Tuesday, June 19, 2018

தொல்காப்பியமும் தமிழ் எழுத்துக்களும் வடமொழியும்


தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியின்படி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.
பெர்கிலியின் கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் திரு.ஜியார்ஜ் ஹார்டு மற்றும் இஸ்ரேலின் ஜெருசலேம் ஹீப்ரு பல்கலை கழக பேராசிரியர் திரு.டேவிட் ஷுல்மன்; இருவரும் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள்; இருவருமே சங்க இலக்கியம் முதல் இன்றுவரை தமிழ் இலக்கியம சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு பெற்றும் கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளது, தொல்காப்பியம் சமஸ்கிருத இலக்கணத்தை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளது என்பர்



தமிழ் மெய் எழுத்துகளிலும், பின்னர் உயிர் மெய்யிலும் சிறப்பு எழுத்துக்கள் "ள" "ற" "ன"; இவை வட மொழியில் கிடையாது, எனவே தான் தமிழுக்கே தனியாய் இவை பீனர் உருவாகியவை ஆதலால் கடைசி எழுத்துக்களாய் சேர்த்தார் தொல்காப்பியர்  என பல அறிஞர்கள் கூறியதை பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.
தமிழ் உணர்வாளர்களால் தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்திலிருந்து தான் உரு பெற்றது என்பதை ஏற்க இயலாமல் போக, கே.பி.அறவாணன் ஒரு போலி ஆய்வு கட்டுரை படித்தார், ஆனால் ஆய்வுலகம் ஏற்கவில்லை என்கிறார் பேராசிரியர்.
(வடமொழி என்கையில் சமஸ்கிருதம் என்பதைவிட அதன் பேச்சு வழக்கு மொழியான ப்ராகிர்தத்தையே குறிக்கும்)


Permalink
 Reply Quote 
More https://www.sparklit.com/secure/image/forum/activebar/indicator.png


Here I Give the details on developments of Tamil Writings and how Brahmi was dechiphered,and
 all this are the views of Iravatham Mahadevan.

//* 1906
ஆம் வருடத்தில் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த வெங்கய்யா
 என்பவர், மேட்டுப்பட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு இதில்
 எழுதப்பட்டிருப்பது 'பிராக்ரித்' மொழியாக இருக்குமோ என்று நினைத்தார்.

*
பின்னர் அவரது மாணவரான கிருஷ்ண சாஸ்திரி, 1919 வாக்கில் இந்தக் கல்வெட்டுகளில்
 திராவிட மொழிகளின் தாக்கம் இருக்கிறது, ஒருவேளை தமிழாக இருக்கலாம் என்று சொன்னார்.

* 1924
இல் சுப்பிரமணிய அய்யர் தன் ஆராய்ச்சியின் முடிவாக இந்தக் கல்வெட்டுகள்
பிராக்ரித் ஆக இருக்க முடியாது, ஏனெனில் இவற்றில் '', '', '', '' போன்ற எழுத்துக்கள்
 காணக்கிடைக்கின்றன, நாகரி/பிராக்ரித் மொழியில் வரும் இரண்டாவது/மூன்றாவது/நான்காவது
 '', '' க்கள் (, , , , , போன்றவை) இல்லை என்று கண்டுபிடித்தார். ஆனால் அதே
 நேரத்தில் 'தந்தை' என்னும் சொல் 'தாநதய' (?) என்று எழுதப்பட்டிருந்தது என்றும் கண்டார்.

*
பின்னர், பட்டிப்ரோலு (ஆந்திரம்) என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் படிக்கையில்
 மெய் எழுத்துகள், அகர, ஆகார மெய்கள் ஆகியவற்றைக் குறிக்க நீட்டல் கொம்புகள்
 பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தனர். [படமில்லாமல் இதனை விளக்குதல் கடினம், ஆனால்
அந்தப் படங்களை இப்பொழுது இங்கு வரைய முடியாத நிலையில் உள்ளேன்.]

* K.G.
கிருஷ்ணன் என்பவர் 1960களில் அரச்சாளூர் கல்வெட்டுகளைப் படிக்கையில் அங்கு
புள்ளி வைத்த மெய் எழுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டுகள்
 கி.பி ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்தவை என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாம்.
 இந்தக் கல்வெட்டுகள் புள்ளி இல்லாத மெய்யெழுத்துகள் உள்ள மேற்சொன்ன கல்வெட்டுகளுக்குப் பிந்தைய காலமாக கண்டறியப்பட்டுள்ளன.

*
சாதவாகன காசுகள் ஒரு பக்கம் பிராக்ரித் மொழியிலும், மற்றொரு பக்கத்தில் தமிழ்
 (புள்ளி எழுத்துக்களுடனும்) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காசுகள்
வழங்கப்பட்டது கி.பி. 1-3 நூற்றாண்டுகளுக்குட்பட்டவை.

*
இந்த ஆரம்பகால வரிவடிவங்கள் அசோகர் காலத்து பிராமி வரிவடிவங்களைப்
 பின்பற்றியுள்ளன. ஆனால் பிராக்ரித்தில் இருந்த, தமிழில் இல்லாத வரிவடிவங்கள்
விலக்கப்பட்டு, பிராக்ரித்தில் இல்லாத '', '', '', '' ஆகிய எழுத்துகளுக்கான புது
வரிவடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படிப் புது வரிவடிவங்கள் சேர்க்கப்படும்போதும்,
ஏற்கனவே இருக்கும் '', '', '' ஆகியவற்றின் குறியீடுகளை எடுத்து, அவற்றினை நீட்டித்தது
போல் உள்ளது. //
//-
அசோகன் பிராமி வரிவடிவத்தைப் பின்பற்றியே தமிழ் பிராமி வரிவடிவம்
 உருவாக்கப்பட்டுள்ளது.

-
இதனை சமண முனிவர்கள், மதுரை அரசனின் (பாண்டியன்) ஏற்பாட்டின் பேரில்
 செய்துள்ளனர் என்று சொல்லலாம். அதிகபட்சமான கல்வெட்டுகள் மதுரையைச்
 சுற்றிக் கிடைத்துள்ளன. சமணர் குகைகள் என்று கருதப்படும் இடங்களில் கிடைத்துள்ளன.
 இந்தக் கல்வெட்டுகளுக்கும், காஞ்சி/பிறவிடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில்
 காணப்படும் வரிவடிவத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. (இரண்டு வேறுபட்ட
வரிவடிவங்கள் தமிழ்க் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.)

-
அசோகன் பிராமி தமிழுக்கு வந்தது போலவே, தேவநாகரியாக மாறியுள்ளது.

-
அசோகன் பிராமி, தக்காணப் பிராமியாக மாறி, அதிலிருந்து கன்னட, தெலுங்கு
 வரிவடிவங்கள் உருவாகியுள்ளன.

-
தமிழ் பிராமி, கிட்டத்தட்ட கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வட்டெழுத்தாக மாற்றம்
 அடைந்துள்ளது. அப்பொழுதுதான் பனையோலையில், இரும்பு எழுத்தாணி கொண்டு
 எழுதப்பட்டது.

-
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆளுகைக்குள் கொண்டுவந்தபோது,
 கிரந்த எழுத்தாக மாறிய தக்காணப் பிராமியைக் கொண்டுவந்தனர். சோழர்கள்,
 பல்லவர்களுக்குக் கீழ் இருந்து தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்தபோது இந்த கிரந்த
வழித் தமிழெழுத்து, வட்டெழுத்தை முழுவதுமாக அழித்து விட்டு கோலோச்ச ஆரம்பித்தது.
அதன் வழியே (பின்னர் வீரமாமுனிவர் வழியாக மாற்றத்துடன்) இன்று நம்மிடையே உலவி
வருகிறது.

-
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வட்டெழுத்து முற்றிலுமாய் அழிந்துவிட்டது.

-
கி.பி. பதினாலாம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து, மலையாள எழுத்தாக மாற்றம் கொண்டது.

-
வரிவடிவங்கள் மாறினாலும், மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதே தொடர்போடு
 உள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட 75% சொற்களை இன்றைய தமிழர்களால்
 புரிந்து கொள்ள முடியும். (சில கல்வெட்டுகளைப் படித்துக் காட்டினார்.) மீதமுள்ள 25%
சொற்கள் பிராக்ரித் தழுவலாக உள்ளது.

-
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பிராக்ரித்துக்குப் பதில் சமஸ்கிருதக் கலவை
அதிகமாக வருகிறது. [அரையர்/அரசர் என்பது பிராக்ரித வழிச் சொல் என்றும், இராசர்/ராஜன்
 என்பது சமஸ்கிருத வழிச்சொல் என்றும் குறிப்பிடுகிறார்.]

-
குகைக் கல்வெட்டுகளில் சமணர்களைப் பற்றியே காணப்படுவதாகவும், புத்தர்கள்,
ஆஜீவகர்கள் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்.

-
ஒருசில தமிழ்க் காசுகள் எகிப்து, அலெக்சாண்டிரியா போன்ற இடங்களில்
(அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குக்) கிடைத்துள்ளது என்றும்
 அவற்றின் தேதி கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு என்றும், அதில் காணப்படும் எழுத்துகள்
 தமிழ் பிராமி என்றும் ஆதாரங்கள் உள்ளன என்றார்.

-
தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாகப் புள்ளி எழுத்துகள் (மெய்), தமிழ் எழுத்துகள்
 12+18=30 என்று சொல்லப்படுவதாலும், இது பல காலமாக இருக்கிறது என்று
அழுத்தமாகச் சொல்வதாலும் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டு என்று
 தான் கருதுவதாகச் சொன்னார்.

-
இப்படிப்பட்ட கூற்றைத் தமிழ் அறிஞர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், ஆனால்
 தன்னுடைய கண்டுபிடிப்பு கல்வெட்டியலை மட்டுமே சார்ந்திருப்பதாகவும், இதுவரை
 கிடைத்துள்ள ஆதாரங்கள் தன் கூற்றை நிரூபிப்பதாகவும் சொன்னார்.

-
அசோகன் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை
என்றும், அதற்கு முந்தைய கல்வெட்டுகள் எதுவும் இந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை
 என்றும், அசோகருக்கு முந்தைய காலத்தில் கல்வெட்டுகள் இல்லாமல் துணியில்
எழுதியிருக்கலாம் (அதாவது அசோகர் காலத்தைய பிராமி வடிவம் அதற்கு முந்தையதாக
 இருந்திருக்கலாம், ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை...), அழிந்துபோயிருக்கலாம்
 என்றும் சொன்னார்.

-
கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு பதிற்றுப்பத்தின் காலம்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.

- "
சத்தியபுத்தோ அதியமான் நெடுமான் அஞ்சி" (ஔவையாரின் நண்பர், தகடூர் அரசர்,
நெல்லிக்காய் வள்ளல்) என்று ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில்
சத்தியபுத்தோ என்னும் பாலி மொழி யாரைக் குறிக்கும் என்று ஒரு புதிர் பல நாட்கள்
 இருந்ததாகவும், அது அதியமானையே குறிக்கும் [சத்திய புத்தோ -> சத்திய புத்திரன் ->
 சத்திய மகன் -> அதிய மான்] என்றும் சொன்னார். 



No comments:

Post a Comment