Thursday, December 19, 2024

சங்க இலக்கிய தமிழர் திருமணமும் வைதீக சடங்குகளும்

 தமிழர் திருமணம் என்பது வைதீக முறையில் நிகழ்ந்தது என்பதை சிலப்பதிகாரம் கூறுவது
சாலி ஒரு மீன் தகையாளை கோவலன்
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை        55
  
 
சாலி ஒரு மீன் தகையாளை கோவலன் மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை 55 
  
சாலி ஒரு மீன் தகையாளை கோவலன்
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை        55


குறுந்தொகை 106, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்,
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று, வாழி தோழி, நாமும்
‘நெய் பெய் தீயின் எதிர்கொண்டு  5
தான் மணந்தனையம்’ என, விடுகம் தூதே.

பாடல் பின்னணி:  குறிஞ்சியுள் மருதம்.  பரத்தையிற் பிரிந்த தலைவனின் தூது கண்டு தலைவி தோழியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  புல்லிய விழுதுகளை உடைய இற்றி மரத்தின் பாறைகளில் படர்கின்ற வெள்ளை வேர், மலையிலிருந்து வீழும் அருவியைப்போல் தோன்றும் நாட்டையுடைய தலைவன் தன் குற்றமற்ற நெஞ்சத்திலிருந்து கூறிய சொற்கள் நம்மிடத்து வந்துள்ளது.  நாமும் நெய்யைப் பெய்த தீயைப் போல, அவன் என்னை மணந்தபொழுது எவ்வாறு இருந்தோமோ அவ்வாறே உள்ளோம் என்று தூது விடுவோம்.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – பேராசிரியர் இதனைக் கற்பாகக் கொள்ளல் காண்க (தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 23), இளம்பூரணர் இதனைக் களவாகக் கொள்ளல் காண்க (தொல்காப்பியம் களவியல் 2).  புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் (1) – இரா. இராகவையங்கார் உரை – ‘புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்’ என்றதனால் இற்றிமரம் கல்லினின்று வெளியே வளர்ந்து கோடுகள் புறப்பட நீடினும் தனக்கு இடனாகிய கல்லினை விடாது வீழினால் பற்றிக் கோடற்கு இவர்தல் போலத் தலைவன் இல்லினின்று வெளியே சென்று ஒழுகினும் தனக்கு இடனாகிய மனையை விடாது தூது மொழியினால் பற்றிக் கொள்கின்றான் எனக் குறித்தாளாம்.  நாமும் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – உம்மை இறந்தது தழீஇயது.  தலைவன் மணந்த காலத்தில் நிறைந்த அன்போடு இருந்தவாறே இப்பொழுதும் குறைவின்றி இருப்பேம் என்றமையின் அவனை ஏற்றுக்கோடற் குறிப்புப் பெற்றது.  இற்றி மர விழுது:  குறுந்தொகை 106 – புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் வரை இழி அருவியின் தோன்றும்,   நற்றிணை 162 – வேனில் இற்றித் தோயா நெடு வீழ் வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் அகநானூறு 345 – ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் கல் கண் சீக்கும் அத்தம்.

சொற்பொருள்:  புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் – புல்லிய விழுதுகளை உடைய இற்றி மரத்தின் பாறைகளில் படர்கின்ற வெள்ளை வேர், வரை இழி அருவியின் தோன்றும் – மலையிலிருந்து வீழும் அருவியைப்போல் தோன்றும் (அருவியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நாடன் – நாட்டையுடைய தலைவன், தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின் வந்தன்று – குற்றமற்ற நெஞ்சத்திலிருந்து வந்த சொற்கள் நம்மிடத்து வந்துள்ளது, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, நாமும் – நாமும் நெய் பெய் தீயின் எதிர்கொண்டு – நெய்யைப் பெய்த தீயைப் போல (தீயின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), தான் மணந்த அனையம் – அவன் மணந்தபொழுது எவ்வாறு இருந்தோமோ அவ்வாறே உள்ளோம், என – என்று, விடுகம் தூதே – நாம் தூது விடுவோம்

 போது அவிழ் பனிப் பொய்கைப் புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரைத் தனி மலர் புறம் சேர்பு
காதல்கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக
ஓது உடை அந்தணன் எரி வலம்செய்வான் போல் 5
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர
தெள் அரிச் சிலம்பு ஆர்ப்பத் தெருவின்-கண் தாக்கி நின்
உள்ளம் கொண்டு ஒழித்தாளைக் குறைகூறிக் கொள நின்றாய்
துணிந்தது பிறிது ஆகத் துணிவிலள் இவள் என 10
மலரும் தருவாயிலிருக்கும் மொட்டுக்கள் கட்டவிழும் குளிர்ச்சியான பொய்கையில் புதிதாக முறுக்கவிழ்ந்த 
பூந்தாதுக்கள் சூழ்ந்த தாமரையின் தனித்த மலரைப் புறத்தே சேர்ந்து,
விருப்பங்கொள்ளும் மண நாளில் மண ஆடைக்குள் முகத்தை மறைத்துக்கொண்ட,
காதல் கொண்ட மானைப் போன்ற பார்வையினையுடைய பெண் தன்னுடன் கூடவர,
வேதம் ஓதுதலையுடைய அந்தணன் தீயினை வலம் வருவதைப் போல,
அழகிய இறகுகளைக் கொண்ட அன்னம், தன் அழகிய நடையுள்ள பெடையோடு
பெருமிதம் தோன்றச் சுற்றிவரும் மிகுந்த நீர்வளம் கொண்ட நல்ல ஊரினனே!
தெளிந்த பரல்களையுடைய சிலம்பு ஒலிக்க, தெருவில் பார்வையால் உன்னைத் தாக்கி, உன்
உள்ளத்தைக் கவர்ந்துகொண்டு பின் கைவிட்டவளை, உன் வருத்தத்தைச் சொல்லி அழைத்துக்கொள்ளக் கருதி நின்றாய்!
இவ்வாறு நினைத்து வந்தது வேறொன்றாய் இருக்க, இவள் திடங்கொண்ட மனத்தினள் அல்லள் என்று
Kalithokai 69
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to the unfaithful hero
O man from the fine town with abundant water,
where a gander with delicate feathers swims with
pride with his female of beautiful walk, around an
isolated newly-opened pollen-filled lotus blossom in
a cold pond with flowers,
like a Vedic Brahmin who circumambulates the fire
on the day of their marriage filled with love, with his
pretty woman with deer-like looks, shy, hiding in her clothes!




 

No comments:

Post a Comment