Wednesday, September 18, 2024

கோயில் சொத்துக்களை அறநிலையத்துறை அதிகாரிகளே கையாடல்

 தமிழர் திருக்கோவில்களை சட்டத்திற்கு பரம்பாக சுரண்டும் திமுக @dmk & #TNHRCE

trramesh @trramesh குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டியில் என்ன சொல்ல வருகிறார் அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் ?
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது - அறநிலையத்துறை அதிகாரிகளே கோயில் சொத்துக்களையும், கோயில் பணத்தையும் கையாடல் செய்ததுதான் இப்போது பிரச்சனையா என்கிறாரா ?
அப்படி நாட்டில் வேறு என்ன பிரச்சனைகள் பெரிதாக உள்ளன - சொல்லுங்களேன் - நீங்கள் அவற்றை சரி செய்ய முடியாமல் திணறும் போது தொந்தரவு கொடுக்கக் கூடாது தான்.
ஆனால் அதற்காக கோயில் சொத்துக்களை - அவற்றை பாதுகாக்க வேண்டிய உத்தமர்கள் துறை அதிகாரிகளே கொள்ளை அடிக்கும் போது - இந்துக் கோயில் வழிபாட்டாளர்கள் சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமா?
சரி - கோயில் சொத்துக்களையும், பணத்தையும் திருடி - மாட்டிக்கொண்ட பிறகு நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று துறை உத்தமர்கள் சொல்கிறார்களே - இதையே தானே செந்தில் பாலாஜி உச்ச நீதி மன்றத்தில் சொல்ல - நீதிமன்றம் இந்த "வாதத்தை" குப்பைத் தொட்டியில் தூக்கி எரிந்து விட்டதே ? -
ஒழுங்கு மரியாதையாக விசாரிக்க போலீசுக்கு உத்தரவு போட்டதே மாண்புமிகு உச்ச நீதி மன்றம்?
ITMS - என்னும் பெரும் கோயில் கொள்ளையை நியாயப் படுத்துகிறாரே - Officer on Special Duty (இப்படி ஒரு போஸ்டிங் - அறநிலையத்துறை சட்டத்தில் தேடிப் பார்த்தால் கிடைக்காது) திரு. குமரகுருபரன் அவர்கள் -
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளியாக உள்ள முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியிடம் இருந்த உதவியாளரை - அறநிலையத்துறையில் - கோயில் பணத்தை எடுத்து சம்பளம் கொடுத்து வைத்துள்ள Special Officer கிட்ட சட்ட நியாயம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா ?


ஓஹோ - திருட வேண்டியது - லஞ்சம் வாங்க வேண்டியது - மாட்டிக் கொண்டால் பணத்தைத் திருப்பித் தந்து விடுகிறேன் என்று சொல்ல வேண்டியது - கேள்வி கேட்கும் நிருபரிடம் எரிந்து விழ வேண்டியது -
இவையெல்லாம் தாம் திராவிட மாடலா? https://twitter.com/trramesh/status/1704024560956264943

No comments:

Post a Comment