தமிழ் நூல்களில் முதன்மையானதாக கருதப்படுபவை எட்டுத்தொகயும், பத்துபாட்டும் ஆகிய தொகை நூல்களேயாகும். எட்டுத்தொகை எட்டு நூல்களும், பத்துப்பாட்டில் பத்துநூல்கள் என பதினெட்டு நூல்களையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனப் படும்
சங்கத்தொகைகளில் ஆசிரியப்பா எனும் அகவற்பா பெரும்பான்மையாக புலவர்கள் பயன்படுத்தி உள்ளனர். ஆரம்பகால இலக்கியங்கள் அகம் - புறம் என காதலையும் வீரத்தையும் பாக்கள் இயற்றி உள்ளனர்.
பண்டை தமிழர்கள் காதலையும் வீரத்தையும் இயற்கை நிகழ்வுகளோடு போற்றி பாக்கள் பல புனைந்துள்ளனர். தற்கால இலக்கியங்களைப் போன்று உரைநடை இலக்கிய வளர்ச்சி இல்லாத அக்கால சூழலில் புலவர் தனது கருத்துக்களையும், அழகு கற்பனை சேர்த்து வெவ்வேறு வடிவத்தில் இயற்றி உள்ளனர். பொதுவாக இவையனைத்து யாப்பு வடிவத்தைச் சார்ந்தவை.
செவிக்கு இனிமையான இந்த ஒலி நயத்தை – கவிதையில் வடித்து– வளர்த்து வாய்பாட்டுக்களாக்கி ஒருவகைச் இலக்கியசெயற்கை அமைப்பைத் தந்தனர் நம் முன்னோர் . இந்த கவி அமையும் முறையே யாப்பு என்றும் பெயரிட்டனர். வரையறுக்கப் பெற்ற ஒலிநயமே யாப்பு என்பது.(1) இருப்பினும் ஓரே வகையான யாப்பினை எல்லா வகை இலக்கியங்களுக்கும் பயன்படுத்த வில்லை. பல்வேறு பாவடிவங்கள் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா என பொஅயன்படுத்தப் பட்டுள்ளன.

இலக்கியம் வளர காலம் செல்ல செல்ல இலக்கணம் செம்மைபட நெழ்ச்சி(2) ஏற்பட பின்னர் உருவானதே வஞ்சிப்பாவும், கலிப்பாவும்.
சங்கத் தொகை நூல்களுள் பிற்காலத்தவையான கலித்தொகையும் பரிபாடலும். பிற்கால கலித்தொகையிலும் பரிபாடலிலும் சில வெண்பாக்கள் சிறிதளவு அதாவது பாடல்களுக்கு இடையிலே அமைந்துள்ளன.
வெண்பாவின் செம்மையான இலக்கண அமைப்பாகும். மற்ற பாவடிவங்களைப் போல் அல்லாமல் நெகிழ்வு தன்மையற்ற பாவடிவமான வெண்பா பிற்காலத்தில் செம்மைபடுத்தப்பட்ட பாவடிவம் என்பது தெளிவாகும்.
தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா,வெண்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரை கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.

வெண்பாவானது அடிதோறும் நான்கு சீர்களைப்பெற்று வர வேண்டும். இயற்சீர் மற்றும் வெண்சீர் வெண்டளைகள் பயிலப்பெற்று, இதன் இறுதிச் சீரானது மூன்று சீர்களால் ஆனதாக அமையும். இறுதியடியின் இறுதிச் சீரானது நாள், மலர், காசு, பிறப்பு என்ற நான்கு வகையான வாய்பாடுகளில் முடிக்கப்படுதல் வேண்டும் .எல்லா பாவினங்களுக்குள்ளும் பாவகையும், பாஇனமும் உண்டு. வெண்பாவில் பாவகை அடி, வரையரையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
இரண்டு அடிகளால் ஆனது குறள் வெண்பா
மூன்று அடிகளால் ஆனது சிந்தியல் வெண்பா
நான்கு அடிகளால் ஆனது இன்னிசை வெண்பா,
நான்கடி பெற்று இரண்டாமடியின் நான்காம் சீர் தனிசொல் பெற்று வருதல் நேரிசை வெண்பா,
ஐந்து முதல் பன்னிரெண்டு அடிகள் வரை அமைப்பின் அது பஃறொடை வெண்பா
அதற்கு மேல் அமையின் கலிவெண்பா.
நெடுங்காலமாக கலிவெண்பா என்பது கலிப்பாவின் வகையில் ஒன்றாகவே இலக்கண நூலில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். முதன்முதலாக வீர சோழியந்தான் கலிவெண்பாவை வெண்பா வகையுள் அடங்கியது என்பர் (3). சங்க இலக்கியங்களில் வெண்பா யாப்பு கலித்தொகை, பரிபாடல். திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து 'ஏலோர் எம்பாவாய்' என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், 'பாரோர் புகழப் படிந்து' போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த பஃறொடை வெண்பா யாப்புக்கு முற்றிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம்.
வெண்பா இலக்கணத்தின் அமைப்பை கூறும் தொல்காப்பிய வரிகள்
உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப - பொருள். செய்யு:19/2
வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர் - பொருள். செய்யு:23/1
ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் - பொருள். செய்யு:67/1
வெண்பா இயலினும் பண்புற முடியும் - பொருள். செய்யு:77/1
அதாஅன்று என்ப வெண்பா யாப்பே - பொருள். செய்யு:82/1
ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என - பொருள். செய்யு:105/1
ஆசிரியப்பா வெண்பா என்று ஆங்கு - பொருள். செய்யு:107/2
வெண்பா நடைத்தே கலி என மொழிப - பொருள். செய்யு:108/2
ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின - பொருள். செய்யு:118/3
கைக்கிளை-தானே வெண்பா ஆகி - பொருள். செய்யு:119/1
வெண்பா இயலான் வெளிப்பட தோன்றும் - பொருள். செய்யு:154/3
வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் - பொருள். செய்யு:161/3
வெண்பாட்டின் (1)
குறு வெண்பாட்டின் அளவு எழு சீரே - பொருள். செய்யு:158/2
வெண்பாட்டு (1)
வெண்பாட்டு ஈற்று அடி மு சீர்த்து ஆகும் - பொருள். செய்யு:72/1
வெண்பாட்டே (4)
நெடு வெண்பாட்டே குறு வெண்பாட்டே - பொருள். செய்யு:118/1

கைக்கிளை பரிபாட்டு அங்கத செய்யுளொடு - 118/2
நெடு வெண்பாட்டே மு_நால் அடித்தே - பொருள். செய்யு:158/1
கலி வெண்பாட்டே கைக்கிளை செய்யுள் - பொருள். செய்யு:160/1

ஆசிரியப்பா எனும் அகவற்பா பெரும்பான்மையான சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. ஆனால் வெண்பா யாப்பானது ஒரு சில நூல்களில் சிறிதளவே அதாவது பாடல்களுக்கு இடையிலே அமைந்துள்ளன.
பண்டைய கால தமிழர்கள் காதலையும், வீரத்தையும் இரு கண்களைப் போல போற்றினர். காதலையும் வீரத்தையும் இயற்கை நிகழ்வுகளோடு போற்றி பாக்கள் பல புனைந்துள்ளனர். தற்கால இலக்கியங்களைப் போன்று உரைநடை இலக்கிய வளர்ச்சி இல்லாத அக்கால சூழலில் படைப்பாளன் தனது கருத்துக்களையும், அழகுணர்ச்சியையும் வெவ்வேறு வடிவத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். பொதுவாக இவையனைத்து யாப்பு வடிவத்தைச் சார்ந்தவை. செவிக்கு இனிமை பயக்கும் இந்த ஒலி நயத்தை – கவிதையில் பயிலும் இப்பண்பை – வளர்த்து வாய்பாடுகளாக்கி ஒருவகைச் செயற்கை அமைப்பைத் தந்தனர் நம் முன்னோர் . இந்த வாய்பாடுகள் அமையும் முறையே யாப்பு என்றும் பெயரிட்டனர். வரையறுக்கப் பெற்ற ஒலிநயமே யாப்பு என்பது.(ந. சுப்புரெட்டியார் ; இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்;46) இருப்பினும் ஓரே வகையான யாப்பினை எல்லா வகை இலக்கியங்களுக்கும் பயன்படுத்த வில்லை. அவ்வாறான பல்வேறு பாவடிவங்கள் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா.
1. ந. சுப்புரெட்டியார் ; இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்;46)
2. சமுதாயப் பின்னணி — பா ஆக்க முறை —– பாடுபொருள் ஆகியவற்றின் அடிப்படையில் பாவடிவங்களைப் நோக்குவோமானால் முதலில் ஆசிரியமும். இரண்டாவதாக வஞ்சியும், மூன்றாவதாகக் கலிப்பாவும், நான்காவதாக வெண்பாவும் தோன்றியிருக்க வேண்டும் (அ. பிச்சை, சங்க இலக்கிய யாப்பியல்: 66 : 2011)
3.சோ. ந. கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும். அ: 74-742) (வீரசோழிய நூற்பா – 114
No comments:
Post a Comment