தண்டமிழ் நாடன் என்று தன்னைப் பெருமையுடன் சொல்லிக்கொண்டவன் ராஜராஜன். தமிழ்த்திருமுறைகளைத் தேடி எடுத்து கோவில்களில் பாடச் செய்த மன்னன் ராஜராஜன்.
சங்கத்தமிழ் இலக்கியமான பட்டினப்பாலை இயற்றப்பட்ட மண்டபத்தைப் பாதுகாத்தான் மாறவர்மன் சுந்தரபாண்டியன். தமிழாபரணன் என்ற சிறப்புப் பெயரைக் கொண்டவன் நெடுஞ்சடைய பாண்டியன். தமிழுக்காக உயிரை அளித்தவன் பல்லவன் நந்திவர்மன்.
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களைப் போல தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் யாருமில்லை. அவர்களைத் தவிர்த்தால் தமிழ் வரலாறே இல்லை.
No comments:
Post a Comment