Saturday, December 17, 2022

 தமிழில் பலர் என்பதைக் குறிக்க, பல விலங்கு இருப்பதைக் குறிக்க, ஏன் பல உயிரற்ற பொருட்கள் இருப்பதை எல்லாவற்றிற்கும் நாம் "கள்" விகுதி போட்டு கூறுகிறோம். இது பண்டைத் தமிழில் இல்லாமல் இடைக் காலத்தி நுழைந்தது என இலக்கியங்கள் உறுதியாகக் காட்டுகிற்து. இஸ்ரேல் பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் ஷுல்மன் எழுதிய நூலில் குறிப்பிட்டு, திருக்குறள் பல்லவர் அல்லது பிற்காலப் பாண்டியர் காலம் எனக் கூறி உள்ளார்

 
தமிழ் இலக்கண ஆராய்ச்சியில் பெயர் பெற்ற பேராசிரியர். அகத்தியலிங்கம் நூல், தமிழக அரசில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீட்டு நூலை ஆதாரமாகத் தருகிறோம்

  கள் விகுதி இல்லாமல் வரும் அஃறிணைச் சொற்கள், தமக்கு முன்னோ பின்னோ வரும் அஃறிணைப் பன்மை வினை முற்றுகளால் பன்மை என அறியப்படுகின்றன.
    காலே பரிதப்பினவே     (குறுந்தொகை.44 : 1)
    கலுழ்ந்தன கண்ணே     (நற்றிணை.12 : 10)
    நெகிழ்ந்தன வளையே (நற்றிணை.26 : 1)

இங்கே கால், கண், வளை (வளையல்) என்னும் அஃறிணைப் பெயர்ச்சொற்கள் முறையே பரிதப்பின (நடந்து நடந்து ஓய்ந்தன), கலுழ்ந்தன (அழுதன), நெகிழ்ந்தன (கழன்றன) என்னும் பன்மை வினைமுற்றுகள் கொண்டு முடிவதால் கால்கள், கண்கள், வளைகள் என்ற பன்மைப் பொருளை உணர்த்தல் காணலாம். இவ்வாறு பன்மை உணர்த்தும் முறையே சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.

தொல்காப்பியர்.கள் விகுதியோடு வாராத அஃறிணை இயற்பெயர்கள், அவை கொண்டு முடியும் வினைகளை வைத்து ஒருமை, பன்மை தெரியப்படும் என்றார் 
  தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
  ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே             (தொல்.சொல். 171)

 அஃறிணை ஒருமைப் பெயர்ச்சொற்களோடு கள் விகுதியைச் சேர்த்துப் பன்மையாக்கும் முறையும் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.
மயில்கள்     (ஐங்குறுநூறு.29     கண்களும் கண்களோ (கலித்தொகை.39: 42)
    அரண்கள்     (பதிற்றுப்பத்து.44: 13)    சொற்கள்     (கலித்தொகை.81: 13)
    தொழில்கள்     (கலித்தெகை.141: 4)
சங்க இலக்கியம் எனும் பாட்டுத் தொகை 18 நூல்களில் 16இல் 12 முறையும் பரிபாடலில் 3 முறையும் கலித் தொகையில் 10 முறை வந்துள்ளது
  

 உயர் திணை மாந்தர்களை கள் விகுதியோடு பரிபாடலில் 1 முறையும் கலித் தொகையில் 3 முறை & திருக்குறளில் 3 முறை வந்துள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலையில் இது பல இடங்களில் வந்துள்ளது






















No comments:

Post a Comment