Wednesday, November 14, 2018

சிந்துவெளி நாகரீகத்தில் யாக- யக்ஞ குண்டங்கள் 6000 வருடத் தொன்மையானது

தமிழர் இறைவனை அறிந்த ஒரு மாபெரும் வரலாறு கொண்ட சமுதாயம். தமிழர் மெய்யியலே பாரதம் முழுவதும் ஏற்றது. அது ஹிந்து சமயம் எனப் பெயர் பெறுகின்றது. 


வேதங்கள் சம்ஸ்கிருதம் எனும் வடமொழியில் உள்ளது என்றாலும் அதற்கு உச்சகட்ட உரைகளை (பாஷ்யம்) எழுதியவர்கள் போற்றலுக்குரிய ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியர்  தமிழர்களே. 


உலகின் நாகரீகத் தொட்டில் - சிந்து சரஸ்வதி நாகரீகம் அதன் உச்சத்தில் 5 லட்சம் சதுர மைல்கள் பரவி இருந்தது, தொன்மை ஹரியானாவின் குருக்ஷேத்திரம் ஆருகிலுள்ள பிர்ரானாவில் கிடைத்த தொல்லியல் பொருட்களின்படி பொமு 7500 வரை செல்கிறது.
சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டு பழமையானது
பொமு 4000 வாகியே வேள்வி குண்டங்கள் என பலவும் தொல்லியல் அகழ்வில் கிடைத்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் உள்ள மொஹஞதாரோ ஹரப்பா என நம் பாடங்களில் கிடைத்தவை தாண்டி பல இடங்களில் மிகத் தெளிவான தரவுகள் கிடைத்துள்ளன.
 
                                                         காளிபங்கன் (ராஜஸ்தன்)  யூப சாலை
 ஹரியானாவில் பிர்ரானா,  ராஹிகார்ஹி, மெஹெர்கர்   தோலாவிரா லோத்தல்( முக்கிய துறைமுகம்-குஜராத்) 
மற்றும் காளிபங்கன் (ராஜஸ்தன்)
செம்பு செய்வதற்க்கு தாமிரத்தை எங்கிருந்து பெற்றனர்? – கேத்ரி சுரங்கம் (ராஜஸ்தன்).
சங்க இலக்கியத்தில்  நால் வேதங்கள்படியான வேள்வி பற்றிய பாடல்.  
நல்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பல்மாண்
வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி
யூபம்நட்ட வியன்களம் பலகொல்     (புறம்:15)

ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் (அகம்:181)





இன்று உலகின் பெரும்பாலான ஆய்வுகள் அனைத்தும் ஆங்கிலத்திலே நடைபெறுகிறது, தாய் மொழியில் பயின்றாலும் உலகின் ஒரு முக்கிய இணைப்பு மொழியாய் ஆங்கிலம் உள்ளது போலே பண்டை பாரத நாட்டில் வடமொழி இருந்துள்ளது. வடமொழியின் பேச்சு மொழியை ப்ராகிருதம், பாலி எனவும், செய்யுள் மொழியை சம்ஸ்கிருதம் எனவும் அழைக்கப் படுகிறது.

அசோகரின் 24 கல்வெட்டு இந்தியா முழுமையும் உளது, அதில் மைசூர் கல்வெட்டு மட்டுமே தமிழில் மீதம் அனைத்தும் வடமொழி தான்.  அசோகர் கல்வெட்டு பிராமி எனும் எழுத்துரு கொண்டுள்ளது, முதலில் வடமொழிக்கு உருவாக்கப்பட்டது, பின் தமிழிற்கு பயன்படும்போது "ழ" "ற" போன்ற தமிழின் தனி சிறப்பு ஒலி எழுத்துக்களுக்கு உரு தர தமிழ் பிராமி உருவானது, அது பின் வட்டெழுத்து ஆகி, பின் நகரி என மாறியது, இன்று அனைத்து வட இந்திய மொழிகளும் நகரியோடு நின்றது, தமிழ் மேலும் சில மாற்றம் பெற்று இன்றைய வடிவம் பெற்றது.

தமிழர் இறை வழிபாட்டில் உலகைப் படைத்த கடவுளை ஆதி முதல் வழிபடுபவர்கள். 
தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள். 
அந்தணர் என்றால் - இறுதிப் பொருளை அணவுபவர் எனப் பொருள், வேதங்கள் - இறைவனை உலகின் இறுதிப் பொருளை ஆராய்பவர்கள்.    தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள் என திருக்குறளும் சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் காட்டுகின்றன. தொல்காப்பியரும், திருவள்ளுவரும் அந்தணரே.   வேதநெறி தமிழர்களின் மெய்யியல் ஆகும் .
பார்ப்பான்- வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.

வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்       80   
 செந்நிறம் புரிந்தோன் செல்லல்  நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
 காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து
தேவந் திகையைத் தீவலஞ் செய்து                 சிலப்பதிகாரம் வரந்தரு காதை

5000 வருட சிந்து சரஸ்வதி நாகரீகத்தில் சம்ஸ்கிருதப் பங்கு உள்ளது என பேராசிரியர் அஸ்கோ பர்போலா பேட்டி



தமிழர் சமயத்தில் இறை வழிபாட்டின் முக்கிய வழிகாட்டிகள் அந்தணர்

அந்தம் + அணவுபவர் - இறைவனை அடைய  உலகின் இறுதிப் பொருளான  வேதங்களை அணவுபவர் எனப் பொருள்படும்

 தமிழர் சமயத்தின் ஆதி நூல் வேதங்கள், அவை ஏட்டில் எழுதாமல் குருவிடம் கேட்டு அறிதல் முறையிலே தான் கற்க இயலும், எழுதாமையால் அது மறை எனப் படும், ஒத்து கூறி ஓதுவதால் ஓத்து எனப் படும்.
 வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை.  அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 
எழுதாக் கற்பினின் சொலுள்ளும்   குறுந்தொகை 156. 5-6

விரதவுணவையுமுடைய, பார்ப்பன மகனே நின்னுடைய அறிவுரைகளுள்

  3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)
பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்” – 24 பதிற்றுப் பத்து
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்         பாட்டு – 74 
பல போலி தமிழ் பற்றாளர்கள் - பார்ப்பனர் வேறு அந்தணர் வேறு என அருவருப்பாய் பொய் கூறுவர், அவர்கள் கிறிஸ்துவ சர்ச் வழி திராவிடம் எனும்  தமிழ் பகைவர்கள் தமிழை காட்டு மிராண்டி பாஷை என்ற கயவர் வழி கூட்ட வழிமுறையினர்.  

பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் - 2:50-63
வையை என்ற தலைப்பில் தலைவன் கூற்று
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
தணிவின்று, வையைப் புனல். 50
தலைவன் கூற்று
‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60
அந்தணர் தோயலர், ஆறு.
‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
ஐயர், வாய்பூசுறார், ஆறு.
அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.

No comments:

Post a Comment