Tuesday, July 12, 2022

அடியளந்தான்- திருக்குறள் கதை நூற்றாண்டுகள் முன்பே குகை- சிற்பத்தில்

தன் அடியாலே உலகை அளந்த திருமால் மஹாவிஷ்ணு தாவிய நிலப்பரப்பு முழுவதையும் சோம்பலில்லாத முயற்சி உள்ள அரசன் ஒருசேர அடைவான்



Carving details of Trivikrama the Vamana avatar of Vishnu with one leg on the earth and the other on the skie at Varaha Cave Temple, Mahabalipuram, Kanchipuram District, Tamil Nadu, India
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.  குறள் 610:  மடியின்மை.
மணக்குடவர் உரை:மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.
பரிமேலழகர் உரை:அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.



6th century Trivikrama with defaced Vamana legend below in Cave 3, Badami Hindu cave temple
 Karnataka

Vamana Avatar at Badami Cave Temple 2, Karnataka State, India. Vamana is described in the Puranas as the fifth Avatar of Lord Vishnu.

சாளுக்கிய பட்டடக்கல் விருபாக்ஷர் கோவில் 8ம் நூற்றாண்டு.
திருக்குறள் இயற்றப்படும் முந்தைய நூற்றாண்டு




No comments:

Post a Comment