எழுகூற்றிருக்கை
மிக்க தமிழ் புலமையும், இலக்கணத்தில் கரை கண்டவர் மட்டுமே எழுகூற்றிருக்கை இலக்கியத்தை யாத்த இயலும். இதை ரதபந்தம் எனக்கூறுவர். அதாவது ஒரு தேரின் உருவம் போன்ற வடிவத்தில் எண் முறையில் கணித நுண்மையில் சித்திரகவி அமைக்க வேண்டும்.
தேரின் மேற்பாகம், கீழ்பாகம் என பாகம் பிரித்து சொற்களை மேலும் கீழுமுள்ள பகுதிகளாக முக்கோண வடிவில் முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல்,பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக அமைப்படும்.
ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி , மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321, என ஏழு வரை சென்றதும் இது தேரின் மேலடுக்கு போலவும் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிக்க வேண்டும்.

இத்தகைய இயற்ற கடினமான இலக்கண வகை முறையில் முதலில் செய்யுள் இயற்றிவர் ஆழ்வார்களில் ஒருவரான பரகாலன் ஸ்ரீ திருமங்கையாழ்வார் தான்.. பிறகு திருஞான சம்மந்தர், அருணகிரி நாதர் போன்றவர்கள்.!
அதே போல ரதபந்தம் போன்று நாக பந்த செய்யுள் வகையுமுண்டு.
பாம்பின் உடலில் தலை முதல் வால்வரை பொருந்த அமைக்கும் முறை.
தன்மீது தானே குறுக்கிடும் இடங்களில் வரும் எழுத்துக்கள் பொதுவாக நிற்குபடி யாத்ததுதல்.
இவை போக சக்ரபந்தம்
சக்கரத்தின் நடு குமிழில் தொடங்கி ஆரத்தின் வழியாக கீழிறங்கி பின் மேல் நோக்கியும் சக்கரத்தை படித்தால் தொடங்கிய இடத்திலேயே முடியும் முறை.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.!
அவர்தம் திருத்தமிழ் போற்றி.!!
__மணிமேகலை.

No comments:
Post a Comment