Tuesday, October 1, 2019

கீழடி பானை கீரலின் பெயர் மகா பாரதம் அறிந்த சமூகம் எனக் காட்டுகிறதா

நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து - நெடுநல்வாடை82.
நாளின் பெயர் கொண்ட கோள்(உத்தரம்) நன்றாக வடிவமைக்கப்பட்ட சிறந்த (குறுக்குக்)கட்டை http://sangacholai.in/10-7.html

Potsherds with Tamil-Brahmi inscriptions showed the prevalence of a communication system. While Brahmi was the script used, the language used was both Tamil and Prakrit. The name “Tissa” inscribed in Brahmi script on a potsherd belonged to the Prakrit language. Rajan was sure that the Prakrit name signalled that Keezhadi had maritime trade with Sri Lanka.








K. Rajan, Professor of History, Pondicherry University, who visited Keezhadi, also asserted that it was an Early Historic site that had many urban components. “It was one of the urban centres on the Vaigai river basin. It was located between the capital city of Madurai and the port city of Azhagankulam of the Pandya country,” he said. Its urban components were indicated by its civic amenities, external trade, existence of a multi-ethnic society, a communication system, use of luxury items, occurrence of expensive pottery, and so on. The discovery of carnelian beads indicated Keezhadi’s external trade links—the carnelian stone came from Gujarat. Luxury items such as pearl micro-beads and ivory dices showed that the Early Historic residents of Keezhadi had surplus wealth. Potsherds with Tamil-Brahmi inscriptions showed the prevalence of a communication system. While Brahmi was the script used, the language used was both Tamil and Prakrit. The name “Tissa” inscribed in Brahmi script on a potsherd belonged to the Prakrit language. Rajan was sure that the Prakrit name signalled that Keezhadi had maritime trade with Sri Lanka.

இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி உத்தரட்டாதி நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் பெகாசசு விண்மீன் கூட்டத்திலும் ஆன்ட்ரோமெடா விண்மீன் கூட்டத்திலும் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்தரட்டாதியின் (γ பெகாசி மற்றும் α ஆன்ட்ரோமெடாய்) பெயரைத் தழுவியது. உத்தரட்டாதியின் சமசுக்கிருதப்பெயரான உத்தர பத்ரபாத (Uttara Bhadrapada) என்பது "இரண்டாவது ஆசீர்வதிக்கப்பட்ட பாதங்கள்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் இரண்டு கால்கள்", அல்லது "இரட்டையர்" ஆகும்.


விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து 75

நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்
பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத் 80
துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு
நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து 85
ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில்
அரசிக்கு மனை அரண்மனைக்கு ஒப்பாக அமைக்கப்பட்டது. கட்டடக்கலை நூலில் தேர்ச்சி பெற்ற கலைஞன் அரசிக்கு மனை வகுத்தான். கயிறு கட்டி மனையைப் பிரித்துக் காட்டினான். நிறுத்தியும் கிடத்தியும் ஒரே கோலை மடித்து வைத்து சூரியனின் நிழல் ஒன்றன் நிழல் மற்றொன்றின்மீது படும்படி நிறுத்துவது இருகோல் குறிநிலை. ஏறும் பொழுதாகவும், இறங்கும் பொழுதாகவும் இல்லாத நண்பகலில் இருகோல் குறிநிலை நிறுத்தி அவன் நிலத்தின் திசையைக் கணித்துக்கொண்டான். திசைமுகத்துக்கு ஏற்பக் கயிறு கட்டி, சுவர் அமைக்க அடிக்கோடு போட்டுக்கொண்டான். (மூலைப்பக்கம் நோக்காமல் கட்டடம் கட்டுவது அக்கால மரபு). தெய்வத்தை வாழ்த்திய பின்னர் மனையை வகுத்துக் காட்டினான்.
வளைந்த முகடுகளை உடைய மனை. அதில் யானை வெற்றிக் கொடியுடன் புகும் அளவுக்கு உயர்ந்தோங்கிய நிலைவாயில். குன்றைக் குடைந்தது போல் தோன்றும் நிலைவாயில். அதில் இரட்டைக் கதவு. கதவைத் தாங்கும் இரும்பு ஆணி. அரக்கு சேர்த்துப் பிணித்த மரக்கதவு. அதற்கு ‘உத்தரம்’ என்னும் நாள்மீனின் பெயர் கொண்ட நிலை. நிலையில் குவளைப்பூவின் மொட்டு போல் கலைத்திற வேலைப்பாடுகள். கதவுக்குத் தாழ்ப்பாள். இவற்றையெல்லாம் செய்தமைத்தவன் ‘கைவல் கம்மியன்’. தாழ்ப்பாளும், கதவைத் தாங்கும் இரும்பாணியும் எளிதாக இயங்கும் பொருட்டு ஐயவி என்னும் வெண்சிறு கடுகு எண்ணெய்ப் பூச்சு. – இப்படி அந்த வாயில் அமைக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment