அந்தணர் அறவொழுக்கம்
அந்தணர் வேதக் கல்வியை விரும்பிப் பயின்றனர். அதில் கூறப்பட்ட சடங்குகளை “மந்திர விதியுட் மரபுளி வழாஅ” மரபில்லிருந்து மாறாமல் செய்தனர். மதுரைக் காஞ்சி 468-479 கூறும் பொழுது “அந்தணர் அறநெறி பிழையா அன்புடை நெஞ்சினர்,” என்றும், “எவ்வுயிரிடத்திலும் அன்பு கொண்டனர் என்றும்”, கூறுகின்றது. அவர்கள் தோற்றத்தையும் அவர்கள் வேதவேள்வி செய்த முறையையும் திருமுருகாற்றுப்படை 179-182 கூறுகின்றது. அவர்கள் பெற்றோர் மரபு சிறப்புடையது; தொன்மையும் மேன்மையும் உடைய குடிப்பிறப்பாளர்; நாற்பத்தெட்டாண்டுகள் விதிமுறைக் கல்வியில் கழித்த்வர்; முத்தீச் செல்வத்து இருப்பிறப்பாளர்; ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்(கயிறு) அணிபவர்; உச்சிக் கூப்பிய கையினர்; நாளும் நாவில் ஆறெழுத்த்தை உச்சரிக்கும் உயர் குணத்தாளர்” என்று அவர்கள் வாழ்க்கையைத் தெளிவு படத் தெரிவிக்கின்றது. பக்76
காசியப, வாதுல, ஆத்ரேய, கௌசிக கோத்திரத்தைச் சார்ந்த பிராமணர்கள் இருந்தனர் என சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஆக்னிஷ்தோம, அஸ்வமேத, வாஜபேய யாகங்களும், ஹிரண்யகர்ப, துலாபார, கோசஹரா பொன்ற சடங்குகளை பிராமணர்கள் செய்தனர். பக்-112
பல்லவர் காலத்தில் பல செப்புப் பட்டயங்கள் வெளியிடவும் பிராமணர்களே உதவி புரிந்தனர். பக்- 113
சங்க காலத்தில் பலவகைகளிலும் மேன்மையுற்றிருந்த தழிழகம் 3-ம் நூற்றாண்டு முதல் 6—ம் நூற்றாண்டு வரை களப்பிரர் காலத்தில் பல இடர்பாடுகளுக்கு உள்ளானது. அக்காலத்தில் சமணம் தழைத்தோங்க ஆரம்பித்தது. காதல், களவு, கற்பு, வீரம் போன்றவற்றைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மறைந்தன. நீதிக்கருத்துக்களை எடுத்துக் கூறும் நூல்கள் இயற்றப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்டவையே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும். - பக்106 Dr.ஏ.சுவாமிநாதன்-தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு-1997,
வள்ளுவர் கருத்துக்கும் வடநூல்களின் கருத்துகளுக்கும் வேற்றுமையில்லை. வள்ளுவர் கருத்தை வடமொழிப் புலவர்களும் போற்றுகின்றனர். அவருடைய கருத்துக்கள் வடநூல்களிலும் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆதலால் வள்ளுவரைக் கருவியாகக் கொன்டு வடமொழியுடன் போர் தொடுக்க முடியாது. வேறு இனத்தாருடன் சண்டை போட முடியாது. மொழி வெறுப்பாளர் பக்கத்தில் வள்ளுவர் நிற்கமாட்டார். இன வெறுப்பாளர் பக்கத்திலும் வள்ளுவர் நிற்கமாட்டார்.
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் என்னும் திருக்குறள் ஆய்வு நூலை சாமி சிதம்பரனார் என்னும் தமிழறிஞர் ஆக்கியுள்ளார். 33 சிறு கட்டுரைகளாக அமைந்த இந்த நூலை 2001ஆம் ஆண்டில் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டது.[1]
No comments:
Post a Comment