வீரமணிக்கு அமெரிக்க சங்கம் சார்பாக வாழ்நாள் விருதா? ஒரு கேள்வி பதில்.
திடீரென அமெரிக்க வாட்ஸப் க்ரூப்களில் இருந்து இருந்து உள்ளூர் பத்திரிக்கைகள் வரை வீரமணிக்கு வழங்கப்பட இருக்கும் இண்டர்நேஷனல் விருது பற்றி அறிவிப்புகள் [கூகுள் - மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது]
அதில் - “அமெரிக்கன் மனிதநேய சங்கம் சார்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு 'மனித நேய வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது 1953ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. 1996ஆம் ஆண்டு புகழ்பெற்ற உயிரியல் அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) பெற்றுள்ளார். இவ்விருதினைப் பெறும் முதல் இந்தியர் ஆசிரியர் கி.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்” - என்ற வாக்கியத்தை கண்டவுடன், யுனெஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா வரை நமக்கு நீண்ட நெடிய புளுகு பாரம்பரியம் உண்டு என்பதால் மூன்றாம் அறிவில் பல்ப் எரிய ஆரம்பித்தது. இனி கேள்வி பதில்:
+++
அமெரிக்க மனிதநேய சங்கம் என்று ஒன்று உண்மையிலேயே உள்ளதா? அவர்கள் சாதனையாளர் விருது தருகிறார்களா?
உள்ளது, ஆம்
+++
அவர்கள் வீரமணிக்கு இவ்வருட வாழ்நாள் சாதனையார் விருதை வழங்குகிறார்களா?
இல்லை!!
செய்தியில் வந்தது போல, அமெரிக்க மனிதநேய சங்கம் 1953ல் இருந்து புகழ் பெற்ற பலருக்கும் விருது கொடுத்து வருவது உண்மை. [விருதாளர்களின் முழுப்பட்டியல் https://americanhumanist.org/w…/humanist-of-the-year-awards/]
ஆனால் வீரமணிக்கு கொடுப்பது அவர்களுடைய விருது இல்லை. அவர்களின் 2019 சாதனையாளர் விருது சல்மான் ரஷ்டிக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது Barry Kosmin என்பவருக்கும் ஏற்கனவே இவ்வருடம் ஜூனில் வழங்கப்பட்டுவிட்டது. [https://conference.americanhumanist.org/index.…/schedule2019]
+++
அப்போ வீரமணி யாருடமிருந்து விருது வாங்குகிறார்?
Periyar International என்பது அமெரிக்காவில் பெரியார் கொள்கைகளை பரப்ப 1994ல் “வீரமணி முன்னிலை வகிக்க” ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம் [http://periyarinternational.com]. அவ்வியக்கம் இந்த ஆண்டு அமெரிக்க மனித நேய சங்கத்தோடு இணைந்து ஒரு ஆய்வரங்கம் நடத்துகிறது. அந்த மாநாட்டில்தான் வாழ்நாள் சாதனையாளர் விருது வீரமணிக்கு வழங்கப்படுகிறது.
அதுதான் மாநாட்டில் மனிதநேய சங்கம் கலந்து கொள்கிறதே அப்ப அவர்கள் வழங்கும் விருது என்று ஏன் சொல்லக்கூடாது?
xxx கட்சியின் மாநில மாநாட்டுக்கு அமெரிக்க கான்சுலேட் அதிகாரிகளை கூப்பிட்டு அவர்கள் கையால் xxxக்கு விருது வழங்கிவிட்டு அதை எப்படி அமெரிக்கா தரும் விருது என்று சொல்ல முடியாதோ அது போலவேதான் பெரியார் இண்டர்நேஷனல் என்னும் திக அமைப்பு வழங்கும் விருதை மனிதநேய சங்கம் வழங்கும் விருது என்று சொல்ல முடியாது.
+++
அப்ப ஏன் இப்படி ஒரு செய்தி?
ஒரு வெளம்பரம்... மேலும் தமிழனுக்கு கமர்கட்டை கமர்கட் என்று சொல்லி கொடுத்தால் அவன் மனம் நிறைவடையாது. அதே கமர்கட்டை வெள்ளைக்காரன் கையால் வாங்கி Toffee என்று பெருமிதத்தோடு சுற்றும் முற்றும் காண்பித்துவிட்டு நக்கினால்தான் அவன் மனம் நிறைவடையும்.
https://www.facebook.com/permalink.php?story_fbid=1532437626899252&id=100003990872908
No comments:
Post a Comment