பெரியார் சிலப்பதிகாரத்தைப் பற்றிச் சொல்வது இது:
"சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், ஆபாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப் பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப் படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்."
-விடுதலை 27.2.1951
தமிழனுக்கென்று சரித்திரமே கிடையாது. ஆரியன் எழுதியதே சரித்திரம். அதைப் போன்று தமிழன் இலக்கியம் எல்லாம் ஆரியன் வந்தபின் எழுதப்பட்டதே!
விடுதலை 20.10. 1966
"அந்தக் காலத்தில் அத்தேவதாசிகளின் தம்பியும் மகனும் அப்பனும் நடந்து கொண்டது போலத்தான இன்றைய நம் தமிழ் அறிஞர்களும்... நடந்து கொள்கிறார்கள்! அப்படி நடந்து கொள்வதில் சிறிது கூட, ஒரு சிறிது கூட வெட்கப்ப்டுவதில்லை.
- விடுதலை 12.4. 1965
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் 27.8.1971 அன்று பெரியார் உரையாற்றினார். மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் உதிர்த்த முத்துக்களில் சில:
1. ...என்ன தமிழ்த்தாய் வாழ்த்து? தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3000 ஆண்டுகள் இருந்திருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து நமக்குச் செய்தது என்ன?
3. இங்கிருக்கும் மாணவர்கள் பலர் நெற்றியில் சாம்பலடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் இதற்குக் காரணம் இங்குள்ள ஆசிரியர்கள் தான். அவர்கள் அறிவற்றவர்கள் என்பதையே காட்டுகிறது.
4. நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளாகும்.
பெரியார் ஒதுக்கித் தள்ளச் சொன்ன தமிழ் இலக்கியக் குப்பைகள்:
சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், கம்பராமாயணம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பாரதி, இன்னபிற.
திருவள்ளுவரையாவது ஒப்புக் கொள்கிறாரா?
No comments:
Post a Comment