Tuesday, November 27, 2018

பெண்கள் மாதவிடாய் கட்டுப்பாடுகள் - பைபிள் குரான் தொன்ம கதைகள் சட்டம்

லேவியராகமம், அதிகாரம் 15:19. மாதவிலக்கில் இரத்தப்பெருக்குடைய பெண் ஏழுநாள் விலக்காய் இருப்பாள். அவளைத் தொடுபவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பர்.
20. மாத விலக்கின்மீது எதன்மீது படுக்கிறாளோ, எவற்றின்மீது அமர்கிறாளோ அவை அனைத்தும் தீட்டே.
21. அவள் படுக்கையைத் த
ொடுபவர் அனைவரும் தம் உடைகளைத் துவைத்து நீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாய் இருப்பர்.
22. அவள் அமரும் மணையைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.
23. அவள் படுக்கையின்மீதும் அவள் அமர்ந்த மணையின்மீதும் இருந்த எதையாகிலும் தொட்டவனும் மாலைமட்டும் தீட்டாய் இருப்பான்.
24. ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் தீட்டு அவன் மீதுபட்டது என்றால், அவன் ஏழுநாள் தீட்டுடையவன்: அவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டே.


புதிய ஏற்பாடு பெண்களிற்கு விதிக்கும் கட்டுப்பாடுகள்

1 கொரி 14:34 சபைக் கூட்டங்களில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். தேவனுடைய மக்களுடைய எல்லா சபைகளிலும் அவ்வாறே இருக்கவேண்டும். பெண்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அடக்கமுடையோராக இருத்தல் வேண்டும். மோசேயின் சட்டமும் இதையே கூறுகிறது.35 பெண்கள் எதையேனும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் கணவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சபைக் கூட்டத்தில் பேசுவது பெண்ணுக்கு இழுக்கானது.


http://www.womanofislam.com/suththam.html#.W_4nNtszZdg
 


தொடக்கு வகைகள்

1. பெரும் தொடக்கு என்றால் என்ன?
பெரும் தொடக்கு என்பது மாத தீட்டு, பிரசவ தீட்டு, உடல் உறவு கொள்ளல், தூக்கத்திலோ அல்லது விழிப்பிலோ விந்து வெளியாவதால் ஏற்படும் அசுத்த நிலையை குறிக்கும். இந்த தொடக்கு உள்ள ஒரு பெண் கடமையான குளிப்பை குளிப்பதன் மூலமோ அல்லது தயம்மும் செய்வதன் மூலமோ மட்டுமே இத்தொடக்கிலிருந்து சுத்தமாக முடியும்.


2. சிறு தொடக்கு என்றால் என்ன?
சிறு தொடக்கு என்பது ஒருவர் வுளூ இல்லாமல் இருக்கும் நிலையை குறிக்கும். இவர்கள் வுளூ செய்வதன் மூலமோ தயம்மும் செய்வதன் மூலமோ இதிலிருந்து சுத்தமாகலாம்.

​♣ பெரும் தொடக்கு உள்ள ஒரு பெண் (குளிப்பு கடமையான ஒரு பெண்) செய்யக்கூடாத காரியங்கள் எவை?
தொழுதல், மஸ்ஜிதில் தங்குதல், குர்ஆனை ஓதுதல், குர்ஆனை தொடுதல், கஃபதுல்லாஹ்வை தவாபு செய்தல் போன்றவைகளை செய்யக்கூடாது. மேலும் குர்ஆனை கற்றுக்கொள்ள கூடாது. ஹதீஸ்களில் இடை இடையே வரக்கூடிய சிறிய ஆயத்துகளாக இருந்தாலும் கற்றுக்கொடுப்பதும் கற்றுக்கொள்வதும் ஓதுவதும் கூடாது. தூங்கும் போது வழக்கமாக ஓதி வரும் ஸுராக்களை ஓதக்கூடாது. குர்ஆன் ஓதும் நோக்கமின்றி பிஸ்மி ஓதலாம். திக்ரு, ஸலவாத்துகள், மஸ்னூன் துஆக்கள் ஓதுவது கூடும். குர்ஆன் வசனங்களில்லாத ஹதீஸ்களை ஓதலாம்.
மாதவிடாய், பிரசவ தீட்டு மூலம் பெரும் தொடக்காகி இருந்தால் பெண்கள் மேலே சொன்னவையுடன் நோன்பு நோற்கவும், உடலுறவு கொள்ளவும் கூடாது.

No comments:

Post a Comment