
கணபதி ஊர்வலம் - மசூதி முன் தாக்கப் பட்டது
“நாகபுரி, செப்.22 1936 - அகோலா ஜில்லாவில் உள்ள அகோட் என்ற இடத்தில் மசூதியில் பிரார்த்தனை நடைபெறும் சமயத்தில் வெளியே வந்த கணபதி ஊர்வலத்தை 20 முஸ்லிம்கள் தாக்கினர். ஊர்வலம் வேறு இரண்டு இடங்களில் செல்லும் போதும் அதன் மீதும் கல்லெறி விழுந்தது. ஹிந்துக்கள் மிகவும் அமைதியாக நடந்து கொண்டனர். 300 முஸ்லிம்கள் பல இடங்களில் திரண்டு பயமுறுத்தினர். இரண்டு கலக வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டிருக்கின்றன. 4 முஸ்லிம்கள் கைது. “ - 22.09.1936ல் வெளியான தினமணி இதழில்... இந்தச் செய்தி வந்துள்ளது.
கிட்டத்தட்ட இன்றில் இருந்து 80 வருடங்களுக்கு முந்தைய செய்தி.
இதற்கு கால் நூற்றாண்டு முன்பே திலகரால் மராட்டியத்தில் பெரிய அளவில் கணேச சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெறத் தொடங்கிவிட்டன.
அதற்கு 300 வருடங்களுக்கு முன்பே வீரசிவாஜி காலத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு தெருக்களில் வந்துவிட்டது.
ஆக... விநாயகர் தெருவில் இறங்குவதும்.. . அதற்கு முஸ்லிம்கள் கல்லெறிந்து வரவேற்பு கொடுப்பதும்... கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளாய் நடைபெற்று வரக் கூடிய பாரம்பரியத் திருவிழா ஆகி விட்டிருக்கிறது.
விநாயகரை முன்வைத்து உரிமைகளுக்காகப் போராடும் குணத்தை 16ம் நூற்றாண்டில் இருந்து இந்துக்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அன்று பரவலாக மொகலாயர்களின் ஆட்சி இருந்தது. வாளுக்கும் வஞ்சத்துக்கும் வசப்பட்டு உயிர் பிழைக்க மதம் மாறியவர்கள் பலர். அன்று தங்கள் தர்மத்தைக் காக்க போராடினார்கள் இந்துக்கள்.
இன்று மதசார்பற்ற நாடு என்ற பெயரில் அதே மொகல் எம்பரர் - இங்க்லீஷ் ரூல் தான் நடக்கிறது. பெயர் மட்டும் மாறியிருக்கிறது. அவற்றின் பெயர்கள் நீதிமன்றங்கள். இன்றளவும் நாட்டின் பல நீதிமன்றக் கட்டடங்கள் மொகல் எம்பரர்ஸ் / இங்லீஷ்மென் சாயல் கட்டடங்களாகத்தான் உள்ளன.
மொகல் எம்பரர்ஸ் கோயில்களை நேரடியாக தாக்கி கொள்ளை அடித்துச் சென்றார்கள். இங்லீஷ் ரூலில் நீதிவிசாரணை என்ற பெயரில் கொள்ளை அடித்தார்கள். இன்று நிர்வாகம் செய்கிறேன் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள்.
https://www.facebook.com/
1832 பிள்ளையார் சதுர்த்தி விடுமுறை

No comments:
Post a Comment