சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்து நூல் சேர அரசர்களை பற்றிய செய்தி- கதைகளை பெருமளவில் கூறுவது
சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்து நூல் சேர அரசர்களை பற்றிய செய்தி- கதைகளை பெருமளவில் கூறுவது புகழூர் தமிழ் பிராமி கல்வெட்டு 3 பரம்பரை சேர அரசர்கள் பெயர்களை கூறுகிறது என வரலாற்றூ அறிஞர்கள் பெரும்பான்மை கருது ஒற்றுமை உள்ளது.
https://www.tamilvu.org/ta/tdb-titles-cont-inscription-html-kollirumpurai-coins-280455
இந்த கல்வெட்டு & காசுகள் அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் காலம் பொஆ. 188 முதல் 243(CE) என்பதாக அறிஞர்கள் குறிக்கிறார்கள் https://en.wikipedia.org/wiki/Cenkuttuvan
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்,
கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கான் நவில் கானம் கணையின் போகி, 5
ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை
இன் பல் அருவிக் கங்கை மண்ணி,
இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு,
மாறா வல் வில் இடும்பின் புறத்து இறுத்து,
உறு புலி அன்ன வயவர் வீழச் 10
சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி,
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து
பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழு முதல் துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் 15
பல் இருங்கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி, வெந்திறல்
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து,
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்துக் 20
கெடல் அருந் தானையொடு,
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணம் அமைந்த,
காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு.
# | அரசர் |
1 | சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை |
2 | சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை |
3 | சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் (என்ற) பெருஞ்சேரலாதன் |
4 | சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் |
5 | சேரமான் பெருங்கடுங்கோ(பாலை பாடிய) |
6 | ,இளங்கடுஙகோ (மருதம் பாடிய) |
7 | சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் |
8 | பல்யானைச் செல்கெழு குட்டுவன் |
9 | சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை |
10 | களங்காய்க் கண்ணிநார் முடிச்சேரல் |
11 | செங்குட்டுவன் |
12 | சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை |
13 | ஆடுகோட்பாட்டுச் சேட் சென்னி சேரலாதன் |
14 | சேரமான் யானைக் கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை |
15 | சேரமான் கோக்கோதை மார்பன் |
16 | சேரமான் மாறிவெண்கோ |
17 | சேரமான் குட்டுவன் கோதை |
18 | சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை |
19 | சேரமான் கணைக்கால் இரும்பொறை |
20 | தெறியவில்லை |
21 | சேரமான் வஞ்சன் |
No comments:
Post a Comment