திருக்குறளில் அந்தணர் என்ற சொல் மூன்று முறை பயன்படுத்தி உள்ளார்.
இறைவனை அந்தணர்(பார்ப்பான்) எனக் கூறும் மரபை சங்க இலக்கியத்திலேயே காண்கிறோம். அந்தணர் என்பதை
அந்தணர்- அந்தம் + அணர். உலகின் இறுதிப் பொருளான வேதங்களினை கொண்டு இறைவ்னை
வழி காட்டுபவர் எனப் பொருள் படும்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543 செங்கோன்மை)
அந்தணர் போற்றும் வேத ங்களிற்கும் அதனின் தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
திருக்குறளிலேயே வேறு இரு குறட்பாக்களில் அந்தணர் என்ற சொல்லை வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
ஒழுக்கத்தில் நிலை நின்ற துறவிகள் எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவபவரே அறவோர்
வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.
உயிர்செகுத் துண்ணாமை நன்று. ( 259 புலான்மறுத்தல்)
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! (புறநானூறு, 6) (பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழிதியின் தலை இரண்டு இடத்தில் மட்டுமே வணங்கும்; சிவபெருமான் கோவிலிலும், ஆசீர்வாதம் செய்யும் அந்தணர் முன்னிலையிலும் மட்டும் தலை தாழ்த்துவான்)
சிலப்பதிகாரம்-15.அடைக்கலக் காதை
பார்ப்பனன் ஒருவன் தன் மனைவி செய்த பிழைக்கு பாவ நிவர்த்தி என வடமொழியில் கொடுத்த வாசகத்தைப் படித்து அறநூல்படி தானங்கள் செய்ய கோவலன் உதவியது உள்ளது.
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் - திரு 96
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை - திரு 263
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் - சிறு 187
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் - மது 474
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அந்தி அந்தணர் அயர கானவர் - குறி 225
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/5
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் - பரி 1/40
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 2/57
அந்தணர் காணும் வரவு - பரி 2/68
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை - பரி 3/14
நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை - பரி 4/65
புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு - பரி 6/45
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க - பரி 11/78
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப - பரி 11/79
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே - பரி 14/28
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - பரி 23/20
அந்தணர் தோயலர் ஆறு - பரி 24/61
கேள்வி அந்தணர் கடவும் - கலி 36/25
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் - கலி 99/2
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து - கலி 119/12
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் - கலி 126/4
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் - புறம் 2/22
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணும் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே-
தமிழர் வீடுபேற்றுக்கு – அறம்-பொருள்- இன்பம் இவற்றை அன்போடு இணைத்து காதலர்கள் இணையுமுன் வைதீகர்கள் கூறும் 8 வித திருமண முறைகளான – 1. பிரம்ம முறை 2. தைவ 3. ஆர்ஷ 4. பிராஜாபத்யம் 5அஸ¥ர, 6.கந்தர்வ 7.ராக்ஷஸ மற்றும் 8. பைசாச முறை, இவற்றில் கந்தர்வமுறையில் மணம் செய்தபின் இணைவர்.
துறை அமை நல் யாழ்த் துணைமையோர்- கந்தர்வர்கள்.
இறையனார் அகப்பொருளுரை நேரடியாக கந்தர்வர்கள் என்கிறது.
அன்பின் ஐந்திணைக் களவென்பது படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்
கந்தர்வ வழக்கம் எனமனார் புலவர்- இறையனார் அகப்பொருளுரை
தொல்காப்பியம்-செய்யுளியல்480
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்1
மறைமொழி தானே மந்திரம் என்ப.
2. திருச்சீர் அலைவாய்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
“தாதுண் தும்பி போது முரன்றாங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட” – மதுரை காஞ்சி 655, 656
No comments:
Post a Comment