Tuesday, June 19, 2018

திருவள்ளுவர் காலம் - தமிழக அரசு கருணநிதி ஆட்சி வெளியிட்ட நூல்

தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூல்  குறளமுதம்
திருவள்ளுவர் காலம் - சாமி சிதம்பரனார்

தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூலில்

//திருக்குறளும் பிறப்புகளும் ஆத்மாவும் என ஒரு 2000 ஆண்டுக்கு முன்பு; 3000 ஆண்டுக்கு முன்பு எனக் கூறுவது தான் வள்ளுவருக்கு பெருமை எனச் சிலர் எண்ணுகின்றனர்// 
அன்றைய நிலையில் புலவர் திருக்குறளை 600 வாக்கில் என்பதை ஏற்று எழுதியது, ஆனால் இன்று நடுநிலையாளர் ஏற்பது பொ.ஆ.800 வாக்கில் தான் திருக்குறள் இயற்றப் பட்ட காலம்.





 (சாமி சிதம்பரனார் 1930களில் ஆண்டுகளுக்கு திராவிட/சுயமரியாதை இயக்க இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை அவற்றுள் சில. இவை தவிர தினமணி, வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 1936-38 காலகட்டத்தில் அறிவுக்கொடி என்னும் பத்திரிக்கையை கும்பகோணத்தில் நடத்தினார். 1939 வரையான பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “தமிழர் தலைவர்” என்னும் பெயரில் வெளியிட்டார். இந்நூல் இன்று வரை பெரியார் ஆய்வாளர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. 1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார். திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை மறுத்து இருவரும் ஒரே இனம் என்ற கருத்தை வலியுறுத்தினார். சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையல்ல என்றும் பிற்காலத்தியவை என்றும் நிறுவ முற்பட்டார். இளங்கோவடிகள் செங்குட்டுவனின் உடன்பிறந்தவர் அல்லர் எனவும் சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சேரன் செங்குட்டுவனின் வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விசயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர்பாற் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் திணிக்கப்பட்ட புனைவு என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். 1950 களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தி யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.)











No comments:

Post a Comment