Thursday, August 2, 2018

தம்மபதம் -புத்தரும் அந்தணரும்

 தம்மபதம் [புத்தர் பெருமான் அருளிய அறநெறி]
   தமிழாக்கம் : ப.ராமஸ்வாமி
http://www.tamilvu.org/library/lA455/html/lA455ind.htm
இயல் இருபத்தாறு
 
  பிராமணன்
381.ஓ பிராமணா! வீரத்துடன் எதிர்த்து வெள்ளத்தைத்தடுத்து நில்; ஆசைகளை விரட்டிவிடு. படைக்கப்பட்ட எல்லாம் அழிவடையும் என்பதைஉணர்ந்த பிறகு, படைக்கப் பெறாததை நீஅறிவாய்
382.(தன்னடக்கம், ஆன்மஞானம் என்ற) இரண்டுதருமங்களிலும் அக்கரை கண்ட பிராமணனுக்கு அனைத்தையும் அறியும் ஆற்றலுள்ள அவனுக்குப் பந்தங்கள் யாவும் ஒழிகின்றன. 
383. எவனுக்கு இக்கரையுமின்றி, அக்கரையுமின்றி1இரண்டுமில்லையோ, எவனுக்கு அச்சமும்,கட்டுக்களும் ஒழிந்தனவோ, அவனையே நான்பிராமணன் என்று கூறுவேன். (1 இக்கரை-புறத்தேயுள்ள ஆறு பொறிகள். அக்கரை-அகத்தேயுள்ள ஆறு புலன்கள்.)
384. எவன் தியானத்துடன் உள்ளானோ, ஆசைகளற்றவனோ, நிலையான அமைதியுள்ளவனோ கடமைகளைச் செய்து முடிப்பவனோ, எவன் மாசற்றவனோ, எவன் உத்தமமான ஞானியின்முடிவான நிலையை அடைந்தவனோ, அவனையே நான் பிராமணன் என்று அழைப்பேன்.
385. ஆதித்தன் பகலில் ஒளி கொடுக்கிறான். சந்திரன் இரவை ஒளி செய்கிறான்; போர் வீரன் கவசம் அணிந்து பிரகாசிக்கிறான்; பிராமணன் தியானத் தில் பிரகாசிக்கிறான்; புத்தர் இரவும் பகலும் எல்லாப் பொருள்களையும் தம் ஞான ஒளியால்பிரகாசிக்கச் செய்கிறார்.
386. ஒருவர் பாவத்தை ஒழித்ததால் பிராமணன் என் கிறோம்; சாந்தியில் வாழ்வதால் சமணன் என்கிறோம்; மலங்களை வென்றதால் மலமற்றவன்(ப்ரவ்ராஜிதா) என்கிறோம்.
387. பிராமணனை எவரு0ம் தாக்குதல் தகாது; தாக்கப்பட்ட பிராமணன் தாக்கியவன் மீது பாய்தலும் தகாது. பிராமணனைக் கொல்வோன் பழிக்கு ஆளாவான்; அத்தீயோனிடம் கோபத்தைச் செலுத்துவோன் அதிகப் பழிக்கு ஆளாவான்.
388. வாழ்க்கையின் இன்பங்களில் மனம் ஆழ்ந்து விடாதபடி அடக்குதல் பிராமணனுக்குச் சாமானியமான சிறப்பன்று; எங்கெல்லாம் மற்றவர்களுக்கு ஹிம்சைசெய்யும் எண்ணம் அடக்கப்படுகிறதோ,அங்கெல்லாம் துக்கம் தொலைந்து போகிறது.
389. மெய், வாய், மனம் ஆகிய மூன்றிலும் அடக்க முள்ளவனையே நான் பிராமணன் என்று சொல் வேன்.
390. பூர்ண ஞானம் பெற்ற புத்தர் (ஸம்மா ஸம்புத்த)உபதேசித்த தருமத்தை உணர்ந்தவனை, பிராமணன் வேள்வியில் அக்னியை வணங்குவது போல் மக்கள் வணங்க வேண்டும். 
391.ஒருவன் பிராமணனாவது சடைத்தலையால்அன்று; தன் கோத்திரத்தால் அன்று; பிறப்பினாலும் அன்று; எவனிடம் சத்தியமும், தருமமும் நிலைத்துள்ளனவோ, அவனே பாக்கியவான்.அவனே பிராமணன்.
 392. மூடனே! சடைத்தலையாலும், மான்தோல் ஆடையாலும் என்ன பயன்? புறத்தை நீ தூய்மை செய்கிறாய்; என் அகமோ தீமைகள் நிறைந்தகாடாக இருக்கிறது.
393.பிறர் கழித்து நீக்கிய வஸ்திரங்களை அணிந்து, உடல் மெலிந்து, நரம்புகள் தெரியும்படி உலர்ந்து, வனத்திலே ஏகாந்தமாகத் தியானம் செய்பவ னையேதான் பிராமணன் என்று சொல்வேன்.
394.தாயைக் கொண்டோ, குலத்தைக் கொண்டோ ஒரு மனிதனை நான் பிராமணன் என்று கூறுவதில்லை. அவன் செல்வனாயிருந்தால்,போவாதி1 என்று அழைக்கப்படுவான்; ஆனால் ஏழையாய்ப் பொருளாசையும்
இல்லாமலிருந்தால் அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
(1 போவாதி-அகங்காரமுள்ளவன்.)
395. சகல பற்றுக்களையும் சேதித்தவன், அச்சமற்றவன், உறவு பந்தங்களிலிருந்து விடுபட்டவன்,(அசத்தியத்திலிருந்து) ஒதுங்கியவன் எவனோ,அவனையே நான் பிராமணன் என்று சொல் வேன்.
396. தன்னைப் பிணித்துள்ள (துவேஷமாகிய) தோலையும், (ஆசையாகிய) வாரையும், (போலிச் சமயக் கொள்கைகளாகிய) சங்கிலியையும், (அஞ்ஞான மாகிய) குட்டையையும் அறுத்துக் கொண்டுபோதியடைந்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
 397. தான் ஒரு குற்றமும் செய்யாதிருந்தும் தனக்குக்கிடைக்கும் வசைகளையும், அடிகளையும், சிறைத் தண்டனையையும் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு பொறுமையே தன் ஆற்றலாகவும்,பலங்களே1 தன் சேனைகளாவும் பெற்றுள்ளவன்எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (1 பலங்கள்- சிரத்தை, சாமர்த்தியம், ஞாபகம், மனனம், ஊகித்தல் ஆகிய பலங்கள்.)
398.வெகுளியை விட்டவன், கடமைகளிலே கவன முள்ளவன், ஒழுக்க விதிகளின்படி நடப்பவன்,பரிசுத்தமானவன், தன்னடக்க முள்ளவன்எவனோ, எவன் இவ்வுடலைக் கடைசி உடலாகக்கொண்டுள்ளானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். 
399.தாமரை இலைமேல் தண்ணீர் போலவும், ஊசிமுனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். 
400.இந்தப் பிறவியிலேயே தன் துக்கங்கள் அழிந்தொழியும் என்று அறிந்து, தன் (பாவச்) சுமைகளை எறிந்து விட்டவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்பேன்.
401.ஆழ்ந்த ஞானமும், மேதாவிலாசமும் பெற்றவன்;நன்மார்க்கத்தையும், துன்மார்க்கக்தையும் அறிந்தவன், மெய்ப் பொருளை அடைந்தவன் எவனோ. அவனையே நான் பிராமணன் என்றுசொல்வேன்.
402.இல்லறத்தார், துறவறத்தார் இருவருடனும் கலந்து கொள்ளாமலும், அடிக்கடி. (பிறருடைய)வீடுகளுக்குச் செல்லாமலும், தேவைகளைக் குறைத்துக் கொண்டும் வாழ்பவன் எவனோ,அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
 403.நிற்பனவும், திரிவனவுமாகிய எவ்வுயிரையும் துன் புறுத்தாமலும், வதைக்காமலும், வதைக்கக் காரணமாயில்லாமலும் எவன் உள்ளானோ,அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
404.பகைமை உணர்ச்சியுள்ளவர் நடுவே பகைமை யற்றும், தடியெடுத்து நிற்போர் நடுவே சாந்தியுடனும், ஆசையுடையோர் நடுவே ஆசையற்றும் உள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
405.எவனுடையராகத் துவேஷங்களும், கர்வமும்,கபடமும் ஊசி முனையிலிருந்து உருண்டு விழும்கடுகு போல் ஒழிந்து விட்டனவோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
 406.உண்மையே பேசுவோன், இன்சொல்லும், தெளிந்தபொருளும் விளங்கப் பேசுவோன், எவர் மனமும்நோவாமல் பேசுவோன் எவனோ அவனையேநான் பிராமணன் என்று சொல்வேன்.
407.இந்த உலகில் தனக்கென்று அளிக்கப்படாத எதை யும்-அது நெடியதோ, குறுகியதோ, பெரிதோ,சிறிதோ, நல்லதோ, கெட்டதோ-ஏற்றுக்கொள் ளாதவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
408. இகத்திலும், பரத்திலும், எதிலும் ஆசையற்றவன்,எதிலும் நாட்டமற்றவன், தளைகளற்றவன்எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
409.எவனுக்கு வேட்கையில்லையோ, ஞானத்தால் ஐயங்கள் தீர்ந்து விட்டனவோ, எவன் நித்தியமான மெய்ப்பொருளில் ஆழ்ந்துள்ளானோ - அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
 410. எவன் இவ்வுலகில் புண்ணிய, பாவங்களைப் பற்றிய தொடர்புகளுக்கு அதீதமாய்ச் சென்றவனோ, எவன் சோகமின்றி, உணர்ச்சி வெறிகளைக் கை விட்டுத் தூய நிலையிலுள்ளானோ,அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
411.எவன் சந்திரனைப்போல் களங்கமற்றும், பரிசுத்த மாயும், தெளிவாயும், கலக்கமில்லாமலும் விளங்கு கிறானோ, எவனிடம் உல்லாசம் அறவே அழிந்துவிட்டதோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
412.பிறப்பு, இறப்புக்களும்,மயக்கமும் உள்ள கடத்தற்கு அரிய இந்தச் சேற்றுப் பாதையைத்தாண்டி மறு கரையை அடைந்தவன், தியான முள்ளவன், கலக்கமற்றவன், ஐயமற்றவன்,எதையும் பற்றாதவன், சாந்தி பெற்றவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்றுசொல்வேன்.
413.இவ்வுலகில் புலன் இன்பங்களைத் துறந்து, தங்குவதற்கு ஒரு வீடில்லாமல் திரிகின்றவன், (உட லோடு) வாழும் வாழ்வின் ஆசை அனைத்தையும் களைந்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
414.இவ்வுலகில் அவா அனைத்தையும் அவித்துத்(தங்குவதற்கு) ஒரு வீடில்லாமல் திரிகின்றவன்,(உடலோடு) வாழும் வாழ்வின் ஆசைகள் அனைத்தையும் களைந்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
415. மானிடரின் போகங்களையும், தெய்விகமான போகங்களையும் உதறிவிட்டு, எல்லாப் பற்றுக்களிலிருந்தும் விலகியவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
 416.இன்பமானவற்றையும், துன்பமானவற்றையும் கைவிட்டு அமைதி பெற்றவன், (மறு பிறப்புக்குக்காரணமான கர்ம) வித்துக்களை ஒதுக்கியவன்,சகல உலகங்களையும் வென்ற வீரன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
417.எங்கும் உயிர்கள் அழிவதையும், அவைகளின் தோற்றத்தையும் அறிந்தவன், பற்றற்றவன், நல்வழி நடப்பவன், போதியடைந்தவன் எவனோ,அவனையே நான் பிராமணன் என்று சொல் வேன்.
418.எவனுடைய பாதையைத் தேவர்களும், கந்தர்வர்களும், மானிடர்களும் அறியார்களோ, எவன் குறைகள் நீங்கி அருகத் நிலையை அடைந்துவிட்டானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
419.எவனுக்கு முன்னாலும், பின்னாலும், இடையிலும் எதுவும் இல்லையோ; எப்பொருளுமின்றி எவ்விதப் பற்று மின்றியிருக்கிறானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
 420.காளைபோல் வீரமுள்ளவன், பெருந்தன்மை யுள்ளவன், தீரன் ஞான முனிவன், (மரணத்தை) வென்றவன், பாவமற்றவன், கல்வியில் பூர்த்தி பெற்றவன், போதியடைந்தவன்1 எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
 421. தன்னுடைய முந்திய ஜன்மங்களை அறிந்தவன், சுவர்க்கத்தையும், நரகத்தையும் அறிந்தவன், பிறவிகளின் எல்லையை அடைந்தவன், அறிவு நிறைந்த முனிவன், நிறைவேற்ற வேண்டியவை அனைத்தையும் நிறைவேற்றி முடித்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.

No comments:

Post a Comment