Saturday, January 20, 2018

கிறிஸ்துவ மதவெறி பாவாணர் வழியில் ஆசியவியல் ஜான் சாமுவேல் -திருக்குறளை இழிவு செய்யும்

ஜி.யு.போப் கிறித்துவ வெறியோடும் மேனாட்டு பொய்யான அறிவுச் செருக்கால் உளறித் தள்ளினார்- திருவள்ளுவர் பைபிள் அறிந்தால் மட்டுமே திருக்குறள் எழுதியிருக்கமுடியும் என பைத்தியக்காரத்தனமாய் சொன்னதை வைத்து சாந்தோம் ஆர்ச் ஆர்ச் பிஷப் அருளப்பா போலி  ஓலைச்சுவடி செப்பு தயாரிக்க ஆசார்யா பால் கணேஷ் ஐயர் என்பவருக்கு 1970களில் லட்சக்கணக்கில் பணம் தந்து ஏற்பாடு செய்தார். தன்னுடைய பேராயர் முகவரியிலேயே ஆசார்யா பால் உள்ளவர் என பாஸ்போர்ட் எடுத்து உலக சுற்றுலா, மற்றும் போப் அரசரை சந்திக்கவும் செய்தார். தன் காரை இலவசமாகத் தந்தார். 

திருக்குறள் இந்திய தத்துவ மரபின் தமிழில் 9ம் நூற்றாண்டில் எழுந்த நூல், திருவள்ளுவர் நாட்டை ஆளும் அரசன் பிராமணர்களின் வேதங்கள் - தர்ம சாஸ்திரங்களுக்கும் அடிப்படையாய் இருக்க வேண்டியதே மன்னவன் செங்கோல் என்கிறார்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                      குறள் 543:  செங்கோன்மை
543 Learning and virtue of the sages spring,          (Missionary G.U.POPE Translation)
From all-controlling sceptre of the king.
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein
described.

அரசன் கோடுங்கோலனாய் இருந்தால் பசுக்கள் தன் பலனைத் தராது, பிராமணர்கள் வேதங்களை மறப்பர் என்கிறார்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.                                  குறள்  560:  செங்கோன்மை
560 Where guardian guardeth not, udder of kine grows dry,   (Missionary G.U.Pope Translation)
And Brahmans' sacred lore will all forgotten lie.
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.
ஒருவனுக்கு கல்வி எதற்கு
 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.                          குறள் 03 -கடவுள் வாழ்த்து
ஒருவர் கற்ற கல்வியினால் தூய அறிவு வடிவாக விளங்கும் உலகினைப் படைத்த தெய்வத்தின் நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், ஆகிய பயன்  என்ன?

தான் பெற்ற கல்வியினால் அறச் செயல்கள் செய்ய வேண்டும் வீடுபேறு அடையவே.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.               குறள் 38:  (அறன்வலியுறுத்தல்)
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.


திருக்குறள் தமிழர் மெய்யியலை தமிழர் சமய நெறியை அற நூலாய்த் தந்தவர். திருவள்ளுவர் - அறம் பொருள் இன்பம் என முப்பாலாய் தந்தது மோக்ஷம் எனும் இறை நிலையை அடையத்தான்.
சமய நெறியில் தர்ம - அர்த்த - காம - மோக்ஷ எனும் வள்ளுவர் மோட்சத்துப்பால் வைக்கவில்லை என்பர், ஆனால் வள்ளுவர் ஒவ்வொரு குறளுமே மோட்சத்திற்கு வழி காட்டத்தான், அதை அவரின் இக்குறளில் காணலாம்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
        மற்றீண்டு வாரா நெறி.  356.                       மெய்யுணர்தல்

கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று  மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.



357. ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
        பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
ஒருவன் உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.


358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
        செம்பொருள் காண்ப தறிவு.  

மீண்டும் மீண்டும் பிறப்பு எனும்  அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

37. அவாவறுத்தல்

361. அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
        தவாஅப் பிறப்பீனும் வித்து. 

எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் மீண்டும் மீண்டும்  வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர். 

362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
        வேண்டாமை வேண்ட வரும். 

பிறப்புத் துன்பத்தினை உணர்ந்தவன் ஒன்றினை விரும்பினால், அவன் பிறவாமை என்பதனையே விரும்புதல் வேண்டும். அவன் ஆசை இல்லாமையை விரும்ப, அவனுக்கு அப்பிறவாமை உண்டாகும்.


அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 

திறந்தெரிந்து தேறப் படும்.   குறள் 501:  தெரிந்துதெளிதல்
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

அறம், பொருள், இன்பம் - மூன்றோடு உயிர் அச்சம் எனச் சொல்லும் வள்ளுவரே - இந்த உயிரின் காலம் என்பதை
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
  விழிப்பது போலும் பிறப்பு - குறள் 34:9
உயிர் அச்சம் என்பது உறுதிப் பொருளான வீடுபேறை அடைய அறவழியையே கூறுவார்


.

No comments:

Post a Comment