Tuesday, June 19, 2018

கல்வெட்டுகளில் தமிழ் எழுத்தின் வளர்ச்சியும் தொல்காப்பியமும்

நம்மிடம் இது வரை கிடைத்துள்ள கல்வெட்டுகளைப் படித்து சொன்ன ஆய்வாளர்கள், கூறுவது எழுத்து வளர்ச்சி பெற்று முழுமையாய் தமிழின் 30 எழுத்துக்களும் பரவலாய் காணப் படுவது 4ம் நூற்றாண்டில் தான், எனவே கல்வெட்டுகளில் தொல்காப்பியத்திற்கு முன், பின் எனவும், இலக்கண மாற்றத்தையும் கூற இயலும் என்கின்றனர்.

தொல்காப்பியமும் திருக்குறளும் வட்டெழுத்தில் தான் எழுதப் பட்டு இருக்க வேண்டும் என  பர்னெல் எனும் இந்தியவியல் அறிஞர் - தொல்காப்பியம் 8ம் நூற்றாண்டினும் மிகவும் பிற்காலத்தது என்றார்.

தொல்காப்பியம் சொல் இலக்கணம் மட்டும் இல்லை, எழுத்து இலக்கணமும் சொல்கிறது. அதாவது
 உயிர் எழுத்து 12 அ - ஔ ;  மற்றும்
 மெய் எழுத்து 18 க் - ன்
இவற்றின் கலப்பே உயிர்மெய் எழுத்து
கல்வெட்டுகளில் 30 எழுத்துகளும் தனி உரு பெறுவது 5ம் பொ.ஆ. 5ம் நூற்றாண்டில் தான். அதாவது  தமிழில்  "ற" "ன" போன்றவை இரண்டு, ஆனால் வடமொழியில் ஒன்று தான்.
உதாரணமாக ராகம் என எழுத்கையில் எழுதும் போது அறம் என எழுதும் போதும்  மாறு படும் ஆனால் 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய கல்வெட்டுகளில் இரண்டு ஒரே உரு தான், மொழி இடையில் வந்தால் படிப்பவர் மாற்றி  மாற்றி படித்து பொருள் சொல்கின்றனர். 
புள்ளி மயங்கியல்
புள்ளி வைத்து எழுதுதல், பின் புள்ளி மயங்கியல் என மெய் எழுத்து சேறும் முறை பற்றியும் தொல்காப்பியத்தில் இலக்கணம் உள்ளது
தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி - அதாவது பிராமியில் தொடங்கி அது வட்டெழுத்தாய் மாற்றம் பெற்றதினை தமிழ் எனப் படித்து வெளிப் படுத்திய பேராசிரியர் கே.வி.ராமன், ஐராவதம் மகாதேவன் போன்றோர் தெளிவாய் தொல்காப்பிய எழுத்து இலக்கணத்தோடு அதை ஒப்பிட்டு அதன் அடிப்படையில் தான் தொல்காப்பியம் இயற்றப் பட்ட காலம் குறிக்க வேண்டும் எனத் தெளிவாய் கூறுகின்றனர். அதன்படி தொல்காப்பியம் 7ம் நூற்றாண்டிலானாது.


No comments:

Post a Comment