திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம்
வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் பெரியார்
வள்ளுவன் மடையன்தானே -ஈ.வெ.ராமசாமி
என் சொந்த ஊர் ஈரோடு. சிறு வயதில் ஈ.வெ.ரா வின் மேடை பேச்சுகள் பலவற்றை கேட்டிருக்கிறேன். ஹிந்து மதத்தைப் பற்றியும் பிராமணர்களைப் பற்றியும் மிக ஆபாசமாக, கேவலமாகப் பேசுவார். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மதத்தைப் பற்றி மட்டுமல்ல. நம் தாய் மொழியாம் தமிழைப் பழித்தும், இகழ்ந்தும் பேசுவார். திருக்குறளைப் பற்றி கேலி பேசுவார். திடீரென்று கூட்டத்தில் பெண்களைப் பார்த்து, “இங்கு யாராவது பத்தினிகள் இருக்கின்றீர்களா? இருந்தால் கையைத் தூக்குங்கள் ” என்று சொல்வார். யாருக்கும் உடனே பதில் சொல்லத் தோன்றாது. ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள். வெட்கமாய் சிரிப்பார்கள். “எங்கே பத்தினியா இருக்கற ஒரு பெண் எழுந்து நின்னு மழை வரச் சொல்லி சொல். வருதா பார்ப்போம்” என்பார். எல்லோரும் அமைதியாகவே இருப்பார்கள். கட கடவென பெரிய தொப்பை குலுங்க சிரிப்பார். சில தமிழின துரோகிகளும் சேர்ந்து கை தட்டி சிரிப்பாங்க. உலகத்துல யாருக்குமே தெரியாத மிகப்பெரிய விஷயத்தை தான் கண்டுபிடிச்சிட்ட மாதிரி ஈ.வெ.ரா சிரித்து மகிழ்வார். பின்னர் “நீங்க பத்தினி இல்லேன்னு அர்த்தம் இல்லை. உங்க வள்ளுவன் அயோக்கியன்னு அர்த்தம். பத்தினிங்க பெய்னு சொன்னா உடனே மழை பெய்யும்னு வள்ளுவன் சொல்றான். மடையன்தானே அவன்?” என்று வள்ளுவரையும் திருக்குறளையும் இழிவாக பேசுவார்.
தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
என்கிற திருக்குறளைத் தான் அவர் இப்பிடி கேவலமாக பேசுவார். மேலோட்டமாகப் பார்த்தால் அதன் அர்த்தம் அதுதான். தெய்வத்தைக் கூட தொழாமல் தன் கணவனையே தெய்வமாகத் தொழும் பத்தினிப் பெண்கள் பெய் என சொன்னால் உடனே மழை பெய்யும் என்பதே அதன் பொருள் என்று எல்லோரும் சொல்லுவார்கள். இது ஈ.வெ.ராவுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழ்மறையைக் கேலி பேசினார். ஆனால் எனக்குப் புரிபட்ட வகையில் இதன் பொருள் வேறு. திருக்குறளை ஊன்றிப் படிக்கும் பொழுது வேறு அர்த்தம் வருகிறது அந்த குறளுக்கு. அது என்னவென்று பார்க்கலாமா?
இதே வள்ளுவர் இன்னொரு இடத்தில் மழையைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
கெடுப்பதூ உம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூ உம் எல்லாம் மழை
அதாவது வள்ளுவப் பெருந்தகை இரண்டு மழைகளைப் பற்றிப் பேசுகிறார். ஒன்று கொடுக்கும் மழை இன்னொன்று கெடுக்கும் மழை. நிலத்தைப் பண் படுத்தி, ஆழமாக ஏர் உழுது விதைகளை விதைத்திருப்பான் விவசாயி. அன்று இரவு மழை பெய்தால் பரவாயில்லையே என்று ஏங்கி வேண்டுவான். அப்படியே பெய்தால் அது கொடுக்கும் மழை. அதாவது பயிர்களை வாழ வைக்கும் மழை.
பயிர் நன்றாக விளைந்து முற்றித் தலை கவிழ்ந்து அறுவடைக்குத் தயாராக நிற்கும். அடுத்த நாள் விடியற்காலையில் அறுவடை. தந்சாவூரில் இருந்து ஆட்களும் அறுப்புக்கு வந்தாயிற்று. அன்று இரவு மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விளைந்து நின்ற பயிர்களை நாசம் செய்தால் அது கெடுக்கும் மழை.
ஒரு மழை, பெய்யாதா என்று ஆசைப் படும் போது பெய்யும் மழை. இன்னொன்று பெய்யக் கூடாதே என்று வேண்டும் போது பெய்து நாசம் விளைவிக்கும் மழை. இதில் பத்தினி என்பவள் எப்படிப் பட்டவள்? அவள் பெய்யென பெய்யும் மழைக்கு சமமானவள். அதாவது மழை பெய்தால் தேவலையே என்று விவசாயிகள் ஏங்கிக் கொண்டிருக்கும் போது பெய்யும் மாமழை போன்றவள்.
தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழும்
பெண் = பெய்யென பெய்யும் மழை.
அதாவது அவ்வளவுக்கு சமுதாயத்திற்கு நன்மை செய்து உதவும் மா மழை போல இனிமையானவள், நன்மை பயப்பவள்.
புரிகிறதா? இதைத்தான் உலகப் பொது மறையாம் வள்ளுவம் பேசுகிறது.
பத்தினிப் பெண் is equal to பெய்யெனப் பெய்யும் மழை.
இப்பொழுது சொல்லுங்கள். வள்ளுவர் மடையனா? முட்டாளா?
தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது
தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். – தந்தை பெரியார் விடுதலை(27.11.43)யில்..

தமிழின் பெயரால் பிழைப்பு
நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.-தந்தை பெரியார் விடுதலை (16.3.67)
தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .
..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?
இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு – காரியத்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.
இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில்

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன்?
சாதாரணமாகப் பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். – தந்தை பெரியார் ‘அறிவு விருந்து’ நூலில்

தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது?
நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்.’ இதுதானா? அய்யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் ‘சுவை’ அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். – தந்தை பெரியார்

No comments:
Post a Comment