Wednesday, September 11, 2019

பிராமி எழுத்துக்கள் குடும்பம்.

 பிராமி எழுத்து முறை: தென் ஆசியா முழுவதும் பொமு 3 முதல் நூற்றாண்டு முதல் பொஆ 5ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் பல  மொழிகளுக்கும்  பயன்படுத்திய எழுத்துக்கள் பிராமி ஆகும்.

கல்வெட்டு மொழிகள்

அசோகரின் 3ஆம் நூற்றாண்டு காலத்திய  பிராகிருத மொழி கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களிலேயே எழுதுப்பட்டுள்ளன.
இலங்கையில் & தமிழகத்தில் கிடைத்தவை தமிழில் உள்ளன.
இலங்கையில் உள்ள சிங்கள மொழி கல்வெட்டுகள் முதலிய அனைத்தும் பிராமி எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளன.
Mulkirigala Raja Maha Vihara - பொமு 2ஆம் நூற்றாண்டு
Uththara Jayamaha Vihara - பொமு 2ஆம் நூற்றாண்டு

சமஸ்கிருத மொழி தனாவின் அயோத்தி பொமு 1ஆம் நூற்றாண்டு பிராமி கல்வெட்டு.
800px-Dhanadeva_Ayodhya_inscription.jpg
சமஸ்கிருத ஹதிபாதா கோசுண்டி கல்வெட்டுகள்  பொமு 1ஆம் நூற்றாண்டு (ஜான் கோண்டா போன்ற சில அறிஞர்கள் இவற்றை பொமு 2 ஆம் நூற்றாண்டு வரை தேதியிட்டுள்ளன)
800px-Dhanadeva_Ayodhya_inscription.jpg

பிராமி எழுத்துக்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய ஆய்வு நூல்கள், பல்வேறு மொழியில் எழுத்துரு வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி நூல்களாகும்

On the Origin of the Indian Brahma Alphabet (German 1895, English 1898)   Georg BühlerHarry Falk's Schrift im alten Indien. Ein Forschungsbericht mit Anmerkungen 1993


பிராமி குடும்ப எழுத்து முறை ஒலி அடிப்படையில் உருவாகின. அதையே அனைத்து மொழிகளும் பயன் படுத்தின. காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.

தமிழ் பிராமி - நாம்  புரிந்து கொள்ள, புகளூர்  கல்வெட்டைப்  பார்ப்போம்.
உள்ள எழுத்தின் படிப்பு
மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கொஆதன செலலிருமபொறை மகன
பெருஙகடுஙகொன மகன ளங
கடுஙகொ ளஙகொ ஆக அறுததகல
திருந்திய படிப்பு
மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோஆதன் செல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் [இ]ளங்
கடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்தகல்
செய்தி : யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்குச் சேரமன்னர் செல்லிரும்பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை.
சங்க கால சேர அரசர்களின் பெயர்களோடு பொஆ 2ம் நூற்றாண்டு  புகளூர் கல்வெட்டு  -புள்ளியோ, எகர ஏகார, ஒகர ஓகார வேறுபாடோ கல்வெட்டில் இல்லாததை கவனிக்கவும். இகரமும் விடுபட்டுள்ளது
சேர மன்னர் இரும்பொறை (கல்வெட்டில் இரும்புறை என்று எழுதப் பட்டுள்ளது) அடித்த காசுகள் கரூர் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.

பிராகிருதத்தில் இல்லாத தமிழுக்குரிய ற,ழ,ன,ள முதலிய எழுத்துக்களுக்கு வடிவங்கள் உருவாக்கப்பட்டன.  டகரத்தை உருமாற்றி றகரமும் (அக்காலத்தில் றகரம் டகரம் போல் உச்சரிக்கப்பட்டது), நகரத்திலிருந்து னகரமும், லகரத்திலிருந்து ளகரமும், ட³(d)கரத்தில் இருந்து ழகரமும் உருவாக்கப்படடன. எ, ஒ என்ற குறில் எழுத்துக்களை ஏகார, ஓகார எழுத்துக்களின் மீது புள்ளியினை வைத்து உருவாக்கினர். [பிராகிருதத்தில் எ, ஒ கிடையாது] (தமிழில் எ, ஒ’விற்கு புள்ளி வழக்கம் வீரமாமுனிவர் காலம் வரை நீடித்தது) தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்கள் பொதுவாக கைவிடப்பட்டன. அசோக பிராமியின் கூட்டெழுத்து முறையும் கைவிடப்பட்டது.

 தமிழ் மெய் எழுத்துகளிலும், பின்னர் உயிர் மெய்யிலும் சிறப்பு எழுத்துக்கள் "ள" "ற" "ன"; இவை வட மொழியில் கிடையாது, எனவே தான் தமிழுக்கே தனியாய் இவை பீனர் உருவாகியவை ஆதலால் கடைசி எழுத்துக்களாய் சேர்த்தார் தொல்காப்பியர்  என பல அறிஞர்கள் கூறியதை பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.


தமிழ் உணர்வாளர்களால் தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்திலிருந்து தான் உரு பெற்றது என்பதை ஏற்க இயலாமல் போக, கே.பி.அறவாணன் ஒரு போலி ஆய்வு கட்டுரை படித்தார், ஆனால் ஆய்வுலகம் ஏற்கவில்லை என்கிறார் பேராசிரியர்.
(வடமொழி என்கையில் சமஸ்கிருதம் என்பதைவிட அதன் பேச்சு வழக்கு மொழியான பிராகிருதத்தையே குறிக்கும்)
மிகவும் பழமையான வடமொழி கல்வெட்டுகளில் வடமொழியின் 33 மெய் எழுத்திற்க்கும் உரு உள்ளது.

தமிழில் மொத்தம் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18 ஆகும், ஆனால் கல்வெட்டுகள்ளில் ஆரம்பங்களில் உயிர் எழுத்த் 8 மட்டுமே, பின் 10 உள்ளது, அதே போலவே மெய் எழுத்துக்களும், முழுமையாய் உரு பெற்றது பொஆ 5ம் நூற்றாண்டில் தான்.தமிழிற்கே சிறப்பு ஒலியான ழ ள ற ந இவற்றில் ழ தவிர உரு பெற்றதும் மிகப் பிற்காலம் தான்



பிராகிருதம் வடமொழிக் குடும்பத்தை குறிக்கின்றது..

சமஸ்கிருதம்-  பிரக்ருதி (மூலம்) அந்த பிரக்ருதியில் தோன்றிய அல்லது வரும் மொழி எனவே பிராகிருதம் என்று அழைக்கப்படுகிறது

வேத காலத்தில் பேசப்பட்ட சம்ஸ்கிருதம் பாணினியால் (பொமு5ஆம் நூற்றாண்டு) செம்மை செய்கையில் மிகவும் கடின செய்யுள் மொழியானதால், அது பேச்சு வழக்கை பிராகிருதம் மற்றும் பாலி மொழியாக கிளை பெற்றது. பாணினிக்க்க்கு  பிற்பாடு  சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது.  சம்ஸ்கிருத மொழியை  சமணர்கள்தான்  இந்தியா முழுக்கக் கொண்டு சென்று பரப்பினர்.

சம்ஸ்கிருதம் அறிவியக்கத்துக்காக்க செம்மை செய்யப்பட்ட மொழி. சம்ஸ்கிருதம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அனைத்துலக அளவில் மிக அதிகமான அறிவியல் நூல்களைக் கொண்ட அறிவியல்மொழியாகவே இருந்துள்ளது. கணிதம், வானவியல்,மருத்துவம், சிற்பவியல் என அதிலுள்ள பலநூல்கள் இன்றும் அறிவியலாளர்களால் ஆராய்ச்சிக்காக பயிலப்படுபவை. இன்றும் நம்ம்மிடம் மருத்துவமும் சிற்பவியலும் சம்ஸ்கிருதக் கலைச்சொற்கள் இன்றி செயல்படமுடியாதவையாகவே உள்ளன.
சில உளறல்கள் இணையத்தில் 
 வீ.அரசு ஆரம்பத்தில் நடுநிலையாளர் போல ஆரம்பித்து பல நூறு பொய்களை கட்டுக் கதைகளை - மென்மையாய் பேசி நாசிய் வெறியர் பாஷைக்கு செல்கிறார். வெறுப்பை தூண்டும் கிறிஸ்துவ மதவெறி தேவநேயன் வழியில் பொய்கள்.

புலிமான் கோம்பை கல்வெட்டு பற்றியவை பொய்கள் - 3rd or 4th century bce only and not reported
முனைவர் இராஜவேலு
தமிழ் பிராமி கல்வெட்டு அனைத்தையும் எடுத்து வரிசைக் கிரமமாய் எழுதினால் பொ.ஆ 4ம் நூற்றாண்டு வரை உள்ளவை அனைத்தும் A4 பக்கத்துள் அடங்கிவிடும் என்பார் வரலாற்றுஅறிஞர் பி.ஏ.கிருஷ்ணன்.  இந்த ஆதாரம் கொண்டு ஒரு பேராசிரியர் வெறுப்பு விதைப்பது ஏன்?
 இந்தியாவில் ஐரோப்பிய அடிமை மனநிலை மேற்கண்ட ஐரோப்பிய மேட்டிமை நோக்கை அப்படியே அள்ளி தன் கருத்தாக  பிரிவினை வளர்க்க தமிழ் வியாபார ஆராய்ச்சியாளர் கல்வெட்டுகளில் சமஸ்கிருதம் அதிகம் இல்லை என்பதை  அமெரிக்கா யேல் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் இ.அண்ணாமலை விளக்குவது
கல்வெட்டுகளில் பயின்று வரும் மொழி, இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதன் காரணம் என்ன?
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:  சங்கக் கவிதைகளின் மொழியும் சமகால பிராமிக் கல்வெட்டுகளின் மொழியும் தனித்து நிற்கின்றன. கம்பராமாயணத்தின் மொழியும் சோழர் காலக் கல்வெட்டுகளின் மொழியும் வேறானவை. இதற்குக் காரண்ங்கள் பல. சில காரணங்கள் ஊகங்களே. ஒரு காரணம், எழுதப்பட்ட பொருள். கவிதையின் பொருள் கற்பனை கலந்தது. இந்தக் கற்பனைக்கு ஒரு மொழி சார்ந்த ஒரு மரபு இருந்தது. கல்வெட்டுகளின் பொருள், கொடை, போர் வெற்றி, கோயில் பராமரிப்பு முதலிய உலகியல் சார்ந்தது. இன்றும் அரசு ஆவணங்களின் மொழிக்கும் நவீன இலக்கிய மொழிக்கும் வேறுபாடு உண்டு.
இரண்டாவது காரணம், எழுத்தின் நோக்கம். இலக்கியம், மொழித் திறம் படைத்தவர்கள் படித்து இன்புற எழுதுவது. கல்வெட்டு, குறைந்த படிப்பறிவு உள்ளவர்களும் படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டது. இதனால் கல்வெட்டுத் தமிழில் பேச்சுத் தமிழின் கலப்பைப் பார்க்கலாம்.
மூன்றாவது காரணம் புரவலர்களின் மொழிக் கொள்கையும் நாட்டின் மொழி நிலையும். பிராமிக் கல்வெட்டுகளில் சுட்டப்படும் உறவிடங்களைத் தானமாகப் பெற்றவர்கள் பிராகிருதம் பேசிய சமணத் துறவிகள். இந்தக் கல்வெட்டுகள் தமிழும் பிரகிருதமும் கலந்து எழுதப்பட்டிருக்கின்றன. இதே சமணர்கள் தாங்கள் தமிழில் கவிதை எழுதும்போது தமிழ்க் கவிதை சார்ந்த மொழி மரபை – பிற மொழி கலக்காத, கலந்தாலும் தமிழாக்கப்பட்ட மொழியை – பின்பற்றுகிறார்கள். சோழ அரசர்கள் தங்கள் பேரரசுத் தகுதியை நிலைநாட்ட இந்தியாவிற்கு வெளியேயும் அரசவைகளில் கோலோச்சிய சமஸ்கிருதத்தைத் தழுவி அதைக் கல்வெட்டுகளில் தங்கள் பெருமையைப் பறைசாற்றப் பயன்படுத்தினார்கள். இதனால் கல்வெட்டுகளில் அரசனின் வம்சப் பெருமையையும் போர் வெற்றிகளையும் புகழும் மெய்க்கீர்த்தி சமஸ்கிருதத்தில் அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழில் இருக்கும். ஆனால் இது போன்ற புகழ்ச்சியுரை இலக்கியத்தில் பாடாண்திணையாக வரும்போது நல்ல தமிழில் இருக்கும். மேலே சொன்ன காரணத்தால் கல்வெட்டுகளில் பிறமொழிச் சொற்கள் அதிகமாக இருக்கும். அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த பல கலைச் சொற்களும் பிராகிருதத்தில் இருக்கும்.
நான்காவது காரணம், மொழி வெளிப்பாட்டு வடிவம். இலக்கியம், கவிதை வடிவம் கொண்டது. கல்வெட்டு, உரைநடை வடிவம் கொண்டது. உரைநடையில் மொழியைப் பொறுத்தவரை அதிகச் சுதந்திரம் உண்டு. ..
http://www.vallamai.com/?p=625


இலக்கியம் என்பவை புலவர்கள், மொழி அறிவுடையோர் மட்டுமே பெரிதும் பயன்படுத்த, இது ஒலி- இல்க்கணம் யாப்பு என பல நிலையில் இயங்கும். ஆனால் எழுத்து பாமரரின் தேவை. இஸ்ரேலின் எபிரேய மொழிக்கு உயிர் எழுத்துக்கள் மிகப் பிற்காலம் வரை கிடையாது, அதாவது பொ.ஆ. 9ம்  நூற்றாண்டில் தான் சேர்க்கப் பட்டது.  ஹீப்ரு பைபிள் தொன்மங்கள் பொமு 2 -பொஆ 2ம் நூற்றாண்டு இடையே புனையப்பட்டவை 

No comments:

Post a Comment