Wednesday, July 3, 2019

சங்கு,சக்கரமேந்திய சிவப்பரம்பொருள்

சங்கு,சக்கரமேந்திய சிவப்பரம்பொருள்! ஊரு ஹஸ்தத்துடன் வலப்பக்க இடுப்பில் பாலாம்பிகையுடன்!!
https://www.facebook.com/veeramani.veeraswami/posts/10211907654726043
அன்பர் ஆறகழூர் வெங்கடேசன்.பொன் அவர்கள்,ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, '' சிவனா ? பெருமாளா ?'' என்று கேட்டிருந்தார்.அச்சிற்பத்தில் இடக்கரம்,ஊரு ஹஸ்தத்துடன் காட்சியளிக்கிறது.பின்னூட்டங்களில்,கடியயஸ்த முறை என்றும் அர்த்தசந்திர ஹஸ்த முறை என்றும் அன்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஒரு அன்பர், '' பெரும்பாலும் பெருமாளாக இருக்கவே வாய்ப்புள்ளது... இடது கை தொடையில் வைத்திருக்கும் ஊறு ஹஸ்தம் முருகன் அல்லது பெருமாளுக்கே...'' என்று குறிப்பிட்டிருந்தார்.

அஃது ஊரு ஹஸ்த முத்திரை யாகும்.
சரி, சிவப்பரம்பொருள் ஊரு ஹஸ்த முத்திரை கொண்டு காட்சியளிக்கிறாரா?
ஆம்; சிவப்பரம்பொருள்,சில திருமேனிகளில் ஊரு ஹஸ்தம் கொண்டு காட்சியளிக்கின்றார்.சில எடுத்துக் காட்டுகள்=
௧. சிவப்பரம்பொருளின் மகேசுவர மூர்த்தங்களுள் ஒன்றான கேவல சந்திரசேகரர் தம் திருமேனியில்,ஊரு ஹஸ்தம் கொண்டு காட்சியளிக்கிறார்.
[ சந்திரசேகரர் வடிவம் மூன்று நிலைகளில் இருப்பதாக சுப்பிரபேத ஆகமம் கூறுகிறது.௧.கேவல சந்திரசேகர் - கேவல என்றால் தனித்து நின்றலாகும். இந்த கேவல சந்திரசேகரர் நிலையில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி, தனித்து நிற்கிறார்.௨.உமா சந்திரசேகர் - இவ்வடிவில் உமையுடன் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி நிற்கிறார்.௩.ஆலிங்கண சந்திரசேகர்- இவ்வடிவில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி உமையை தழுவியநிலையில் இருக்கிறார்.]
சான்றாக,ஹைதராபாத் சாலர்ஜங் அருங்காட்சியகத்தில் உள்ள கேவல சந்திரசேகரின் திருமேனி புகைப்படத்தினை இணைத்துள்ளேன்.
௨.ரிஷபாந்திகர் =தர்மதேவதையை வாகனமாக ஏற்றுக்கொண்ட சிவபெருமானின் திருவுருவம் இடபாந்திக மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது .[ அறவெள்விடைக்கு அருளிய வடிவம்]
இத்திருவுருவம், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படுகிறது.சிவபெருமான் காளையின் மீது சாய்ந்தபடி, இடக்காலை ஊன்றி, வலக்காலை ஒய்யாரமாக தாங்கியபடி இடபத்தில் தலை மேல் தனது வலத்திருக்கரத்தினை வைத்து, இடதித்திருக்கரத்தினை ஊரு ஹஸ்தமாகக் கொண்டு நிற்கும் வடிவம் இடபாந்திகராகும். இவ்வடிவத்தில் இடபுறம் உமையம்மை காட்சி தருவார்; அல்லது தனித்தும் காட்சி தருவார்;அல்லது அர்த்தநாரியாகக் காட்சி தருவார்;அப்பொழுது ஊரு ஹஸ்தம் இடவலமாக மாறுவதும் உண்டு.
எடுத்துக்காட்டாக,எட்டாம் நூற்றாண்டின் கோயிலான,கர்நாடகா,பட்டடக்கல், விருபாட்சர் கோயில் ரிஷபாந்திகர் சிற்பத்தின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
௩.பாசுபத மூர்த்தி = அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றான சிவபெருமான் அர்ச்சுனனுக்குப் பாசுபதக் கணையை அளித்த வடிவம் பாசுபத மூர்த்தி திருவடிவமாகும்;இத்திருவுருத்தில் சிவப்பரம்பொருள், ஊருஹஸ்தம் கொண்டு காட்சியளிக்கிறார்.
சான்றாக, எட்டாம் நூற்றாண்டின் கோயிலான,கர்நாடகா,பட்டடக்கல், விருபாட்சர் கோயில் பாசுபத மூர்த்தி சிற்பத்தின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

ஊரு ஹஸ்தம் பற்றிய சிறு விளக்கம்=
ஊரு ஹஸ்தம் என்பது இந்து சமய இறை சிற்பங்களிலும், இறை ஓவியங்களிலும் இடத் தொடையின் மீது கையை வைத்திருக்கும் அமைப்பாகும். நின்ற திருமேனி சிற்பங்களில் இடத்திருக்கரம் தொடையின் மீது அமைக்கப்பட்டிருக்கும்.. இதனை ஊரு முத்திரை என்றும் அழைப்பர். ஊரு என்றால் தொடை என்ற பொருளில் இந்த முத்திரை அழைக்கப்படுகிறது.
பொதுவாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் இடக் கையே தொடையின் மீது வைக்கப்பட்ட நிலையில் உள்ளது. அவ்வாறு வைக்கப்பட்ட கையானது அழுந்தப் பற்றாமல் இருக்குமாறு உள்ளது..
ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலின் அம்பாள் சந்நிதி சிறப்பு வாய்ந்தது. அம்பிகையின் அருள் பீடங்களில் ஒன்றாகவும், மந்திர பீடமாகவும் திகழ்கிறது இது. இதனாலேயே, அம்பாளுக்கு மந்திர பீடேஸ்வரி என்றொரு திருநாமமும் உண்டு. சுவாமி சந்நிதிக்கு வடக்குப் புறத்தில் (சுவாமிக்கு இடப் புறத்தில்), கிழக்குப் பார்த்த தனிச் சந்நிதி. அம்பாள் அழகென்றால்... கொள்ளை அழகு! தாமரைப் பீடத்தில், நின்ற திருக்கோலத்தில் அருள் வழங்கும் சதுர்புஜ நாயகி. அம்பாளின் கரங்கள் சற்றே வித்தியாசமானவை. வலது மேல் கரத்தில் கெண்டி, இடது மேல் கரத்தில் ஜப மாலை, வலது கீழ்க் கரம் அபய ஹஸ்தம், இடது கீழ்க் கரம் ‘ஊரு ஹஸ்தம்’ (தொடை மீது ஊன்றியபடி). பல கோயில்களில் விஷ்ணு துர்க்கை இவ்வாறு ‘ஊரு ஹஸ்தம்’ தாங்கியிருப்பதைக் காணலாம் (திருப்பதி வேங்கடேசப் பெருமாள் ஊரு ஹஸ்தம் கொண்டிருப்பார்).
தெய்வத்தின் குரல் என்னும் நூலில் இருந்து='' ஸாதாரணமாக துர்கை — ஸுப்ரஹ்மண்ய மூர்த்தங்களில் சிலதுகூட– வலது பக்கம் அபய ஹஸ்தமும், அதற்கு நேரான இடது ஹஸ்தம் தொடையில் ‘ஊரு ஹஸ்தம்’ என்றும் இருக்கின்றனவென்றால் வேங்கடரமண ஸ்வாமியோ வலது ஹஸ்தத்தில் வரமுத்ரையும் அதற்கு நேர் இடது ஹஸ்தம் ஊருவிலுமாக இருக்கிறார்.''
சரி தலைப்பிற்கு வருவோம்!
அன்பரின் பதிவைப் பார்த்தவுடன்,தற்பொழுது மெக்ஸிகோ என்னும் வட அமெரிக்கக் கண்டத்து நாட்டில் உள்ள '' சங்கு,சக்கரமேந்திய சிவப்பரம்பொருள்,ஊரு ஹஸ்தத்துடன் வலப்பக்க இடுப்பில் பாலாம்பிகையுடன் காட்சியளிக்கும் கிரானைட் சிற்பம் நினைவுக்கு வந்தது.
[ எப்படியோ மெக்ஸிகோவிற்குப் போய்விட்டது!]
'' 1stdibs '' என்னும் ஏல நிறுவனம், இச்சிற்பத்திற்கு $23,125 விலை நிர்ணயித்துள்ளது![ பாரதநாட்டில் 15,92,850 ருபாய் ]
சங்கு சக்கரமேந்தி, ஊரு ஹஸ்தத்துடன் காட்சி தரும் இத்திருமேனி சிவப்பரம்பொருளுடையது என்பதற்குச் சான்று ,மகுடத்தில் உள்ள கங்கை மற்றும் வலப்பக்க இடையில் உள்ள பாலாம்பிகை முகமுமாகும்!
இப்படிப்பட்ட திருவுருவை அடியேன் கண்டதில்லை! இத்திருமேனி பற்றி, '' MUZEION'' என்னும் நிறுவனத்தின், ''SOUTH INDIAN GRANITE SCULPTURE '' என்னும் கையேட்டில் குறிப்புகள் உள்ளன.[ அவற்றையும் இப்பதிவில் இணைத்துள்ளேன்.]
இத்திருமேனி பற்றி '' 1stdibs '' இணையம் தரும் செய்திகள் கீழே=
1stdibs,IS THE WORLD’S LEADING ONLINE MARKETPLACE FOR THE MOST BEAUTIFUL THINGS ON EARTH.
Granite Shiva with Attributes in His Hands and Conical Tiara
$23,125
Granite sculpture of Shiva standing, four armed, holding a conch in his left hand and a chakra in his right. His front arm in Katia Balambika over the hip. He wears a conical headdress or Tiara with long curls falling onto his shoulders forming the Mighty Ganga river and sending unto earth. He also wears elaborate jewelry all around his body with fine dotty. Granite.
Details= PLACE OF ORIGIN-INDIA
DATE OF MANUFACTURE
15th Century
PERIOD
15th Century and Earlier
MATERIALS AND TECHNIQUES
Carved
Granite
CONDITION
Excellent
DIMENSIONS
H 33 in. x W 19 in. x D 6 in.
H 83.82 cm x W 48.26 cm x D 15.24 cm
SELLER LOCATION
San Pedro Garza Garcia, MX
SELLER REFERENCE NUMBER
IN-084
REFERENCE NUMBER
LU3172311814963
புகைப்படங்கள்=
முதற்கண்,மெக்ஸிகோ என்னும் வட அமெரிக்கக் கண்டத்து நாட்டில் உள்ள '' சங்கு,சக்கரமேந்திய சிவப்பரம்பொருள்,ஊரு ஹஸ்தத்துடன் வலப்பக்க இடுப்பில் பாலாம்பிகையுடன் காட்சியளிக்கும் கிரானைட் சிற்பம் படங்கள்;ஹைதராபாத் சாலர்ஜங் அருங்காட்சியகத்தில் உள்ள சந்திரசேகரின் திருமேனி படம்;எட்டாம் நூற்றாண்டின் கோயிலான,கர்நாடகா,பட்டடக்கல், விருபாட்சர் கோயில் ரிஷபாந்திகர் சிற்பத்தின் புகைப்படம் ;எட்டாம் நூற்றாண்டின் கோயிலான,கர்நாடகா,பட்டடக்கல், விருபாட்சர் கோயில் பாசுபத மூர்த்தி சிற்பத்தின் புகைப்படம்; '' MUZEION'' என்னும் நிறுவனத்தின், ''SOUTH INDIAN GRANITE SCULPTURE '' என்னும் கையேடு முதற்பக்கம்;அதிலுள்ள சங்கு,சக்கரமேந்திய சிவப்பரம்பொருள்,ஊரு ஹஸ்தத்துடன் வலப்பக்க இடுப்பில் பாலாம்பிகையுடன் காட்சியளிக்கும் கிரானைட் சிற்பம் பற்றிய குறிப்பு.[ புகைப்படங்களுடன் அவற்றின் செய்திகளையும் இணைத்துள்ளேன்.]நிறைவாக,அன்பர் ஆறகழூர் வெங்கடேசன்.பொன் அவர்கள் பகிர்ந்த புகைப்படம்.
நன்றி=௧. '' 1stdibs '' இணையம்; ௨. கர்நாடகா தொல்லியல் துறை;௩.'' MUZEION'' என்னும் நிறுவனத்தின், ''SOUTH INDIAN GRANITE SCULPTURE '' என்னும் கையேடு;௪.நவ பழனிக்கோ அறநிறுவனம் இணையப்பக்கம்.

சிவப்பரம்பொருள்,பார்வதி,கணபதி,ஸ்கந்தன் உடன் நாரத முனிவர் இருக்கும் அற்புதமான வெண்கலச் சிலை!
அதனைத் தொடந்து நாரத முனிவர் பற்றிய சிந்தனைகளும் சிற்பங்களும்!!
[ SHIVA - PARVATI WITH GANESHA AND SKANDA MASTERPIECE BRONZE SCULPTURE ]
வழமைபோல் இணையத்தில் உலவிக்கொண்டிருந்தேன். பஞ்சாப் மாநிலத்தின்,மொகாலி நகரில் இருக்கும்,சிற்பக் கூடமான COTTAGE NINE தயாரிப்பான,சிவப்பரம்பொருள்,பார்வதி,கணபதி,ஸ்கந்தன் உடன் நாரதர் இருக்கும் அற்புதமான வெண்கலச் சிலை புகைப்படமும் விளக்கங்களும் அடியேனின் கண்களில் பட்டது.
அடியேன், இதுவரை சிவப்பரம்பொருள் குடும்பத்தாருடன் திரிலோக சஞ்சாரியான நாரத முனிவர் இருக்கும் உலோகச் சிற்பத்தினைக் கண்டதில்லை.
இதோ COTTAGE NINE இணையத்தில் உள்ள தகவல்கள்=
SHIVA - PARVATI WITH GANESHA AND SKANDA MASTERPIECE BRONZE SCULPTURE.
Quick Overview
Deity Shiva
Weight 135.00 Kgs
Height 41.00 inches
Width 32.00 inches
Depth 15.00 inches
Main Material Used Bronze
Country of Manufacture India
Art Technique Madhuchishtavidhana
Special Comments
- The weight mentioned is approximate as this is a large statue involving much artistic effort and artists didn’t weigh the statue after creation. However the weight is estimated in relation to the size of the sculpture by their creator artists who are very experienced so the mentioned weight is close to actual.
- This statue is of significant size so it is created hollow. It already weighs much and if it were created solid that would have not only increased the weight of the sculpture unnecessarily but it also would be much cumbersome to move the sculpture.
DESCRIPTION
This is an extraordinary bronze sculpture of Shiva and Parvati with their children Ganesha and Skanda. They stand under a tree with sage Narada by their side.
South Indian sculptors are expert in creating multi-subject or event-based sculptures. This masterpiece is one like those.
Shiva is seen in the center with all the traditional iconography associated with him. He wears a jatamakuta (hair worn like a crown) that is embedded with jewelry. He wears a Datura flower in his hair.
His wears a female earring in his left ear and right one is without any, or it could also be adorned with a male earring.
He holds Parashu (axe) and Mriga (deer) in right and left upper-hands respectively. His lower right hand is gestured in Abhaya Mudra (assurance or granting fearlessness) and left hand is curled to hold a detachable trishula (trident) included with this sculpture.
Parvati stands at Shiva’s left. She is ornately dressed up and holds the child Skanda (her son, also known as Kartikeya) in her right arm. Child Ganesha is seen holding the index finger of her left hand. She bears a bashful, amused smile.
To the right of Shiva is seen sage Narada, the famous devotee of Lord Vishnu. He carries a veena (lute) hung around him that he plays in praise of Lord Vishnu primarily but also of other deities including Lord Shiva.
Sage Narada is seen playing veena, immersed in singing melodies seeing the great Shiva, the epitome of detachment and the one who once burned Kama (god of conjugal love) to ashes, turned so much a family man to be enjoying marital life with Parvati, mother of the worlds.
There is a beautifully carved tree in the background of the sculpture. It is shown teaming with life housing creatures such as lizards, squirrels and snakes.
This masterpiece of a sculpture rests on a huge lotus base.
சரி, நாரத முனிவர் பற்றிச் சுருக்கமாக அறிந்துகொள்வோமா?
உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய ரிஷி நாரதர். அவர் பாதாளம், மேல்லோகம், பூலோகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் என்பதால் திரிலோக சஞ்சாரி என்று அழைக்கப்பட்டார். ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு நடத்தி வெற்றியடையச் செய்வதில் இவர் கைதேர்ந்தவர்.
பரம்பொருளான நாராயணனின் நாபிக்கமலத்தில் (தொப்புள்) பிரம்மா அவதாரம் செய்தார். பிரம்மாவின் மனதிலிருந்து சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந்தனர். இவர்களைப் பார்த்து பிரம்மா,நீங்கள் எல்லாரும் ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விஸ்தரியுங்கள், என்று கட்டளையிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான சிவப்பரம்பொருளினை அடைந்து உபதேசம் பெற்று சிவசாயுஜ்யம் அடைவதே தங்கள் குறிக்கோள் என்ற அவர்கள், இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டனர்.
எனவே பிரம்மா, மீண்டும் உலக சிருஷ்டியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார். தன் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றில் இருந்தும் புலஸ்தியர், புலஹர், அத்ரி, கிருது, மரீசி, ஆங்கிரஸ், பிருகு, தட்சன், கர்தமர், வசிஷ்டர் என்று ரிஷிவர்க்கத்தைப் படைத்தார். இவர்களில் பிரம்மாவின் மனதில் இருந்து பிறந்தார் நாரதர்.
பிரபஞ்சத்தில் பலகோடி மக்களை உருவாக்கும்படி படைப்புக்கடவுள் அந்த ரிஷிகளுக்கு கட்டளையிட்டார். இவர்களில் நாரதரைத் தவிர மற்றவர்கள், தந்தையின் கட்டளையை ஏற்று, இவ்வுலகை விஸ்தரிக்கும்பணியில் முழுமூச்சாய் ஈடுபடத் தொடங்கினர். நாரதருக்கு இதில் உடன்பாடில்லை. தந்தையின் சொல்லைப் புறக்கணித்தார். அதோடு மட்டுமல்லாமல், பிரம்மாவுக்கே உபதேசம் செய்யும் அளவுக்குத் துணிந்து விட்டார்.
அப்பா! நீங்கள் தீயவழியில் செல்லும்படி என்னைத் தூண்டுகிறீர்கள். சத்விஷயங்களைப் பிள்ளைக்குச் சொல்லித் தரவேண்டியது தான் ஒரு தந்தையின் கடமை. அதைவிடுத்து இவ்வாறு தவறுக்கு வழிவகுப்பது நல்லதல்ல. நான் எம்பெருமானுடைய பாதார விந்தங்களை அன்றி மற்றொன்றைச் சிந்திக்காதவன். உலக சுகங்களை மறந்த என்போன்றவர்களை ஆதரிக்க வேண்டியது தான் உங்கள் கடமை,என்று புத்திமதி சொன்னார்.அப்படிப்பட்ட நாரத முனிவரின் வரலாற்றை '' நாரதர் புராணம் '' தெளிவாக விளக்குகிறது.
'' நாரதர் விருது '' ,சிறந்த ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுவது நமக்குத் தெரிந்ததுதானே?
நாரத முனிவர் திரிலோக சஞ்சாரி;உலகின் முதல் ஊடகவியலாளர்!
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளில் எவரிடமானாலும் சரி, சகஜமாக சந்தித்து பேசக்கூடியவர் என்று பாரத மரபு கூறுகிறது. நாரதர் தகவல் பரப்பும் விதத்தில் பொதிந்துள்ள குறிக்கோள் ஒட்டுமொத்த சமுதாய நன்மையே. தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த முருகன், பிள்ளையார் மாம்பழப் போட்டி கதையை நாரதரே எழுதி வசன கர்த்தாவாகவும் இயக்குநராகவும் செயல்பட்ட விவரம் அறியாதவரும் கிடையாது. நோக்கம் தாய், தந்தையரின் மேன்மையை உலகிற்குப் பிரகடனம் செய்வது. பிள்ளையாருக்குத் தெரியும், முருகனுக்குத் தெரியாது என்பதெல்லாம் நாரதர் கட்டிய கதை!
சத்திய ஆவேசத்துடன் அதிகார பீடங்களோடு மோதவேண்டியிருந்தால் மோதுவது செய்தியாளரின் அலுவல்களில் ஒன்று. இப்படித்தான் ஒருமுறை நாரதர் சிவபெருமானை முறைத்துக்கொண்டார். சாபம் பெற்றார்.
அடித்தட்டு மக்கள் கதைகள் மூலம் நல்லபண்புகளை உள்வாங்கிக் கொள்ள முடிவதற்காக நாரதர் வால்மீகி மூலம் உலகுக்கு இராமாயணம் கிடைக்கச் செய்தார். வியாசரை சந்தித்து பாகவதம் (கண்ணன் கதைகள்) எழுதச் செய்தார். சாட்சாத் கண்ணனையே சந்தித்து கிருஷ்ணாவதாரத்தில் அவரது பால லீலைகள் என்னவாக இருக்கவேண்டும் என்று விவாதித்தார். அதாவது நாரதருக்குக் காலச்சக்கரத்தின் சுழற்சியோ பிரபஞ்சத்தின் தொலைவுகளோ பொருட்டே அல்ல. அதுமட்டுமல்ல, எல்லா தரப்பினரையும் சந்தித்து தகவல் தந்து, தகவல் பெற்று, சமுதாய சேவை செய்வது அவருக்கு கைவந்த கலை.
ஒரு குறிப்பிட்ட சந்திப்பு உபநிடதத்திலேயே அழகாக அமைந்துள்ளது. நாரதர் சனத்குமாரரைச் சந்தித்து, எல்லாம் தெரிந்திருந்தும் தனக்கு மனக்கவலை இருப்பதாக சொன்னார். அவருக்கு உபதேசம் வழங்குவதற்கு முன் சனத்குமாரர் உனக்கு என்னவெல்லாம் தெரியும் என்று கேட்டார். நான்கு வேதங்கள், வரலாறு, பிரபஞ்ச இயல்பு, இலக்கணம், ஆன்மீகம், கணிதம், நல்லொழுக்கம், அரசியல், தற்காப்புக் கலை, ஜோதிடம், மருத்துவம், புராணம், நாடோடி கலைகள், தர்க்கம், இயற்பியல், துர்தேவதை ஒழிப்பு, சுரங்கம், நடனம், சங்கீதம், ஒப்பிலக்கணம் என்று முழுப்பட்டியலையும் சமர்ப்பித்தார். பலவித்தைகளிலும் கரைகண்ட நீ ஆன்மவித்தை அறியவேண்டும். அதனை உபதேசிக்கிறேன் என்றார் சனத்குமாரர். அவ்வண்ணமே செய்தார். அதாகப்பட்டது, சராசரி செய்தியாளர் இன்னதுதான் தெரிந்து கொண்டிருக்கவேண்டும் என்பதற்கான வரம்பே கிடையாது. அதைத்தான் சாந்தோக்ய உபநிடதத்தில் இடம்பெற்றுள்ள இந்த சந்திப்பு எடுத்துக்காட்டுகிறது.
பல கலைகளிலும் வித்தகராக இருப்பதோடு மேலும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற தாகம் செய்தியாளருக்கு இருப்பது அவரது பணியை மெருகேற்றும். அந்த தாகம் நாரதருக்கு இருந்தது. தொடக்க காலத்தில் சிறந்த சங்கீத நிபுணராக இருந்தபோதிலும் இதயத்திலிருந்து இசை பொழிவது எப்படி என்பதை அனுமாரிடம் கற்றுக்கொள்ளும்படி அவருக்கு கூறப்பட்டபோது அவ்வாறே செய்தார் அந்த மேதை. அவரது சங்கீதமும் சோபித்தது. சும்மாவா பாடினான் பாரதி, நலம் திகழ் நாடு’ என்று? (‘பஞ்ச பாரதீயம்’ என்று நாரதர் தமிழிலேயே ஒரு இசைநூல் இயற்றியதாக பேரகராதி கூறுகிறது).
எனவேதான் '' தேவரிஷிகளில் நான் நாரதர்” என்று கண்ணன் கீதையிலேயே பதிவு செய்திருக்கிறான் போலிருக்கிறது.
பாரதநாட்டிற்கே உரிய சனாதன தர்மத்தை,அடையாளத்தை ஊடகத் துறையிலும் பிரதிபலிக்க நாரதர் காட்டிய வழி நல்ல வழிதானே?
பாரத நாடு முழுவதும் உள்ள சில கோயில்களில்,நாரத முனிவருக்குச் சிற்பங்கள் இருக்கின்றன.[ உலோகம்,கல், மற்றும் சுதை வேலைப்பாடுகள்.]
மூவுலகையும் சுற்றி வந்தாலும் எந்த இடத்திலும் தங்க இயலாத நாரதருக்கு தங்குவதற்கு ஒரு கோவில் உள்ளது கர்நாடக மாநிலத்தில். கர்நாடக மாநிலம் கிருஷ்ணா நதிக்கரையில் கோர்வா என்றழைக்கப்டும் தீவில் நாரதருக்கென பிரத்யேக கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் நாரதகடே என்று அழைக்கப்படுகிறது. வருடம்தோறும் நாரத ஜெயந்தி அன்று இந்த கோவிலில் கோலாகல விழா நடக்கின்றது.
நாரதர் சிற்பங்கள் உள்ள சில இடங்கள்=.
௧.நேபாளம், காத்மண்டு,கோகர்னேஷ்வர் மஹாதேவ் திருக்கோயில்.
௨.தேவபூமி ருத்ரபிரயாக் - சிவப்பரம்பொருளிடம் நாதமுனிவர் வீணை இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்கிறார்.
௩.நேபாளம்,பதன் அருங்காட்சியகத்தில் இருக்கும் வித்தியாசமான நாரதமுனிவர் சிற்பம்.
௪. திருச்சி,ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் நாரதர்.
௫.நாரத முனிவர்,பத்ராச்சலம் திருக்கோயில்.
௬..நாரத முனிவர்,திருமலைத் திருக்கோயில், திருப்பதி.
௭ .நாரத முனிவர்,முருடேஸ்வர் திருக்கோயில், முருடேஸ்வர்,கர்நாடகா.
௮. சனத் குமாரர்,நாரத முனிவருக்கு உபதேசம் செய்யும் காட்சி- சங்கரர் மடம், இராமேஸ்வரம்.
௯.Chhatri of Sardar Deorao Bhausaheb Jadhav,Deo Bagh, Gwalior.
10, 11.Ananta Padmanabha Caves is a 6th Century four storey temple. It is rock carved into a hill. This pictures depicts the Great Sages (Narada, Thumbura and ???) of Ancient India, placed on third floor of Ananta Padmanabha temple. Rock statues has been cemeted by Indian Archeology to patch them after erosion.
௧௨ . திருவிளையாடல் புராணம் சுதைச் சிற்பம் -இடம் தெரிந்திலது.
௧௩, ௧௪. Naradamuni temple, Chigateri,Harapanahalli taluk of Bellary district,Karnataka state.
௧௫,௧௬,௧௭,௧௮,௧௯.கர்நாடக மாநிலத்தில். கர்நாடக மாநிலம் கிருஷ்ணா நதிக்கரையில் கோர்வா என்றழைக்கப்டும் தீவில் நாரதருக்கென பிரத்யேக கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் நாரதகடே என்று அழைக்கப்படுகிறது.
புகைப்படங்கள்=முதற்கண், பஞ்சாப் மாநிலத்தின்,மொகாலி நகரில் இருக்கும்,சிற்பக் கூடமான COTTAGE NINE தயாரிப்பான,சிவப்பரம்பொருள்,பார்வதி,கணபதி,ஸ்கந்தன் உடன் நாரதர் இருக்கும் அற்புதமான வெண்கலச் சிலை படங்கள்;தொடர்ந்து நாரதமுனிவர் சிற்பங்கள்.[ புகைப்படத்துடன் விளக்கம் இணைக்கப்பட்டுள்ளது.]
நன்றி= ௧.பஞ்சாப் மாநிலத்தின்,மொகாலி நகரில் இருக்கும்,சிற்பக் கூடமான COTTAGE NINE இணையம் ;௨.கர்நாடகா சுற்றுலா இணையம்;௩.விக்கிபீடியா;௪.தி ஹிந்து தமிழ் இணையம்;௫.நேபாள நாட்டின் சுற்றுலா இணையம்.

1 comment:

  1. In this extensive coverage, you also need to mention about some popular belief based attributes to sculptures found in temples. For Example the position. The peacock position in Kazghumalai Murugan temple is interchanged. There may be specific reasons for that. I had seen in a temple Dakshinamurthy is in Kalyana Kolam i.e with his consort not alone. In Suruttaipalli the deity was earlier belived to be Vishnu, because it is in a sayana mode, but Kanchi Mahperiyaval only deciphered that it is Shiva and after taking the Alahala poison is temporarily immobilized and rests on Parvati's lap.
    In every one of the Devara padal petra 270 plus temples each has a unique background. I had seen 220 of them and it is worth documenting that in detail.

    ReplyDelete