ஆசீவகமும்-அரசியலும்
22.04.2021 "இந்தியாவைப் பற்றி நூல்கள் எழுதியுள்ள பல வெளிநாட்டுப் பயணிகளுள் அல்பெரூணி என்ற பாரசீகப் பயணி, \"இந்தியர்கள், தத்துவம், கணிதம், வானியல் இவற்றில் சிறந்தவர்கள், சாதாரணமாகத் தெருக்களில் கூடும்","articleBody":" இந்தியாவைப் பற்றி நூல்கள் எழுதியுள்ள பல வெளிநாட்டுப் பயணிகளுள் அல்பெரூணி என்ற பாரசீகப் பயணி, \"இந்தியர்கள், தத்துவம், கணிதம், வானியல் இவற்றில் சிறந்தவர்கள், சாதாரணமாகத் தெருக்களில் கூடும் மக்கள் கூட தத்துவ விவாதங்களைச் செய்கின்றனர்' என்று பதிவு செய்திருக்கிறார். அந்த அளவுக்கு இந்த தேசம் தத்துவ மரபில் திளைத்தது. இந்திய தத்துவ மரபு அறிவார்த்தமானது என்பதோடு இரு விதமான ஆராய்ச்சிகளைத் தன்னகத்தே கொண்டது.
இந்த உலகில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி சுகமாக வாழ்வது எனக் கண்டறிவது ஒருவித அறிவியல் ஆய்வு. மற்றொன்று, இந்த உலகிற்கு நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதனை அறிவதற்கான ஆய்வு. இரண்டிலும் பாரத தேச அறிஞர்கள் வெற்றி கொண்டவர்களாக இருந்தனர். "மதம் என்றால் "கருத்து; என்று பொருள். தத்துவங்களின் அடிப்படையிலேயே சமயங்கள் இந்தியாவில் துளிர்த்தன. ஆதிசங்கரர் எழுபத்துரண்டு மதங்களை தர்க்கத்தில் வென்று அத்வைதத்தை நிலைநாட்டினார் என்று சொல்கிறார்கள். எனில், எழுபத்துரெண்டு விதமான சித்தாந்தங்கள் இங்கே இருந்திருக்கின்றன. சமணமும் பெளத்தமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின என்றால் இன்னும் சில சமயங்களும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. அவற்றுள் ஒன்று "ஆசீவகம்; இதனை "அஜீவகம்' என்றும் சிலர் குறிப்பிடுவதுண்டு. ஆசீவகம் தமிழகத்தில் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. ஆனால், முற்றிலும் அழிந்து போன சமயங்களில் ஒன்று ஆசீவகம். அது பற்றிய நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை. சமண, பெளத்த நூல்களில் அந்த சமயம் பற்றியக் குறிப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமானது \"மணிமேகலை'. பெளத்தக் காப்பியமாக அறியப்படும் மணிமேகலையில், \"சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை'யில் மணிமேகலை பத்து சமயங்களைச் சேர்ந்தவர்களோடு விவாதம் செய்வதாக வருகிறது. அதிலே ஆசீவக சமயமும் ஒன்று. ஆசீவகத்தைச் சேர்ந்த அறிஞரிடம் ஊழ் பற்றிய வினாக்களை மணிமேகலை எழுப்புகிறாள். அதனால் ஆசீவகம் ஊழ் (விதி) பற்றிய நம்பிக்கையுடைய சமயம். ஊழ் கோட்பாட்டை முழுமையாக நம்பியது என்பதோடு இறை மறுப்புக் கொள்கையையும் ஆசீவகம் கொண்டிருந்ததாக குறிப்புகள் உள்ளன. இறை நம்பிக்கையை மறுப்பது, ஊழ் கோட்பாட்டை வலியுறுத்துவது இரண்டும் வெவ்வேறு தளங்களில் அமைந்தவை. வைதிக சமயத்திற்கு எதிரானது ஆசீவகம் என்றும் கருத்துகளை முன் வைக்கின்றனர். இந்தக் கருத்துகளில் உடன்படுவதும் மாறுபடுவதும் அவரவர் விருப்பம். ஆசீவகம் பற்றிப் பேசுவோர் அது தமிழர் மதம் என்றும் தமிழர்கள் இந்துக்கள் அல்ல ஆசீவகர்கள் என்றும் ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். தமிழகம் முழுவதும் தமிழர்கள் அனைவரும் பின்பற்றிய சமயம் ஆசீவகம் என்பதான பிம்பத்தை கட்டமைப்பதற்கான அவசியம் என்ன? ஆன்மிக உலகம் பேசாத இந்த சமயம் பற்றி அரசியல் உலகம் பேசுவதற்கான காரணம் என்ன? தமிழன் ஹிந்து அல்ல என்று அவனை ஒரு பெரும் குழுவிலிருந்து பிரித்து நிறுத்துவதற்கான காரணம் என்ன? ஆசீவகம் வைதிக சமயம் என்றழைக்கப்படும் ஹிந்து தத்துவங்களுக்கு எதிரானது என்ற கருத்து ஏற்புடையதல்ல. விதிப்படி வாழ்க்கை என்பதும் மறுபிறவிக் கோட்பாடும் வைதிக சமயம் என்று சொல்லப்படும் சனாதனத்தின் கோட்பாடுகள். சனாதனம் உருவ வழிபாட்டை ஏற்கிறது. நல்வினை, தீவினை என்னும் நம்பிக்கையும் சனாதனத்தின் பாற்பட்டதே. இதில் ஆசீவகத்தின் தனித்துவம் என்று ஒன்றும் இல்லை. ஆசீவகம் தெய்வம் இல்லை என்ற கொள்கை கொண்டது. தமிழர்கள் தங்கள் வாழ்வியலில் முதற்பொருளாக தெய்வத்தைக் கருதியவர்கள். சிவன், முருகன், கொற்றவை, வருணன், இந்திரன் என்று பல தெய்வங்களை வணங்கி வழிபட்டவர்கள். உண்மை இப்படி இருக்க எப்படி ஆசீவகம் தமிழர் மதம் ஆகும்?

ஆசீவகம் துறவறத்தை வலியுறுத்திய மதம், நிர்வாண நிலை அடைவதே நோக்கம் என்று அனைவருமே ஒப்புக் கொள்கின்றனர். சீவகம் என்றால் வாழ்தல் ஆசீவகம் என்றால் வாழ்வைத் துறத்தல் என்று பொருள் வழங்கியது. சமீப காலமாய் ஆசீவகம் என்றால் ஆசு ஈவு அகம் எனப்பிரித்து பிழையற்ற தீர்வு தரும் இடம் என்று பொருள் தருகிறார்கள். அப்படியெனில் மக்கள் ஒட்டுமொத்தமாக அதனைப் புறக்கணித்திருப்பார்களா?
ஆசீவகத்தைத் தோற்றுவித்தவர் மற்கலிகோசலர் என்கின்றனர். வரலாற்று அறிஞரான ஏ எல் பாக்ஷம் தனது \"வியத்தகு இந்தியா' என்ற நூலில், சமண சமயத்தைத் தோற்றுவித்த மகாவீரரும் மற்கலிகோசலரும் பதினெட்டு ஆண்டுகள் ஒன்றாகவே தவம் செய்ததோடு தேசமெங்கும் யாத்திரை செய்தனர் என்றும் திகம்பர ஜைனர்கள் என்று சொல்லப்படும் ஆடைகளையும் கூடத் துறந்துவிட்ட நிலையை மற்கலிகோசலர் அறிமுகம் செய்தார் என்றும் அதிலே மஹாவீரர் உடன்படவில்லை என்றாலும் அனைத்தையும் துறப்பது என்ற வகையில் ஏற்புடையது என்று ஒப்புக் கொண்டதாகவும் பதிவு செய்திருக்கிறார். திகம்பர ஜைனத்தை தோற்றுவித்தவரை தமிழர் என்று ஏற்பதா?
வரலாற்றில், சந்திரகுப்தரின் மகனான பிந்துசாரர் ஆசீவகத்தை ஆதரித்தார் என்று குறிப்புகள் இருக்கின்றன. தமிழகத்தில் அப்படி ஆதரித்த மன்னர்கள் பற்றி குறிப்பு எங்கும் இல்லை. மஹாவீரரோடு வாழ்ந்தவர் தமிழரின் மதத்தை ஸ்தாபித்தார் என்பது அறிவுடைமை ஆகுமா? உத்தர பிரதேசம், பிகார் பகுதிகளில் பெருமளவில் நிலவிய இந்த சமயம் தமிழகத்திலும் இருந்தது என்பதை ஏற்கலாமே அன்றி அதைத் தமிழரின் சமயம் என்று ஏற்க முடியுமா?
மற்கலிகோசலரோடு இணைந்து இந்த சமயத்தைப் பரப்பியவர்கள் பூரண காசியபர், பகுத கச்சானர். இவர்கள் இருவருமே தமிழர்கள் இல்லை. திவ்யம், ஒளத்பாதம், ஆந்தரிக்ஸம், பெளமம், அங்கம், சுவாரம், வியஞ்சனம் என ஆசீவகம் பற்றிய நூல்கள் இருந்தன என்று சொல்லப்படுகிறது. இதிலும் தமிழ் இல்லை. தமிழரின் மதக் கோட்பாடுகள் தமிழ் அல்லாத மொழியில் இருக்கலாம் என்பதை ஏற்போமாயின் வேதத்தையும் தமிழர்களுக்கானது என ஏற்பதில் என்ன பிழை இருக்கிறது?
எல்லாவற்றிற்கும் மேலாக ஆசீவகத்தின் வடிவம்தான் தமிழகத்தில் இருக்கும் ஐயனார் வழிபாடு என்று அரசியலை தமிழகத்தின் கிராமங்களுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வோர். ஐயனார்தான் மற்கலிகோசலர் என்று புத்தகம் எழுதும் அளவுக்குத் துணிந்திருக்கிறார்கள். ஐயனார் தமிழகத்தின் பெரும்பாலானவர்களின் குலதெய்வம். ஐயனார் ஆலயங்களில் ஆயுதமேந்தி நிற்கும் போர்க்கோலம் கொண்ட ஐயனாரைக் காணலாம். இவர் எப்படி நிர்வாண முக்தி பற்றிப் பேசியவர் ஆவார்? தவிரவும், இறை நம்பிக்கையற்ற ஆசீவகம் ஆலயம் எழுப்பி உருவ வழிபாடு செய்வது சாத்தியமா? ஐயனார் ஆலயங்களின் சிறப்பே அங்குள்ள உருவாரங்கள் தான்.
மற்றொன்று, பல பெயர்களில் ஐயனார் உண்டு. ஒவ்வொரு கோயிலில் உள்ள ஐயனாருக்கும் தனித்துவமான வரலாறு உண்டு. பெரும்பாலும் தன் குலத்தைக் காப்பதற்குப் போரிட்டு வீர மரணம் அடைந்தவராக ஐயனார் இருப்பார். \"நடுகல் வழிபாடு' என்பது தமிழர் மரபு. வழிபாட்டை மறுக்கும் சமயத்தை இதோடு தொடர்பு படுத்துவது நகைப்புக்குரியது. மூதாதையர்களை வழிபடும் பித்ரு வழிபாடே ஐயனார் வழிபாடு. ஏனெனில் ஐயனாரை குலதெய்வமாகக் கொண்டவர்கள் அனைவரும் தாயாதிகள். அதனால்தான் அவர்கள் தங்களுக்குள் மணம் செய்துகொள்ளக்கூடாது என்ற விதி இருக்கிறது.
ஐயனார் கோவில்களில் அவருக்குப் பக்கத்தில் அவரது பரிவாரங்களும் துணையாக நிற்கும் தளபதிகளும் வணங்கப்படுகிறார்கள். போர் பற்றிய செய்திகள் அந்தந்தப் பகுதி சார்ந்ததாக இருப்பதையும் காண்கிறோம். உதாரணமாக திருச்செந்தூர் அருகில் அருஞ்சுனை காத்த ஐயனார் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அவரது ஆலயம் சுனைகளுக்கு நடுவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. அந்த நீர்நிலைகளைக் காப்பதற்காக தியாகம் செய்தவர் என்று அவருக்கு வரலாறு உண்டு. இப்படித் தமிழர் வாழ்வோடும் மண்ணோடும் சம்பந்தப்பட்ட ஐயனாரை எங்கோ மகாவீரரோடு இருந்தவர் என்று நிறுவ முயலுவதில் உள்ள அரசியல் என்ன? நீடித்து நிற்கும் உயிர்துடிப்பு மிக்க கலாசாரத்தைத் துண்டாடுவதற்கும் குழப்புவதற்குமான அவசியம் என்ன?
எழுபத்துரண்டு சமயங்கள் இருந்ததாகச் சொல்வதில் உண்மை இருக்கலாம். அவரவர் விரும்பும் தெய்வத்தை, நம்பும் சித்தாந்தத்தைப் பின்பற்றுவதற்கு அனைவர்க்கும் உரிமை உண்டு. விவேகானந்தர் சொன்னதைப்போல "சனாதன தர்மம் ஒவ்வொரு மனிதனும் தனி மதம் என்னும் அளவுக்கு விரிவடையும் தன்மை கொண்டது; சித்தாந்தங்களை உள்ளடக்கியது.
வரலாறு, சமயம் இரண்டும் ஆராய்ச்சிக்கு உட்படவேண்டியவைதான். ஆராய்ச்சி அறிவியல்பூர்வமாய் இருக்க வேண்டுமே அன்றி அனுமானங்களின் அடிப்படையில் இருத்தல் தகாது. ஐயனார் தமிழரின் தியாகத்தை, வீரத்தை, காவல் குணத்தை விளக்கும் வடிவம். அவரை அரசியல் லாபங்களுக்காக அழிந்துபட்ட ஒரு மதத்தின் எச்சமாகக் காட்ட முயல்வது, தமிழருக்கும் தமிழ் மண்ணுக்கும் அதற்காக தன்னையே தியாகம் செய்த ஐயனாருக்கும் செய்யும்
அநீதியாகும்.
கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.
ஆயிரக்கணக்கான ஆசீவகர்களை பேரரசர் அசோகர் படுகொலை செய்தாரா? ஆதாரம் என்ன?
-----------------------
டெல்லி மோதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தாரால் 1982ல் பதிக்கப்பட்ட , ஜான் எஸ் ஸ்ட்ரோங் எழுதிய “அசோகா த லெஜெண்ட் “ என்ற நூலில் ஒரு பகுதியாக கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “அசோகவதனா” என்றொரு சம்ஸ்கிருத நூலின் மொழிபெயர்ப்பு உள்ளது . இது அலேக்ஸ் வேமன் என்பவர் தலைமையில் அறுவர் உறுப்பினராக இருந்த ஆசிரியர் குழுவால் நூலாக்கம் செய்யப்பட்டது. கூடுதல் தகவல் ஆசீவக ஆய்வர் பாஷம் இதனை சரிபார்த்துள்ளார்.. இந்நூலின் தகவல்கள் திபெத்திய, சீன, ஜப்பானிய, இலங்கை மற்றும் மியான்மார் நாடுகளின் பழைய நூல்களின் செய்திகளுடன் ஒப்பிட்டு சரி பார்க்கப்பட்டுள்ளன.
அதில் உள்ள தகவல்களை மத வெறிக் கொலைகளுக்கு ஆதாரம் எனலாம்.
-----------------------------------------------------------------------------
பந்தவர்தனா என்ற ஊரில் நிர்கிரந்த ஞானாதிபுத்ர எனப்பட்ட மகாவீரரின் அடியவர் ஒருவர் புத்தரின் படத்தை அவமதித்தார் என்ற குற்றத்துக்காக மாமன்னர் அசோகர் ஒரே நாளில் புத்தர் படத்தை இழிவு படுத்திய துறவியையும் அவ்வூரில் இருந்த அனைத்து ஆசீவகர்களையும் கொல்லுமாறு ஆணையிட்டார்.
அப்போது18000 ஆசீவகர்கள் கொல்லப்பட்டனர்.
பாடலிபுத்திரத்தில் இதே காரணத்துக்காக அசோகர் அரச ஆணைப்படி ஒருவரின் குடும்பமே அவர் வீட்டில் வைத்து கொளுத்தி எரிக்கப்பட்டது.
பின்னர் ஒரு நிர்கிரந்தத் துறவி யாராயினும் அவர்தலையைக் கொண்டு வருபவருக்கு ஒரு தினார் பரிசு அளிக்கப்படும் என்று பேரரசர் அசோகர் அரச ஆணை பிறப்பித்தார்
அசோகரின் படுகொலைகள் அவர் புத்த மதத்தைத் தழுவியபின் செய்யப்பட்டவையே. ஏன் அறவழி அசோகர் கொலை வெறி அசோகராகவும் இருந்தார் என்பதற்கான காரணங்களும் ஜான் எஸ் ஸ்ட்ரோங் எழுதிய நூலில் அலசப்பட்டுள்ளன.
அதில் முக்கிய காரணம் அசோகர் அரசியலுக்கு சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை பயன்படுத்தினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
அசோகர் காலத்தில் அதாவது புத்தர், மற்கலி கோசலர் மற்றும் மகாவீரர் மறைந்த இரண்டு மூன்று நூற்றாணடுகளுக்குப் பின்னும், ஐந்து நூற்றாணடுகளுக்குப் பின் நூல் எழுதப்பட்ட காலத்திலும் ஆசீவக மதத்தாராகத்தான் மகாவீரரின் அடியார்கள் கருதப்பட்டனர் என்பதையும் இத்தகவல் உணர்த்துகிறது. இதுவே ஆசீவகத்திலிருந்துதான் மகாவீரரின் சமயம் கிளைத்தது என்பதையும் உணர்த்தும்
No comments:
Post a Comment