சங்க இலக்கியமும் அதன் பின் எழுந்த தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் அனைத்துமே சம்ஸ்கிருத மொழியை ஏற்று போற்றுபவையே. இராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றி பலகுறிப்புகள் மேலுள்ள அனைத்து இலக்கியத்திலும் உள்ளது. இதில் சிறப்பாக கலித்தொகையில் - கௌரவர்கள் தந்தை பெயரை கூற புலவர் எடுத்த உத்தி
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்றமுகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக்
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்த ஆங்குக்
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா 5
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்
ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல
எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம்
வயக்குறு மண்டிலம் என்பது சூரிய மண்டலம் அதில் 7 சூரியன்களில் ஒருவர் பகன் -இவர் பார்வை இழந்தவர். எனவே பகன் முகம் போல பார்வையற்ற திருதாஷ்டிரன் மக்களுள் முதியவன் துரியோதனன். துரியோதனன் சூழ்ச்சியால் பாண்டவர் ஐவர் அரக்கு மாளிகையின் உள்ளே இருந்தனர். துரியோதனன் அம்மாளிகைக்கு தீ மூட்டினான். வீமன் பாண்டவர்களைக் காப்பாற்றினான். அது போல மலையில் மூங்கில் காட்டில் தீ பற்றிக் எரிந்தபோது ஆண்யானை அந்தத் தீயைக் காலால் மிதித்து, தன் யானைகளைக் காப்பாற்றி அழைத்துச் செல்லும் காடு என நாட்டின் செழிப்பான காட்டை புலவர் கூறுகிறார்.
No comments:
Post a Comment