Monday, November 11, 2024

பண்டைத் தமிழர்கள் கடவுள் வழிபாடும் கோவில்களும் பார்ப்பனரும்



பண்டைத் தமிழர்கள் இன்றைக்கு 1500 முத்ல் 2000 ஆண்டுகள் முன்பு வாழ்வினை நமக்கு காட்டுகிறது. மதுரையை ஆண்ட முதுகுடுமிப் பெருவழுதி மன்னன் பற்றி புறநானூறு 6ம் பாடலிலில் புலவர்: காரிகிழார் பாடுகையில்

மன்னைனின் பெருமை வாய்ந்த கொற்றக்குடை மூன்று கண்கள் முனிவர்கள் போற்றும் கொண்ட சிவபெருமான் கோவிலை வலம் வரும்ப்பொது தாழ்ந்து பணிந்து இறங்கும் என்கிறார்
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே, -புறம் 6: 17-18


நாம் சேர நாட்டினில் உள்ள கோவில் பற்றிய குறிப்பைப் பார்ப்போம் 
பதிற்றுப்பத்து 31ம் பாடலில், புலவர்: காப்பியாற்றுக் காப்பியனார்
சேரன் : களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் நாட்டினில் உள்ள கோவில் பற்றி
குன்று தலைமணந்து, குழூஉக் கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து, மாந்தர் ஒராங்குக்
கை சுமந்து அலறும் பூசல், மாதிரத்து
நால் வேறு நனந் தலை, ஒருங்கு எழுந்து ஒலிப்ப,
தெளி உயர் வடி மணி எறியுநர் கல்லென, . . . .[05]
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித் துறை மண்ணி,
வண்டு ஊது பொலி தார், திரு ஞெமர் அகலத்து,
கண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய்
அலங்கல், செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர- . . . .[10]

 குன்றுகள் திரளாக நெருங்கி நிற்க, பல பொருட்களும் திரண்டுள்ள கடலினை ஆடையாக உடுத்திய
மண் செறிந்த உலகத்து மாந்தர் எல்லாம் ஒரேநேரத்தில்
கைகளைத் தலைக்குமேல் கூப்பி உரத்த ஒலி எழுப்பும் ஆரவாரம், திசைகளின்
நால்வேறான அகன்ற பக்கங்களில் ஒன்றாக எழுந்து ஒலிக்க,
தெளிந்த ஓசையையுடைய, உயர்வாக வடிக்கப்பெற்ற மணியை அடிப்பவர்கள் கல்லென்ற ஓசையை உண்டாக்க,
உண்ணாநோன்பிருக்கும் மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி,
வண்டுகள் சுற்றிவரும் பொலிவுள்ள மாலையணிந்த, திருமகள் நிறைந்த மார்பினையும்,
கண்ணைக் கூசவைக்கும் சக்கரப்படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட
மாலையினையும் உடைய திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி,
நெஞ்சில் நிறைந்த உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர்;

In the world with sand and mountains, that is surrounded
by oceans with waves, devotees lift their hands, pray together,
uproar rises, sounds travel to the four distances of the vast
earth, and bright, tall, loud bells are rung.  Those who have
made fasting vows, go to the cool water shores and bathe before praying.  

They pray to Thirumāl carrying a bright, shining discus that
awes eyes and donning large, fragrant garlands made with
clusters of basil swarmed by bees. They bow down worshipping
his perfect feet and
return to their towns with joy in their hearts.

குன்றங்கள் பலவும் தன்மேலாகப் பொருந்தி நிற்கவும், பலவகைக் கடல்படு பொருள்களும் தன்னிடத்தே திரண்டுள்ள கடலானது தனக்கு ஆடையாக விளங்கவும் அமைந்தது மண்ணணுச் செறிந்த இவ்வுலகம். இதனிடத்துள்ள மாந்தரனைவரும் ஒருசேரத் தம் கைகளை மேலே எடுத்தவராகத் தம் குறைபாட்டைச் சொல்லிக் கதறும் ஆரவாரமானது, வேறுபட்ட நால்வகைத் திசைகளினும் ஒருசேரப் பரந்தொலிக்கும். தெளிந்த ஓசையினையும் உயர்ந்த வேலைப்பாட்டையும் கொண்ட மணியினை அடிப்பவர் கல்லென்னும் ஒலியை எழுப்புவர். உண்ணாவிரதத்தோடு நோன்பிருக்கும் மக்கள் கூட்டத்தினர், பசிய நிலப்பாங்கிலே அமைந்த குளிர்ந்த நீர்த்துறைகளிற் சென்று நீராடியவராக வழிபடுவதற்கு வருவர். வண்டினம் மொய்த்துத் தேனூதும் அழகிய தாரினை யணிந்ததும், திருமகள் பொருந்தியதுமான மார்பினையும், காண்பார் கண்களைத் தன்னொளியாலேயே கூசச்செய்யும் ஒளிகொண்ட சக்கரப் படையினையும், மணம் வீசும் கொத்துக்களையுடைய துளசி மாலையணிந்த சிறப்பினையும் உடையவன் திருமால். செல்வனாகிய அத்திருமாலின் சிவந்த அடிகளைப் பரவிய பின்னர், இவர்களனைவரும் தத்தம் நெஞ்சகத்தே நிறைவுபெற்ற உவகையுடையவராகத் தாந்தாம் வாழும் ஊர்கட்குத் திரும்பிச் செல்வர்.

 சோழநாட்டில் கரிகாலன் ஆட்சியில் காவிரிப்பூம்பட்டிணத்தில் உள்ள ஒரு கோவில்
காவிரிப்பூம்பட்டினத்துத் தவப்பள்ளியும் வேள்விச்சாலையும் பட்டிணப்பாலை

பாடியவர்:- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
பாடப்பட்டவன்:- திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)
தவப் பள்ளித் தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ, குயில் தம் . . . .[55]
தவம் செய்பவர்கள் இருக்கும் இடங்களையுடைய, மரங்கள் தழைத்துத் தாழ்ந்த சோலைகளில், விளங்குகின்ற சடையையுடைய முனிவர்கள், தீயுடன் வேள்விகள் செய்யும் நறுமண புகை யை வெறுத்து, ஆண் குயில்கள் தங்களுடைய பெண் குயில்களுடன் விலகும்

மேலே காட்டிய மூன்று அரசர்களும் பொஆ.1 - 2ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள் . (சேரன் செங்குட்டுவன் முன்பு ஆட்சி செய்தவர்கள்)

சங்க இலக்கியம் என்பது . எட்டுத்தொகை & பத்துப்பாட்டு ஆகியவை. இவற்றுடன் திருக்குறள் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய 21 நூல்களில் உள்ள அனைத்து சொற்களைத் தொகுத்து "மொழியியல் நோக்கில்   சங்க இலக்கியங்கள்என பேரா. அகத்தியலிங்கம் 5 நூல் தொகுப்பு  - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் சார்பாக எழுத உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளேயும் பரிபாடல், கலித்தொகை & திருமுருகாற்றுப்படை மூன்றிலும் பலப்பல சொற்கள் புதிய மற்றும் யாப்பு வளர்ச்சி உள்ளது  

நாம் இங்கே கோவில்களைப் பற்றியே பார்த்தோம். கோவில் வழிபாட்டில் தமிழ் தொல்குடி பார்ப்பன்ரே முன்னிலையில் இருந்தனர் என்பதும் காண்போம்


No comments:

Post a Comment