தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் வெளியீடு -தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்
நச்சினார்க்கினியர் உரை -சி.கணேசையர்
தொல்காப்பியர் வரலாறு
தொல்காப்பிய மென்னும் இப்பேரிலக்கண நூலைச் செய்த தொல்காப்பியர், சமதக்கினி முனிவர் புதல்வர் என்பதும், இவர் இயற்பெயர் திரணதூமாக்கினியார் என்பதும் இந் நூற்பாயிரத்துள் "சமதக்கினியாருழைச்சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரைவாங்கிக்கொண்டு," என்று நச்சினார்க்கினியர் கூறுதலானே அறியக்கிடக்கின்றன.
இன்னும், அப்பாயிரத்துள் 'தொல்காப்பியன்' என்பதற்குப் 'பழைய காப்பியக் குடியிற் பிறத்தலின் தொல்காப்பியன் என்று பெயராயிற்று' என்று கூறுதலானே காப்பியக் குடியிற் பிறந்தவரென்பதும், சமதக்கினி புதல்வ ரென்பதனானே அந்தண குலத்தவ ரென்பதும்
அறியத்தக்கன.
ஜமதக்னி என்பவர் இராமாயணத்தில் வரும் பரசுராமர் தந்தை பெயர் என்பதைக் கொண்டும், தொன்மக் கதையான முச்சங்க கதைகள் வரலாற்றில் இல்லை என ஆய்வாளர்களால் நிராகரிக்கப் பட்டது.
தொல்காப்பியர் காலம் பொ.ஆ.7ம் நூற்றாண்டு பிற்பகுதி என்பதில் பன்னாட்டு பல்கலைக் கழக ஆய்வாளர் இடையே தற்போது கருத்தொற்றுமை உண்டு.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய பாதிரி கால்டுவெல் பொ.ஆ.-8ம் 13ம் நூற்றாண்டு இடையே என்றார்
அன்றைய தரவுகளின் அடிப்படையில் பன்னாட்டு பல்கலைக்கழக ஆய்வுமுறைகள்படி ஆய்வாளர்கள் கூறியது
P.Tசீனிவாசையங்கர் : பொ.ஆ. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவர் History of Tamils P. 70
தெ.பொ.மீ: பொ.ஆ. 2-நூற்றாண்டை ஒட்டிய சங்க நூல்களுக்கு முற்பட்டவர் - சமணத் தமிழ் இலக்கிய வரலாறு பக்-28
எஸ். வையாபுரிப்பிள்ளை : பொ.ஆ.அல்லது 5 நூற்றாண்டில் வாழ்ந்தவர் தமிழ்ச்சுடர் மணி பக்-39
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி : பொ.ஆ. 5-ம் நூற்றாண்டு
கே.எஸ் சிவராஜபிள்ளை : பொ.ஆ.6-ம் நூற்றாண்டு
பென்சில்வேனியா பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் V.S.ராஜம் பொ.ஆ. 5- நூற்றாண்டிற்கு சற்று முந்தையது
ஹாலந்து லெய்டன் இந்தியவியல் பேராசிரியரும் ஹெர்மன் டிய்கென் பொ.ஆ.9ம் நூற்றாண்டினது
19ம் ஏ.சி.பர்னெல் பொ.ஆ. 19ம் நூற்றாண்டின் இந்தியவியல் ஆய்வாளர் 8ம் நூற்றாண்டினது முன்பாய் இருக்க இயலாது
http://www.tamilvu.org/ta/library-l0121-html-l0121ind-117120
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்
நச்சினார்க்கினியர் உரை -சி.கணேசையர்
No comments:
Post a Comment