையும் இதிஹாச புராணங்களையும் மொழிபெயர்க்க உபயோகம் செய்யும் அகராதி .
முதன்முதலில் பார்ப்பனீயம் [Brahmanism] என்கிற வார்த்தையையும் இவர்தான் பயன்படுத்திகிறார் . "Modern India and Indians" என்கிற நூலில் அதை பதிவு செய்கிறார். ஆதி சங்கரர் நமக்கு கொடுத்த பொக்கிஷமான "அத்வைத" தத்துவத்தையே அவர் பார்ப்பனீயம் என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவத்தின் materialistic சித்தாந்தத்தில் சிக்கிக்கொண்டு, அத்வைத தத்துவத்தின் ஆழ் புரியாது அதன்பால் வன்மமும் கொட்டித்தீர்க்கிறார். ஹிந்து மதத்தை, "சாதிகள் நுழைந்த Polytheistic சீரழிந்த பார்ப்பனீயம் என்று சொல்கிறார்".
கவனிக்கவும், பார்ப்பனீயத்தில் சாதி இல்லை!!
பின்பு ஏன் இவர்கள் (மேற்கத்திய Indologists, பெரியார்வாதிகள், கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரியர்கள்) "பார்பனீயம்தான் சாதி கொடுமைக்கும் தீண்டாமைக்கு காரணம்" என்று பிரச்சாரம் செய்கிறார்கள்?
அதற்கான பதிலும் அவரே அந்த புத்தகத்தில் குறிப்பிடுகிறார் - "பார்ப்பனீயம் என்கிற பெரும் கோட்டையை தகர்க்கும் நாளில்தான் கிறிஸ்துவத்தின் பூரண வெற்றி".
இவர்களின் மதமாற்ற தொழிலுக்கு தத்துவரீதியாக எதிர்த்துநிற்கும் ஒன்று பார்பனீயம்தான் . அதுனாலதான் அதை எப்படியாவது அழிக்கவேண்டுமென்ற போராட்டம்தான் இவர்களுக்கு .
இங்கு எல்லா கிறிஸ்துவர்களையும் குறைகூறமாட்டேன். கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும், தான் உண்டு தன வேலை உண்டு என்று இருப்பவர்கள் ஏராளம் . அவர்களால் ஒன்றும் தொல்லையில்லை. ஆனால் மதம் மாறியதை வெளியில் சொல்லாமல் , அரசு அச்சிலும் பதியாமல் "ஹிந்து மதம்தான் சாதிக்கொடுமைக்கு காரணம்" என்று கம்யூனிஸ்ட் , பெரியார்வாதி , அம்பேத்கரியர் என்ற போர்வையில் நிறைய பெயர்கள் கம்புசுற்றுகிறார்கள் . அவர்களின் நோக்கமும் Monier WIlliams நோக்கமும் ஒன்றே.
இன்னொரு சுவாரசியமான விஷயம் - இதே கோஷ்டிதான் பார்ப்பனீயம் பௌதத்திலிருந்து Copy அடித்தது என்றும் அளந்துவிடுவார்கள். இன்று வரைக்கும் மேற்கத்திய இன்டோலோஜிஸ்ட்களும் இதை வைத்துக்கொண்டு நிறைய புத்தகத்தை எழுதுகிறார்கள் . இதற்கான விடையும் Monier Williams கொடுத்துவிடுகிறார் - "பௌத்தம் என்கிற ஒரு மதம் என்றுமே இருந்ததில்லை . அது வெறும் ஒரு proselytising சிஸ்டம். பார்ப்பனீயத்தை எடுத்துவிட்டால் அவர்களால் பௌத்தர்களாக இருக்க முடியாது , அவர்கள் கிறிஸ்துவர்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ தான் மாற முடியும்".
Monier Williams எழுதின புத்தகங்களை படித்தால் இன்னும் நிறைய கிடைக்கிறது . ஒரு சின்ன sample அடுத்து.
Caste என்கிற வார்த்தை பற்றி குறிப்பிடுகையில் - "போர்த்துகியர்கள் இந்த நாட்டில் முதன்முதலில் இறங்கியபொழுது அவர்கள் இவ்வளவு வர்க்கங்கள் இருப்பதை பார்த்து அதை Casta என்று அழைத்தார்கள் . Casta போர்த்துகியதில் என்பது இனரீதியான அடையாளம். அதையே நாம் நமது ஆட்சியில் Caste என்று மாற்றி அதை ஹிந்து மதத்துடன் இணைத்துவிட்டோம். இந்த வார்த்தை இந்தநாட்டு ஹிந்துமக்களுக்கே தெரியாத வார்த்தை ஆனால் இன்றளவும் ஹிந்து மதத்தை பற்றி எழுதும் அனைவரும் அதை மறக்காமல் சேர்த்துவிடுவார்கள் [The Portuguese, who were the first to trade with India, used the word 'casta', 'race,' to denote the infinite number of classes into which Indian society is divided. This word was changed by us into 'caste' - a word unrecognized by the natives, but now universally adopted by all writers on Hinduism. - Brahmanism and Hinduism, 1891] ".





No comments:

Post a Comment