Monday, September 30, 2024

திருக்குறளும் மனிதப் பிறப்புகளும் மெய்யியலும்

திருக்குறளும் மனிதப் பிறப்புகளும் உயிர்நிலையும்

வள்ளுவரின் தலைவன் காதலியிடம் இந்தப் பிறவியில் நாம் பிரிய மாட்டோம் என்று கூற அப்படி என்றால் அடுத்து எழும் மறு பிறவியில் பிரிவோமா என கண் நிறைய கன்ணீர் சொரிந்தாள் என்பதால் தெளிவாக உயிர்கள் மறு பிறப்பை எடுக்கிறது என்பதைக் கூறினார்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். குறள்௧315 புலவி நுணுக்கம். நாம் சங்க இலக்கியத்தில் குறுந்தொகை 49ம் பாட்டில் தலைவி பாடுவதாக இப் பிறவி முடிந்து இனி எத்தனை பிறவியில் எழுந்தாலும் நீயே என் கணவனாக இருக்கவேண்டும்; நானே உன் நெஞ்சில் நிறைந்தவளாக இருக்கவேண்டும் என்பதன் தொடர்ச்சியே இம்மை மாறி மறுமை ஆயினும் நீ ஆகியர் எம் கணவனை யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே -குறுந்தொகை 49: 3-5
உயிருக்கு - மனித உடல் என்பது பறவை தங்கும் கூடு போலே வள்ளுவர் மனித உயிரை (குறள் 80) எலும்பு தோல் போர்த்த உடம்பு என்பார் இந்த மனித உடல் என்பது உயிருக்கு (ஆன்மாவிற்கு) பறவை தஙி பறந்து செல்லும் கூடு போலே என்கிறார் குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338: நிலையாமை. மணக்குடவர் உரை: கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற் போலும், உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங் கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.

புண்ணிய & பாவத்தின் பலன்
மனிதன் செய்யும் புண்ணிய & பாவத்தின் பலனை அனுபவித்தே தீற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர் - நாம் இறந்த பிறகும் இந்தப் பிறவியில் செய்த அறங்கள் (புண்ணியம்) ந்தப் பின்பும் நம்மைத் தொடரும் என்கிறார்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள் 36: அறன்வலியுறுத்தல். 
கொல்லாமை அதிகாரத்தில் -ஒருவன் இந்தப் பிறப்பில் நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் நீதிநூல் வழி சான்றோர் கூறுவர்.
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். குறள் 330: கொல்லாமை

மனிதனின் பிறவிப் பெருங்கடல் எழுபிறப்பும்
வள்ளுவர் மனித உயிரை நிலயானது என்பதற்கு மன்னுயிர் என அழைப்பார். மனித உயிர் பிறந்து இறந்து மீண்டும் பிறந்து மீண்டும் எனத் தொடர்வதை பிறவிப் பெருங்கடல் (குறள் 10) என்கிறார். மனிதப் பிறப்பு பிறந்து இறந்து மீண்டும் பிறந்து எழுவது தொடர்ச்சியாக நிகழ்வதை விளக்குகிறார்
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை. மணக்குடவர் உரை: உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.
ஒருவர் இந்தப் பிறப்பில் செய்தவை பலன் பின்னால் எழும் பிறவிகளில் பயன் தரும் என்பார்
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 62 எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண் விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 107
எழு பிறப்பு என்பது எழும் போது எல்லாம் பிறப்பு எனவும் அதே சிக்கீட்ய் எழுமை சேரும்போது ஏழு விதமான என்ற பொருள் சேரும். எழ்ய்னௌ தனியாக வருகையில் எழும் போது எல்லாம் எனப் பொருள்படும்
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 13:6 ஒருமைக்-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 398
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - குறள் 835

வள்ளுவர் வலியுறுத்தும் மெய்யியல்
மனித வாழ்க்கையில் இன்பம் அனுபவிப்பதே முக்கியம் என அதற்கு பொருள் ஈட்டுவதே என்ற நிலையில் அனைத்து செயலிலும் அறம் செய்வதை வலியுறுத்துவதே மெய்யியல்
இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்  -  தொல்காப்பியம் களவியல் - 93
:உயர்திணையாய மாந்தர் மேற்கொண்டொழுகும், இன்பம், பொருள், அறம் என்று சொல்லப்பட்ட அம்மூவகையாகிய முதற்பொருளிடத்தே இன்பத்திற்குரிய அன்பொடு பொருந்திய அகனைந்திணை ஒழுகலாற்றின்கண் அதன் பகுதியாகிய களவென்னும் கைகோளிடத்து நிகழும் காமக்கூட்டத்தினது இயல்பினைத் தேர்ந்துணர்ந்துணருங்கால் அது தமிழ் மாமறையோர் இன்ப நூலிடத்து வகுத்துக் கூறிய எண்வகை மன்றற் புணர்ச்சியுள் பாடுதுறையமைந்த நல்யாழினையுடைய துணைமையோரது இயல்பினதாகும்.

மனிதப் பிறப்பு ஏற்படக் காரணம்- நீங்க வழி
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்.
பொய்யான உலகியல் பொருளை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் சிறப்பில்லாத இழிவான பிறப்பு வரும். மனிதப் பிறப்பு ஏற்படக் காரணம் ஆசையும் அதற்றால் செய்யும் வினை தான்;
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல்.
மனிதன் தனக்கு வேண்டும் என ஆசைப் படுவது எனில் பிறவாமை என்பதை மற்ற ஆசைகள் எல்லாம் நிறைவேறும் என்கிறார்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். குறள் 362: அவாவறுத்தல்.

மனிதன் பிறப்புகளுக்கு இடையில் சொர்கம் நரகம் செல்கிறான்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255: புலான்மறுத்தல். மாமிச உணவு சாப்பிடாமல் இருத்தல் எனும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. மாமிசம் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்;
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று தீ உழி உய்த்துவிடும் - குறள் 168 அழுக்காறாமை. பொறாமை எனும் பாவி- பிறர் மீது போறமை உள்ளவன் செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. குறள் 919 :வரைவின்மகளிர். பொருள் தருவார் எல்லாரையும் ஏற்கும் விலைமகளை விரும்பி மெல்லிய தோள்கள் தழுவுவதும் அறிவற்ற கீழ்மக்கள் புகும் நரகம் பொலாகும். .
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. குறள் 835: பேதைமை. அறிவற்ற பேதை ஒரு பிறப்பில் செய்யும் செயலாலே அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்கிறான்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். குறள் 121: அடக்கமுடைமை. ஒருவன் தன் நிலையில் உரிய அடக்கமோடு வாழ்ந்தால் அது அவரைதேவர் உலகில் சேர்க்கும்; அடக்கம் இல்லாது வாழ்தல், நீங்காத இருள் நிறைந்த நரகத்துள் செலுத்தி விடும்.

மனிதப் பிறப்பு மீண்டும் தொடர்வதை நீங்க வழி
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல். பிறப்பு என மீண்டும் மீண்டும் வரும் பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் (இறைவன் திருவடியை) காண்பதே மெய்மை ஆகும்.
வள்ளுவர் மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான் என்ற வள்ளுவர்- இதன் இடையே செய்யும் புண்ணிய -பாவங்கள் அடிப்படையில் சொர்கம்-நரகம் செல்வர் என்றவர் ஆனால் மனிதனின்  கல்வியின் உச்சம் என்பது மீண்டும் இந்த உலகின் மனிதனாகப் பிறக்காது இருந்த்தல் எனும் வீடுபேறு எனும் மோட்சம் என்பதை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து.

No comments:

Post a Comment