Saturday, July 30, 2022

செஸ் - சதுரங்கம் - தொன்மை - சைவ வைணவம்

பாரதத்தில் தோன்றியதா சதுரங்க விளையாட்டு? 

Chess என்பது சதுரங்கம் என்பதின் ஆங்கில வடிவம் என்பது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? ஆம். முதலில் Chess என்பது ஒரு சுருக்கம் (abbreviation) என்பதே ஆநேகமாக யாருக்கும் தெரிந்திராது. அப்படியானால் இதன் விரிவு என்ன? இதனைத் தெரிந்து கொண்டால் முதலில் கேட்ட வினாவுக்கு விடை கிடைத்து விடும். Chess என்பதின் இந்தியப் பெயர் என்ன? சதுரங்கம். பலரும் இதனைச் சதுரம் சதுரமாகக் கட்டங்கள் இருப்பதால் இந்தப் பெயர் என்று தாங்களாக ஊகித்துக் கொள்கிறார்கள். இது தவறு. இந்த விளையாட்டு இரண்டு மன்னர்களுக்கிடையே நிகழும் யுத்தமாக அமைக்கப் பட்டது. இராஜாக்கள் இருவர் தங்கள் மந்திரி/ தளபதி மற்றும் படைகளுடன் மோதுகிறார்கள். முற்காலத்தில் படைகள் நான்கு விதமாக இருக்கும் – தேர்ப் படை, யானைப்படை, குதிரைப் படை, காலாட் படை – என்று. இதனை ஸம்ஸ்க்ருதத்தில் ரத, கஜ, துரக, பதாதி (தேர், யானை, குதிரை, காலாட் படை) என்பர்கள். இவற்றுக்கு சதுரங்க சைன்யம் என்று பெயர். சதுர் என்றால் நான்கு. நான்கு அங்கங்களால் ஆன படை என்று பொருள்.



இவை ஆங்கிலத்தில் முறையே chariot, elephant, horse, (foot) soldier எனப்படும். இவற்றின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து ஒரு சுருக்கத்தை (abbreviation) ஏற்படுத்தினால் ches என்று வரும். இதனுடன் இன்னொரு sஐ plural markerஆகச் சேர்த்து chess என்று ஆக்கியிருக்கிறார்கள். ஆகச் சதுரங்கம் என்பதன் ஆங்கில வடிவம்தான் chess. ஆயின் முதலில் இப்படிப் பெயர் வைத்துவிட்டாலும் பின்னர் விழித்துக் கொண்டு மிகவும் தந்திரமாகச் சூழ்ச்சி செய்து இது பாரத நாட்டில் தோன்றிய ஒரு அற்புதமான விளையாட்டு என்பதனை மறைக்க முயன்றனர். அதற்கு chess என்று ஒரு abbreviationஆகக் கொடுத்தது ஒரு வசதியாகப் போயிற்று. இதன் விரிவை எங்கும் பிரசாரப் படுத்தாமல் காத்தனர். மற்றும் இன்று காணும் chess விளையாட்டில் யானை உள்ளது, குதிரை உள்ளது pawn எனப்படும் காலாட்படை உள்ளது. தேர் எங்கே? இங்குதான் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி உள்ளது. அதனைத் தந்திரமாக bishop என்று மாற்றி விட்டார்கள். War game என்று அறியப்படும் ஒரு விளையாட்டில் bishopக்கு என்ன வேலை? இது நம் நாட்டில் உண்டான விளையாட்டு என்பதனை மறைக்கவும் என்னவோ இங்கிலாந்திலிருந்து வந்தது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போதெல்லாம் வரும் chess விளையாட்டுக் காய்களில் ராஜாவின் தலையில் ஒரு சிலுவையை வேறு வைத்து என்னவோ இது தங்கள் நாட்டுக் கண்டுபிடிப்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் chess என்பது ஒரு சுருக்கம் (abbreviation) என்றும் அதன் விரிவு என்ன என்றும் அறிந்து கொண்டால் உண்மை வெளி வந்து இவர்களின் சூழ்ச்சி தகர்ந்து விடுகிறது.


----------------------------------------
சதுரங்கம் = சதுர + அங்கம் (சம தூரக் கட்டங்களின் ஆட்டம்) என்பதில்
சதுரங்கத்தின் தோற்றம் தமிழ்நாடே என்பதே எளிதாய் புரியும்.
வேர்ச்சொல்லில் மட்டுமல்ல வேறு வழிகளிலும் இதை நிரூபிக்க முடியும்.
தமிழர்களின் சதுரங்கம் இந்தியாவிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பெர்சியா எனப்படும் இன்றைய ஈரானுக்கும், அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் சென்றது. 5 ம் நூற்றாண்டில் சீனாவுக்கும், 7 ம் நூற்றாண்டில் ரசியாவுக்கும் எடுத்துச் செல்லப் பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.
தென் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் “வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே” என்ற தொல்காப்பிய வரிகளில் வரும் “வல்” என்ற சொல்லானது இன்றைய சதுரங்கத்தின் சங்ககாலப் பெயராகும். மேலும்,
“கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய”
என்ற அகநானூற்றின் வரிகள் சங்ககாலத்தில் இவ்விளையாட்டு நிலைபெற்றிருந்ததைத் தெளிவாக உணர்த்துகிறது.
மேலும், “வல்லுப் பலகை” என்ற பெயர் கலித்தொகையில் வருவதால் பலகை போன்ற அமைப்பு செய்யப்பட்டு அதன்மீது இவ்விளையாட்டை விளையாடியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது..!
2019 ஆம் ஆண்டு “குஜராத்தின் லோதல்” பகுதியில் கண்டெடுக்கப் பட்ட சதுரங்கப்பலகை சிந்துசமவெளி நாகரிக காலத்தை சேர்ந்து என்று அறிஞர்கள் குறிப்பிடுவதையும், கீழடியில் கிடைத்த சதுரங்க காய்களைக் கொண்டும் இந்த விளையாட்டு குறைந்தபட்சம் இன்றிலிருந்து 4500 ஆண்டு களுக்கு முன்பே இந்த பாரத தேசத்தில் விளையாடப்பட்டது என்பதை உறுதி செய்யலாம்.!
கீழடி அகழ்வாராய்ச்சி யில் சூளையில் சுடப்பட்ட சதுரங்கத்தின் ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன பல்வேறு வடிவமைப்புடன் இவை விளங்குகின்றன இதுபோன்ற சுடுமண் ஆட்டக்காய்கள் காஞ்சிபுரம் திருக்காம்புலியூர் திருக்கோவிலூர் போவோம் பட்டி பூலாம்பட்டி போளூர் போளுவாம்பட்டி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன கீழடி அகழ்வாராய்ச்சி யில் கிடைத்த சான்றுகளால் அவை கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அதாவது சுமார் 3000 ஆண்டுகள் தொன்மையானது ஆக விளங்குகிறது பிற்காலத்தில் தங்கம் மற்றும் கண்ணாடி ஆகியவற்றில் செய்யப்பட்ட ஆடைகளும் பயன்பாட்டில் வந்திருந்தன.
தவிர சதுரங்க வல்லபநாதர் என்ற இறைவனின் பெயரில் ஆலயம் ஒன்று தஞ்சை அருகே திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே பாமணி ஆற்றின் கரையில் உள்ள திருப்பூவனூர் என்ற கோயிலின் புராண வரலாற்றில் சதுரங்க ஆட்டம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
புராண இந்தப் புராண வரலாற்றின்படி வசூ சேன மன்னனுக்கு மகனாக பிறந்து சதுரங்க ஆட்டத்தில் சிறந்து விளங்கிய அம்பாளை இறைவன் வென்று மணந்து கொண்டதால் இறைவனுக்கு சதுரங்க வல்லபநாதர் என்ற பெயர் போற்றப்படுகிறது.
மேலும் சாளுக்கியர்களின் தலைநகராக விளங்கிய பட்டடக்கல் விருபாட்சர் கோயிலிலும் இறைவன் சதுரங்க ஆட்டம் ஆடும் சிற்பங்களை காண முடிகிறது.
சங்கப்புலவன் குன்றம்பூதனார் எழுதிய “வல்லுப்போர் வல்லாய்” என்ற பரிபாடல் வரிகள் முருகனை வல்லாட்டத்தில் சிறந்தவனே என்று புகழ்கிறது. “வல்லு” என்பது போரை மையமாகக்கொண்டு சங்ககாலத்தில் விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இந்த வல்லு விளையாட்டு தான் இன்று சதுரங்கம் என்ற பெயரில் உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது.
இதுவே கீழடியிலும், சிந்துசமவெளி நாகரிக காலங்களிலும் விளையாடப்பட்டு இவ்விளையாட்டின் பிறப்பிடமாக “பாரதமே” முன் நிற்கிறது.
இந்தியாவில் உருவாகி, பாரசீகம், அரபு நாடுகள் வழியாக தென் ஐரோப்பிய நாடுகளையும், ருசியாவையும் அடைந்த இந்த ஆட்டதிற்கான புதிய காய் நகர்த்தல் விதிகள், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொண்டுவரப்பட்டன. 1886 -ல் முதல் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டி தொடங்குமுன் நேர்த்தியாக அடுக்கப்பட்ட காய்களை கலைத்து, முதல் காய் நகர்த்தலை முன்னெடுக்க முதல் ஆட்டக் காரருக்கு 20 வாய்ப்புகள் இருக்கும். முதல் நகர்த்தலை நிகழ்த்திய வுடன் அடுத்த நகர்த்தலுக்கு 400 வாய்ப்புகள் உருவாகின்றன. அடுத்த நகர்தலுக்கு 1, 97, 742 வாய்ப்புகள் உருவாகின்றன. அடுத்த நகர்த்தலுக்கு 12.10 கோடி வாய்ப்புகள். இவ்வாறு ஒவ்வொரு நகர்த்தலுக்கும் பல வாய்ப்புகள் பெருகி மனிதனால் கணக்கிட முடியாத அளவு ஆட்டங்கள் சாத்தியமாகின்றன. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, கணிணி விளையாட்டுக்களை வடிவமைக்கும் ஆல்பர்ட்டா பல்கலைக்கழக கணிணி அறிவியலர் திரு. ஜோனாதன் ஸ்கெபர், சதுரங்க விளையாட்டு வாய்ப்புக்களின் எண்ணிக்கையை ஒருவர் கணக்கிடுதல் மிகக்கடினம் என்கிறார்.
எனினும், 40 நகர்த்தல்கள், ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30 வாய்ப்புக் கள் என்னும் சராசரி எண்ணிக்கையில் 10120 ஆட்டங்கள் மட்டுமே மனிதர்களால் திரும்ப திரும்ப ஆடப்படுவதாகவும் கணக்கிடப்பட் டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20-ஆம் தேதி சர்வதேச சதுரங்க தினமாக கொண்டாடப்படுகிறது.
தொன்மைச் சிறப்பு வாய்ந்த அறிவுக்கூர்மையின் அடையாளமாக விளங்குகின்ற 'உலக சதுரங்க விளையாட்டு' தமிழ்நாட்டில் சென்னையில் காஞ்சிபுரம் அருகே மகாபலிபுரத்தில்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
--------------------------------------------------------------------------------------------
SADHURANGAM size CAKE
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2022/jul/17/home-of-chess-3881389.html?fbclid=IwAR2jbbINlk16LVXbaYkQ_rn2XfyKx7pdPJgcY31M7rQSm6wegBSLXvJO_D4

சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழை கிருஷ்ணன் கோவில் பால் பாயசமும்
கேரளத்திலுள்ள அம்பலப்புழா, ‘தென்னகத்து துவாரகை’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறது.
அம்பலப்புழா கிருஷ்ணர் கோயிலை தேவ நாராயணன் தம்புரான் என்ற மன்னன் கட்டியதாக வரலாறு.
மூலவர் இங்கு குழந்தை கிருஷ்ணராகக் காட்சி தருகிறார்.
திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது குருவாயூர் உற்சவ மூர்த்தியை இங்கு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள்.
இந்தக் கோயிலின் நைவேத்தியமான “அம்பலப்புழா பால் பாயஸம்” மிகவும் பிரசித்தி பெற்றது.
குருவாயூரில் காலையில் பால் பாயசம் சாப்பிடும் கண்ணன், மதியம் அம்பலப்புழாவிற்குப் பால் பாயசம் சாப்பிட வருவதாக ஐதீகம்.
அம்பலப்புழா பால் பாயஸத்தைப் பற்றிய சுவையான கதை ஒன்று உண்டு.
கண்ணனின் சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழா பால் பாயஸமும்:
முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு கொண்டிருந்த அரசன் முன் கிருஷ்ணர் ஒரு முனிவர் வடிவில் தோன்றினார். “இந்த நாட்டில் யாரேனும் என்னை சதுரங்கம் ஆடி ஜயிக்க முடியுமா? என்று சவால் விட்டார். அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் மகிழ்ச்சியுடன் அரசனே சவாலை ஏற்றான்.
அரசன் முனிவரிடம், “சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும்” என்று சொன்னான். முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு அரிசிதான் தேவை. ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி,, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.
அரசனும், இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தில் வெறும் அரிசியைக் கேட்கிறீர்களே, வேறு ஏதாவது கேளுங்கள் என்று சொல்ல முனிவர் வேறு எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அரசனுக்கு அந்தக் கோரிக்கையில் வருத்தம் இருப்பினும், அரிசிதானே என்று சந்தோஷமாக ஆடத் துவங்கினான்.
சதுரங்க விளையாட்டு துவங்கியது, கண்ணனுடைய விளையாட்டு, அரசன் ஆட்டமிழந்தான். சொன்னபடி முனிவருக்குப் பரிசு தரும் நேரம் வந்தது. கட்டத்தில் முனிவர் சொன்னபடி அரிசியை வைக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அரசனுக்குத் தன் தவறு புரிந்துவிட்டது. முனிவரின் உண்மையான கோரிக்கையை உணர்ந்தான். 20-வது கட்டம் வரும்போது அரிசி அளவு 10 லட்சமாக (மில்லியன்) உயர்ந்தது. 40-வது கட்டத்தில் ஒரு மில்லியன் மில்லியனாக ஆயிற்று. இவ்வாறு ஒரு பெருக்குத் தொடர்ச்சியின் (geometric progression) வளர்ச்சியாக வளர்ந்துகொண்டே போனது. களஞ்சியத்தில் இருந்த அரிசி, நெல் அனைத்தும் தீர்ந்து, பக்கத்து ராஜ்ஜியங்களில் இருந்த நெற்குவியலையும், அரிசியையும் கொட்டியாயிற்று. இப்போது, அரசன் முனிவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தான்.
64 கட்டங்கள் கொண்ட சதுரங்கத்தில் நிரப்ப ((2 ^ 64) – 1) அதாவது 18.446.744.073.709.551.615 டிரில்லியன் டன் கணக்கில் அரிசி தேவைப்பட்டது. அரசன் கலங்கினான். என்ன செய்வது என்று புரியவில்லை.
அரசனின் சங்கடத்தைக் கண்ட முனிவர், கிருஷ்ணர் வடிவில் அரசன் முன் தோன்றினார். அரிசியை உடனடியாகக் கொடுக்க வேண்டாம், கடன் தீரும்வரை அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால் பாயஸம் செய்து கொடு என்று கூறினார். அரசனும் கர்வத்தை ஒழித்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கே கொடுத்தான்.
இன்றளவும் அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலில் அரிசியால் செய்யப்பட்ட பால் பாயஸம் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, வரும் பக்தர்களுக்குப் பிரஸாதமாகக் கொடுக்கப் படுகிறது.


https://www.youtube.com/watch?v=oPxxhzI1dF0
'ஓட்டம் துள்ளல்' என்ற கலை இங்கிருந்து வந்தது என்கிறார்கள்.
துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் மலையாள முன்னோடி. அவர் இங்கு தான் மஹாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை மலையாளத்தில் மொழி பெயர்த்தார்.
மலையாள மீனம் மாதத்தில் அம்பலப்புழா ஆறாட்டு 10 நாட்கள் நடைபெறும். திருவோண நட்சத்திரத்தன்று ஆறாட்டு நடை பெறுகிறது.
தேசிய நெடுஞ்சாலை 47ல் ஆலப்புழாவிலிருந்து 14 கிமீ தொலைவில் தெற்கே உள்ளது. எர்னாகுளத்திலிருந்து 10 கி.மீ, தொலைவில் உள்ளது.


குருவாயூருக்கு அடுத்து புக்ழ் பெற்று விளங்குகிறது அம்பலப்புழா கிருஷ்ணர் கோவில்.
ராதே கிருஷ்ணா!
இனிய காலை வணக்கங்கள்!
ஜய் ஸ்ரீ ராம்!
ஜய் ஹிந்த்

https://minkaithadi.com/?p=26368

 உலகின் அதிவேக சதுரங்க வீரர் என்றால் தனது 15 ஆவது வயதில் “INTERNATIO NAL MASTER” என்ற பட்டத்தை வென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த விஸ்வ நாதன் ஆனந்த் தான் நியாபகத்திற்கு வருவார். இவ்வளவு பெரிய GRAND MASTER 2013 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ஒருவருடன் விளையாடி தோல்வியுற்றார் என்றால் அவர்தான் நார்வே நாட்டைச் சேர்ந்த “மேக்னஸ் கார்ல்சன்”. பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த இவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். உலக சதுரங்க மாஸ்டர்களில் மிகப்பிரபலமான இவர் ஐந்து முறை உலகச் சதுரங்க வீரர் என்ற பட்டத்தையும், மூன்றுமுறை அதிவேக சதுரங்க வீரர் என்ற பட்டத்தையும் ஐந்துமுறை உலக பிளிட் சதுரங்க வீரராகவும் வலம் வந்தவர். 

இவ்வளவு பெரிய GRAND MASTER, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு “தமிழ்” மாணவனால் தோற்கடிக்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டோம். அவ்வளவு ஏன் “மேக்னஸ் கார்ல்சன்” கூட அந்த போட்டிக்கு முன்புவரை நினைத் திருக்கமாட்டார். அதுவும் 2022 பிப்ரவரி 22, 2022 மே 20 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற போட்டியில் இரண்டுமுறை மேக்னஸ் கார்ல்சனை வென்ற முதல் இளம் வயதுகொண்ட வீரன் என்ற பெருமையைப் பெற்றான் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்யானந்தா. இவனது இந்த வெற்றி உலக நாடுகளையே இந்தியாவை நோக்கித் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது என்பதை மறுக்கவே முடியாது! 

சதுரங்கத்தை உலகிற்கே கற்றுத்தந்தவர்கள் நாங்கள்தான் என்று கர்வத்தோடு மார்தட்டிச் சொல்வதற்குக் காரணமாகியுள்ளான் பிரக்யானந்தா. இது எளிதாகக் கடந்து செல்லும் அளவுக்கு அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை எழுதும்போதே “உடலெல்லாம் சிலிர்க்கிறது”. ஏனெனில் அத்தகு மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரன் பிரக்யானந்தா. இவனை நமது மத்திய, மாநில அரசுகள் எப்படி கையாள்கின்றன, எந்த அளவுக்கு நிதி உதவிகள், பாராட்டுகள் செய்துள்ளன என்பதை அறியேன். எனினும் இவன் கொண்டாடப் படவேண்டியவன் என்பதில் யாதொரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.!

(என்ன? சதுரங்கத்தை உலகிற்கு நாம் கற்றுத் தந்தோமா? என்று சிலரின் மன எண்ணம் ஓட ஆரம்பித்திருக்கலாம்.! இதற்கு பதில் ஆம் என்பதே ஆகும்! தொடர்ந்து படியுங்கள்.!)

சதுர் + அங்கம் = சதுரங்கம் நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு பலகையில் விளையாடப்படும் இந்த விளையாட்டானது போரை அடிப்படையாகக்கொண்ட ஒரு போர் விளையாட்டாகும்.! தென் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் “வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே” என்ற தொல்காப்பிய வரிகளில் வரும் “வல்” என்ற சொல்லானது இன்றைய சதுரங்கத்தின் சங்ககாலப் பெயராகும். மேலும் “கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய” என்ற அகநானூற்றின் வரிகள் சங்ககாலத்தில் இவ்விளையாட்டு நிலைபெற்றிருந்ததைத் தெளிவாக உணர்த்து கிறது. மேலும் “வல்லுப் பலகை” என்ற பெயர் கலித்தொகையில் வருவதால் பலகை போன்ற அமைப்பு செய்யப்பட்டு அதன்மீது இவ்விளையாட்டை விளை யாடியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது..!

SPAIN நாட்டைச் சேர்ந்த “லூயிஸ் ராமிரேஸ்” என்பவர் (CHESS) சதுரங்கம் எப்படி விளையாட வேண்டும் என்று “Repetition of Love and the Art of Playing Chess” என்ற நூலை எழுதியபோது இந்த விளையாட்டு ஆரம்பித்த இடம் பாரததேசம் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை 2019 ஆம் ஆண்டு “குஜராத்தின் லோதல்” பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சதுரங்கப்பலகை சிந்துசமவெளி நாகரிக காலத்தை சேர்ந்து என்று அறிஞர்கள் குறிப்பிடுவதையும், கீழடியில் கிடைத்த சதுரங்க காய்களைக் கொண்டும் இந்த விளையாட்டு குறைந்தபட்சம் இன்றிலிருந்து 4500 ஆண்டு களுக்கு முன்பே இந்த பாரத தேசத்தில் விளையாடப்பட்டது என்பதை உறுதி செய்யலாம்.!

சங்கப்புலவன் குன்றம்பூதனார் எழுதிய “வல்லுப்போர் வல்லாய்” என்ற பரிபாடல் வரிகள் முருகனை வல்லாட்டத்தில் சிறந்தவனே என்று புகழ்கிறது. “வல்லு” என்பது போரை மையமாகக்கொண்டு சங்ககாலத்தில் விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு என்பது இதன்மூலம் உறுதியாகிறது. இந்த வல்லு விளையாட்டு தான் இன்று சதுரங்கம் என்ற பெயரில் உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது. இதுவே கீழடியிலும், சிந்துசமவெளி நாகரிக காலங்களிலும் விளையாடப்பட்டு இவ்விளையாட்டின் பிறப்பிடமாக “பாரதமே” முன் நிற்கிறது.

உலகமே உற்றுநோக்கும் விதமாக 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி யின் தொடக்க விழா இன்று நேரு மைதானத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நன்னாளில் உலகம் போற்றும் இவ் விளையாட்டை உலகிற்கு அறிமுகம் செய்தது “பாரதவாசிகளாகிய” நாம்தான் என்பதில் பெருமைகொள்வோம்.

– பா இந்துவன். சதுரங்கத்தின் தோற்றம் தமிழ்நாடே

No comments:

Post a Comment