வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50 இல்வாழ்க்கை
இந்த பூமியில் நீதி நூல்கள் காட்டும் அறநெறிப்படி வாழ்ந்து, மற்றவர்க்கும் வழி கட்டுபவர், வானுலகத்தில் உள்ள தேவர்களுக்கு ஈணையாக அவரை அறிந்தோரால் கருதப் படுவர் .
திருவள்ளுவர் இந்த குறளில் கூறுவது குடும்ப வாழ்வில் ஒருவன் நீதி நூல்கள் காட்டும் அறவழிபடியாக அதாவது இந்த அதிகாரத்தின் ஒன்பது குறட்பாக்களில் கூறிடபடி வாழ்பவனோடு இருப்பவர்கள் தெய்வத்திற்கு இணையாக மதிப்பார்கள் என்பதே பொருள்
திருவள்ளுவர் இந்த குறளில் மனிதன் தெய்வ நிலை அடைவதையோ, அல்லது முன்னோர் வழிபாட்டையோ கூறவே இல்லை, இந்தக் குறளின் அமைப்பில் மேலும் வைக்கப் படும் என உள்ள குறள்களை காண்போம்
ஒத்தது அறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். குறள் 214: ஒப்புரவறிதல்
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர் வாழ்கின்றவன் ஆவான், உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப் படுவான்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். குறள் 388: இறைமாட்சி.
நீதிநூல்கள் காடும் வழியில் குடிமக்களைக் காப்பாற்றும் அரசன் மக்களைக் காக்கும் கடவுளிற்கு இணையாக கருதப்படுவார்
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். குறள் 850: புல்லறிவாண்மை
உலகத்தில் உயர்ந்தோர் பலர் இருக்கிறது எனச் சொல்லும் மெய்ப் பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.
வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - எனும் குறள் வரியை வைத்து வள்ளுவத்தை சிறுமை செய்வோர் மட்டுமே தவறாக பொருள் கொள்ளுவர்
No comments:
Post a Comment