Tuesday, October 29, 2024

சங்க இலக்கிய்ங்களில் சிவன்

சிவன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன்; காளை வாகனன்; கங்கையைச் சடையில் கொண்டவன்; நெற்றியில் பிறைச் சந்திரனைத் தரித்தவன்; உமையொருபாகன்; நீலகண்டன்; திரிபுரம் எரித்தவன்; முக்கண்ணன்; மழுப்படையை உடையவன்; கொடுகொட்டி, பாண்டுரங்கம், கபாலம் முதலிய கூத்துக்களை ஆடுபவன் ” என்பவைகள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளமையினை இங்கு காண்போம்.


திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன்

அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்க . கலி 150 : 20
ஆதிரை முதல்வனின் கிளந்த நாதர் பன்னொருவரும் - பரிபாடல் 8 : 6-7

காளை வாகனன்

காளை மாட்டை வாகனமாகக் கொண்டு ஊர்ந்து வருவபவன்.
ஊர்தி வால் வெள்ளேறே - புறநானூறு 1 : 3
புங்கவம் ஊர்வோனும் ( புங்கவம்-காளை) - பரிபாடல் 8 , 2
உருவ ஏற்று ஊர்தியான் - கலி 150 : 13
கங்கையினைச் சடையில் வைத்திருப்பவன்
விரி சடைப் பொறை ஊழ்த்து
விழுநிகர் மலர் ஏய்ப்பத்
தனிவுற தாங்கிய தனி
நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு - பரிபாடல் 9 : 5 - 7
தேறுநீர் சடைக் கரத்து திரிபுரம் தீமடுத்து - கலி : 1 -2
இமைய வில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் - கலி: 38 : 1
பிறங்குநீர் சடைக் கரந்தான் ” - கலி 150 : 9
நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடியவன்
கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல - கலி 103 : 15
“ கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே
ஆடையான் மூஉ யகப்படுப்பேன் சூடிய
காணான் றிரி தருங்கொல்லோ மணிமிடற்று
மாண்மலர்க் கொன்றையவன் - கலி : 142 : 24-28
புதுத்திங்கள் கண்ணியான் பொற்பூண் ஞான் றன்னநின் - கலித்தொகை 150 : 17
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
பிறைநுதல் வண்ணம் ஆகின்று அப்பிறை - புறநானூறு 1 : 8 – 9
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல - புறநானூறு 55 : 4 – 5

உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவன்:

உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் - திருமுருகாற்றுப்படை 153
பெண்ணுரு வொருதிறன் ஆகின்றது ; அவ்வுருத்
தன்னுள் அடக்கின் கரக்கினும் கரக்கும் - புறநானூறு 1 : 7-8

நீலகண்டன்
தேவர்களும் - அசுரர்களும் மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு அமிர்தம் வேண்டிக் கடல்கடைந்த போது, வாசுகி என்ற அந்தப் பாம்பானது வலி பொறுக்க மாட்டாது நஞ்சைத் திரண்டுவரும் அமிர்தத்தில் கக்கிவிட்டது.

அதுகண்ட தேவர்கள் கலங்கினர். சிவன் அந்த விஷத்தை எடுத்து உண்டான். உமாதேவி அதுகண்டு பயந்து ஓடிப்போய், அவனது கண்டத்தினைப் பிடித்தாள். அதனால் அந்த நஞ்சானது கண்டத்திலேயே நின்றுவிட்டது. இதன் காரணமாக சிவன் நீலகண்டன் என்று பெயர் பெற்றான் என்பது புராணக்கதை.

நீலமணிமிடற்று ஒருவன் போல - புறநானூறு : 91 -6
மறுமிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த - பரி பாடல் 8 : 127
மணி மிடற்று அணி போல - கலித்தொகை : 105 , 13
மணிமிடற்று மாண்மலர்க் கொன்றையவன் - கலித்தொகை : 142 : 27-28
கறைமிட றணியலு மணிந் தன்றக் கறை
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே - புறநானூறு : 1 : 5 - 6

திரிபுரம் எரித்தவன்
பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆகிய மதிற் சுவரைக் கொண்ட மூன்று கோட்டை களையுடைய அவுணர்கள் தேவர்களை துன்புறுத்தினர். தேவர்கள் எல்லாம் பிரம்மாவினிடம் சென்று முறையிட, பிரம்மா தேவர்களை கூட்டிக்கொண்டு சிவனிடம் சென்று முறையிட்டான்.

அப்போது சிவன் பூமியை இரதமாகவும், தேவங்களை குதிரைகளாகவும், பிரம்மாவைத் தேரோட்டியாகவும், விஷ்ணுவை அம்பாகவும், மேரு மலையை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் தகர்த்து, அவுணர்களையும் அழித்தானென்பது புராணக்கதை. இதுவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது.

ஆதியந்தணனறிந்து பரிகொளுவ
வேதமாபூண் வையத்தேரூர்ந்து
நாகம் நாணா மலை வில்லாக
மூவகை ஆரெயில் ஓரழல் அம்பின்முளிய
மாதிரம் அழவவெய் தமரர் வேள்வி - பரிபாடல் 5 : 22-26

ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞான்கொளீஇ
ஒருகனை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல்………” தியந்தணனறிந்து பரிகொளுவ - புறநானூறு 55 : 1-4

மூன்று கண்களை உடையவன்

முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே - புறநானூறு 6 : 18
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்- திருமுருகாற்றுப்படை 153
மிக்கொளிர் தாழ்சடை மேவரும் பிறைநுதன்
முக்கண்ணா னுருவேபோன் - கலித்தொகை 104 : 11-12

இது மட்டுமல்லாமல் கலித்தொகை என்னும் சங்க இலக்கிய நூலுக்குக் கடவுள் வாழ்த்தாகக் கூறப்பட்ட பாட்டில் சிவன் ஆடியதாகக் கூறப்படும் கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம் ஆகிய கூத்துக்கள் கூறப்பட்டு உள்ளன.

கொடு கொட்டி
இது சிவன் உலகை எல்லாம் அழித்து நின்று கை கொட்டி ஆடும் கூத்தாகும்.

படுபறை பல வியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி யாடுங் காற் கொடுய ரகல் குறிக்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்ட சீா தருவாளோ - கலித்தொகை ; கடவுள் வாழ்த்து 5:7

பாண்டரங்கம் கூத்தாடல்
இது சிவன் திரிபுரங்களையும் அழித்து நின்று, எரிந்த சாம்பலைப் பூசிக்கொண்டு ஆடிய கூத்தாகும்.

மண்டமர் பல கடந்து மதுகையானீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்காற்பணை யெழி லணைமென்றோள்
வண்டரற்றுங் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ- கலித்தொகை ; கடவுள் வாழ்த்து 8 -10

கபாலக் கூத்தாடல்

இது சிவன் எல்லாவற்றையும் அழித்து மண்டையோட்டைக் கையில் ஏந்தி அடிய கூத்தாகும்.

கொலையுழுவைத் தோலைசக்இக் கொன்றைத்தார் சுவற்புரளத்
தலையங்கை கொண்டு நீ காபால மாடுங்காண்
முலையணிந்த முறுவலான் முற்பாணி தருவாளோ - கலித்தொகை ; கடவுள் வாழ்த்து 11 – 13

பண்டைத் தமிழ் சங்க இலக்கியங்களில் மகாபாரதச் செய்திகள்

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் மகாபாரதம் பற்றிப் பல செய்திகளும் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இவை, மகாபாரதம் எந்த அளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதனை எடுத்துரைக்கின்றன.

5.1.1. புறநானூறு

பாண்டவர்களும் கௌரவர்களும் போரிட்டபோது தமிழ் மன்னன் ஒருவன் இருபடையினருக்கும் பெருஞ்சோறு அளித்ததாகச் சங்க இலக்கியங்கள் கூறியுள்ளன. பெருஞ்சோறு என்பது போர் வீரர்களுக்கு விருந்தாக அளிக்கப் பெறும் உணவு ஆகும். இதனை அளித்ததால் அத்தமிழ் மன்னன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்று அழைக்கப்பெற்றான்.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் (புறநானூறு - 2)

(அலங்கு = அசைகின்ற; உளை = பிடரி மயிர்; புரவி = குதிரை; ஐவர் = பாண்டவர் / தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்; பொலம் = பொன்; தும்பை = வலிமை காரணமாகப் போர்புரியும் வீரர்கள் அணியும் பூ / தும்பைப் பூ; ஈரைம்பதின்பர் = நூற்றுவர் / துரியோதனன் முதலிய நூறு சகோதரர்கள்; ஒழிய = சாவ; பதம் = சோறு, உணவு; வரையாது = அளவில்லாது)

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது. துரியோதனன் முதலிய கௌரவர் நூற்றுவரும் பாண்டவர் ஐவரோடு பகைத்துப் போரிட்டனர்; போரிட்டு மாண்டனர். அப்போர்க்களத்தில் சேரலாதன் போர் வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்துச் சிறப்புச் செய்துள்ளான் என்பது இப்பாடலின் பொருள்.

5.1.2. சிறுபாணாற்றுப்படை

காவெரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தம்முன் (சிறுபாணாற்றுப்படை அடிகள், 238-239)

(கா = காடு, வனம், காண்டவ வனம்; எரி = தீ; காவெரி ஊட்டல் = காண்டவ வனம் எரியூட்டப் பெறுதல்; கவர் = பல; கணை = அம்பு; தூணி = அம்பு வைக்கும் கூடு; கச்சை = ஆடை வகை)

என்ற பாடல் பாண்டவருள் அருச்சுனனையும் வீமனையும் குறிப்பிடுகிறது.

காட்டிற்கு எரி ஊட்டியவனும், அம்புகள் நிரம்பிய அம்புக் கூட்டை உடையவனும், கச்சையை அணிந்தவனும் ஆகிய புகழை உடையவன் அருச்சுனன். அவனுடைய தம் முன் (மூத்தவன்) வீமன் ஆவான் என்பது இப்பாடல் வரிகளின் பொருள். மேலும் வீமனின் சமையல் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5.1.3. பிற இலக்கியங்கள்

பதிற்றுப் பத்தின் பாடல் (14) ஒன்று, கௌரவர் நண்பனாகிய கர்ணனை அக்குரன் என்று கூறியுள்ளது. கர்ணன் ஞாயிற்றின் மகனாகக் கலித்தொகைப் பாடல் ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ளான் (முல்லைக் கலி, 28). துரியோதனன் முதலியோர் சூழ்ச்சியால் பாண்டவர் தங்கி இருந்த அரக்கு மாளிகை தீ வைக்கப்படுகிறது. அத்தீயிலிருந்து வீமன் தன் சகோதரர்களைக் காப்பாற்றிய நிகழ்ச்சியை மற்றொரு கலித்தொகைப் பாடல் (பாலைக்கலி, 25) விவரித்துள்ளது.

பெரும்பாணாற்றுப்படையில், பாண்டவர் ஐவரும் கௌரவர் நூற்றுவரைப் போர்க்களத்தே வென்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல (பெரும்பாணாற்றுப்படை அடிகள், 415-417)

(ஈரைம் பதின்மர் = கௌரவர் நூற்றுவர்; பொருது = சண்டை இட்டு; களத்து = போர்க் களத்து; அவிய = இறக்க; பேர் = பெரிய; அமர்க் கடந்த = வெற்றி பெற்ற; கொடிஞ்சி = தேரின் ஒரு பகுதி; ஆரா = தணியாத; செரு = போர்; ஐவர் = பாண்டவர்)

பெரிய வெற்றியைப் பெற்றவர் பாண்டவர்; இவர்கள் நெடிய தேரினையும் தீராத போர் வேட்கையையும் உடையவர்கள்; கௌரவர்கள் நூறு பேரும் போர்க்களத்தில் இறக்குமாறு இவர்கள் பெரிய வெற்றியைப் பெற்றார்கள் என்பது இவ்வரிகளின் பொருள்.

இவ்வாறான பலவேறு குறிப்புகள், சங்க காலத்திலேயே தமிழகத்தில் மகாபாரதம் நிலவி இருந்ததைத் தெரியப்ப டுத்துகின்றன.

 கிருஷ்ணன் ஆயர் பெண்களின் ஆடைகளை ஒளித்தல்

ஆயர் பெண்கள் யமுனை ஆற்றின் கரையில் ஆடைகளையெல்லாம் வைத்துவிட்டு, நதியில் நீராடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் அறியாவண்ணம் கண்ணன் அவர்களது உடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அருகில் இருந்த குருந்த மரத்தில் ஏறிக்கொண்டான்.


அது கண்ட ஆயர்மகளிர் தங்கள் கைகளால், தங்கள் அங்கங்களை மறைத்துக்கொண்டு, உடையினைத் தரும்படி கண்ணனை வேண்டிக் கொண்டனர். கண்ணணோ எல்லோரும் தங்கள் இரு கைகளையும் நீட்டி வெளியில் வந்து கேட்டால் தருவதாகக் கூறிக்கொண்டு இருக்கும்போது, கண்ணனுக்கு மூத்த பலராமன் அவ்விடம் வந்தான். அது கண்ட கண்ணன் குருந்த மரத்தின் கிளையினை மிதித்து அதனைத் தாழும்படி செய்து அதில் அப்பெண்களை மறைத்துக் கொள்ளும்படி செய்தான். இச்செய்தியும் அகநானூற்றில் காணப்படுகின்றது.

வடா அது வண்புனல் தொழுதை

வார்மணல் அகன்றுறை அண்டர்மகளிர்

மரஞ்செல மிதித்த மாஅல் போல ” அகநானூறு பாடல் 59 : வரிகள் 3 - 6

இவைமட்டும் அல்லாமல் சங்க இலக்கியங்களில் அருந்ததி, அகலிகை, பிரகலாதன் பற்றிய செய்திகள், சிவன் விஷ்ணு, பிரம்மா, முருகன், பலராமன் ஆகியவர்கள் பற்றிய புராணக்கதைகள் ஆகியவைகளும் ஆங்காங்கு காணப்படுகின்றன. இவற்றினைச் ‘சங்க இலக்கியங்களில் கடவுள்கள்’ என்ற தலைப்பின் கீழ் அடுத்துக் காண்போம்.

https://www.tamilvu.org/ta/courses-degree-a011-a0112-html-a01125p3-5380

  

ஈழத்துத் தமிழ் இலக்கியம் நீர்வை மயூரகிரி சர்மா இலங்கைதீபாவளிஇலங்கைத் தமிழர்சோதிடம்தீபாவளிப் பண்டிகைதீபாவளியின் தொன்மைதீபாவளித் திருநாள்

அன்பில் செப்பேடு
ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழன், தன் அமைச்சர் அனிருத்த பிரம்மராயருக்கு நில தானம் அளித்த அன்பில் செப்பேட்டில்  நரகாசுரனை அழித்த மகாவிஷ்ணுவின் வலிமை கொண்டவன் என்று அன்பில் செப்பேடு புகழப்பட்டான். தொன்மை
பொ.ஆ 1310ஆம் ஆண்டு  போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை என்ற ஈழத்து சோதிட இலக்கிய நூல், “உரிய நற்பிதிர்கள் இன்பமுறு தீபாவலியாம் எண்ணெய் – மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே” என்று கூறுகிறது. ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) சதுர்த்தசி என்ற குறிப்பும் உண்டு.. இந்த நூலின் காலகட்டத்தில் வடஇலங்கை – குறிப்பாக யாழ்ப்பாணம் பாண்டியப் பேரரசின் தளபதியாக கருதப்பட்ட ஆரியச்சக்கரவர்த்திகளால் ஆளப்பட்டு வந்தது… ஆக, ஆயிரம் ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக தமிழர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடி வருகின்றனர்…

பொ.யு 1310ஆம் ஆண்டு இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை என்ற ஈழத்து சோதிட இலக்கிய நூல், “உரிய நற்பிதிர்கள் இன்பமுறு தீபாவலியாம் எண்ணெய் – மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே” என்று கூறுகிறது. ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) சதுர்த்தசி என்ற குறிப்பும் உண்டு.. இந்த நூலின் காலகட்டத்தில் வடஇலங்கை – குறிப்பாக யாழ்ப்பாணம் பாண்டியப் பேரரசின் தளபதியாக கருதப்பட்ட ஆரியச்சக்கரவர்த்திகளால் ஆளப்பட்டு வந்தது… ஆக, ஆயிரம் ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக தமிழர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடி வருகின்றனர்…


 பட்டாசுகள் தீபாவளியின் தொன்மை வாணவேடிக்கைதீபாவளிப் பட்டாசுகள்நீத்தார் வழிபாடுபித்ருக்கள்தீபாவளிப் பண்டிகை மகாலயம் தீபாவளிஉல்கா தானம்deepavaliவெடிகள்தீப வழிபாடுதீபங்கள்முன்னோர்கள்விளக்குகள்

தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் எப்போது வந்தன? இது ஒன்றும் புதிய பழக்கமல்ல. தீபாவளி பண்டிகையின் மிக புராதனமான அம்சம் இது. மகாளய பட்சத்தில் பூவுலகிற்கு வந்த முன்னோர்கள் திரும்பிச் செல்லும் காலம் தீபாவளி. அவர்கள் தங்கள் லோகத்திற்குத் திரும்பச் செல்லும் வழியினை ஒளிமயமாக்கத்தான் உயர்ந்த கம்பங்களில் தீப்பந்தங்கள் பண்டைய காலத்தில் ஏற்றப்பட்டன. ஆகாயத்தில் வாணவேடிக்கைகளும் கூட இதற்காகத்தான் தீபாவளி சந்தர்பத்தில் ஏற்படுத்தப்பட்டன. பண்டைய நூல்களில் இதற்கு “உல்கா தானம்” என்று பெயர்.. விஜயநகர சாம்ராஜ்யத்திலும் (பொ.யு. 1336 முதல்) , மொகலாயர்களின் காலகட்டத்திலும், மராட்டிய பேஷ்வாக்கள் ஆட்சியிலும் கூட மகாநவமியினை தொடர்ந்து வாணவேடிக்கைகள் விசேஷமாக செய்யப்பட்டன. ஒரிய அரசனான ப்ரதாப ருத்ரனின் (பொ.யு. 1497-1539) ஆட்சியில் வாணவேடிக்கைகள் நடந்தது பற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளத்திலும் காஷ்மீரத்திலும் கூட வாணவேடிக்கைகள் இருந்தது பற்றி குறிப்புகள் கிடைத்துள்ளன. விசேஷமாக கேரளத்தில் நீலகண்டன் என்பவரால் “வெடிக்கம்ப விதி” என்று பட்டாசுகள் தயாரிப்பு பற்றி ஒரு நூலே எழுதப்பட்டுள்ளது


 திருவாரூர் மாவட்டத்திலுள்ள சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோவிலிலுள்ள செப்பேடு, அங்கு தீபாவளியன்று பொன்வைத்தநாதருக்கு நடத்தப்பட்ட சிறப்பு அபிஷேகம் பற்றிக் குறிப்பிடுகிறது.
சித்தாய்மூரைச் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள மக்கள் தங்களது அன்றாடக் கூலியிலிருந்து ஒரு பகுதித் தொகையைக் “கூலிப்பிச்சையாக” இறைவனுடைய அபிஷேகத்திற்கு அளித்ததாகச் செப்பேட்டுத் தகவல்.
காலம், பொயு 16 ஆம் நூற்றாண்டு.


Tuesday, October 22, 2024

கீழடி அகழாய்வு நிரூபித்த இந்திய நாகரீக ஒற்றுமை

 கீழடி பொமு 300 முதல் பொஆ12-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது -அமர்நாத் ராமகிருஷ்ணன்

கீழடி  பொமு 300 முதல் பொஆ12-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்

2022-08-08  திருப்புவனம்: கீழடி நகரம் பல்வேறு காலகட்டங்களில் உருவான நகரமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர்  அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தை மத்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை தமிழக பிரிவு தலைவரும் முன்னாள் தொல்லியல் கண்காணிப்பாளரும், கீழடி அகழாய்வை முதன்முதலில் மேற்கொண்டவருமான அமர்நாத் ராமகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அப்போது அவர் கூறியதாவது: கீழடியில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறுவது மிகவும் சிறப்பானது. 110 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணிகள் நடைபெற வேண்டும். இரண்டுகட்ட அகழாய்வில் ஏராளமான பொருட்களை நாங்கள் கண்டறிந்தோம். இன்னும் இருகட்ட அகழாய்விற்கு அனுமதி கிடைத்திருந்தால் கூடுதல் ஆவணங்கள் கிடைத்திருக்கும். கீழடியில் இருகட்ட அகழாய்வு பணிகள் குறித்து அறிக்கைகள் தயாரித்து வருகிறோம். கீழடியில் உள்ள கட்டிடங்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை. கீழடி கட்டிடங்களை கிமு 300க்கு முன், பின் என இரு வகையாக பிரிக்கலாம். கீழடி நகரம் ஒரே காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்பில்லை. பல்வேறு காலகட்டத்தை சேர்ந்தது இந்த நகரம். கி.மு 300ல் இருந்து 10ம் நூற்றாண்டு வரை உருவாகி இருக்கக் கூடும். இவ்வாறு தெரிவித்தார்.

 

ராமாயண த்தோடு தொடர்புடைய குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில்

ராமாயண காலத்தோடு தொடர்புடைய கோவில் https://www.alayathuligal.com/blog/fpydznxhn56gr5ejj7nj85ywal2mm7

திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். கருவறையில் முத்துமாலை அம்மன் நான்கு திருக்கரங்களோடு, கையில் கிளி ஏந்தியபடி காட்சி தருகிறாள்.

மிகவும் பழமையான இக்கோவில் ராமாயண காலத்தோடு தொடர்புடையது. ராவணன், சீதாதேவியை சிறைபிடித்துச் சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்குச் செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம் இது. குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் 'குரங்கணி' எனப் பெயர் பெற்றது.

சீதாதேவி தான் சென்ற வழியை ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள், புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. முத்து மாலை கிடந்த இடமானதால் இங்கு அமைக்கப்பட்ட அம்மனுக்கு முத்துமாலையம்மன் என்று பெயரிட்டனர்.

ஆங்கிலேய அதிகாரி கூப்பிட்ட குரலுக்கு பதில் அளித்த முத்துமாலை அம்மன்

ஆங்கிலேய அதிகாரி கோவிலுக்கு தந்த இரண்டு மண் குதிரைகள்

பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த நவாப், தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார். அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், ஆங்கிலேய அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு ஆங்கிலேய அதிகாரி குதிரையில் இக்கோவிலுக்கு வந்தார். கோவில் சுற்றுச்சுவரை இடிக்க முயற்சித்தார். அவருடைய செயலை அவ்வூரைச் சேர்ந்தவகள் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி 'இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன். அது பதில் சப்தம் தருமா? என கேட்க, அதற்கு அவர்கள் 'நிச்சயம் தரும்' என்றனர்.

ஆங்கிலேய அதிகாரி,'முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்' என மூன்று முறை கூப்பிட்டார். 'என்ன?' என்ற சப்தம் இடி போன்று கோவில் கருவறைக்குள் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோவிலை இடிக்காமல் விட்ட அதிகாரி, இரண்டு மண் குதிரைகள் செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோவிலில் பெரிய சுவாமி சன்னிதியில் காணலாம்.

இக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும். ஆனி பெருந்திருவிழாவின் போது, வானில் கருடன் வட்டமிடும் அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.

Google
Map data ©2024