பதிற்றுப்பத்து 31, *கமழ் குரல் துழாஅய்*, பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பட்டவர்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்
குன்று தலைமணந்து குழூஉக் கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து, மாந்தர் ஒராங்குக்
கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால் வேறு நனந்தலை யொருங்கெழுந்து ஒலிப்பத்,
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென 5
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி,
வண்டு ஊது பொலி தார்த் திரு ஞெமர் அகலத்துக்
கண் பொரு திகிரிக் *கமழ் குரல் துழாஅய்*
அலங்கல் செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர 10
மணி நிற மையிருள் அகல நிலா விரிபு,
கோடு கூடு மதியம் இயல் உற்றாங்குத்
துளங்கு குடி விழுத்திணை திருத்தி முரசு கொண்டு,
ஆண் கடன் இறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு,
கருவி வானம் தண்தளி தலைஇய, 15
வட தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய,
பனி வார் விண்டு விறல் வரை அற்றே;
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்தன்ன பரேர் எறுழ் முழவுத் தோள்; 20
வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து,
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து
வண்டன் அனையை மன் நீயே வண்டுபட
ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின்,
குழைக்கு விளக்கு ஆகிய ஒண்ணுதல் பொன்னின் 25
Pathitruppathu 31, Poet: Kāppiyatru Kāppiyanār, King: Kalangāykanni Nārmudichēral, Fragrant Clusters of Basil
In the world with sand and mountains, that is surrounded
by oceans with waves, devotees lift their hands, pray together,
uproar rises, sounds travel to the four distances of the vast
earth, and bright, tall, loud bells are rung. Those who have
made fasting vows, go to the cool water shores and bathe
before praying.
They pray to Thirumāl carrying a bright, shining discus that
awes eyes and donning large, fragrant garlands made with
clusters of basil swarmed by bees. They bow down worshipping
his perfect feet and return to their towns with joy in their
hearts.
You perform your duties responsibly in battles seizing battle
drums of enemy kings. You took care of your suffering citizens
and brought to their lives brightness like that of the huge full
moon that dazzles in the sky to remove darkness as dark as
sapphire.
“இருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன்” (பெரும்பாணாற்றுப்படை 29 - 30) எனவும்,
“ஞால மூன் றடித் தாய” (கலி. 124) எனவும்,
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல்” (முல்லை. 1- 3) எனவும் வரும் தொடர்களிற் குறிக்கப்பெற்றது.
சக்கரப் படையினையும் வலம்புரிச் சங்கினையும் - தாங்கும் பெரிய கைகளை உடைய மார்பினனாகிய மாயோன் மாவலி வார்த்த நீர் தன்கையிலே சென்ற அளவிலே நெடியோனாக உயர்ந்து மூவுலகினையும் தன் ஈரடிகளால் தாவி அளந்த செய்தி மேற்குறித்த முல்லைப்பாட்டுத் தொடரில் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம்.
வாமன அவதாரம் என்பது வைணவர்கள் முழுமுதற் கடவுளாகக் கருதும் விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் ஆகும். அவதாரம் என்றால் இறைவன் மனித அல்லது வேறு ஒரு உருவில் இவ்வுலகில் பிறத்தல். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார். இவர் உபேந்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
மகாபலி சக்கரவர்த்தி தீவிர விஷ்ணு பக்தன். ஆயினும் அவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒருமுறை உலகை வெல்ல யாகம் ஒன்று நடத்த திட்டமிட்டான். அதனை முறியடிக்க விஷ்ணு மூன்றடி வாமன உருவத்துடன், யாக சாலைக்கு வந்து அவனிடம் மூன்றடி மண் கேட்டார். மிகுந்த செருக்குடன் இருந்த மாபலி தர சம்மதம் தந்தான். பகவான் திரிவிக்கிரமன் வடிவு எடுத்து வானை ஒரு காலாலும், மண்ணுலகை ஒரு காலாலும் அளக்க, மூன்றாமடியை அவனது தலையில் வைத்து அவனது அகந்தையை ஒழித்தார்
No comments:
Post a Comment