Sunday, August 7, 2022

அச்சிறுபாக்கம் பசுபதீஸ்வரர் கோவில் மலை ஆக்கிரமித்த சட்டவிரோத மலைமாதா சர்ச் நீக்கம்

அச்சிறுப்பாக்கம் மலை மலைமாதா சர்ச் ஆக்கிரமிப்பு விரைவில் அகற்றுவதாக கலெக்டர் உறுதி

அராஜக கிறிஸ்தவ சர்ச் முழுவதும் நீக்கி, அதன் பின்னணி நாசியப் பாதிரிகள், துணை போன அரசு அதிகாரிகள் அனைவரும் தண்டனை பெற வேண்டும்

அச்சிறுப்பாக்கம் மலை மாதா சர்ச்சின் ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அச்சிறுப்பாக்கம், : அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பள்ளிபேட்டை ஊராட்சி உட்பட்ட மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மலைக்குன்று புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, மலை மாதா சர்ச் கட்டப்பட்டுள்ளதாக, சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா, 40, என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், 'மலையில் பிரமாண்டமான கட்டடங்கள் கட்டி, மலைப்பகுதியில் உயிரினங்கள் வசிக்க முடியாத நிலைக்கு, நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரிக்கிறது' என, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.விசாரித்த நீதிமன்றம், மலை மீதுள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்ய, 2021 ஏப்., 19ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை, வருவாய்த் துறையினர் முறையாக செயல்படுத்தாததால், பொதுநல வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர், உயர் நீதிமன்றத்தில் மீண்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை, இந்த ஆண்டு ஆக., 5ம் தேதி நடந்தது.அப்போது, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், அவரது அறிக்கையை தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:நீதிமன்ற உத்தரவுப்படி, மலை மாதா சர்ச் ஆக்கிரமித்துள்ள நிலங்களை, பொதுநல வழக்கு தொடர்ந்த ராஜா என்பவர் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டது.கடந்த ஆண்டு ஜூன் 16, ஜூலை 28, ஆக., 4ம் தேதிகளில் அளவீடு செய்யப்பட்டதில், 19,820 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆக்கிரமிப்பை அகற்றும்படி, சம்பந்தப்பட்ட சர்ச் நிர்வாகத்திற்கு, வருவாய்த் துறையின் '7 நம்பர் - நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை, விரைவாக எடுத்து வருகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை, வரும் செப்., 1ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.




No comments:

Post a Comment